பார்கவி முரளி

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர் பார்கவி முரளி அவர்களைப் பற்றிய நேர்காணால் இதோ…


பெயர் : பார்கவி


சொந்த ஊர் : திண்டுக்கல்


படிப்பு : BE (ECE)


பணி : ASIC Design Engineer, Bangalore


தளம் :

நிறைய தளங்களில் எழுதியிருக்கேன். இப்போ போட்டிக்காக சகாப்தம் மற்றும் அன்னாஸ்வீட்டி தளங்களில் எழுதிட்டு இருக்கேன். இது இல்லாம ரீரன் கதையை தூரிகை தளத்தில் எழுதிட்டு இருக்கேன்.


அமேசான் பெயர்: பார்கவி முரளி


*****


நீங்கள் எழுதிய முதல் நாவல் :


உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே


*****


தற்சமயம் எழுதி வரும் நாவலின் பெயர் : துஷ்யந்தனின் காதலி


*******


நீங்கள் எழுதிய மொத்த நாவல் :



நாவல் - 4


குறுநாவல் - 3


******



எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:


3 வருடங்கள்


******


உங்களுடைய நாவல்களின் பெயர் :


நாவல்கள் :


• உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே (காதல், நகைச்சுவை)

• மிரட்டும் அமானுஷ்யம் (அமானுஷ்யம், காதல்)

• என்னில் இணைய, உன்னை அடைய (காதல், திரில்லர்)

புவியே காட்சிப்பிழையாய் (sci-fi, திரில்லர்)


குறுநாவல்கள் :


• புதிராய் நீயெனக்கு (சைக்கலாஜிகல் திரில்லர்)

• நீயாக நான், நானாக நீ (காதல், நகைச்சுவை)

• வழி மாறிய பயணம் (காதல், நகைச்சுவை)


சிறுகதைகள் :


• தடம் மாறிய தடயம் (திரில்லர்)

• வெள்ளையாடை தேவதை (சமூகம்)

• கருவறை தாண்டி(ங்கிய) சுமை (சமூகம்)

• தனிமையில் ஓர் இரவு (அமானுஷ்யம், நகைச்சுவை)

• மாய(மான) அறை (அமானுஷ்யம், நகைச்சுவை)

• குற்றங்கடிதல் (சமூகம்)


....

வித்தியாசமான பெயர்களை தேர்ந்தெடுத்திருக்கீங்க அருமை



*******


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


(இன்டெர்வியூல கூட எனக்கு பதில் சொல்ல வராத ஒரே கேள்வி 'Tell me about yourself'..! ஹ்ம்ம் இருந்தாலும் முயற்சி பண்ணுவோம்...)


நான் பார்கவி. என் அப்பா - அம்மாக்கு ஒரே பொண்ணு... (இன்னும் அக்கா, கசின், பேத்தின்னு நிறைய போஸ்ட் இருக்கு... அதையெல்லாம் சொன்னா பெருசா போயிடும்னு இதோட நிறுத்திக்குறேன்..!)  என்னென்னவோ படிக்கணும் நினைச்சு கடைசில சேர்ந்தது இன்ஜினியரிங்... ப்ளஸ் டூல Bio-Maths எடுத்து இன்ஜினியரிங் சேர்ந்த குரூப்பில் நானும் ஒருத்தின்னு பெருமையா சொல்லிக்கிறேன்... கேரியர் விஷயத்துல நடந்த ஒரே நல்ல விஷயம், என்னோட core lineல வேலை கிடைச்சது தான். ஆனா, நானே எதிர்பார்க்காதது, கதை எழுத வந்தது. கிட்டத்தட்ட மூன்று வருஷமாச்சு கதை எழுத வந்து... இதுவரை 13 கதைகளை வெற்றிகரமாக முடிச்சுருக்கேன்... (நாவல், குறுநாவல், சிறுகதை எல்லாம் சேர்த்து தான் 13...) 


எப்பவும் பாசிட்டிவ்வா இருக்கணும்னு நினைப்பேன்... சீக்கிரம் டென்ஷனாலும், அதை விட சீக்கிரமா அதுலயிருந்து வெளிய வர பார்ப்பேன்...  மூட் அப்செட்ல இருந்தா ஏதாவது நல்ல பாட்டு, இல்லன்னா காமெடி பார்த்து திரும்ப ரீசார்ஜ் பண்ணிப்பேன்... கதை படிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும்..  கதைக்குள்ள மூழ்கி, என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாத அளவுக்கு கதைகள் மேல பைத்தியம் எனக்கு...



அருமையான தகவல்


*****


நீங்கள் நாவல் எழுதும் போது உணருவது என்ன :


எப்படி கதை படிக்கிறப்போ அதுல மூழ்கிடுறேனோ, அதே மாதிரி கதை எழுதுறப்பவும் அதுல மூழ்கிடுவேன்... நான் எழுதப்போற காட்சிகள் படமா மனசுக்குள்ள விரிஞ்சா தான் என்னால அதை சரியா எழுத முடியும். அதனால, ஒண்ணு அந்த காட்சி நடக்குற இடத்துல பார்வையாளராவோ, இல்ல அந்த காட்சில வர கதாப்பாத்திரமாவோ என்னை நானே கற்பனை பண்ணி காட்சிகளை எழுதுவேன்.


(என் கதை படிச்சவங்க இருந்தீங்கன்னா, எந்த காட்சிகள்ல என்னை அந்த கதாப்பாத்திரமா கற்பனை பண்ணியிருப்பேன்னு கெஸ் பண்ணுங்களேன்...)


******


ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும். அதை வாசிக்க ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் என்ன விதமான உணர்வுகள் மனதில் தோன்ற வேண்டும் :


இதுக்கு என்னோட ஸ்டைல்ல பதில் சொல்றேன்...

கதை பிரியாணி மாதிரி இருக்கணும்... (எனக்கு பிரியாணி பிடிக்கும்... சோ இங்க பிரியாணியை சொல்லிருக்கேன்... உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை ரீப்ளேஸ் பண்ணிக்கவும்...) கதையோட கரு தான் பிரியாணி அரிசி... அதுல இருக்க எமோஷன்ஸ் தான் பிரியாணிக்கு தேவையான ஸ்பைஸஸ்... இப்படி ஒவ்வொன்னா பார்த்து பதமா பண்ண பிரியாணியை (கதையை) சாப்பிட (வாசிக்க) ஆரம்பிக்கும் போது ஒரு எக்ஸைட்மெண்ட் இருக்கணும். அதே மாதிரி சாப்பிட்டு (வாசித்து) முடித்ததும் நல்ல சாப்பாட்டை சாப்பிட்ட (கதையைப் படித்த) திருப்தி இருக்கணும். இதுக்கு நடுவுல, ஒவ்வொரு ஸ்பைஸஸோட (எமோஷன்ஸோட) டேஸ்ட்டையும் ரசிச்சு சாப்பிடுற (படிக்கிற) மாதிரி இருக்கணும்...


******


போட்டி கதைகளில் பங்கு பெற்ற அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா :


அது நிறைய இருக்கே...

சிறுகதை போட்டி முதல் நாவல் போட்டி வரை பங்கேற்ற அனுபவம் இருக்கு... போட்டிகள் தான் நிறைய வாசகர்களையும் எழுத்தாள நட்புக்களையும் எனக்கு அறிமுகப்படுத்துச்சு... நான் போட்டியில பங்கேற்பதற்கான முக்கிய காரணம்... அப்படியாவது சீக்கிரம் எழுதி முடிப்பேன்னு தான்..!


….


🙂🙂🙂


******


உங்களது விருப்பமான எழுத்தாளர்:


நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க... அதனால சேஃபர் சைடுக்கு என்னையே சொல்லிக்கிறேன்... (நானும் எழுத்தாளர் தான மொமெண்ட்...)


******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


நான் கதை எழுதுற நேரம், இரவு எல்லாரும் தூங்குறப்போ... அப்பப்போ வேலைக்கு நடுவுல எழுதுன நாளும் இருக்கு... (உபயம் ஒர்க் ஃப்ரம் ஹோம்...) இதனால தான் என்னால ரெகுலர் அப்டேட்ஸ் கொடுக்க முடியாம போகுது... ஒரு எபி எழுதி முடிக்கணும்னு நினைச்சா அன்னைக்கே எழுதி முடிச்சுடுவேன்... (ஆனா, அப்படி நினைக்காதது தான் இங்கே பிரச்சனையே..!) சரி, இப்போ எழுதலாம்னு ஆரம்பிக்குறப்போ தான் எங்கிருந்து வருதுன்னே தெரியாம, ஏதாவது வேலை வந்துடும்... அதெல்லாம் தாண்டி வெற்றிகரமா உங்களுக்கு முன்னாடி நின்னுட்டு இருக்கேன்னு நினைக்குறப்போ ரொம்ப ஹாப்பியா இருக்கு... அதையும் விட, ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில எழுதுற கதைக்கு வாசகர்கள் கொடுக்குற ஆதரவு தான் இன்னும் எழுத தூண்டுது.



******


உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:


இன்னும் முழு திறமையை வெளிப்படுத்தியிருக்கேனான்னு தெரியல... ஆனா, எழுதி இரண்டு வருஷமாகியிருந்தாலும் இப்போ வரைக்கும் கமெண்ட்ஸ் வந்துட்டு இருக்க கதை, என்னோட முதல் கதையான "உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே". இந்த கதைக்கு வந்த சில கமெண்ட்ஸ் பார்த்து தான் 'நமக்குள்ளயும் ஏதோ இருந்துருக்கு போல'ன்னு எனக்கு நானே ஃபீல் பண்ணிக்கிட்ட மொமெண்ட்ஸ் எல்லாம் நடந்தது... (பிகு... இப்போ அந்த கதையை படிச்சா, இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாம்னு தோணுறது உண்மை தான்.



*******


ஒரு தொடர்கதையின் அத்தியாயங்கள் மற்றும் வார்த்தைகள் எத்தனை வரிகளில் இருப்பது ஏற்புடையது :


1500 வார்த்தைகளுக்கு மேல். ஆனா, சில நேரங்கள்ல சஸ்பென்ஸ் உடைக்காம இருக்க இதை விட குறைவான வாரத்தைகள் வைக்க வேண்டிய சூழ்நிலையும் எழுத்தாளர்களுக்கு வரலாம்.


….


நிஜம்தான் நானும் அப்படித்தான் செய்வது


*******

ஒரு நாவல் எழுத என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்:


நல்லா கற்பனை பண்ண தெரிஞ்சுருக்கணும். வாசகர்கள் பார்வையில இருந்து, நாம எழுதுன கதையைப் படிச்சு வேற எந்த மாதிரி கொண்டு போனா, இன்னும் சுவாரசியமா இருக்கும்னு யோசிக்க தெரிஞ்சுருக்கணும்.


******


நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்கள் :


ரெண்டு மூணு நாள் என்னையவே மறந்து அந்த கதைக்குள்ள போற அளவுக்கு எழுதும் எழுத்தாளர்கள் கதைகளை படிக்க விருப்பம்... 


******


தற்சமயம் வாசித்த நாவல்களின் பெயர் :


வேலைபளு காரணமாக சமீபமாக எந்த கதைகளையும் வாசிக்கவில்லை.

 

******


ஒரு சமூக கதையில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கணும், என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:


இதுவரை சமூக பிரச்சனைகளை மட்டும் மையக்கருத்தா வச்சு எந்த கதைகளையும் எழுதல... ஆனா, சமூக கதைகள் எழுதணும்னா சமூக பிரச்சனைகள் பத்தின நல்ல புரிதல் இருக்கணும். மேம்போக்கான விஷயங்களை மட்டும் சொல்ற மாதிரி இருக்கக் கூடாதுன்னு நினைக்குறேன்.


….


கண்டிப்பாக


*******


உங்கள் கதைகள் காதல் | குடும்பம் | சமூகம் | வரலாறு இதில் எதைப் பொருத்து இருக்கும்:


காதல் கொஞ்சம், காமெடி கொஞ்சம்,  சமூகம் கொஞ்சம்னு எல்லாமே கலந்த கலவையா இருக்கும் என்னோட கதைகள்.

அப்பப்போ திரில்லர், ஹாரர் கூட இருக்கும்..


குடும்பம், வரலாறு தொடர்பான கதைகள் எழுத ஆசை தான்... ஆனா, சொதப்பிடக் கூடாதுன்னு இப்போவரை எழுதல... எதிர்காலத்துல எதிர்பார்க்கலாம்..!


******


நீங்கள் எழுதிய கதைகளில் எதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:


சமீபத்துல போட்டிக்காக எழுதி முடிச்ச "புவியே காட்சிப்பிழையாய்" கதை தான், நான் இதுவரைக்கும் background works நிறைய பண்ண கதை இது தான். சயின்ஸ் பிக்ஷன் கதைன்னாவே நிறைய தேடிப் படிக்க வேண்டியதிருக்கும். அதுவும் எதிர்காலத்துல நடக்குற கதைன்னா, சொல்லவே வேண்டாம். 

எதையும் சும்மா 'ஜஸ்ட் லைக் தேட்' எதிர்காலத்துல நடக்கும்னு கதைல சொல்ல விரும்பல. நான் சொல்லப்போறது கொஞ்சமாச்சும் நிகழ்காலத்தோட ஒத்து வரணும்னு ரொம்பவே மெனக்கெட்டுருக்கேன்னு தான் சொல்லணும். அதுக்காகவே கதையில வர கண்டுபிடிப்புகள் எல்லாமே இப்போ நடக்குற ஆராய்ச்சிகளோட முதல் நிலையில இருக்குறதா இருக்கும்... இல்லன்னா இப்போ இருக்க கண்டுபிடிப்புகளோட அட்வான்ஸ்மெண்ட்டா இருக்கும்... இதை வாசகர்கள் எப்படி ஏத்துப்பாங்கன்னு தெரியாம தான் எழுத ஆரம்பிச்சேன். பொதுவா, சயின்ஸ் பிக்ஷன்னுக்கு அவ்ளோவா வரவேற்பு இருக்காது தான்... ஆனாலும், கதை ஆரம்பிச்சதுல இருந்து முடியுற வரைக்கும் தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் கொடுத்த அந்த நாலு பேருக்கு நன்றி... (நாலு பேருன்னு சும்மா ரைமிங்க்கு சொன்னேன்... எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள்...)


******


உங்களது முதல் கதை புத்தகமாக விற்பனைக்கு வந்த போது உங்களது உணர்வு, வீட்டார் உணர்வு என்ன மாதிரி இருந்தது:


என்னை விட என் அப்பா - அம்மா தான் ரொம்ப உற்சாகமா இருந்தாங்க... நெருங்கிய உறவினர்கள் எல்லாருக்கும் போன் பண்ணி சொல்றதென்ன, அவங்க எனக்கு போன் பண்ணி பாராட்டுறதென்ன... இதை எழுதுறப்போ கூட வேற லெவல் ஃபீலிங்ல தான் எழுதுறேன்..!


******


நீங்கள் எழுதிய நாவல்களில் உங்களை கவர்ந்ததாக எதையாவது சொல்ல நினைக்கிறீர்களா :


எல்லாமே என்னைக் கவர்ந்தது தான். முதல் நாவல் எழுதி முடிச்சு நல்ல வரவேற்பு கிடைச்சப்போ, அது தான் என்னோட பெஸ்ட்னு நினைச்சேன்... ஆனா, அடுத்த கதை எழுதுனப்போ எனக்கே முதல் கதை விட இரண்டாவது கதை பிடிச்சது... இதே மாதிரி தான் இப்போ கடைசியா எனக்கு பிடிச்சது "புவியே காட்சிப்பிழையாய்". இது தொடர்ந்துட்டே இருக்கும்னு தான் நினைக்குறேன்..!


******


உங்கள் நாவல்களை வாசிப்பவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன :


ஒரு ஃபுல் லெந்த் ரொமான்டிக் லவ் ஸ்டோரின்னு நினைக்குறேன்... (நான் நினைச்சது சரியான்னு கமெண்ட்ல சொல்லுங்கோ...)

பிகு... ரொமான்டிக் லவ் ஸ்டோரி எழுதுவேன்... தேதி பின்னர் அறிவிக்கப்படும்..!


******


கிரைம், திரில்லர் வகை நாவல்களை கொடுத்த அனுபவம் இருக்கிறதா :


இருக்கே... சமீபத்துல எழுதின கதை "புவியே காட்சிப்பிழையாய்" திரில்லர் வகையை சார்ந்தது தான். எனக்கு திரில்லர் கதைகள் ரொம்ப பிடிக்கும். அதனாலயோ என்னவோ, என்னோட கதைகள்ல மோஸ்டலி சஸ்பென்ஸ் ஃபேக்டர் நிறையவே இருக்கும்..!


நாவல்களின் பெயர் :

மிரட்டும் அமானுஷ்யம் (Horror + thriller)

புவியே காட்சிப்பிழையாய் (Science fiction + thriller)

என்னில் இணைய, உன்னை அடைய (இதுவும் ஒருவகை திரில்லர் தான்னு நினைக்குறேன்... எனக்கே என்ன genreல கொண்டு வரதுன்னு தெரியாத மொமெண்ட்..!)

 

*******


ஒரு சமூக கதையில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கணும், என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:


சமூக கதைகள்னு எழுதியிருக்கா விட்டாலும், என்னோட கதைகள்ல அங்கங்க சமூக கருத்துக்கள் இருக்கும். முதல்ல எடுத்திருக்க கருவை பத்தின நல்ல அறிவு இருக்கணும்... அதைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்காம எழுதினா, அந்த கதை சமூக கதையா இருக்காதுன்னு என்னோட புரிதல்... (சரியான்னு கமெண்ட்ல சொல்லுங்க வாசகர்களே...)



*******


கற்பனை காட்சியும் வருணனையும் அதிகமாக கலந்து எழுதப்படும் நாவல் வாசிக்கும் போது என்ன மாதிரி உணர்வை தோற்றுவிக்கும் :


தேவைக்கேற்ற இடங்கள்ல வர்ணனை இருக்குறது நல்ல ஃபீல் கொடுக்கும். அதுவும் ஃபேன்டஸி வகை கதைன்னா, அங்க வர்ணனை கண்டிப்பா அவசியம். ஆனா, அதுவே அதிகமா இருந்தா, படிக்கிறப்போ சலிப்பு தட்டிடும்.

அப்படியிருந்தா அந்த பார்ட்டை நான் ஸ்கிப் பண்ணிடுவேன்...


….


நானும் கூட🙂🙂🙂


******


நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா:


இல்லை


******

தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல விருப்பப்படுகிறீர்களா


இதுவரைக்கும் என்னோட கதைகளை வாசித்த சைலண்ட் ரீடர்ஸுக்கும், லைக்குகளையும் ரியாக்ஷன்களையும் அள்ளி தெளித்த வாசகர்களுக்கும், ஒரு வரியிலோ, எழுத்தாளர்களுக்கே 'டஃப்' கொடுக்கும் விதமாக கருத்துக்களை டைப்பிடும் வாசகர்களுக்கும் நன்றிகள்... தொடர்ந்து இதே மாதிரி ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்... (இங்க யாரையும் குறிப்பிட்டு சொல்லாததற்கு காரணம், யாரையாவது மிஸ் பண்ணிடுவேனோன்னு தான்...)

Stay positive and be happy...😊😊😊


என்னைப் பத்தி உங்க கூட பகிர்ந்துக்க இடன்ஹா வாய்ப்பை கொடுத்த ஆனந்த ஜோதி சிஸ்க்கு நன்றி... 


….


நன்றிகள் சகோதரி


*******


வாசகர்களுக்கான கேள்வி பதில் :


பார்கவி முரளி கதை ஹீரோயின் பெயர் சொல்லாமலே கதை எழுதுவாங்க  . சஸ்பென்ஸ் வைப்பாங்க.இவங்களுக்கு கேள்வி உங்களுக்கு பிடிச்ச ரைட்டர் யாரு?.


(ஹிஹி அது நானே... ஹீரோயின் பெயர் சொல்லாம சஸ்பென்ஸ்னு கதை முடியும்போது சொல்றது நானே...😂😂😂) ஆனாலும், என் ராஜதந்திரங்களை இப்படி வெட்ட வெளிச்சம் ஆக்கியிருக்க வேண்டாம் சகி.. ஜஸ்ட் ஃபார் ஃபன்... 


இங்க கேள்விக்கான பதிலை காபி பேஸ்ட் பண்ணியிருக்கேன்...


நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க... அதனால சேஃபர் சைடுக்கு என்னையே சொல்லிக்கிறேன்... (நானும் எழுத்தாளர் தான மொமெண்ட்...)


******


Barkkavi Murali Fantasy, Thriller, Horror, Love ன்னு ஒவ்வொரு கதையும் வெவ்வேற மாதிரி தான் இருக்கு. இன்னும் வேற என்ன genre எழுதும் ஆசை இருக்கு?


குடும்பம், வரலாறு தொடர்பான கதைகள் எழுத ஆசை... ஆனா, இப்போ இல்ல... (இருக்க கதைகளை முடிக்க முடியல, இதுல புதுசா வேற genreல கதையான்னு தான கேக்குறீங்க... உங்க மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன் மக்களே...)


******


ஒரு நாவல் எழுதும் முன் நீங்கள் செய்வது என்ன :


1) ஒன் லைனர் யோசிப்பது

2) கதை கருவைப் பற்றிய background தகவல்களை சேகரிப்பது

3) கதாப்பாத்திரங்கள் மற்றும் ஒன் லைனர் வச்சு கதையை கொஞ்சம் பில்ட் அப் பண்ணி யோசிக்குறது

4) கதைக்கான தலைப்பை தேர்ந்தெடுப்பது

5) கதாப்பாத்திரங்களின் பெயர்களை தேர்ந்தெடுப்பது

6) பொருத்தமான கவர் பிக் உருவாக்குவது


******


எழுத்தாளராக இருக்கும் நீங்கள் வேறு ஏதாவது துறையில் பணி நோக்குகிறீர்களா :


ஆம். ASIC Design Engineerஆக பெங்களூருவில் பணிபுரிகிறேன்.


******


Fantasy கதை எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும்:


சிறந்த கற்பனை வளம் இருக்க வேண்டும். மேலும், தான் கற்பனை செய்ததை வாசகர்களிடம் சேர்க்கும் திறமை இருக்க வேண்டும்.


******


வரலாற்று நாவல் எழுதியிருந்தால் அது பற்றி சொல்ல முடியுமா :

இதுவரை வரலாற்று நாவல் எழுதியதில்லை.


******


எழுத்தாளர் அறிமுகப்படலத்தில், என்னையும் அறிமுகப்படுத்தப் போவதற்கு நன்றி சிஸ்...😊😊😊


….


மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏


உங்கள் பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்.


நன்றி

Comments

  1. வாவ் நன்றி சிஸ்😍😍😍 ராகுல் - நந்திதா இன்னமும் உங்களுக்கு பேவரைட்னு நினைக்கும்போது மகிழ்ச்சியா இருக்கு...😊😊😊

    ReplyDelete

Post a Comment