சவீதா முருகேசன்

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர் சவீதா முருகேசன் அவர்களைப் பற்றிய நேர்காணல்…



பெயர் : சவீதா லட்சுமி


சொந்த ஊர் : திருநெல்வேலி


படிப்பு : M.Com., M.B.A.,


பணி : Accountant


தளம் : https://www.mallikamanivannan.com/community/categories/saveetha-murugesan.3/


அமேசான் பெயர்: Saveetha Murugesan


******


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா: 


கணவர், நான், இரண்டு கண்மணிகள் ஆணும் பெண்ணுமாய். ஒரு பிரைவேட் கம்பெனில அக்கவுண்ட்ஸ் இருக்கேன். சின்ன வயசுல இருந்து படிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும் (பாட புத்தகமில்லைங்கோ... அது வேறு இது வேறு), அம்மாவுக்கு வாசிப்பு பழக்கம் உண்டு, அவங்க லைபிரரில இருந்து புத்தகம் எடுத்திட்டு வருவாங்க. அவங்க எடுத்து வர்றதை படிக்க ஆரம்பிச்சு பிறகு லீவுவிட்டா அம்மா கூட நானும் அங்க போவேன், எனக்கு பிடிச்ச மாதிரி கதைகள் எல்லாம் எடுத்து வந்து படிக்க ஆரம்பிச்சேன்... 

    

******


நீங்கள் நாவல் எழுதும் போது உணருவது என்ன : 


வேறு சிந்தனைகள் அறவே இல்லாம அந்த கதைக்கருவுக்குள்ளவே பயணிக்க ஆரம்பிச்சிடுவேன், சமயத்துல பக்கத்துல யாராச்சும் பேசினா கூட அது எனக்கு கேட்கவே கேட்காது. (திட்டும் வாங்கியிருக்கேன் கேள்வி கேட்டா என்ன யோசனைன்னு)


….


நிஜம் தான் சிஸ்டர்


******


ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும். அதை வாசிக்க ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் என்ன விதமான உணர்வுகள் மனதில் தோன்ற வேண்டும் :


அந்த கதையின் முழு உணர்வுகளையும் உள்வாங்கி படிப்பது தான் எழுத்தாளனின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி என்பது என் கருத்து. அலைகளின் போக்கிற்கு மேலெழும்பி அமிழ்ந்து செல்லும் படகு போல அந்த கதைக்குள்ளவே முழ்கி அதாவது சிரிக்கும் போது சிரிச்சு, அழும் போது கண்கள் கலங்கின்னு அந்த உணர்வுகளை வாசகர்களுக்கு கடத்தி சுபமாய் முடிக்கும் வேளையில் அவர்களிடத்திலும் அந்நிறைவு இருக்க வேண்டும். 



உண்மை தான் சிஸ்டர். நானும் அப்படி தான் நினைப்பது


*******


போட்டி கதைகளில் பங்கு பெற்ற அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா :


மன்னிக்கவும் அந்த அனுபவமே எனக்கில்லை. ஏன்னா நான் போட்டியில கலந்துக்கிட்டதே இல்லை. 


******


உங்களது விருப்பமான எழுத்தாளர்:


நிறைய பேரு இருக்காங்க, கல்கி, சாண்டில்யன், ரமணியம்மா, சுஜாதா, இந்திரா சௌந்தர்ராஜன், சுபா, ராஜேஸ்குமார் இப்படி நிறைய, இதுல என்னோட அனைத்து எழுத்தாளர் நண்பர்களும் அடக்கம். 


*******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


நான் எழுத வந்ததே எனக்கு நம்ப முடியலை. இவ்வளவு புக்கா வைச்சுட்டு இருக்கியே, ஏன் எழுதினா என்னன்னு என்னோட கணவர் கேட்ட கேள்வி என்னை யோசிக்க வைச்சுது. நாம எழுதினா என்னன்னு ஆரம்பிச்சு டைரியில எழுதி என்னோட அலுவலக தோழியிடம் கொடுக்க நல்லாயிருக்குன்னு அவ கொடுத்த ஊக்கம் மேலே மேலே எழுத வைச்சுது. அப்போ கூட தெரியாது வெளிய நெறைய பேரு எழுதறாங்க அதுவும் ஆன்லைன்லன்னு, முகப்புத்தக கணக்கு தொடங்கி நாலைந்து வருடங்கள் ஆகியிருந்தது அப்போது. ஆனா அதை அப்போ பெரிசா யூஸ் பண்ணதில்லை. ஒரு நாள் அப்படி என்ன தான் இருக்கு அதுக்குள்ளன்னு அப்போ தான் முழுசா முகப்புத்தகத்தை தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். 

பார்த்தா குரூப் சஜஷன் படிக்க எழுதன்னு அப்படி ஆரம்பிச்சது தான் ஆன்லைன் பயணம், இங்க எழுத்தாளர் லதா பைஜூக்கு தான் பெரிய நன்றி சொல்லணும். நான் தொடர்ந்து எழுத அவங்களும் ஒரு காரணம்.


*******


நீங்கள் எழுதிய முதல் நாவல்:


சட்டென்று மாறுது வானிலை


******


உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:


அப்படி எதுவும் பெரிசா எனக்கு தெரியலை. ஆனா வாசகர்கள் பெரிதாய் விரும்பிய கதைன்னு பார்த்தா சில்லென்று ஒரு காதல். 


*******


நீங்கள் எழுதிய மொத்த நாவல் :


இருபத்தி மூன்று


********


எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:


எட்டு வருடம்


*******


ஒரு தொடர்கதையின் அத்தியாயங்கள் மற்றும் வார்த்தைகள் எத்தனை வரிகளில் இருப்பது ஏற்புடையது :


வரிகள் பற்றி எனக்கு தெரியலை, அத்தியாயம் இருபதில் இருந்து இருபத்தியைந்துக்குள் இருந்தால் நல்லது படிக்கறவங்களுக்கு கொஞ்சம் சுலபமா இருக்கும். சில கதைகள் அதையும் தாண்டி போறது உண்டு.அதை கதையோட போக்கு தான் தீர்மானிக்கும்.


******


ஒரு நாவல் எழுத என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்


நல்லா கதை சொல்ல தெரிஞ்சிருக்கணும், அதாவது கற்பனைத்திறன் இருக்கணும் அப்படிங்கறது என்னோட கருத்து. 


******


ஒரு வாசகரின் கேள்வி இது " ஒரு படைப்பை வாசிக்கும் போது அது எழுத்தாளனின் கற்பனையாக இருக்க வேண்டுமா அல்லது வாசிப்பவரின் கற்பனையாக இருக்க வேண்டுமா:


நிச்சயமாக அது எழுத்தாளனின் கற்பனையாகத்தான் இருக்கும், அதை வாசகனுக்கு கடத்தும் பொறுப்பை எழுத்தாளனின் எழுத்து செய்யும்.

      

….


நிச்சயமாக


******


நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:


கொடிச்சி


******


உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் :


சட்டென்று மாறுது வானிலை, சில்லென்று ஒரு காதல், ஆத்தங்கரை மரமே,

 செவ்வந்தி பூவெடுத்தேன், விஸ்வகர்மா, 

முல்லைவேந்தன், 

மடவரல் இன் துணை,

 நிஷாகந்தி, 

வேர் தீண்டும் இலை


….


அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு


*******


நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?


செவ்வந்தி பூவெடுத்தேன் பிடிக்கும். பெண் கதாபாத்திரங்கள்ல சில்லென்று ஒரு காதல் ஆதிராவும், ஆத்தங்கரை மரமே மீனாவும் ரொம்ப பிடிச்சு எழுதினது. ஆண்கள் கதாபாத்திரத்துல ஆத்தங்கரை மரமே சுஜித், செவ்வந்தி பூவெடுத்தேன் வீரா ரொம்பவும் பிடிக்கும்.


******


உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது :


சில்லென்று ஒரு காதல்


******


உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:


லிஸ்ட் நீண்டுட்டே போகுமே இந்த இடமே பத்தாது. 


******


நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:


எல்லா வகையான நூல்களும் பிடிக்கும், கவிதை நூல்கள்ல ஆரம்பிச்சு, சரித்திரம், குடும்ப நாவல், கிரைம் இப்படி எந்த பக்கமும் விடுறதில்லை முடிஞ்ச வரை படிச்சிடுவேன்


******


எந்த எழுத்தாருடைய நூல் வாசித்தால் அருமையாக இருக்கும் என்கிறீர்கள். எதனால்:


எந்த எழுத்தாளர்ன்னு சொல்றதைவிட எப்படிப்பட்ட நூல்களை வாசித்தால் அருமையாக இருக்கும்ன்னு கேட்டிருக்கலாம். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை இருக்கும், எல்லா கதைகளுமே எல்லா வாசகனையும் திருப்தி படுத்திடாது. எனக்கு பிடிச்ச ஒரு கதை இன்னொருத்தருக்கு பிடிக்கும்ன்னு நான் உறுதியா சொல்ல முடியாது அது அவங்கவங்களோட எண்ணவோட்டத்தை பொறுத்தது. படிப்பதற்கு ஏற்ற நல்ல மனநிலை, அழகான எழுத்துநடை கொண்ட கதையும் அதன் ஓட்டமும் வாசகனை நிச்சயம் கவரும்.



நிஜம் தான்


*******


உங்கள் கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?


நெறைய படிங்க என் கதைகள் மட்டுமில்லை எல்லா கதையும் படிங்க, தேர்ந்தெடுத்து படிங்க, வாசிப்பு அறிவை விசாலமாக்கும்,


*******


விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் இருந்தால் நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:


போட்டிக்கே போனதில்லையே, விருது பரிசுன்னு எதுவும் வாங்கியதில்லை சிஸ்


*******


நாவல் எழுதும் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏதாவது உண்டுமா :


விதிமுறைகள் நமக்குமே நாமே போட்டுக்க வேண்டியது தான். அனைத்து தரப்பினரும் படிக்கும் வகையில் முகச்சுளிப்பில்லாத தரமான படைப்புகளை எழுத்தாளன் கொடுத்தாலே போதும்


******


ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா :


இருபது அல்லது இருபத்தி ஒண்ணுன்னு நினைப்பேன். சில சமயம் ஒண்ணோ ரெண்டோ கூட போகும், இப்போலாம் அதையும் விட அதிகமா போகுது.


அதுக்கு ரெண்டு காரணம் தான் சீக்கிரமே எழுதி முடிக்கும் போது குறிப்பிட்ட அத்தியாயத்துக்குள்ள முடிஞ்சவரை முடிச்சிடுவேன், வேலை பளுவினால் கால தாமதம் வரும் போது தான் அத்தியாயம் சில சமயம் கூடிப்போகும்.


*******


 உங்கள் கதைகளில் கவிதை, வருணனை எழுதிய அனுபவம் இருக்கிறதா :


நானும் கவிதை எழுதிய மொமென்ட் சில்லென்று ஒரு காதல் நாவலில். அதில் ஒன்றிரண்டு தவிர அனைத்தும் நான் எழுதியது. வருணனை எனக்கு மிகப்பிடிக்கும் அதிகமாக வருணித்து எழுதியதில்லை.


******


நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்கள் :


நல்ல நாவல்களை தொடர்ந்து வாசிக்கவே விரும்புகிறேன்


*****


தற்சமயம் வாசித்த நாவல்களின் பெயர் :


இப்போ நாவல் எதுவும் வாசிக்கலை, நேரமில்லை, எழுத நேரம் ஒதுக்கறதுக்கே போதும் போதும்ன்னு இருக்கு. வேள்பாரி புக் எடுத்து வைச்சிருக்கேன் படிக்கணும்...

 

******


ஒரு சமூக கதையில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கணும், என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:


தெரியலை


******


உங்கள் கதைகள் காதல் | குடும்பம் | சமூகம் | வரலாறு இதில் எதைப் பொருத்து இருக்கும்:


காதல், குடும்பம், சமூகம் இருக்கும் வரலாறு இருந்ததில்லை. நம்ம கண் முன்னாடி நடந்த, நடக்கும் விஷயங்களை கதையில அவ்வப்போது சேர்க்கறதுண்டு.


******


நீங்கள் எழுதிய கதைகளில் எதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:


காரக்கால சங்கீதம் (சைட்ல மனசுக்குள் மழையாய் நீ) நாயகன் ஒரு கேப் டிரைவரா அறிமுகமாகி பின்னாடி படிச்சு கலேக்டராவார். நாயகியோட தோழியை விரும்பும் நாயகன் சைதன்யன் நாயகி சங்கமித்ராவை தன் கலெக்டர் கனவு நினைவாக்குறதுக்காக திருமணம் செஞ்சுக்குவார். 


அதுல நாயகி நிறைய மைன்ட் வாய்ஸ் பேசுவாங்க. அது கிட்டத்தட்ட எனக்கும் என் பிரண்ட் சுஜிக்கும் ரொம்பவே பொருந்தும். ரெண்டு பேருமே அதே மாதிரி தான் இருப்போம். என்னோட பள்ளிக்கால தோழி சுஜியும் அந்த கதையில இருப்பாங்க. 


….


அருமை சிஸ்டர்


********


உங்களது முதல் கதை புத்தகமாக விற்பனைக்கு வந்த போது உங்களது உணர்வு, வீட்டார் உணர்வு என்ன மாதிரி இருந்தது.


என் பையன் பிறக்கும் போது என்ன உணர்வோ அதே உணர்வு எனக்கு. என் வீட்டாருக்கு அளவில்லா மகிழ்ச்சி


******


கற்பனை காட்சியும் வருணனையும் அதிகமாக கலந்து எழுதப்படும் நாவல் வாசிக்கும் போது என்ன மாதிரி உணர்வை தோற்றுவிக்கும் :


அளவான கற்பனையும் வருணனையும் கண் முன்னே காட்சியாய் விரியும்... அதீத கற்பனை முகச்சுளிப்பை கொடுக்கும், ஆறடி ஆண்மகன், ரோலக்ஸ் வாட்ச், ஆடி கார், நீளமான முடி இதெல்லாம் படிச்சா ரொம்ப டென்ஷன் ஆகும் எனக்கு.


….


😂😂😂


******


நீங்க you tube Channal and Audio Channal ஏதாவது வச்சிருக்கங்களா:


இருக்கு நானும் ரவுடி தான் மொமென்ட்

Saveetha murugesan novels 


*******


தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல விருப்பப்படுகிறீர்களா :


இவ்வளவு பேசினதே அதிகம் இதுக்கு மேல என்ன சொல்ல சிஸ்


******

 


வாசகர்களுக்கான கேள்வி பதில் :


ஒரே நேரத்தில் எதற்காக ரெண்டு கதை, நான்கு கதை என்று எழுதறாங்க. ஒரு நாவலை முடித்து விட்டு அடுத்து தொடரலாமே :


அதிகப்பட்சம் இரண்டு கதைகள் ஒரே நேரத்தில் கொடுக்க முடியும், நான்கு கதை எல்லாம் முடியாதுன்னு நினைக்கிறேன். நீங்க சொல்றது சரி தான் ஒண்ணு முடிச்சுட்டு அடுத்ததை தொடரலாம், ஆனா கதை மனசுக்குள்ள வந்திட்டு மறந்திட போற, எழுதேன்னு பண்ணுற அலம்பல்ல தான் தொடங்கிட்டு அல்லாட்டிட்டு இருக்கோம். இனிமே ஒரு கதை மட்டும் தான் எழுதணும் ஒரு நேரத்துலன்னு முடிவு பண்ணியிருக்கேன் (எத்தனை நாளைக்கோ) நேரமின்மை தான் காரணம்.


*****


திரில்லர் கதை எழுதிய அனுபவத்தை பற்றி சொல்ல முடியுமா. அதன் முடிவு நீங்களா விருப்பப்பட்டு கொடுத்ததா அல்லது கதைக்காக எழுதி முடித்ததா :


உயிரை கொடுக்க வருவாயா கதை தான் நான் எழுதின திரில்லர் கதை. கதையோட போக்கு படிக்கிறவங்களையும் பயமுறுத்தணும்ன்னு அந்த பதிவுகள் எல்லாம் இரவு நேரத்துல தான் எழுதினேன். அக்கம் பக்கம் ஒரு பார்வை பார்த்திட்டே தான் எழுதுவேன், எழுதுறது பேய் கதையாச்சே. முடிவு எப்பவும் என் விருப்பமா தான் இருந்திருக்கு, அதை பெரிதாய் எப்போதும் நான் மாற்றியதில்லை.


….


🙂🙂🤣🤣 கதை எழுதியவரே இப்படி அக்கம் பக்கம் பார்த்தால் அதை வாசித்தவர் ...


******


ஒருவரின் கதை போல மற்றொருவர் எழுதிவிட்டு இது என்னுடைய கற்பனையில் உதிப்பது, என் சொந்த முயற்சி என்று வசனம் பேசுபவர் பற்றிய உங்களுடைய கருத்து :


ஒரே மாதிரியான கதை கரு இருக்கலாம், கதையின் போக்கு முழுதாய் வேறாய் இருந்தால் படிக்கலாம். அப்பட்டமான காப்பி என்பது ஏற்புடையது அல்ல.



கண்டிப்பாக


*******


நீங்கள் நாவல் எழுதும் முன் செய்வது என்ன:


வேறென்ன முதலில் கதை கருவை யோசிப்பேன் அப்புறம் ஒவ்வொரு சீனா யோசிப்பேன்


******


நீங்கள் நாவல் எழுத எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் எவ்வளவு :


இதுக்கும் எனக்கும் சம்மந்தமேயில்லை. நான் ஒரே மாசத்துல முடிச்ச நாவலும் இருக்கு ஒரு வருஷம் கழிச்சு முடிச்சதும் இருக்கு. சூழ்நிலைகளும், வேலை பளுவும் தான் அதை தீர்மானிக்கும்


******


கதையின் கருவை தீர்மானிப்பது எப்படி :


எந்த நேரத்துலயும் அது மனசுல தோணும் அதுக்கு எல்லையே இல்லை. பார்த்த கேட்ட வருந்திய சந்தோசப்பட்ட தருணங்கள்லன்னு நெறைய தோணும். ஆயிரம் விந்துவில் ஒரு விந்து தான் உயிரா ஜனிக்குது அது போல தான் எல்லா கருவும் கதையாகறதில்லை. 


….


சபாஷ் சிஸ்டர் அருமையான பதில். மனதில் தோன்றுவதை எல்லாம் படைப்புகளாக மடைமாற்றம் செய்து விடக்கூடாது தான்


**

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏

உங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. 


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய  எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அதைப்பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம் மற்றவர் அவரது திறமையை வாழ்த்தலாம்.

Comments

Post a Comment