#எழுத்தாளர் அறிமுகப்படலம்
#சீசன் இரண்டு - 15
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் புவனா மாதேஷ் அவர்களைப் பற்றிய நேர்காணல் :
பெயர் : புவனா மாதேஷ்
சொந்த ஊர் : ஈரோடு \ அந்தியூர்
படிப்பு : M.E structural
பணி : Cadd designer
தளம் : பிரதிலிபி, வாட்பேட், சங்கமம்
அமேசான் பெயர்: Bhuvana madhesh
******
,நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா:
நான் மட்டும் இல்லை எழுத்தாள நண்பர்கள் 10 பேர் இணைந்து மேகதூதம் தமிழ் நாவல்கள் சேனலை நடத்திட்டு வரோம்..
****
வாவ்!! புதுமையான தகவல், தோழமைகளுக்கு வாழ்த்துகள்
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
எங்கம்மாக்கும், எங்கப்பாக்கும் ஒரே ஒரு மூத்த பொண்ணு நானு😅😅 என் தம்பிக்கும் தங்கச்சிக்கும் நான் தான் தங்கச்சி😝😝😝
******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
புயலே சுவாசமாய்
*******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
என்னோட முதல் நாவல் தான்.. ஆனா நிறையா பேருக்கு நான் எழுதறன்னு தெரிய வந்தது என்னோட இரண்டாவது நாவல் மூலமா தான்..
********
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
நெடு நாவல்: 5 + ongoing 5
குறுநாவல் : 6
சிறுகதைகளையும்,கவிதைகளையும் குறிப்பிடவில்லை
********
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது;
இரண்டு வருடங்கள்
******
எழுத வந்த இத்தனை வருடத்தில் ஏதாவது சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா : இத்தனை வருசமா எழுதறதே நமக்கு பெரிய சாதனை தானே😎😎😎 .....
கண்டிப்பாக, தொடர்ந்து எழுதி வெற்றிக் கனியை எட்டி விட வாழ்த்துகள்
********
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
* அனிச்ச மலரழகே
*தூரிகையென வந்தவன்
*காதலோடு வாழ்கிறேனடி
*ரோபோ ரோமியோ..
*பூங்காற்றே கேளடி
*******
உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் : *புயலே சுவாசமாய் *மாயவனோ தூயவனோ நாயகனோ *வந்தாளந்த தோகை தான் *விழி தீண்டும் மௌனமொழி *அழகிய பிழையே *(உன் விழி வழி என் உலகம்) குறுநாவல் *உன் நாட்கள் நானிங்கு வாழ்வது *நீராழி *அபூர்வா *நேயங் காத்தல் செய் *உயிர் கொள் மாற்றங்கள் *நீர்
.....
அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு *******
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
எல்லாமே ரொம்ப பிடிக்கும். அதுல என்னோட இரண்டாவது கதை மாயவனோ தூயவனோ நாயகனோ.. திரும்ப திரும்ப படிக்க பிடிக்கும்
*******
உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?
இழையினி, துகிரா, நவிரா,மகேஷ் பூபதி, அகதீரன்,ராம், யாதவ், செழியன், தமிழன், சிவா, இப்படி நிறையா பேர் இருக்காங்க...
******
நீங்கள் நாவல் எழுதும் போது உணருவது என்ன : (எழுதற நானே தூங்கிடற... படிக்கற ரீடர்ஸ்க்கு எப்படி இருக்கும்னு சில சமயம் உணர்ந்து கவலைப்பட்டு இருக்கேன்..😅) நாவல் எழுதும் போது என்னோட இதழ் சிரிப்பை மட்டுமே பரிசளிக்கும் அதை அடிக்கடி நானே உணர்ந்து இருக்கேன்... ....
🤣🤣🤣🤣
*******
வரலாறு சம்பந்தமான நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா. இருந்தால் அது பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
(வரலாறுன்னா ஹிஸ்டரி தானே😅😅 be like வடிவேலு வாய்ஸ்) நாலு கதை எழுதி இருக்கேன்னு கெத்தா சொல்லணும்னு ஆசை தான்.. ஆனா நான் தான் ஒண்ணுமே அப்டி எழுதலையே நெஸ்ட் டைம் எழுதும் போது சொல்றேன்😝😝😝😝😝
....
கண்டிப்பா *******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
வேலை,எப்பவாவது கதை இப்படி எழுதறதுனால என்னோட எழுத்து அனுபவம்னு சொல்ற மாதிரி எதுவும் இல்லை...
*******
முதன்முதலில் தங்களுக்கு வந்த எதிர் மறையான விமர்சனம் எது எதற்காக வந்தது ... என்னோட முதல் கதைக்கு தான்... நீயெல்லாம் தமிழே எழுத லாயிக்கு இல்ல, உன்னை யாரு கதை எழுத சொல்லி அழுதான்னு கேட்டாங்க.. சோ அப்ப அந்த விமர்சனம் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு... சோ அப்ப இருந்து கொஞ்சம் கொஞ்சமா எழுத்து பிழை இல்லாம எழுத ஆரம்பிச்சு இருக்கேன்னு நினைக்கிறேன்.. *******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
நிறைய இருக்காங்க... அதில் யாரை சொல்ல
******
உங்க நட்பில் உள்ள எழுத்தாளர்கள்:
நிறைய நிறைய இருக்காங்க..நேம் லிஸ்ட் ரொம்ப பெரிசு
*******
ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும். அதை வாசிக்க ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் என்ன விதமான உணர்வுகள் மனதில் தோன்ற வேண்டும் : ஓவர் வசனத்தை ஒரு சமயத்தில சொல்லி மனுஷனை புழிஞ்சு எடுக்காம... எளிமையான நடையில, படிக்கற மாதிரி, ஆர்வத்தை தூண்டற மாதிரி இருக்கணும்னு ஒரு வாசகியா நான் நினைப்பேன்...
ஒரு நாவலை படிச்சு முழுக்க முடிச்சுட்டா அப்ப வர உணர்வை விட, அந்த நாவலை யாராவது சொல்லும் போது கூட அப்படியே மனசுல அந்த நாவலோட ஹீரோ கண்ணு முன்னாடி நிப்பான் பாருங்க அதுல வர உணர்வே தனி தான்.. எனக்கு இப்ப சொல்லும் போது கூட கனிமொழியே சிவுவும், விதையென புதைந்தவன் ஹீரோவும், அப்பறம் சத்தமின்றி முத்தமிடு ஹீரோவும் நினைவுக்கு வராங்க🙈🙈🙈
******
காதல் கலந்த நாவல்கள் வாசிப்பவரின் உள்ளத்தை சென்றடைவது போல ஏனைய நாவல்கள் இருப்பதா நினைக்கிறீர்களா : எல்லா நாவலையும் ஒரு ஸ்பெஷல் இருக்கும்.. காதல் நாவல் தான் உள்ளத்தை கவரும்னு இல்லையே.. ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு விதத்தில வாசகர்களோட மனசுல நிக்கும்னு நான் நம்புறன்.. *******
இயல்பான வாழ்க்கையில் அடி, தடி போராட்டம், வரதட்சணை, மாமியார், நாத்தனார் கொடுமை என பலவற்றை பார்த்து வரும் நமக்கு நாவல் வழி அச்சம்பவத்தை வாசிக்கும்போது ரசிப்பை கொடுக்காமல் பல சமயம் வெறுப்பை கொடுப்பது ஏன்:
(ஏன்னா...🤔🤔 இயல்பு வாழ்க்கையில இருக்கற அதே மூஞ்சிங்க கண்ணு முன்னாடி படமா ஓடுமோ என்னவோ...🤣🤣🤣 ஈ சும்மா சொன்னேன்...)
இயல்பு வாழ்க்கையில இருக்கற பிரச்சினை,மனஸ்தாபம்,கஷ்டம் இதுல இருந்து வெளியே வர தானே நாவலை தேடி வரோம்..அங்கையும் இதே கொடுமை நடந்தா கண்டிப்பா வெறுப்பு தான் வரும்..
******
போட்டி கதைகளில் பங்கு பெற்ற அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா :
அதெல்லாம் நிறைய நிறையா பங்கு பெற்று பல்பு வாங்கிய அனுபவம் ஏராளம் என்றாலும் ஒரே ஒரு தடவை பிரதிலிபி நடத்திய அறிவியல் புனைவு எழுதற போட்டியில கலந்து பரிசு வாங்கி இருக்கேன்.
*******
போட்டி கதைகளில் எழுதப் படுகின்ற எழுத்து எதை பொறுத்து இருக்க வேண்டும்:
(போட்டி நடத்தற தளம் சொல்ற ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனை பொறுத்து இருக்கணும்😛😛😛 )
சரியா சொல்ல தெரியல.. ஹ்ம்ம் போட்டி கதையோ இல்லையோ உங்களோட எழுத்து ,கண்டிப்பா நீங்க நினைக்கற கதை கருல இருக்கணும். என்ன நினைக்கிறமோ அதை எழுதிடனும்...
*******
கட்டுப்பாடு விதிக்கப்படுகின்ற இடத்தில் எழுத்தாளனின் கற்பனை, கதையின் கரு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் : கட்டுப்பாடு விதிக்கப்படுவது எழுத்து விதிமுறைகளுக்கு இருக்குமே தவிர ஒரு எழுத்தாளரின் கற்பனைக்கும், கதையின் கருவிற்கு இல்லையென நான் நினைக்கிறேன்.. ******
ஒரு படைப்பை வாசிக்கும் போது அது எழுத்தாளனின் கற்பனையாக இருக்க வேண்டுமா அல்லது அசை வாசிப்பவரின் கற்பனையாக இருக்க வேண்டுமா:
எழுத்தாளரின் கற்பனையில் வாசகனின் கற்பனை ஓட்டம் இருக்க வேண்டும்
*****
போட்டிக்கதை எழுதுவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளையும் பற்றி சொல்ல முடியுமா.. நன்மை: 😅😅😅போட்டியில கலந்துகிட்டா குறிப்பிட்ட நாட்களுக்குள்ள ஒரு கதையை எழுதி முடிக்கலாம்.. சொல்ல போனா என் கதை எல்லாமே அப்படி எழுதி சீக்கரமா முடிச்சது தான்🤣🤣 தீமை: போட்டி கதையை எழுதாமா விட்டா எனக்கு அது தீமைங்க.. ஒரு கதை போச்சே மூமண்ட்😛😛
...
🤣🤣🤣
*******
போட்டிக் கதையின் முடிவுகள் எதைப் பொறுத்து இருக்க வேண்டும் :
கதையின் கருவையும், கதை நகரும் விதத்தையும் பொறுத்து இருக்க வேண்டும்...
****
வாசகருக்கான கேள்வி பதில்கள் : உங்கள் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மையில் இருப்பவர்களா இல்லை கற்பனையா😂😂😂 imagination + real ah உண்மை பாதி+ கற்பனை பாதி இரண்டும் கலந்த கலவை🤣🤣 கற்பனையில வர கதாப்பாத்திரம் எல்லாம் ரொம்ப ரொம்ப அமைதியா, நல்லவனா இருப்பான்.. அதான் இரண்டையும் மிக்ஸ் பண்ணி எழுதி விட்ருவேன்..😜😜 ****** நம்ம எண்ணங்களோட பிரதிபலிப்பு தான் எழுத்தா வரும்ங்கிறதை நீங்க நம்புறீங்களா? உங்க எழுத்து/கதை/ கதாபாத்திரங்கள் உங்க எண்ணவோட்டத்தை பிரதிபலிக்குமா? கண்டிப்பா அதான் உண்மை... நம்மளோட எண்ணங்களின் பிரதிபலிப்பு தானே நம்மளோட எழுத்து மூலமா வரது.. ( பின் குறிப்பு: அப்ப உன் கதையில வர வில்லி உன் எண்ணத்தோட பிரதிபலிப்பான்னு கேட்க கூடாது சொல்லிட்டேன்🤣🤣🤣)
…
🙂🙂🙂 ***** கதையை முடிவு செய்து விட்டு, வாசகர்களின் கருத்துக்களை பார்த்து கதையின் போக்கினை மாற்றியது உண்டா? கதையின் கருவை நான் நினைச்ச மாதிரி தான் கொண்டு போவேன்.. ஆனா அடுத்த பகுதில ஹீரோ இல்லைன்னா ஹீரோ பிரண்ட் வரணும்னு யாராவது கேட்பாங்க சோ அவங்க கேட்கற மாதிரி ஹீரோவையோ இல்ல ஹீரோ நண்பனையோ கொண்டு வருவேன் சோ இப்படி சின்ன சின்ன விஷயம் வாசகர்கள் கருத்துக்களுக்கு இணங்கி பரந்த மனப்பான்மையோட செய்வேன் ******* உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனையை கலந்து எழுதும் போது, நாம் சொல்ல நினைத்த விசயம் சரியான முறையில் சொல்ல முடிகிறதா? நான் எழுதற எல்லா கதையும் உண்மை சம்பவம் + என் கற்பனை கலந்த கதை தான்.. முடிஞ்ச வரைக்கும் நான் நினைச்சதை சொல்லிடுவேன்.. அதே மாதிரி ஒரு கதையை எழுதும் போது அவசரம் இல்லாம பொறுமையா எழுதினா, நாம சொல்ல வேண்டிய விஷயத்தை பக்காவா சொல்லிட முடியும்.. ****** கதைக்கான எதிர்மறை கருத்துகள் அல்லது logic mistakes பொது வெளியில் விவாதிக்க படுவது ஆரோக்கியமான விசயம் தான் என்று நினைக்கிறீர்களா? ஆரோக்கியமான விவாதங்கள் அனைத்துமே நல்ல விஷயம் தானே.. அது எதிர்மறையான கருத்துக்களுக்கும் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.. (பின் குறிப்பு எதிர்மறை கருத்துக்கள் கூறுவது தவறில்லை ஆனா அந்த கதையில உண்மையாவே எதிர்மறையும், லாஜிக் மிஸ்டேக்யும் இருக்கணும் அப்படி இருந்து அதை திருத்திக்க சொன்னா கண்டிப்பா நான் அதை மாத்திப்பேன்...)
….
கண்டிப்பாக
******
உங்களது படைப்புகளை வாசித்து வருபவர்களுக்கு சொல்ல நினைப்பது:
பெரிய பெரிய நன்றி....😍😍😍😍😍 உங்க சப்போர்ட்ல தான் நான் இந்தளவுக்கு வந்து இருக்கேன் சோ எல்லாருக்கும் பெரிய லவ் யூஸ்..
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல விருப்பம் இருக்கிறதா... தனிப்பட்ட முறையில் என்ன சொல்றது... மனசுக்கு பிடிச்சதை நீங்க நினைச்ச மாதிரி எழுதுங்க..கண்டிப்பா ஒரு நாள் நம்ம எழுத்து வெளிவரும்.. நான் சொன்ன பதில்களை இப்ப வரைக்கும் பொறுமையா ப்படிச்ச எல்லாருக்கும், எனக்கு வாய்ப்பு அளித்த ஜோதி அக்காகும் மிக்க நன்றி😍😍😍
**** மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏 உங்கள் பதில்கள் நகைச்சுவை கலந்து வாசிப்பதற்கு அருமையாக இருந்தது. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐 ஹாய் பிரண்ட்ஸ், இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம், மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம் நன்றி ,
நன்றி
Awesome answers d 😘😘😘 congrats bhuvi
ReplyDelete