திக்ஷிதா லெஷ்மி

 திக்ஷிதா லெஷ்மி சகோதரி எழுதிய சகாப்தம் வண்ண போட்டிக்கான "அசமஞ்சன்" தொடர்கதை தற்சமயம் முடிவடைந்துள்ளது. அதற்கான விமர்சனம் இதோ..


ஆரம்பமே அதிரடி தான். தொடர்ந்து சென்ற சில அத்தியாயங்கள் கடத்தலும், மிரட்டலும், கொலையும் ஆக நகர்கிறது. என்னடா இது இப்படி போகிறது என மிரள வைத்து விட்டது. அதிலும் சுத்தியால் தலையில் அடிப்பதும், நகத்தை பறித்து எறிவதும், குடலை வெட்டி வீசுவதும் என நகர பயமாகிவிட்டது. ஏம்மா ரைட்டரு !! என்ன இது இப்படி ஒரு மிரட்டல்? என்றேன் நான், அவரோ நகைத்தார். இது தான் அக்கா போட்டி கதையின் ஆரம்பம் என்று ...


ஆஹா!! ஆரம்பமே அதகளமா? என்னால தொடர்ந்து இதை எல்லாம் எப்படி என்று … என்று தோன்றிவிட வந்தான் மனம் கவர்ந்த பெயருடன் நாயகன் தேவா. அப்புறம் கதை அப்படியே கல்லூரி, நட்பு, காதல் என்று அழகான பயணம் செய்ய.. அப்புறம் நாயகியையே கடத்தி செல்ல ஐயகோ!! என்றாகி விட்டது.


செம பிளாஸ்பேக் ஆனால் கொஞ்சம் வேகமாக சென்றிருந்தால் இன்னும் சுவராஸ்யம் அதிகரித்திருக்குமோ என்று தோன்ற வைத்தது. பைனலி யாருப்பா ஹீரோ என்று குழம்ப வைத்து விட்டார்🤩🤩🤩… நாம் ஒன்று நினைக்க, அவரோ🤣🤣🤣 செம லவ் அமைதியான, அழகான, ஆழமான லவ் … 


ஃபிரண்ட்ஸ்ஸாடா நீங்க முட்டா பசங்களா என்று சில நேரம் கறுவ செய்து விட்டனர் அந்த நால்வரும். அதுவும் சுற்றுலா, அந்த கல்லூரி நிகழ்வு, நாயகியின் காதலை மறைத்து சென்ற முறை, பைனல், எல்லாமே மனதில் நின்றவை.


முடிவு இந்தியன் படத்தை நினைவு படுத்தியது. பாவம் சோகம் 


இரட்டை ஜோடிகளில் ஒரு ஜோடி சூப்பர் என்றால் அடுத்தது கீப்பர்🤣🤣🤣 ஸ்ப்பா .. சரியான வாய். அதிலும் கடற்கரை வடை சீன்/ பேச்சு எல்லாமே சிரிப்பும், ரசிப்புமாக சென்றது, அடுத்ததோ ...


தொடர்கதை திகில், கொலை, சஸ்பென்ஸ், நட்புகள் என்று வித்தியாசமான பாணியில் சென்றது நட்புக்களே வாசியுங்கள் விமர்ச்சியுங்கள் .. கருத்து பரிமாற்றம் நல்லது👍👍


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐

Comments