பாலா சுந்தர்

 



#எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு - 11



ஹாய் பிரெண்ட்ஸ்


இன்றைய அறிமுக எழுத்தாளராக நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போவது பாலா சுந்தர்..


அவர்களைப் பற்றிய நேர்காணல்...


பெயர் :  சு.பால சரஸ்வதி


சொந்த ஊர் : மதுரை


படிப்பு : B.Sc computer science


பணி : இல்லத்தரசி


தளம் : www.mallikamanivannan.com

www.sahaptham.com


அமேசான் பெயர்: பாலா சுந்தர் (Bala sundar)


*****


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


நான் வசிப்பது சிவகாசியில்.

எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.

கணவர், குழந்தைகள், எனது இரண்டு தம்பிகள், என் பெற்றோர் என என் உலகம் மிகவும் சிறியது.

இவர்களுக்காக கடவுளின் கருணையை அனுதினமும் கேட்கும் சாதாரண இல்லத்தரசி நான்.


என் மனதை திசைதிருப்பவே எழுத ஆரம்பித்தேன்... சவாலான இப்பணி என்னை முழுமையாக அதற்குள்ளே இழுத்துக்கொண்டது


******


உங்களது கனவு லட்சியம் என்ன:


வேற என்ன? நிறைய எழுதணும்ங்க...


*****


எதற்காக நீங்கள் எழுத்துலகை  தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா:


முன்னாடி This was a hobby for me ஆனா இப்ப இதுவே தொழிலாகிடுச்சு... 

D.T.P works for printed books மற்றும் கதைகள்னு பொழுது வேகமாக போவது பிடிச்சிருக்கு.


*******


எழுத்துலகில் நீங்கள் சாதித்தது என்ன.


பன்னிரெண்டு நாவல்கள்.

அழகான விமர்சனங்கள்


*****


உங்கள் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு அதில் ஏதாவது செய்தி இருக்குமா அல்லது குடும்ப நாவலாக மட்டுமே இருக்குமா :


சமூக சிந்தனைகள் கொஞ்சமே கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்... அழகான காதல் நிச்சயம் இருக்கும்


******


நாவல் என்பது என்ன :


நிஜம் கலந்த கற்பனை உலகம்

கற்பனை கலந்த நிஜ உலகம்


******


நாவல் எழுதுவதால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி சொல்ல முடியுமா:


எழுதுவதில் நேரம் அதிகம் செலவிடுவதை எனக்கு நன்மையாக முடிய நான் பெரிதும் முயற்சிக்கிறேன்...


தீமைகளா...  அப்படி எதுவும் இருக்க வாய்ப்பில்லயே


******


ஒரு நாவல் என்பது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக மட்டும் இருக்க வேண்டுமா அல்லது எழுத்தாளனின் கற்பனையில் மிளிர்ந்த படைப்பாக இருக்க வேண்டுமா :


கதையின் கரு ஆசிரியர் விருப்பமே... கற்பனையோ  உண்மையோ வாசிப்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்...



உதாரணமாக...

நிஜம் : சேது படம் 



கற்பனை: காதலன் படம் 


ஒரு சேது படம் போல... 

ஒரு காதலன் படம் போல...  கதைகள் இருக்க வேண்டும்.


(சங்கிலியில் பிணைக்கப்பட்ட விக்ரமின் உருவத்தை, "வார்த்தை தவறிவிட்டாள்" பாடலை மறக்க முடியுமா?


"காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்.... " பாடல் வரிகளை மறக்க முடியுமா? 1-100க்குள்ள எத்தனை 9 இருக்குன்னு பிரபுதேவா கேட்குறதை மறக்க முடியுமா? அந்த ஊக்கு மேட்டரை மறக்க முடியுமா?)


 கிலுகிலுப்போ அழுகையோ மறக்க முடியாத மாதிரி இருக்கணும்....

நம்ம கதை அப்படி தான் இருக்கணும்...



நீங்கள் சொன்ன 2படமும் நானும் பார்த்திருக்கிறேன்  இரண்டுமே அருமையான திரைப்படங்கள் தான்


*******


காதல் என்ற எழுத்தை வாசித்த உடன் உங்களுக்கு தோன்றுவது என்ன :


ஆஹா...


*******


திருமணத்திற்கு முன் வரும் காதல் பின் வரும் காதல் என இரண்டு மாடலில் கதைகள் எழுதப் படுகிறது. எது மிகவும் விரும்ப தகுந்ததாக இருக்கும் என்று நினைக்கிறீங்க:


திருமணத்திற்கு முன் வரும் காதல் தான் எனக்குப் பிடிக்கும்.


வாசகர்கள் விருப்பத்தை என்னால் கண்டுபிடிக்க முடியலங்க... நிறைய ரிசர்ச் செய்துட்டு இருக்கேன்.


….


🤣🤣🤣🤣


*******


உங்களது விருப்பமான எழுத்தாளர்:

உஷாந்தி 

ரமணிசந்திரன் அம்மா

…...


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


நிறைய ஈமெயில் வந்திருக்கு...  ஒவ்வொன்னும் மனசுக்கு நெருக்கமானது தான்...

நிறைய நல்ல நல்ல வாசகர்களை பெற்றிருக்கிறேன்... எல்லாமே மனதுக்கு இதமான அனுபவங்கள். அப்புறம் ஆரம்பத்தில் வந்த விமர்சனங்களில் கதை நல்லாருக்கு பிரதர்ன்னு வாசகர்கள் சொன்னதை மறக்க முடியாது...( ஹா ஹா)



உங்க பெயரை வைத்து ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கும்


*****


நீங்கள் எழுதிய முதல் நாவல்:


சிற்பமும் அவள் சிற்பியும் அவள்


******


உங்களது நாவல்களின் பெயர் :


1)சிற்பமும் அவள் சிற்பியும் அவள்

2) ஷ் இது வேடந்தாங்கல்

3)காஜலிட்ட விழிகளே

4)டைட்டானிக் கனவுகள்

5) லட்சம் காதலால் காதல் செய்

6)ஆயுத எழுத்தில் காதல்

7)காதலின் லிட்மஸ் பரீ்ட்சை

8)வலியா சுகமா எது நீ

9) ஐ.சி.யூ

10) ஆசை முகம் மறந்து போச்சே

11) என்ன தவம் செய்தனை

12)ஃபாஸ்ட்  டிராக்



வித்தியாசமான பெயராக சிலது தெரிகிறதே?


********


எழுத வந்த இத்தனை வருடத்தில் நீங்கள் எதையாவது சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா :


எத்தனை நட்புகள் கிடைச்சிருக்கு தெரியுமாங்க... நண்பர்களை சம்பாதிப்பது பெரிய சாதனை தானே?


******

நாவல் எழுதும் ஆவல் உங்களுக்கு எப்படி தோன்றியது :


ரமணி அம்மா கதைகளைப் படித்தப் பிறகு...


******


நாவல் எழுதி முடித்த பின் நீங்கள் உணருவது என்ன:


ஒரு விமர்சனம் வந்தாகூட பாலா ஹாப்பி அண்ணாச்சி மோட் தான்


...🙂🙂


*******


ஒரு நாவல் எழுத நீங்கள் எடுத்துக்கொள்ளும் நாட்கள்


3 - 4 மாதங்கள்


*******


வாசருக்கான கேள்வி பதில்கள் :



Read and enjoyed written by Mekala ,Tamil and Bala 


Thank you usha Suresh mam 

Thanks for your support and time


**********


Bala sundar akkavin லட்சம் காதலால் காதல் செய். Vera lvl stry. Luv failure athula irunthu meendu varatha pathi akka avanga style la alaga sollirpanga, ஷ் இது வேடந்தாங்கல் intha stryvilaimagalin marupakam nu solalam. Rendu semma stry



Thanks Aarthi murugasan



இரண்டுகதைகளும்  ரசிச்சி எழுதினேன்ங்க

மிக்க நன்றி♥♥♥♥


*********


பாலா சுந்தர் உங்க கதைகள் ரொம்ப நல்லா இருக்கு. சமரசம் செய்து கொள்ளாது இப்படியான கதைகளையே தொடர்ந்து எழுதுங்க



Thank you so much selvarani sister

Lots of love and hugs from

Bala sundar

❤️❤️❤️❤️


*******


போட்டியில் எழுதியிருக்கும் கதை எப்படி பட்ட கதையம்சம் உடையது. அது நீங்கள் எதிர்பார்த்த அளவு வாசகர்களை சென்றடைந்ததா:


இரண்டு கதைகள் எழுதுறேன்ங்க.

1)காதல் கதை

2)சமூக சிந்தனை


நிறைய வாசகர்கள் இன்னும் படிக்கலன்னு நினைக்கிறேன்.

கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு...

ஒரு சில வாசகர்களின் ஊக்கம் தரும் வார்த்தைகள் தான் என்னை வழி நடத்துகிறது.


******


ஒருவர் கதை போல் மற்றொருவர் காப்பியடித்து எழுதுவது பற்றிய உங்களது கருத்து


கருத்து சொல்ற அளவுக்கு காப்பி கதைகள் வொர்த் இல்லங்க.

When they don't realise its waste of time... Why should we do the same


*****


சினிமா நடிகர்களை எதற்காக எழுத்தாளர்கள் தங்களுடைய கதைக்கு ஒப்புமை படுத்துகின்றனர் ராணா மட்டும் ஆணழகனா என்ன :


கதையின்ஹீரோவாக கற்பனை செய்து கொள்ள ஒரு உருவம் தேவைப்படும்போது பழக்கப்பட்ட முகங்களை கதாசிரியர்கள் உபயோகப்படுத்துறாங்க..

அது ஆசிரியர் சாய்ஸ் 

காப்பிரைட் பிரச்சனை மட்டும் இல்லைன்னா நானெல்லாம் அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஃபோட்டோ போடுவேனாக்கும்...

ஹா ஹா 

My all time crush is Ben Affleck ❤️❤️


*******

ஷ் இது வேடந்தாங்கல்


கதை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :


ஒரு விலைமகளைப்பற்றிய கதை இது. ஒரு காவல்துறை அதிகாரியும் விலைமகளும் காதலால் இணைவதை எதார்த்தமாக சொல்லிருக்கேன்.

கிண்டில்ல இருக்கு. வாசிங்க. ஷேர் செய்ங்க

https://www.amazon.in/dp/B07G65GZQC



மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

உங்களுடைய கேள்வி பதில்கள் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் நாவல்களை வாசித்தவர்கள் அதைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் வாழ்த்தலாம்...


Comments

  1. நல்ல கேள்விகள். அழகான பதில்கள்.

    ReplyDelete
  2. உண்மையில் எழுதுவது வரம், எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, குடும்பத்தில் ஒருவருக்கு எழுத வரும் என்றாலே இன்று லட்சகணக்கானோர் எழுத்தாளினியாக இருப்பார்கள், புத்தக கண்காட்சியில் கூட அவ்வளவு பேர் கூடுவதில்லை, வாசிப்பது சுவாசிப்பது போல இருக்க வேண்டும், அதிலும் பெண்கள், குடும்ப பராமரிப்பு, வேலை மற்றும் பல அலுவல்களுக்கிடையே சாதிக்கும் போது கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் விட தோன்றுகிறது. வாழ்க வளமுடன், படைப்புகள் மூச்சு உள்ளவரை தொடரட்டும். 70 வயது கடந்து விட்டது ஆனாலும் விடாமல் படித்து விடுவேன். .

    ReplyDelete

Post a Comment