#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#இதுநம்மஏரியா
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் நபர் எழுத்தாளர் கோமதி...
அவர்களைப் பற்றிய தகவல்கள் :
பெயர் : சங்கரகோமதி (வீட்டில் தேவி)
சொந்த ஊர் : திருநெல்வேலி. (வசிப்பது சென்னை)
படிப்பு : B.E கம்ப்யூட்டர் சயின்ஸ்
பணி : இல்லத்தரசி.. கல்யாணத்திற்கு முன் இரண்டு ஆண்டுகள் பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன்.
தளம் : eRead & MM சைட்
அமேசான் பெயர்: கோமதி அருண்
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
குடும்பத் தலைவி.. நான் போல்டான(Bold), கொஞ்சம் சென்சிடிவான(sensitive) ஆள். அன்பு - இது தான் என்னோட பிளஸ் அண்ட் மைனஸ். இயற்கை அண்ட் இசை விரும்பி, மனசு சரி இல்லைனா பாட்டு கேட்டு தான் அதை சரி செய்வேன். வரைவது பிடிக்கும், அம்மா வீட்டில் என்னுடைய ஓவியங்கள் நிறைய தொங்கிக் கொண்டிருக்கிறது. கதை எழுதுவது ரொம்ப பிடிக்கும்.
*******
உங்களது விருப்பமான எழுத்தாளர்: பெரிய லிஸ்ட்..
******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
எழுத்து அனுபவம் சொல்ற அளவுக்கு நான் பெரிய எழுத்தாளர்-லாம் இல்லை பா..
நான் எழுதும் முறையை வேணா சொல்றேன்.
முதலில் கதை கருவை தேர்ந்து எடுப்பேன்.
ஓரளவிற்கு கதையை எப்படி கொண்டு செல்வது என்று யோசித்த பிறகு கதையின் தலைப்பை தேர்ந்து எடுப்பேன்.
கதை தலைப்பு ரொம்ப முக்கியமானது.. கதையோடு பொருந்தி போகணும் என்று நினைப்பேன்.
நம் கதைக்கு நாம் தான் முதல் வாசகராக இருக்க வேண்டும்.. எழுத்தாளராக நம் கண்ணுக்கு தெரியாத முரண், சிறு பிழை எல்லாம் வாசகராக படிக்கும் போது நமக்கு தெரியும்.
என்னுடைய கதைகளில் வர்ணனைகள் அதிகம் இருக்காது. நான் கதை படிக்கும் போது வர்ணனைகள் இருக்கும் இடத்தை ஸ்கிப் பண்ணிடுவேன்.. அதனால் என்னுடைய கதையை படிக்கும் வாசகர் எந்த ஒரு வரியையும் ஸ்கிப் பண்ண கூடாது என்று நினைப்பேன்.
அதிக சோகம் வைக்க மாட்டேன்.. சோகம் வரும் இடத்தை காட்சிப் படுத்தாமல் ஆசிரியர் உரையாக கொடுத்துவிடுவேன்.. படிக்கிறவங்களுக்கு கதையில் அந்த சோகத்தோட தாக்கம் புரிந்தால் போதும், அது அவங்க மனநிலையை தாக்கக் கூடாதுனு நினைப்பேன்.. கதை படிப்பதே மனம் ரிலாக்ஸ் ஆகத் தான்.. அப்போ நம்ம கதையில் வர சோக காட்சிகள் மேலும் படிப்பவரை சோகத்தில் ஆழ்த்தக் கூடாது.. ஒரு புன்னகையோடு படிக்கணும்..
கதை படிக்கும் போது ஒரு பாசிடிவ் எனெர்ஜி பரவனும்..
அவ்ளோ தான் பா.. மொத்தத்தில் கதை எழுதுவது பெரிய விஷயமே இல்லைங்க.. கதை எழுத கொஞ்சமே கொஞ்சம் கற்பனை வளம் இருந்தால் போதும்.. என்னை கேட்டால் வாங்க பழகலாம்னு சொல்ற மாதிரி வாங்க எழுதலாம்னு சொல்லுவேன்.
....
அருமையான கருத்து சிஸ் நானும் கூட😉😉
*******
நீங்கள் எழுதிய முதல் நாவல்: என்னுள் நிறைந்தவனே!!
*********
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
நல்ல பழக்கம் உள்ள எழுத்தாளர்கள்: இன்ஃபா, மல்லி சிஸ், ஆஜுத்யா சிஸ், மலர் இந்திரா, வதனி கா, ஷோபா குமரன் சிஸ், சரண்யா சிஸ், நீலாமணி சிஸ், ரம்யா அனாமிகா, ஆயிஷா சிஸ், காவ்யா ஜெயா, சாந்தினி தாஸ், சத்யா ஸ்ரீராம்.
*******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்: குடும்ப காதல் கதைகள், crime thriller
*******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
எழுத்தாளரின் திறமை எழுத எழுத மெருகேற்றிட்டே தான் இருக்கும்.. நான் 11 கதைகள் தான் எழுதி முடித்திருக்கிறேன்.. இவற்றில் எனது திறமை முழுமையாக வெளிவந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை.
********
நீங்கள் எழுதிய மொத்த நாவல் : 13 (புத்தமாக 7 நாவல்கள் வெளி வந்திருக்கிறது)
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
2011ல் எழுத ஆரம்பித்தேன் ஆனால் நடுவில் பிள்ளை பேறு, வளர்ப்பு என்று 4 வருடங்கள் இடைவெளி இருந்தது.
********
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! – முடியும் தருவாயில் இருக்கிறது.
********
உங்கள் நாவல்களின் பெயர் :
1. என்னுள் நிறைந்தவனே!!
2. யாருக்கு யாரோ???
3. மழைக்காலம் (பாகம் 1 மட்டும் முடிந்து இருக்கிறது)
4. தீண்டத் தீண்ட மலர்வதென்ன!!!
5. நித்தமும் உன் சிந்தனையே!
6. நெஞ்சோரமாய் காதல் துளி!
7. இதயம் தேடும் தேடல்!!
8. இதழ் திறவாய்!!
9. விட்டாலும் விலகாதே!
10. எனை கொஞ்சும் சாரலே!
11. ஏன்டி உன்னை பிடிக்குது!!
12. மதி ஒரு நாளும் மறவேன்!
13. மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! (எழுதி கொண்டிருக்கிறேன்)
...
5 கதை படிச்சுருக்கேன்
*******
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
காதல் நகைச்சுவை கலந்த குடும்ப கதைகள் தான். ‘நித்தமும் உன் சிந்தனையே!’ மட்டும் கிரைம் ஸ்டோரி.
*******
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
ஒவ்வொரு கதையும் குழந்தை மாதிரி தான்.. எந்த குழந்தை பிடிக்கும் என்று கேட்டால் எப்படி! ‘இதயம் தேடும் தேடல்!’ கதை என் உள்ளத்திற்கு சற்று நெருக்கமான கதை.
கதாபாத்திரம் என்றால் தீண்டத் தீண்ட மலர்வதென்ன! மிருதுளா, இதழ் திறவாய் ப்ரனேஷ், விட்டாலும் விலகாதே! திவ்யா, ஏன்டி உன்னை பிடிக்குது! புகழ்வேந்தன் மித்ராணி, மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! செந்தமிழினி.
....
பிரசாத்😉😉 நம்ம போலீஸ் கூட😂😂😂
******
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :
2013யில் எழுதிய தீண்டத் தீண்ட மலர்வதென்ன! கதை பிரபலமாக பேசப்பட்டது என்று கூறுவதை விட இன்றளவிலும் பேசப் படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த கதையின் பெயரை சொல்லி தான், உங்களை ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்னு இப்பவும் சொல்றாங்க..
காரணம் வாசகர்களை தான் கேட்க வேண்டும்.. அந்த கதையில் வரும் சூட்டிகையான மிருதுளா மற்றும் சம்யுக்தா அனைவரையும் கவர்ந்தது காரணமாக இருக்கலாம்.
********
உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.. உங்களால் மட்டுமே நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.. இதே ஆதரவை தொடர்ந்து தருமாறு கேட்டுகொள்கிறேன்.
******
கவிதை எழுதிய அனுபவத்தை பற்றி சொல்ல முடியுமா:
கல்லூரி பருவத்தின் ஆரம்ப காலத்தில் கவிதைங்கிற பெயரில் சிலது கிறுக்கி கல்லூரி மகஸின்னில் மூன்று வந்திருக்கிறது. அதன் பிறகு எழுதவே இல்லை. அப்புறம் என் கணவரின் கவிதைகளை படித்த பிறகு மீண்டும் கவிதை எழுதும் ஆசை வந்து நிறைய எழுதினேன். சிலதை தவிர அனைத்தும் என் கணவரை மையமாக கொண்ட காதல் கவிதைகளே.. இதற்காக பிரைவேட் ப்ளாக் வைத்திருக்கிறேன்.
எனது கதைகளிலும் எழுதுகிறேன்.
*****
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா:
2019யில் LadysWings தளம் நடத்திய போட்டியில் ‘விட்டாலும் விலகாதே!’ கதைக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது.
2020யில் TamilNovelWriters தளத்தில் நடந்த ‘கனவுப்பட்டறை கதைத்தொழிற்சாலை’ போட்டியில் நான்காவது இடத்தில் வந்த 7 கதைகளில் ‘ஏன்டி உன்னை பிடிக்குது!’ கதையும் ஒன்று.
********
ஒரு சம்பவத்தின் தாக்கம் அதை பார்ப்பவர் அல்லது படிப்பவர் மனதை விட்டு சில நாட்கள் மீளாத வகையில் இருக்க அவர்கள் எப்படி பட்ட கதையம்சத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்:
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு களம் பிடிக்கும்.. எந்த கதையம்சமாக இருந்தாலும் அதை எழுத்தாளர் எழுதும் விதத்தில் தான் அது படிப்பவர் மனதில் மீளா இடம் பிடிக்கும்.
*******
உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:
தூண்டுகோல் என்றால் புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லாத என்னை புத்தகத்தை படிக்க வைத்த எனது அம்மாவைத் தான் சொல்வேன்.
ஒரு காலத்தில் புத்தகம் படிக்கும் பழக்கமே என்னிடம் கிடையாது என்றால் நம்புவீங்களா! அது தான் உண்மை.. பள்ளி கல்லூரி படிக்கும் காலத்தில் குமுதம் ஆனந்தவிகடன் கூட நான் படித்தது கிடையாது.. அதுக்காக படிப்பு விஷயத்தில் நான் புத்தக புழு-னு தப்பு கணக்கு போட்டிறாதீங்க.. I am a very poor reader.. நான் முதல் முதலாக ஒரு கதை புத்தகத்தை படித்தது கல்யாணத்திற்கு பிறகு 2௦௦9ல், அதுவும் என்னோட அம்மாவின் வற்புறுத்தலில் தான்.. அப்புறம் onlineல் கதைகளை தேடித் தேடி படிக்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் ‘நாமும் கதை எழுதினா என்ன!’ என்று தோன்றி 2011யில் கோமதிஅருண் என்ற பெயரில் சும்மா எழுத ஆரம்பிச்சது தான், வாசக தோழமைகளின் ஆதரவில் இன்று வரை தொடர்கிறது.
**********
நாளிதள்களில் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
பெண்மை தளத்தின் மின்-நாளிதழில் ஒரு முறை எழுதி இருக்கிறேன். அந்த கதை ‘நித்தமும் உன் சிந்தனையே!’
*******
ஒரு எழுத்தாளன் எப்பொழுது வெற்றி பெறுகிறானு நினைக்கிறீங்க :
தனது எழுத்தின் மூலம் ஏதேனும் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வந்தால் அதுவே எழுத்தாளரின் வெற்றி. அந்த மாற்றம் சமுக மாற்றமாக தான் இருக்கணும் என்று இல்லை, தனி மனித வாழ்வில் ஏற்படும் மாற்றமும் வெற்றி தான்.
********
உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்கு விக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :
என் கணவர் எனக்கு எழுவதற்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். குடும்பத்தினர் அனைவருமே ஊக்குவித்தாலும், எனது எழுது பணியை ஊக்குவித்து உறுதுணையாக இருப்பது என்னுடைய அப்பா.. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு எப்பியையும் முதலில் படிப்பது என்னோட அப்பா தான். அதன் நிறை குறைகளை எடுத்து கூறி எனக்கு பக்க பலமாக இருக்கிறாங்க.
.....
அருமை சிஸ்
*******
சில எழுத்தாளர்கள் நிஜத்தை அப்படியே கண் முன் காட்சி படமாக விரிவது போல எழுதுகிறார்கள் .அது எப்படினு சொல்ல முடியுமா:
சிலர் என்னிடமும் இதை கூறி இருக்கிறார்கள். அதாவது எனது எழுத்து அந்த காட்சியை அவர்கள் கண் முன் அப்படியே கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறாங்க..
அது எப்படினா என்ன சொல்ல! கதையை எழுதும் போது நான் ஒவ்வொரு காட்சியையும் மனக்கண்ணில் கற்பனை பண்ணிக் கொண்டே தான் எழுதுவேன்.. என் மனக்கண்ணில் தோன்றுவது அப்படியே படிப்பவர்களுக்கு தோன்ற வேண்டும் என்று நினைத்து எழுதுவேன்.. அவ்ளோ தான்.
*********
நிஜ சம்பவத்தை கதையாக எழுதிய அனுபவம் இருக்கிறதா:
இல்லை.. ஆனால் என் தந்தை வழி குடும்பத்தின் பாச பிணைப்பை மையமாக கொண்டு ‘இதயம் தேடும் தேடல்!’ எழுதினேன். 12 பேர் கொண்ட பெரிய குடும்பமும் அவர்களுக்குள் உயிர்ப்புடன் இருக்கும் அன்பும் பாசபிணைப்பையும் மையமாக கொண்டு எழுதினேன்.
*******"
புத்தகங்களை தேடி அலைந்து படிப்பதற்கும், ஆன்லைனில் உடனடியாக படிப்பதற்கும் உள்ள வித்தியாசமாக என்ன நினைக்கிறிங்க :
இன்றைய காலகட்டத்தில் புத்தகத்தை தேடி அலையாமல் சிரமமின்றி ஆன்லைன் மூலமாக நிறைய நிறைய படிக்க முடிகிறது.. என்ன இருந்தாலும் கையில் புத்தகத்தை வைத்து படிப்பது தனி சுகம் தான்.
*****
போட்டி நிறைந்த உலகில் எழுத்தாளர்கள் பலர் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து திறமைகளை நிருபிக்க போராடிக் கொண்டிருக்கின்றனர் அதை பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
போட்டி நிறைந்த உலகில் நமக்கென்று தனி அடையாளத்தையும் இடத்தையும் உருவாக்கி, நிலை நிறுத்த வேண்டும் என்றால் சற்று வித்யாசமான எழுத்திலோ, கதை களத்தையோ தான் தேர்ந்தெடுக்க வேடியாதாக இருக்கிறது.
********
கூட்டுக் குடும்ப கதைகள் அண்மையில் குறைந்து காதல் படைப்புகள் பெருகி விட்டதென்று நினைக்கிறீர்களா :
ஆம்.. இன்றைய வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரில் பலருக்கு கூட்டு குடுப்பம் என்றால் என்னவென்றே தெரியாது. கதைகளில் தான் கூட்டு குடும்பம் வாழ்ந்து வருகிறது. அதுவும் இப்பொழுது குறைந்துவிட்டது.
*******
நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது எந்த மொழி வழக்கு பயன்படுத்தினால் வாசிக்க அழகாக இருக்கும் :
கதாப்பாத்திரங்கள் பேசுவது போல் வரும் இடங்களில் பேச்சு வழக்கை பயன்படுத்தி, ஆசிரியரின் விவரிப்பு இடங்களில் சுத்த தமிழில் கொடுத்தல் நல்லது. நான் அதைத் தான் செய்கிறேன்.
******
"ஏன்டி உன்னை பிடிக்குது " கதையில் வந்த புகழ் வேந்தன் , மித்ராணி கதாபாத்திரம் பற்றி சொல்ல முடியுமா :
புகழ்வேந்தன் – மித்ராணி:
பெயரிற்கு ஏற்றார் போல் இருவருமே அரசன் அரசியின் ஆளுமையுடன் திகழ்வபர்கள். தனது குடும்பத்தை சிதைத்தவனை பகை தீர்த்துக்கொள்ள மித்ராணியை கட்டாயக் கல்யாணம் செய்யும் புகழ்வேந்தன். அதனால் பெண் சிங்கமாக சீரும் மித்ராணி. கல்யாணத்திற்கு பிறகு இவர்கக்குள் நிகழும் சொற்போர்கள், மோதல்கள், காதல் பற்றி கதையைப் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
******
இதழ் திறவாய் நாயகி பிரனிஷாவின் அமைதி நாயகனின் காதல் காத்திருப்பு பற்றி சொல்லுங்க:
மனம் ஒன்றி காதலை சொல்லிக்கொள்ளும் முன் விதியின் சதியால் நண்பனின் திருமணத்தில் மணப்பெண்ணாக தன் காதலியை பார்த்து மனம் உடைந்து நாட்டை விட்டே செல்கிற நாயகன் ஏழு ஆண்டுகள் கழித்து தனது காதலிக்கு நண்பனுடன் திருமணம் நடக்கவில்லை என்பதை அறிந்து காதலியை தேடி தாயகம் திரும்புகிறான். தாய் நாட்டிற்கு வந்தவன் காதலியை கண்டு பிடிக்கும் பொழுது அவள் அவனது காதலியாகவே இருப்பாளா? அல்லது திருமணமானவளாக இருப்பாளா? அவனது ஏழு ஆண்டு தவத்திற்கு வரம் கிடைத்ததா? என்பதையெல்லாம் கதையைப் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
*********
போட்டி கதை 50,000 வார்த்தை என்று வைத்துக் கொள்ளுங்கள் ஒரு அத்தியாயத்திற்கு எத்தனை வார்தைகள் வீதம் கொடுத்தால் ஏற்புடையதாக இருக்கும் :
அப்படி திட்டவட்டமாக குறிப்பிட்டு சொல்ல முடியாது. பொதுவாக 25 அத்தியாயங்கள், 50,௦௦௦ வார்த்தைகள் என்றால் அத்தியாயத்திற்கு 2௦௦௦ வார்த்தைகள் என்று வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லலாம். ஆனால் சில நேரம் ஒரு அத்தியாயத்தை இந்த இடத்தில் முடித்தால் தான் சரியாக இருக்கும் என்று தோன்றும் பட்சத்தில் 15௦௦ வார்த்தைகளிலேயே முடிந்துவிடும். அதே போல் சில அத்தியாங்கள் 3௦௦௦ வார்த்தைகள் வர கூட வாய்ப்பு இருக்கிறது.
இந்த அருமையான வாய்ப்பை எனக்கு அளித்த உங்களுக்கு மிக்க நன்றி ஜோதி சிஸ்.. தொடரட்டும் உங்களது இந்த அற்புதமான பணி.
தோழமைகளே! உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றும் நாடும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
.....
மிக்க நன்றி எனது கேள்விக்கான உங்களது பதில் மிகவும் அருமையாக இருந்தது.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளர் கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை தாராளமாக முன் வைக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்
மிக்க நன்றி
🙏🙏🙏
Comments
Post a Comment