மோகனா தட்சிணா மூர்த்தி


 #எழுத்தாளர்அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர் மோகனா தட்சிணாமூர்த்தி அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ :



பெயர் : மோகனா 


சொந்த ஊர் : பனப்பாக்கம் (காஞ்சிபுரம் அருகாமையில் )


படிப்பு :mba mphil (ugc net )


பணி : உதவி பேராசிரியர் (தற்பொழுது பணியில் இல்லை )


தளம் : வைகை 


அமேசான் பெயர் & லிங் : chinna ammu,


தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் லிங்& முடிவுற்ற நாவலின் லிங் :

https://vaigaitamilnovels.com/forum/forums/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.133/


https://tamil.pratilipi.com/user/g53908j620?utm_source=android&utm_campaign=myprofile_share


புத்தகம் கிடைக்கும் இடம்& புத்தகத்தின் பெயர்:    


இதுவரை புத்தகம் வெளியிடவில்லை..அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை… ஒருவேளை நான் அதற்கு இன்னும் முயற்சி செய்யவில்லை என்பதும் ஒரு காரணம்… இனி செய்து விடலாம்...


*****


நீங்கள் எழுதிய முதல் நாவல்:


 குலத்தொழில் 

...

பெயரே வித்தியாசமாக இருக்கு


*****


உங்களது படைப்புகளின் பெயர் :


(சிறுகதை )

அம்முவின் கடந்த பாதை

2040

சீமந்தம்

மீசைக்காரன்

அம்மாவும் மழையும்

என் எஜமான்


(குறு நாவல் )

லவ் ஸ்டோரி

காத்யாயனி தேவியார்

குலத்தொழில்

வேவாள்

முப்பெரும் தேவியர் (on pen)

குப்பத்து ராணி (on pen )


(குழந்தைகள் உலகம் )

விதை

Magic pot

The emperor

வேடவன்

காக்கா வடை

சிங்க ராஜா


(கவிதை)

வஞ்சி

காதல் போராளி

சந்தேகம்

வெட்கம்

...

அருமை சிஸ்டர்


******


எழுத வந்த வருடம் : 2020


*****


உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா: 


இரண்டு குழந்தைகளின் தாய்.. நிறைய உடல் நிலை கோளாறுகள் ஏற்பட்டும் மன திடத்தினால் எழுந்து நடந்து பின் வேலைக்கு சென்று இறைவன் அருளால் இரண்டு பிள்ளை பேரும் பெற்று இன்று நலமுடன் நான்… இதற்கெல்லாம் ஒரே ஒரு ஊன்றுகோல் என் கணவர்…


படுத்த படுக்கையாய் இருந்த போதும் தனி ஆளாய் எனை தாங்கியவர்...

...


பூரண நலம் பெற்று, எழுத்துலகில் சாதனை படைத்திட, என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்


******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


படிக்க ரொம்ப பிடிக்கும்… நிறைய படிப்பேன்… முன்னாடி எல்லாம் நிறைய நியாபகம் இருக்கும் இப்பொழுது நியாபக மறதி பெருகி விட்டது..


படிக்கும் காலத்தில் புக்ல இருக்க மாதிரி மனப்பாடம் செய்ய தெரியாது… புரிஞ்சதை என்னோட ஸ்டைல் ல எக்ஸாம் ல எழுதுவேன்…


மேடம் பெரும்பாலும் நீ கதை எழுத போலாம்டி ன்னு சொல்ற அளவுக்கு எழுதுவேன்...90 பக்கம் எல்லாம் மூனு மணி நேரத்துல எழுதின அனுபவம் இருக்கு 😜…


அதனால் ஒரு சின்ன ட்ரை குடுத்தேன் ப்ரதிலிபி ல நல்ல வரவேற்பு குடுத்தாங்க… நல்ல விமர்சனங்கள் அடுத்து எழுத தூண்டியது...

...


அருமை சிஸ்டர். கலாயினி நீங்கள்


*****


வரலாறு மற்றும் போலீஸ் கதைகள் மீது ஒரு காதல் என்று சொல்லியிருக்கீங்க. அதுக்கான காரணத்தை சொல்ல முடியுமா : 


வரலாறு ல நம்மால ஒரு சில விஷயங்கள் யூகிக்க முடியாது அதனால ஆர்வம் கூடி போய் சாப்பிடாம கூட படிக்க தோணும்…


அதே போல தான் போலீஸ் கதைகள் ஒரு வித இன்ட்ரெஸ்ட்… அடுத்து என்ன அப்டினு ஒவ்வொரு பக்கத்துக்கும் தோணனும்...

...


நிஜம் தான். கற்பனைக்கும் யூகத்துக்கும் அப்பாற்பட்டது அவைகள்


******


நீங்கள் இதுவரையில் வரலாற்று நாவல் அல்லது போலீஸ் கதை எழுதியிருக்கீங்களா :


 ரெண்டுமே எழுதி இருக்கேன்..

ரெண்டுமே பெண்களை மையமாக கொண்டு புனையப்பட்டது...

...

நல்லது


*****


நீங்கள் ஒரு நாவல் எழுத கதையோட்டத்தை தேர்வு செய்வது எப்படி: 


பேச்சு வாக்குல ஏதாவது யாராவது சொல்ற இல்ல எனக்கு தோணுற ஒரு கருத்தை தான் கதையோட மைய கருவா எடுத்துப்பேன்…

(ஏன் ஒரு பொண்ணு தன்னிச்சி கல்யாணம் செய்துக்காம இருக்க கூடாதா, இதன் தாக்கம் தான் "வேவாள்" கதை )


*****


சிறுகதை வாசிப்பதற்கும், நாவல் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் :


சிறுகதை -கோயில் பிரசாதம்

நாவல் - புள் மீல்ஸ் மாதிரி 😜


ரெண்டுமே வாசிப்பேன்… ரொம்ப அழுத்தம் குறைவான கதைகளை மட்டும் தான் படிப்பேன்...

...

நானும் கூட😂😂😂😂


******


இரண்டில் எது வாசகரின் மனதை உடனடியாக சென்றடைவதாக நினைக்கிறீங்க :  


சிறுகதை தான் சட்டுனு படிச்சிட முடியும்.. அதாவது பசிக்கலன்னா கூட பிரசாதம் சாப்பிட முடியுமே 🙈


******


உங்கள் கதைக்கு வந்த மிகச் சிறந்த பாராட்டாக நீங்கள் நினைப்பது: 


 நா எழுதினதை என்னோட கண்ணோட்டத்தில இருந்து புரிஞ்சிகிட்ட கதை 2040…(சிறுகதை )


அது இவ்ளோ பேச படும்னு தெரியாது… எழுத்தாளர் ஜான்சி அவங்க இந்த கதைக்கு சிறந்த விமர்சனம் குடுத்து இருந்தாங்க… அது கண்டிப்பா எனக்கு ஒரு ஸ்வீட் surprise தான்...


*****


நெகடிவ் விமர்சனம் பெற்ற அனுபவம் இருக்கிறதா : 


இதுவரை இல்லை… அதிகம் எழுதும் போது வரலாம்… கெஞ்சி கேட்டும் யாரும் சொல்லல… அதாவது கெஞ்சி கேட்டாலும் எங்கதை படிக்க ஆள் இல்ல அதான் உண்மை..

....


நான் எழுதி கொண்டிருக்கும்

தற்சமயத்து தொடர்கதை முடிந்த பிறகு, ஒரு சில சகோதரிகளின் கதைகளை வாசிக்க நினைத்திருக்கேன். அப்போது நீங்கள் அனுப்பி கொடுத்த நாவலையும் வாசித்து பார்த்து கருத்துப் பரிமாற்றம் செய்கிறேன்.


*****


நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள் :


பக்தி நூல்கள்(சிவபுராணம், தேவாரம்,திருவாசகம்) காதல் குடும்பம், திரில் மாதிரியான கதைகள், பொன்னியின் செல்வன் படிச்சேன், படிச்சிட்டு இருக்கேன், படிப்பேன் அப்டி ஒரு காதல் அந்த கதை மேல, உதயணன் அவரோட கதைகள் படிப்பேன், சாண்டில்யன் கதைகள் எப்பவும் புக்கா படிக்க தான் பிடிக்கும்...


******

உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர்கள்:


 நட்பில் இருக்கும் பாதி பேர் எழுத்தாளர்கள் தான்… பெரும்பாலும் ஒரு கதையாவது படிச்சி இருக்கேன்… நட்புல இருகாங்க இத கூட செய்யலன்னா எப்படி? 😜


*****

ஆன்லைன் எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களைப் பற்றி சொல்ல முடியுமா : 


நிறைய பேர் ரொம்ப ரொம்ப பிடிக்கும்… ராணி, ஹேமா, ஜான்சி, வதனி, வனி இன்னும் நிறைய பேர் இருகாங்க… சட்டுனு நியாபகம் வரமாட்டேங்குது…(நியாபக மறதி


*****


சிறுகதை ,குறு நாவல் இவை இரண்டும் எழுதுவதற்கு தேவையான கரு எப்படி தேர்வு செய்யணும் என்று நினைக்கறீங்க :


அடிக்கடி தோணுறதை நோட் பண்ணி வச்சிப்பேன்… அதுக்கு என்னோட எண்ண ஓட்டம் ஒரு எல்லைல நின்னுட்டா அதை சிறுகதைக்கும் அதுக்கும் மேல தோணுனா குருநாவல்…

இதுவரை நா எழுதின ஒரு கதை கூட பதினோரு எபிசொட் தாண்டினது இல்ல...


*****


கவிதை எழுதிய அனுபவத்தை பற்றி சொல்லுங்க:


அது ஒரு ஆக சிறந்த கிறுக்கல்… காலேஜ் படிக்கும் போதே நிறைய கவிதை எழுதுவேன் ஆனா தைரியமா யார்கிட்டயும் காட்ட மாட்டேன்… இப்போ பப்ளிக் ஹா போஸ்ட் போடுற அளவுக்கு வந்துட்டேன்… எழுதிட்டு உட்கார்ந்து சிரிச்சிட்டு இருப்பேன் 😜அதான் கவிதை எழுதும் அனுபவம்...

...

🙂🙂🙂


******


திடீரென்று நாவல் எழுதும் ஆவல் எப்படி வந்தது:


ஒரு குட்டி கதை எழுதினேன் பெயர்களே இல்லாம அதுக்கு எல்லாரும் நல்ல விமர்சனம் குடுத்தாங்க அதான் அந்த தைரியத்துல தெரிஞ்ச ஏதாவது ஒரு விஷயம் பத்தி எழுதலாம்னு யோசிச்சு என்னோட குலத்தொழில் அதோட இன்றைய நிலைன்னு எண்ணம் ஓடுச்சு கூடவே என் கண்ணு முன்னாடி வாழற ஒரு ஜோடி அவங்க வாழ்க்கையை எதிர்கொண்ட விதம்னு எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போச்சு உடனே எழுத ஆரம்பித்து விட்டேன்…


ஒவ்வொரு எபி எழுதி முடிச்சிட்டு என்னோட ஓரகத்தி (அக்கா) கிட்ட காட்டுவேன்..


அவங்க தான் எங்கதைகளுக்கு முதல் வாசகர்… அவங்க தூண்டுதல் எனக்கு பெரிய பூஸ்ட் தான்… 

...


நல்ல மனம் உடையவர் துணை கிடைக்க, கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

*****


யாருடைய தூண்டுதலின் பேரிலாவது எழுத வந்தீர்களா அல்லது சிறு வயதிலே நாவலின் மீதான ஆசை, பற்றுதலின் பெயரில் எழுத வந்தீர்களா :


அதெல்லாம் ஒன்னும் இல்ல .. அம்மா நிறைய படிப்பாங்க… அவங்களை பாத்து தான் கதை படிக்கும் ஆர்வம் வந்தது…. எழுத வந்தது ஏதேர்ச்சியாக வந்த எண்ணம் தான்...


*****


உங்களது நாவல் காதல், குடும்பம், திகில், சஸ்பென்ஸ் இதில் எதைப் பொறுத்தது:


 குடும்பம் கொஞ்சம் சஸ்பென்ஸ்… காதல் கதை எழுதலன்னு கேட்டாங்கன்னு லவ் ஸ்டோரி ன்னு ஒரு கதை எழுதினேன் 😜… கடைசி வரைக்கும் எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி லவ் எங்கன்னு தான் 🙈🙊

....


😂😂😂😂


*****


ஒரு நாவல் எழுத நீங்கள் எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் : 


ஒரு எபிசொட்க்கு ரெண்டு நாள் தான் ரெண்டாவது குழந்தைக்கு முன்னாடி…


இப்போ எழுதறதை நிறுத்தி வச்சி இருக்கேன்… முழு நேர ரீடர் தான்...

...


மிக விரைவில் படைப்புகளை  கொடுத்து வாசகர்கள் மனதில் அழியாத இடத்தைப் பெற வாழ்த்துகள்

 

*****


உங்கள் படைப்புகளில் இடம்பெறும் நிஜ சம்பவம், கற்பனை, கவிதை, வருணனைப் பற்றி சொல்ல முடியுமா :


 நிஜ சம்பவம் ஹ்ம்ம் அதோட தாக்கம் நிறைய இருந்தா அதை என்னோட ஸ்டைல் ல சொல்லுவேன்…(சீமந்தம் சிறுகதை )


போர்க்களத்தில் நான் மனக்களத்தில் நீ


 ஈட்டி எடுத்தேன் நின் கூர் நாசியின் எண்ணம் 


வில் எடுத்து அம்பெய்தினேன் நின் மையிட்ட புருவமும் கண்களும் கண்முன்னே வந்து போகிறதே சிவகாமி 


எதிரியின் குருதி கண்டால் நின் வெட்க சிவப்பே நியாபகம் 


கேடயம், கத்தி, புரவியின் தேகம் என அனைத்தும் நீயாய்... 


போரில் வென்று உனையும் வெல்வான் இவன்... புரவியாண்டவன் ..... இது ஒரு கதைக்காக எழுதினது… அந்த போரில் அவன் போர் புரிந்தது அவனவளிடம் தான்… அவகிட்ட தோற்கவும் முடியாம அவளை வீழ்த்தவும் முடியாம அவன் படுற பாடு அந்த ஒரு எபி ல ரொம்ப அழகா வந்து இருந்தது… எனக்கே அர்ச்சர்யம் தான் இது நாமளான்னு 😜

...

வாவ் சூப்பர்!! வாசிக்கும் போதே அத்தனை அருமையாக இருக்கு. லிங் அப்படியே உள் பெட்டிக்கு அனுப்பிடுங்க. படிச்சுப் பார்த்துடுவோம்


*****


ஒரு நாவல் எழுத துவங்கியதில் இருந்து முடிக்கும் வரையில் உங்களது எண்ண ஓட்டத்தை பொறுத்து அமையுமா அல்லது வாசகர்களின் எதிர்ப்பார்ப்பை பொறுத்து மாறி வருமா :


என்னோட எண்ண ஓட்டம் மட்டும் தான்… பெரும்பாலும் எழுதி முடிச்சிட்டு தான் வாசகர்கள் கிட்ட கொண்டு போவேன்..

*****


இதுவரையில் எழுதிய பெரிய கதை என்றால் எது அதைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :


"லவ் ஸ்டோரி " பனிரெண்டு எபி 🙊… அது அதுபாட்டுக்கு என்னை இழுத்துட்டு போய்டிச்சி ரொம்ப ரசிச்சி எழுதின கதை… ஹீரோ ஒரு அராத்து, ஹீரோயின் பொறுப்ஸ், ஹீரோ அம்மா ஒரு யூனிக் பீஸ், கூட வர்ற பிரண்ட்ஸ் எல்லாம் ஐயோ பாவம் கேஸ்… ரொம்ப ஜாலியா எழுதினேன்… முடிஞ்சா படிச்சிட்டு எதை பத்தின்னு நீங்க எனக்கு சொல்லுங்க 🙊

...

கட்டாயம் சொல்றேன்


******


உங்களது படைப்புகளில் எது வாசகர் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது:


 காத்யாயனி தேவியார்… இதுல வர்ற தமிழ் எல்லோருக்கும் பிடிச்சி இருந்துச்சு… முக்கியமா ஹீரோயின ரொம்ப பிடிச்சதா சொன்னாங்க..


******


எழுத்துலகில் கிடைத்த மிகச் சிறந்த பாராட்டாக நீங்கள் சொல்ல விரும்புவது :


 2040 கதை படிச்சிட்டு தனிமை கொடுமை க்கா … எங்க மனநிலை அப்டியே சொல்லிட்டீங்க கா ன்னு சொன்னா… அடுத்தவங்க மனநிலை புரிஞ்சி எழுதறது ரொம்ப முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டேன்.


*****


உங்கள் ஊர் பெயர் என்ன ? உங்கள் படைப்புகளில் அது பற்றி எழுதிய அனுபவம் இருக்கிறதா, உங்கள் ஊரின் சிறப்பம்சம் என்ன :


பனப்பாக்கம்... லுங்கி நெசவு தான் பிரதானம் ஊர் முழுசும் அதான்...


முதல் கதையே என் ஊர் பற்றியது தான்..


பனை மரம் சூழ்ந்த விவசாய நிலம் கொண்ட ஊர்...


லுங்கி நெய்யிற பையன் தான் ஹீரோ... பட்டு சேலை நெய்யிற பொண்ணு ஹீரோயின்


அவ இங்க வந்து இதுல எப்டி காலுன்றா அப்டினு போகும் கதை


*******

தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா : 

புதுசா எழுதறவங்களையும் அவங்க கதையையும் விமர்சனம் செய்யணும்னு கேட்கறேன்… 

...

செய்துடலாம்


*****


உங்களுக்கு இரண்டு கேள்விக்கான வாய்ப்பு தரேன். நீங்களே கேள்விகளை உருவாக்கி பதிலும் தரலாம் :


காதல் மேல உனக்கு ஏன் அவ்ளோ கடுப்பு?


அது அது எது நமக்கு வரலையோ அதுமேல கடுப்பு வர தான செய்யும்… நான் என்ன செய்யும் 🙈


அது என்ன எல்லா கதையிலும் ஹீரோ வ கொஞ்சம் டம்மியா காட்டுற?


நிஜத்துல தான் அவங்க ஆதிக்கம் செலுத்தறாங்களே.. கற்பனை ல நாங்க கெத்தா இருந்தா என்ன குறைஞ்சிட போகுது 😜...

...


😂😂😂😂 சூப்பர் சிஸ்டர்🤣🤣


*****


உங்களது படைப்புகளை வாசிக்கும் வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது :


 உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பிங்க 🙏… (என் கதையும் படிக்கறீங்களே நீங்க ரொம்ப நல்லவங்க )


இனி வாசகர்களுக்கான கேள்வி பதில் :


உங்கள் கதைகளை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்..

காதல் அதிகம் காணப்படுவதில்லை ஏன்?

யாரும் டச் பண்ணாத கதை களம் இருக்கணும்னு மட்டும் தான் யோசிப்பேன்… இல்லனா கண்டிப்பா வித்தியாசமா கொடுக்கணும்னு தோணும்…

காதல் வசனம் படிக்கும் போதே வெக்கமா வரும்… அத நான் எப்டி எழுத 🙈…


காதல் மேல பெருசா விருப்பம் இல்ல…

……….

உங்களது ஓரிரு கதைகளை வாசித்து இருக்கின்றேன்.


தெளிவும் தீர்க்கமுமான எழுத்து.


உங்களது தனித்தன்மை வெளிப்படும் படியான படைப்புக்களை புனைய ...அல்லது இப்படியாக எழுத்துலகில் எனக்கான அடையாளத்தை உருவாக்கப் போகிறேன் என்பதான இலக்கு ஏதேனும் உண்டா?


இலக்கு கண்டிப்பா உண்டு… முதல்ல என்னோட கதைன்னு ஒன்னு புத்தகமா வெளிய வரணும்…

அடையாளம் எல்லாம் நிறைய எழுதறவங்களுக்கு தான் சீக்கிரம் வரும்… நா ரொம்ப தேர்ந்துதேடுத்து தான் எழுதறேன் அதனால குறைவான கதைகள் தான் வரும்…

………...

உங்கள் நாவலை இதுவரை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை... இனி வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ள சிறப்பான அம்சமாக உங்கள் நாவலில் இருப்பதாக நீங்கள் கருதுவது எது? அதாவது இந்த அம்சம் என் நாவலில் நன்றாயிருக்கும். வாசித்துப் பாருங்கப்பா என்று எனக்கு பரிந்துரை செய்வது உங்களது எந்த நாவலை?


"காத்யாயனி தேவியார் " இது வரலாற்று கதை….

ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு இதுல ஸ்பெஷல் தான்…


கடைசியா வரும் கவிதை எப்பவும் விருப்பமான ஒன்னு… அடிக்கடி எடுத்து வாசிப்பேன்…


என்னோட முதல் கதை "குலத்தொழில்" இது என்னோட குலதொழிலான நெசவு பத்தி இருக்கும்….


*****


இவ்ளோ நேரம் ஒதுக்கி என்னை பற்றி படிச்சதுக்கு ரொம்ப நன்றி தோழமைகளே 🙏

இந்த வாய்ப்பை அளித்த ஆனந்த ஜோதி சகோதரிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரிதாகுக 🙏😍


*****


மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏


உங்களது கேள்வி பதில்கள் மிகவும் அருமையாகவும், ரசனையாகவும் இருந்தன.


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


நன்றி நட்புக்களே




Comments

  1. சூப்பர் அம்மா.... சூப்பர் அம்மா... வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment