#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் சிவப்பிரியா தேனு...
அவர்களைப் பற்றிய நேர் காணல் இதோ:
பெயர் : ம. சிவப்பிரியா
சொந்த ஊர் : தேனிமாவட்டம்
படிப்பு : முதுகலை கணிதவியல்
பணி : இல்லத்தரசி
தளம் : பிரதிலிபி (வேறெங்கும் கிளைகள் இல்லை😁)
அமேசான் பெயர்: அமேசான்ல இன்னும் கதை எதுவும் போடவில்லை.
******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
என்னைப்பத்தி சொல்லணும்னா.. எல்லாரைப் போலவும் எனக்குன்னு அடையாளம் தேடி அலைஞ்சிட்டிருக்குற ஒரு பெண்.
******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
நான் கதைகள் நிறைய படிச்சது கிடையாது. அதனால எழுத்தாளர்கள் பற்றி தெரியாது. திருமணம் ஆன புதுசுல ராஜேஷ்குமார் சார் நாவல்ஸ் கொஞ்சம் படிச்சேன். அவ்வளவுதான் என் வாசிப்பு அனுபவம். பிரதிலிபில சிலகதைகள் படிச்சிருக்கேன்.
*******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
பெரிய கதைலாம் இல்லை. சரியா 2019 ஜூலைல பிரதிலிபில பிரண்ட் மூலமா என்ட்ரி ஆனேன். கதைகள் உலகம் என்னைக் கெட்டியா பிடிச்சுக்கிச்சு. ஒரு ரெண்டுமாசம் கதைகள்ல மூழ்கி சிரிச்சு, அழுது, ஆதங்கப்பட்டு, ரசிச்சு நேரங்காலம் மறந்து படிச்சிட்டிருந்தேன். அப்புறமா எழுதலாம்னு ஆசை வந்தது. என்னை எழுத தூண்டுன ஜீவன் என் மனசு தான்.
******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
"என் உயிர்த்தோழியே" 2019செப்டம்பர் 12 ல பர்ஸ்ட் எபிய போட்டுட்டு இதயவலியே வர்ற ரேஞ்சுக்கு உட்கார்ந்துட்டிருந்தவ தான் நானு. என்ன மாதிரி கமெண்ட் வருமோ ஏத்துப்பாங்களா இல்ல கேவலமா இருக்குனு சொல்லிடுவாங்களாங்கிற ஒரு பயம். ஆனாலும் எனக்கு பெருசா நெகடிவ் கமெண்ட்ஸ் கிடச்சதில்லை. ஆனா அதை எதிர்பார்க்குறேன்🤣🤣.
...
அருமை
******
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்
கே(ள)டி கண்மணி (பிரதிலிபி அவார்ட்ஸ் போட்டிக்கதை)
******
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
அது லிஸ்ட் போட்டு யார் பேராவது மிஸ் ஆனா நான் மர்கையா தான்😂😂😂🏃.
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரியான கதைகள் விரும்பி படிப்பேன். அடுத்ததா திகில், மர்மம், வரலாற்று நாவல் மேல விருப்பம் அதிகம்.
******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
என் உயிர்த்தோழியே முடிச்சபிறகு நிறைய பேர் ரீட் பண்ணினாங்க. அதுல ரீடர்ஸ்க்கு என்ன பிடிச்சதுனு எனக்கு தெரியல. வந்த புதுசுல நிறைய மிஸ்டேக்ஸோட எழுதிய கதைதான் அது. அதை வாசிச்சவங்க யாராவது இருந்தா அதில் எது உங்களுக்கு பிடிச்சிருந்ததுனு சொல்லிட்டு போங்க மக்களே😊
******
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
மூன்று..
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
இரண்டு வருடம் நிறைவுற்று மூன்றாவதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நாளெல்லாம் சிறப்பா ஓடுது நான் தான் முன்னேறணும்.
*******
உங்கள் நாவல்களின் பெயர் :
1. என் உயிர்த்தோழியே
2. உன்காதல் இருந்தால் போதும்
3. கனவினைத்தேடி
4. கே(ள)டி கண்மணி (ongoing)
கொஞ்சம் சிறுகதைகள்
******
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
காதல் கொஞ்சம் குடும்பம் கொஞ்சம் சமூகம் கொஞ்சம் நகைச்சுவை 🤔🤔
******
ஒரு எழுத்தாளர் கதை எழுத அமரும் போதும் முடிக்கும் போதும் எப்படி உணர வேண்டும்னு நினைக்கிறீங்க:
நம்மளை அந்த கதை ரசிக்க வைக்கணும். அப்படி நாம ரசிச்சிட்டா அது ஹிட்.
...
நிச்சயமாக
*******
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?
நான் எழுதுனது, எழுதுறது எல்லாமே எனக்கு பெஸ்ட் தான். எனக்கு திருப்தியா இருந்தா தான் அந்த எபியே போஸ்ட் பண்ணுவேன் நானு. நான் உருவாக்குற எல்லா கதாபாத்திரங்களுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா என்னோட சாயல் எல்லாத்துலயுமே இருக்கும்.
*******
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா:
🤔🤔🤔🤔🤔
வந்த மக்கள் எல்லாரும் அவங்க மனசுக்குள்ளயே பேசிக்கிட்டதால எனக்கு தெரியாம போயிடுச்சு. 🤣🤣 அதெல்லாம் இல்லை. இனிமே மக்கள்ஸ் பேசுற அளவுக்கு நல்ல கதைகளைக் குடுக்க முயற்சி பண்ணுவேன்.
....
நல்லது
******
அன்றைய நாளில் நாவல்களை புத்தகமாக வாசித்து வருவதற்கும் இன்றைய நாளில் ஃபோனில் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன;
புத்தகம் வாசிச்ச அனுபவம் எனக்கு இல்லை. கருவாச்சி காவியம் மட்டுமே நான் வாசிச்ச புத்தகம். இப்போ போன்ல நாவல்கள் கிடைக்கிறது நிறையவே யூஸ்புல்லா இருக்கு. அதிகமா படிக்க வாய்ப்பு.
******
புதிது புதிதாக அறிமுகமாகி வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது :
நானே ரொம்ப ரொம்ப புதுசுதான். நமக்கு பிடிச்சதை, சரிங்கறதை தைரியமா எழுதலாம் தப்பே கிடையாது. கமெண்ட்ஸ் பத்தின பயமில்லாம எழுதுனா இன்னும் சிறப்பாவே எழுதலாம்.
******
ஒரு சில அறிமுக எழுத்தாளர்கள் முதல் கதைகளை போட்டியில் ஆரம்பித்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலை வந்தால் அதற்கு பிறகான அவர்களது மனநிலை எப்படியிருக்கும் :
நானும் சில போட்டிகளை சந்திச்சவள் தான். இதுவரை தோல்விக்காக நான் வருத்தப்பட்டதோ, துவண்டதோ கிடையாது. இதைவிட சிறப்பா குடுக்கணும் போலனு நினைச்சுக்கிட்டேன் அவ்வளவுதான். இனி சிறப்பா முயற்சி பண்ணுவேன். நம்ம கதை செலக்ட் ஆகலைன்னா அது நல்ல கதை இல்லனு அர்த்தம் ஆகாதுனு நாம புரிஞ்சுக்கிட்டா போதும் வீணான டென்சன்களை தவிர்த்துடலாம்.
...
நிச்சயமாக, நல்ல புரிதல் வேண்டும்
******
logical Mistake என்றால் என்ன
இயல்புல நடக்க சாத்தியமில்லாத விசயங்கள்.
******
ஒரு குடும்ப நாவலுக்கு வராத வரவேற்பு, ஆன்டி ஹீரோவுக்கு மட்டும் எதனால் வருகிறது :
எனக்குமே ரொம்ப நாளா இந்த டவுட் இருக்கு 🤔🤔 எல்லா தப்புமே பண்ணுற ரொம்ப நியாயமான அய்யோக்கியனை எப்படி எல்லாருக்கும் புடிக்கிதுனு.
...
அச்சச்சோ🤣🤣🤣 ஆன்டி ஹீரோவில் பலவிதம். அது எழுத்தாளனின் திறமையை பொறுத்து அவனது கதாபாத்திரம் மெருகேற்றப்படுவதும், மட்டமாக சித்திகரிக்கப்படுவதும் என உருவாக்கப் படுகிறது. எனக்கும் ஆன்டி ஹீரோவ பிடிக்கும்🤣🤣🤣
*****
போட்டியில் வரக்கூடிய கதைகள் எதை பொறுத்து இருக்கணும்னு நினைக்கறீங்க:
என்னென்ன வரையறை இருக்கோ அதுக்கெல்லாம் மேட்ச் ஆகுற மாதிரி இருக்கணும். என்ன நம்ம விருப்பத்துக்கு ஒரு குட்டி கடிவாளம் மாதிரி. இன்னொன்னு இப்படி ஒரு வரையறைக்கு நம்மளால எழுத முடியுதானு ஒரு சுயபரிசோதனை..
...
கட்டாயம்
******
ஒரு கதை எழுத ஆரம்பிக்கும் முன்பு முழுவதையும் டைரியில் எழுதி விட்டு அத்தியாயம் வாரியாக கொடுக்கிறீர்களா அல்லது மனதின் வார்த்தைகளை எழுத்தாக மடைமாற்றம் செய்கிறீர்களா :
முதல்கதை பர்ஸ்ட் மூணு எபி இன்னுமே என் நோட்ல இருக்கு. அதுக்கப்புறமா பிரண்ட்ஸ் சொன்னதை வச்சு நேரா போன்லயே டைப் பண்ணிக்குறேன். இது ரொம்பவே ஈசியா இருக்கு. நோட்ல திருத்தி திருத்தி எழுத முடியாதுல. ஆனா சேப்டினு பாத்தா நோட்ல எழுதுறது தான். இது எப்ப காணாம போகும்னே தெரியாது🤷
...
ஒரு கதை நம் மனதினுள் நுழைந்த உடனே அது நன்றாக இருக்கும் என்று நினைத்தால், டைரியில் குறித்து வைத்து விட்டு அதைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கலாம். அப்படி செய்கின்ற பட்சத்தில் நிறைய விசயங்கள் நமக்கு புலனாகும். பிறகு நோட்டில் எழுதி வச்சுட்டு மெதுவாக அத்தியாயம் வாரியாக எழுதிடலாம். சும்மா சும்மா எழுதவேண்டிய அவசியமல்ல. ஒரு முறை போதுமானது நான் அப்படி தான் செய்வது.
******
உங்கள் கதைகளின் அத்தியாயம் மற்றும் மொத்த வார்த்தையின் அளவு:
அப்படி நான் ஒருநாளும் யோசிச்சதில்லை.
******
கட்டுப்பாடு விதிக்கப்படுகின்ற இடத்தில் எழுத்தாளனின் கற்பனை, கதையின் கரு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
என்ன மாதிரியான கட்டுப்பாடுகள்னு புரியலை சிஸ். எழுத்தாளரின் கற்பனை, கதையின் கரு அதுக்கு வரையறை சொல்லவே முடியாது. இதுவரை நடக்காத, நடக்கவே முடியாத விசயங்களை கூட ஒரு எழுத்தாளனால வடிக்க முடியும்.
******
உங்களது போட்டிக் கதை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
லாஸ்டா மகாநதி போட்டிக்காக எழுதிய "கனவினைத்தேடி" ரொம்ப குட்டி கதை தான். ஆனாலும் என்னை கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிருக்கேன்னு தோண வைக்கிற கதை. முதல் கதையவே பக்காவா குடுக்குற ரைட்டர்ஸ் நிறைய பேர் இருக்காங்க. ஆனா நான்லாம் பிறக்காத குழந்தை மாதிரி தான். எழுத்தை பத்தி எதுவுமே இன்னுமே தெரியாது. நிறைய தெரிஞ்சுக்க ஆசை. என்னை அடையாளப்படுத்துற மாதிரியான ஒரு பெஸ்ட் கதை குடுக்க ஆசை..
******
நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா:
"கதைசொல்லபோறோம்" என்னோட சேனல். பத்து மாசமாச்சு ஸ்டார்ட் செஞ்சு அஞ்சே அஞ்சு சிறுகதைகள் ஆடியோ போட்டிருக்கேன். லாக்டவுன் வந்து எல்லாம் சொதப்பீடுச்சு. தொடர்கதை போட விருப்பம் இருக்கு பார்க்கலாம்..
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல விருப்பப்படுகிறீர்களா
😁😁😁 இதுக்கு என்ன சொல்லனு தெரியல சிஸ்.
******
ஒரு சிலர் நாவலை வாசித்து விட்டு அவர்களுடைய முகநூலில் அந்த எழுத்தாளரையும், அவரது எழுத்தையும் தாக்கி பதிவிடுகிறார்கள் அது பற்றி ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :
எழுத்தை தாராளமா விமர்சிக்கலாம். ஆனா அதை நேரா அவரிடமே போய் விமர்சிக்கலாம் என்பது என் கருத்து. ஏன்னா மறைமுகமா சொல்லுற கருத்துக்களுக்கு மதிப்பிருக்காது.
...
ஆமா நிச்சயமா , அதில் ஒரு சிலர் எழுத்தாளரை கேலி செய்வது போலவும் நடந்து கொள்கின்றனர்.
*******
உங்கள் நாவல்களை வாசித்து வரும் வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது:.
மிக்க நன்றி 🙏🙏 என் கதையை நம்பி வாசிச்சு இதுல கமெண்டும் குடுக்குற உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
******
மிக்க நன்றி சிஸ்டர்🙏
உங்களது பதில்கள் எழிமையாக இருந்தாலும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்களாக இருந்தால் அதைப்பற்றிய கருத்துகளை பதிவிடுங்கள். மற்றவர்கள் வாழ்த்துங்கள்
நன்றி
Comments
Post a Comment