யாழினி மதுமிதா

 






#எழுத்தாளர்அறிமுகப்படலம்


#சீசன்இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர் யாழினி மதுமிதா, அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ :



பெயர் : யாழினி மதுமிதா 


சொந்த ஊர் : கோபிசெட்டிபாளையம் ( ஈரோடு மாவட்டம்) 


படிப்பு : பல்மருத்துவப் படிப்பு (BDS) - படிச்சிட்டே இருக்கேன்... 😁


பணி : இப்போதைக்கு படிப்பு அப்புறம் கதை எழுதுவது தான் பணி. அப்புறம் கன்டென்ட் ரைட்டரா பார்ட் டைம் வொர்க் பண்றேன். 


தளம் : எஸ்.எம் தளம்


அமேசான் பெயர் & லிங்: யாழினி மதுமிதா 

https://www.amazon.in/dp/B09JWXN8SD/ref=cm_sw_r_wa_apan_glt_1PZ1JGWBWZ1X2PPK25J7


தற்சமயத்து லிங்: நான் உன்னை ப்ரேமிஸ்துன்னானு 

https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81.1367/


முடிவுற்ற நாவலுக்கான லிங் :


https://forum.smtamilnovels.com/index.php?categories/yaazhini-madhumitha.1157/


*****


முதல்  கதையின் பெயர்: சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே. 


*****


மொத்தம் எத்தனை எழுதியிருக்கீங்க : 5 


*****


எழுத வந்த வருடம் : 2020


*****


உங்களது படைப்புகளின் பெயர்:

1) சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

2) மறையாதே என் கனவே

3) மெல்ல யாழ் மீட்டுதே

4) கிட்காட் கஸாட்டா

5) அற்றைத் திங்கள் மழைத்துளி


******

உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


A girl with many dreams🕊


*****


கல்லூரி மாணவியான நீங்க எழுத்துலதிற்கு அடியெடுத்து வைத்தது பற்றி சொல்ல முடியுமா :


2020ஆம் ஆண்டுல வந்த முதல் ஊரடங்குல ரொம்ப ஸ்டெர்ஸ் ஆச்சு. சென்னைல ஜாலியா சுத்திட்டு இருந்திட்டு, வீட்டுல வந்து வெளியவே வராம இருந்த டைம்ல என்னோட குட்டி மூளைல உதிச்ச யோசனைதான், "நம்மலும் பேசாம எழுதுனா என்ன"ங்கிற ஐடியா. 


*****


கல்லூரி வாழ்க்கையை கதையாக எழுதிய அனுபவம் இருக்கிறதா :


இப்ப வரைக்கும எழுதுன ஐந்து நாவல்கள்ள அங்கங்க கல்லூரி வாழ்க்கையைப் பத்தி எழுதியிருப்பேன். ஆனா, முழுசா எழுதனும்னு ஆசை. மே பி என்னோட அடுத்த நாவல், "நான் உன்னை ப்ரேமிஸ்துன்னானு"ல வரலாம். 


*****


உங்களது நட்புகளிடம் உங்களுக்கு பிடித்த விசயம்:


நான் எவ்வளவு சோகமா இருந்தாலும், சிரிக்க வச்சிடுவாங்க. 


அட் தி சேம் டைம், ரொம்ப ரொம்ப சப்போர்ட்டிவ்.


*****


உங்களது எழுத்துப் பயணம் பற்றிய அவர்களது கருத்து :


கீப் ராக்கிங் தான் எப்போமே.😁


*****


உங்களது கனவு லட்சியம் என்ன:


ஒரு நல்ல டாக்டர், 

ஒரு பெரிய எழுத்தாளர்,

ஒரு நல்ல Human being.  


*****


எதற்காக நீங்கள் எழுத்துலகை  தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா:


அந்த இமேஜினரி உலகத்துல இருக்கிறது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 


*****


எழுத்துலகில் நீங்கள் சாதித்தது என்ன:


இன்னும் அந்த லெவலுக்கு போகலைன்னு தோணுது. கண்டிப்பா எல்லாரும் பேசும்படியான எழுத்தாளரா ஒருநாள் வருவேன்னு நம்பிக்கை இருக்கு. 


….


நல்லது


******


உங்கள் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு அதில் ஏதாவது செய்தி இருக்குமா அல்லது குடும்ப நாவலாக மட்டுமே இருக்குமா :


நான் எழுதுன முதல் நான்கு நாவல்ல செய்தி அவ்வளவா இருக்காது. 

லவ்+ஃபேமிலி+ப்ராப்ளம்ஸ்+ரொமான்ஸ் இப்படித் தான் இருக்கும். அங்கங்க குட்டி குட்டியா ஏதாவது சொல்லியிருப்பேன். 


ஐந்தாவது நாவல் தான் ரொம்ப சென்சிடிவ் கன்டென்ட் எடுத்தேன். 


*****


ஒரு நாவலை வாசிக்கும் வாசகர் அதில் எதிர்பார்ப்பது என்னன்னு நினைக்கறீங்க :


அது அவர்களின் மனநிலையை பொறுத்து இருக்கு. 


கொஞ்சம் ஸ்டெர்ஸ்ஸா இருந்தா காமெடியா படிக்கத் தேடுவாங்க. 


ஒரு சிலர் நல்ல ஆன்ட்டி ஹீரோ கதை படிக்கத் தேடுவாங்க. 


எல்லாருக்குமே ஒவ்வொரு நாளும் மாறிக்கிட்டே தானே இருக்கும். 


ஆனா, கண்டிப்பா நல்ல முடிவை தான் ஒவ்வொரு வாசகர்களும் எதிர்ப்பார்ப்பாங்க. 



நிச்சயமாக


*****


நாவல் எழுதும் போது உள்ளத்தில் உதிப்பதை எல்லாம் எழுதி விட முடியாது. அப்படி கடினப்பட்டு யோசித்து எழுதுவதும் வாசகர்களை சரியான முறையில் சென்றடையாமல் இருப்பது எதனால்:


அவங்க இப்படி சொல்லிடுவாங்களோ இவங்க இப்படி பேசிடுவாங்களோன்னு எழுதாம, நமக்கு உதிப்பதை சரியான எழுத்து நடையில், முகம் சுழிக்காத வகையில் எழுதுனாலே போதும்னு நினைக்கறேன்.


….

கண்டிப்பாக


*****


ஒரு நாவல் என்பது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக மட்டும் இருக்க வேண்டுமா அல்லது எழுத்தாளனின் கற்பனையில் மிளிர்ந்த படைப்பாக இருக்க வேண்டுமா :


இரண்டுமே ரொம்ப முக்கியம். வெற்றிக்கு ஹார்ட்வொர்க் + ஸ்மார்ட் வொர்க் எப்படி முக்கியமோ, அதேமாதிரி நாவலுக்கு உண்மை சம்பவம் + கற்பனை ரொம்பவே முக்கியம். 


*****


ஒரு நாவலை வாசிக்கும்போது அந்த சம்பவத்தின் தாக்கம் வாசித்து சில நாட்கள் தாண்டியும் தீராமல் இருக்க வேண்டுமானால், அதற்கு என்ன மாதிரி கதையம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.


புதுவிதமான காட்சிகளை வைக்க வேண்டும். ஏனோ தானோன்னு வைக்காம காதலோ, சண்டையோ, பிரிவோ, ரொமான்ஸோ இப்படி எதுவா இருந்தாலும் அழுத்தமா வச்சிடனும். 


அந்த சீனை ரொம்ப வித்தியாசமா நல்ல விரிவாக்கமா வச்சா வாசகர்களுக்கு ரொம்ப தாக்கம் இருக்கும்.


….

நிஜமா. ரொம்ப சரியா சொல்லிட்டீங்க


*****


நீங்கள் எழுதிய நாவல்களில் உங்களது நண்பர்கள் ரசித்து வாசித்த நாவல்கள் எவை :


ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு கதையை சொல்லுவாங்க. 


அதிகமா சொன்னது, "கிட்காட் கஸாட்டா". 


*****


இதை விட இன்னும் பெட்டரா செய்தால் நல்லா இருக்கும்னு தோன்றிய நாவல் எது :


முதல் குழந்தை தான். (முதல் நாவல்)


எப்படி என்னனே தெரியாம ஏனோ தானோன்னு எழுதுனேன். 


*****


போட்டிகதை எழுதிய அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :


இல்லை. இன்னும் பங்கேற்றது இல்லை. 


*****


எப்படி டைம் மேனேஜ் பண்ணி எழுத முடியுது : எனக்கு பொதுவா காலேஜ் டைமிங் 8:45 - 3:00 தான்.  


ஸோ, காலேஜ் விட்டு ஹாஸ்டல் வந்தோன்ன டைப் பண்ணுவேன் 5:30 வரைக்கும். ப்ரீயா இருந்தா நைட் வரைக்கும் கூட டைப்பிங் தான். 


*****


நீங்கள் படித்து மறக்க முடியாத அளவிற்கு வாசித்த அருமையான நாவல் எது:


வீணையடி நீ எனக்கு, 

கணவனே கண் கண்ட எதிரி, 

கண்ணம்மா என் காதலி, 

கனா காண்கிறேன் கண்ணாளனே,

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ, 

காதல் என்னை காதலிக்கவில்லை. 


*****


ஆன்லைன் ரைட்டரில் இவர்களது நாவல் வாசித்தால் அருமையாக இருக்கும் என்று சொல்லும் படியான எழுத்தாளர்கள் பெயர்கள் :


வநிஷா, 

பொம்மு, 

அகிலா கண்ணன், 

சரோஜினி. 


(இவங்களது சைட்லையும் இருக்கு... புக்காவும் இருக்கு... நான் ஆன்லைன்ல படிச்சது இவங்களது தான்.)


….


 பொம்மு, அகிலா கண்ணன் இருவரின் நாவல்கள் வாசித்த அனுபவம் இருக்கிறது. மீத இருவரின் படைப்புகளை இனிமேல் தான் வாசிக்கணும்.


*****


நாவல் எழுதும் ஆவல் உங்களுக்கு எப்படி தோன்றியது :


அம்மா பேஸிக்காவே நாவல் படிப்பாங்க. அம்மாக்கு தெரியாம ஒன்பதாவதுல இருந்து புக்குக்கு உள்ள வச்சு கண்மனி, ராணி முத்து நாவல்ஸ் படிக்க ஆரம்பிச்சேன். 


அம்மாக்கு தெரிஞ்ச அப்புறம் அம்மாவும் எதுவும் சொல்லலை. அப்படி ஆரம்பிச்சது எல்லாம். 


அப்பப்ப தோணும் நாமலும் எழுதலாமேன்னு. ஆனா எப்படி என்னனே அப்ப எல்லாம் தெரியாது. 


அப்புறம் லாக்டவுன்ல நடந்ததுதான் எல்லாம். 


தாங்க்ஸ்டா அய்யாசாமி (கொரோனா) 



🤣🤣🤣. கொரோனா பலரின் வாழ்க்கையை அழித்து விட்டது மட்டுமின்றி, உங்களை ஒரு எழுத்தாளராகவும் மாற்றி விட்டது போலும்.


*****


ஒரு நாவல் எழுத நீங்கள் எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை :


ப்ரீயா இருந்த 15 நாள்ல முடிச்சிடுவேன். 


காலேஜ் இருந்தா 30 - 40 ஆகிடும். 



15 நாளா? என்னை விட செம பாஸ்ட்


*****


ஒரு அத்தியாயம் எழுத எத்தனை மணி நேரம் தேவைப்படும். அப்படி எழுதப்படும் அத்தியாயம் திருப்தியை கொடுக்கும் விதமாக அமையுமா:


அத்தியாயத்தை பொறுத்து எனக்கு நேரம் எடுக்கும்.

பொதுவா 3 மணி நேரம் ஆகும். 

ஒரு சில அத்தியாயங்களுக்கு ஆறு மணி நேரம் கூட ஆகிடுக்கு. 

எனக்கு நான் என்னதான் உட்கார்ந்து எழுதுனாலும் வாசகர்கள் கிட்ட இருந்து வர்ற கமென்ட்ஸ்ல தான் திருப்தியே. 


*****


எழுத்து உலகில் உங்களுக்கு கிடைத்த நட்புகளை பற்றி சொல்ல முடியுமா:


நிறைய நட்புகள் கிடைச்சிருக்கு. நிறைய பேர் ரொம்ப ஊக்கப்படுத்துவாங்க.❣️


ஒரு சிலர் தர்ற குட்டி குட்டி ஐடியா எல்லாம் ரொம்பவே யூஸ் ஆகிடுக்கு. 


****


உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள்:


சஷி முரளி, 

ஜேபி,

நிவேதா ஜெயநந்தன்,

ராஜீ அன்பு,

பொம்மு. 


*****


நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நூல்கள்:


நிறைய நாவல்கள் இருக்கு. லிஸ்ட் பெருசா போகும். 

நான் படிச்சு இன்


******


வாசகர்கள் கேள்வி பதில்கள் :


உங்கள் கதை எழுத தூண்டினது எந்த சம்பவத்துக்கு அப்றம்?


2020 கொரோனா லாக்டவுன் போட்ட அப்புறம். 


*****


உங்களோட பேவரைட் ரைட்டர் யாரு?


சஷி முரளி, 

ஜேபி, 

நிவேதா ஜெயநந்தன்,

ராஜீ அன்பு, 

பொம்மு. 


*****


நீங்க எழுதுன கதைகள்ளயே உங்களுக்கு மோஸ்ட்லி 

புடிச்ச கேரக்டர்?


எல்லாமே எனக்கு பிடிச்சது தான். 

ரொம்ப ரொம்பன்னு பார்த்தா ஹீரோ கேரக்டர்ல அஸ்வின். 

ஹீரோயின் கேரக்டர்ல திவ்யபாரதி. 


*****


நீங்க உங்க கதைக்கு வர விமர்சனம் பாத்து பூரிச்சி 

போன அந்த செகன்ட் எது?


எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பிநஸ் குடுக்கும். நமக்காக ஒருத்தங்க டைம் ஒதுக்கி கதை படிக்கிறதே பெரிய விஷயம்தான். 


அவங்களுக்கு இருக்கிற வேலையையும் தாண்டி நமக்கு ரிவ்யூ போடறது உண்மைலையே ரொம்ப பெரிய விஷயம்தான். 


அதுல எனக்கு வந்த அத்தனை ரிவ்யூவுக்குமே நான் பூரிச்சுதான் போனேன். 


(அதுல விஜிக்கா... என்னோட மெல்ல யாழ் மீட்டுதே ஆன்கோயிங்ல இருந்தப்ப ஒரு போஸ்ட் போட்டாங்க அதுல ரீடர்ஸ் நிறைய வந்தாங்க. அன்ட் பவித்ரா கார்த்திகேயன் மெல்ல யாழ் மீட்டுதே முடிஞ்ச அப்புறம் தந்த ரிவ்யூஸ்லையும் ரீட்ர்ஸ் நிறைய வந்தாங்க. எ ஸ்பெஷல் தாங்க்ஸ் டு 

தெம்) 


*****


இப்ப எனக்கு ராஜா ராணி ஸ்டோரி மாதிரி சரித்திர நாவல் படிக்க ஆசை, அந்த மாதிரி கதை ப்யூச்சர்ல எழுதுவீங்களா? 


எழுத ஆசையிருக்கு. ஆனா, அந்த மாதிரி கதை எழுத இன்னும் நிறைய எழுத்து நடை முன்னேறனும். ஸோ, கண்டிப்பா ப்யூச்சர்ல இருக்கு. 


*****


உங்களுக்கு different journalல எழுதனும்னு ஆசை இல்லியா இல்ல கதையவே different ah கொடுக்கனும்னு ஆசையா????


கதையவே வித்தியாசமா different journalஅ தர்றதுக்குத் தான் பிடிக்கும். 


****


நான் இந்த கதையை எழுத தான் ரைட்டரா வந்தேன்னு நீங்க நினைக்கற ஸ்டோரி எது? அதை எழுதீட்டீங்களா இல்ல இனி தானா? 


இந்தக் கதை எழுதத்தான் வந்தேன்னு சொல்ல முடியாது. 


ஆனா, ரொம்ப ஆசைப்பட்டு எழுதுன கதை, "அற்றைத் திங்கள் மழைத்துளி".


****


தெலுங்கு பெயரில் ஒரு டீசர் போட்டேங்களே எப்போது போடுவேங்க.போட்டியில் கலந்துக்க போறேங்களா?


என்னோட எக்ஸாம்ஸ் முடிஞ்சவுடனே போடறேன்.🙈

போட்டி - சஸ்பெண்ஸ். 


*****


இடியாப்ப கதை(அற்றைத் திங்கள் மழை துளி)ஒன்னு எழுதுனீங்களே அந்த ஹீரோ வெற்றியை எங்க இருந்து புடிச்சிட்டு வந்தீங்க.. பேருக்கு தான் ஹீரோ அவன் பண்ணதுல்லாம் வில்லத்தனம் தான். 


ஹாஹா... நாட்டுல நிறைய வெற்றி சுத்தீட்டு இருக்காங்க. அதை வெளிய கொண்டு வர்றதும் வராம போறதும் சூழ்நிலையை பொறுத்து இருக்கு.😉


*****


மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏


உங்களது நேர்காணல் மிகவும் அருமை. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், உங்களது எண்ணங்கள் யாவும் ஈடேறிடவும் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐


நன்றி பிரண்ட்ஸ்












Comments

  1. Keep going akka♥️♥️♥️ you'll surely reach great heights ♥️♥️♥️♥️

    ReplyDelete
  2. Valarndhu varum Eluthaalaruku, melum valara en vaazhthukal ✨

    ReplyDelete
  3. It's very happy to see you growing day by day in this field ❤️

    Best wishes and keep doing da

    ReplyDelete

Post a Comment