ராஜேஸ்வரி கருப்பையா


 #எழுத்தாளர் அறிமுகப்படலம்

சீசன் இரண்டு

பெயர் :ராஜேஸ்வரி 

ஊர் :கரூர் 

படிப்பு :M. Com(ca)

பணி: இல்லத்தரசி 

தளம் : pratilipi, Anna sweety tamil novels , Srikala tamil novels, Ezhilanbu, vaigai, nikarilla vanavil, eread club

கொஞ்ச நாள் கேப் விட்டுருக்கேன்.pritilipi la போட்டிக்கு மட்டும் எழுதிட்டு இருக்கேன்.

அமேசான் பெயர் மற்றும் லிங்:

ராஜேஸ்வரி கருப்பையா

Link :

https://www.amazon.com/author/rajeshwarikaruppaiya

தற்சமயம் எழுதி கொண்டிருக்கும் லிங்:

https://tamil.pratilipi.com/series/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-o5jdrfgqwmiw


உங்களுடைய புத்தகத்தின் பெயர் மற்றும் கிடைக்கும் முகவரி :

தித்திக்கும் தேனமுதே & என்னை கட்டியிழுக்கும் காந்தச் சிமிழே

https://wecanshopping.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE

*****

உங்களுடைய முதல் கதையின் பெயர்:

வசந்தமென வந்தாய் 

*****

மொத்தம் எத்தனை எழுதியிருக்கீங்க : 

6 நாவல்கள். மூன்று சிறுகதைகள் 

*****

உங்கள் படைப்புகளின் பெயர்கள் :

நாவல்கள்

வசந்தமென வந்தாய்

எனை மீட்டும் இயலிசையே

என்னை கட்டியிழுக்கும் காந்தச் சிமிழே

காதல் துளிரே

தித்திக்கும் தெனமுதே

என் நெஞ்சுநேர்பவளே


சிறுகதைகள்

அப்பா வந்தாச்சு

கொலைகார காதல்

மன்றல் 

...

அருமை சிஸ்டர்

******

உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா :


பக்கா கிராமத்து பொண்ணு.. அமைதியோ அமைதி..

ரெண்டு பொண்ணுங்களுக்கு அம்மா..

எதையும் பாசிட்டிவா நினைக்குற ஆளு.

கோவமோ வெறுப்போ ஒதுங்கி போகுற ரகம்.

...

அருமை சகோதரி

*****

நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்:

 கற்பனை செய்யப் பிடிக்கும்.

*****

உங்களது கனவு லட்சியம் ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா:

என் கனவே எழுதறதுதான்.அது நிறைவேறிடுச்சுன்னு தான் சொல்லணும். அதை தக்க வச்சுக்கறதுதான் இனிஎன் கையில் தான் இருக்கு.

*****

எழுத்துலகிற்கு வந்த பிறகு நீங்கள் கற்றுக் கொண்டவை என்னென்ன : எனக்கு இது புது உலகம். 

இங்க கற்றுக் கொண்டதுங்கறத விட கிடைச்சது தான் அதிகம்.

*****

உங்களது நாவல்களில் எது வாசகர் ரீதியாக அதிகப்படி ஊக்குவிப்பை பெற்றுக் கொடுத்தது: 

தித்திக்கும் தேனமுதே

*****

தளத்தில் எழுதி முகநூலில் பதிவிடுவதற்கும், புத்தகமாக வெளியிடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன : 

நேரடி புத்தகம் இன்னும் எழுதவில்லை.

*****

உங்கள் முதல் புத்தகம் கையில் கிடைத்த போது உங்களது மனநிலை எப்படி இருந்தது.

 விவரிக்க முடியாத மகிழ்ச்சி.

*****

நீங்கள் எழுத்தாளராக மாறியதற்கு வீட்டில் கிடைக்கும் ஆதரவு, எதிர்ப்பு பற்றி சொல்ல முடியுமா : 

எதிர்ப்பெல்லாம் எப்பவும் கிடையாது. ஆதரவு திரும்புன பக்கமெல்லாம் உண்டு.

*****

நீங்கள் எழுதிய நாவல்களில் எது வாசகர்களால் மிகவும் பாராட்டப் பெற்றது:

 மூன்றாம் நாவல் என்னை கட்டியிருக்கும் காந்தச் சிமிழே பிரதிலிபியில் நிறைய வரவேற்பு பெற்றது.

தித்திக்கும் தேனமுதே என்னை தெரியாத வாசகர்களிடம் என்னை கொண்டு சேர்த்தது.

*****

ஒரு எழுத்தாளன் நாவல் எழுதும் முன்பு செய்ய வேண்டியது என்ன : 

கதை கருவின் தரம், அதன் ஆரம்பம் முடிவு தலைப்பு , கேரக்டர் பெயர்கள் , கதை நடக்குமிடம் எல்லாம் முடிவு செஞ்சுட்டு எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான்.

*****

நீங்கள் வாசித்து வியந்த நாவல் எது : 

அமானுஸ்யன், புத்தம் சரணம் கச்சாமி.

இந்த கதைகளை குறிப்பிட்ட வரையறைக்குள் உங்களால அடக்கவே முடியாது.

*****

முகநூலில் உங்களுக்கு கிடைத்த அருமையான வாசகர் என்றால் யாரை சொல்லுவீங்க. 

நிறைய இருக்காங்க Sis. என் கதையை விரும்பி படிக்கற எல்லோரும் எனக்கு பொக்கிஷம் மாதிரி.

*****

உங்களது கதைகள் இத்தனை அத்தியாயம், வார்த்தையில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுபவரா நீங்கள் : 

கண்டிப்பா இல்லை. ஆனால் ரொம்ப பெரிதாக எழுத மாட்டேன்.

*****

உங்கள் படைப்புகள் காதல், குடும்பம், சமூகம், வரலாறு , ஆன்மீகம் இதில் எதைப் பொறுத்து காணப்படும் : 

காதல் குடும்பம் தான்.கொஞ்சம் கொஞ்சம் சமூக கருத்து எட்டிப் பார்க்கலாம்.

*****

இந்த நாட்களில் நாவல்களை வாசிப்பவர் ஒரு எழுத்தாளரிடம் எதிர்பார்ப்பது என்ன :  

தொடர்ச்சியா சீரான இடைவெளியில் எபி .குடுக்கணும்.

நான் அதுல ரொம்ப வீக்.

*****

உங்கள் படைப்புகளில் உங்களது குடும்பத்து உறுப்பினர்களின் பெயர், குணாதிசயம் வருவது போல எழுதியது உண்டுமா:

 கண்டிப்பா வருமே.

*****

உங்களது படைப்புகளில் கவிதைகள், சினிமா பாடல்களை இணைக்கும் வழக்கம் உடையவரா நீங்கள் : 

நிச்சயமாக. பாட்டை இப்ப குறைச்சுகிட்டேன். கவிதை இல்லாம கதை இருக்காது.

....

நல்லது

******

பிரபல முன்னணி எழுத்தாளர்களில் உங்களது மனதை கவர்ந்தவர் யார் ? எதனால் ? அவரது நாவலில் உங்களைக் கவர்ந்த விசயம் என்ன ?

என் கணேசன்.

மேல சொன்ன அமானுஸ்யன் புத்தம் சரணம் கச்சாமி அவர் எழுதியதுதான். எனக்கு சஸ்பென்ஸ் வகை கதைகள் ரொம்ப பிடிக்கும். அதை அவ்வளவு அழகோட தர்றவர். 

நல்ல கருத்துக்களை நம் மன எண்ணங்களை இவர் சொல்ற விதம் ரொம்ப அருமையா இருக்கும்.

*****

இப்போது ஆன்லைனில் எழுதி வருபவரில் உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார் : 

எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. நடிகருக்காக படம்பிடிக்காது. படத்துக்காக நடிகர பிடிக்கும். அது போல தான். கதைகளுக்காக பிடித்த எழுத்தாளர்கள் ரொம்ப ரொம்ப அதிகம்.

...

சூப்பர். நானும் கூட🤣🤣🤣

*****

உங்களது நாவலை வாசிக்கும், நட்புகள், வீட்டாரின் மனநிலை என்ன? 

அப்பா மட்டும் படிப்பாங்க. எப்படி ராஜூ இப்படி எழுதறன்னு கேப்பாங்க. எல்லர் கிட்டயும் பெருமையா சொல்லிக்கு வாங்க. பாப்பா கதை எழுதுதுன்னு.

என் ஹஸ்பண்ட படிக்க மாட்டாங்க. ஆனால் எல்லார்கிட்டயும் நான் எழுதறேன்னு சொல்லிடுவாங்க.

...

வாழ்த்துகள் சகோதரி

*****

வாசகர் கேள்வி பதில்கள் :

செவ்வந்தி துரை

எதிர்காலத்தில் என்ன மாதிரி கதை எழுத ஆசை? எந்த ஜானர்ல முத்திரை பதிக்க ஆசை?

நல்லதா ஒரு துப்பறியும் கதை எழுதணும் சிஸ்

*****

நர்மதா

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் யார்? ஏன்? உங்க கதைக்கு வந்த மறக்க முடியாத பாராட்டு மற்றும் அதே போல் வந்த நெகட்டிவ் கமெண்ட் அதுக்கு நீங்க அளித்த பதில்.

என் கணேசன் சார். கதையோட்டம் ரொம்ப நல்லா இருக்கும் சிஸ். கருத்துக்களை சொல்ற விதம் நல்லா இருக்கும்.

மறக்க முடியாத பாராட்டுன்னா என் ஹஸ்பண்ட் கூட ஒர்க் பண்ற ஸ்டாப் ஒருத்தங்க கதையை படிச்சிட்டு போன் பண்ணி அவ்ளோ பேசுனாங்க. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

நெகடிவ் கமெண்ட் அதிகம் வந்ததில்ல. கதைல குறை சொன்னா அதை என் பாயிண்ட் ஆப் வியூல பதில் சொல்லிருப்பேன்.

*****

வாழ்வில் வரும் இடர்களை தாண்டி தொடர்ந்து எழுத எப்படி நீங்க உங்களை ஊக்குவிச்சிக்கிறீங்க?

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுல சிஸ். அதுபோல தான் எழுத வந்த பிறகு அப்பப்போ உடைஞ்சி போனாலும் எழுதணும் எழுதணும்ன்னு உள்ளுக்குள்ள தள்ளிட்டே இருக்கும்.

*****

குடும்பம் குழந்தைக்கிடையில் எழுதுவதற்கான நேரத்தை எப்படி ஒதுக்குறீங்க?

இது தான் சிஸ் என்னோட பிரேக்குக்கு முக்கிய காரணமே. ரெண்டு பேருக்கும் ஆன்லைன் கிளாஸ் ஹோம் ஒர்க் எல்லாம் போன் தான். என்கிட்ட கிடைக்குற நேரம் நான் tierd ஆகிருவேன்.அப்படியும் நைட் டைம் எழுத முயற்சி செய்வேன்.

*****

தங்களின் எதிர்கால திட்டம் என்ன?

ஒரு வாழ்வியல் நாவல் எழுதணும் சிஸ்.

*****

பாலா ராஜி

உங்க கதைகள முழுசா நான் படிக்கலேனாலும் ஒன்னு, ரெண்டு எபிஸ் படிச்சத வச்சு கேட்குறேன். உங்க எழுத்துநடை அவ்ளோ சூப்பரா இருக்கு. எப்டி ஒவ்வொரு வரிக்கும் தனியா நிறையா யோசிச்சு எழுதுவீங்களா? இல்ல நீங்க எழுத எழுத ஆட்டோமேட்டிக்கா அதுவாவே வருமா?

அப்பிடிலாம் எதுவும் இல்லடா. நல்ல மைண்ட் செட்ல இருந்தேனா அதுவா வரும். அவ்ளோ தான்.

*****

சூர்யா ராஜாராஜன்(மிலோனி )

உங்களோட கதைகள்ல குறிப்பிட்ட முக்கியமான அம்சமா எதை நினைக்கிறீங்க..?

கதைகளுக்கு இடையில் வர கவிதை.

*****

ஒரே ஒரு நெகட்டிவ் கமெண்ட்ஸ் ரிவியூஸ் கூட நம்மள பாதித்துவிடும் நம்மளை சோர்வடைய வைத்து விடும் அப்படி ஆகாமலிருக்க எழுத்தாளர்களுக்கு உங்களோட அட்வைஸ்..?

பொதுவாவே என்னை யாராச்சும் எதாவது வேலை சரியா செய்யலன்னு திட்டிட்டா ஓவர் ரோஷப்பட்டு அந்த வேலைய perfect ah செஞ்சு முடிப்பேன். இது கூட அந்த மாதிரி தான்.

அந்த நெகடிவ் கமெண்ட் உண்மையாவே நம்ம குறை தானான்னு பார்க்கணும். அப்படி இருந்தா அதை சொன்னவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு நம்மள improve பண்ணிக்கலாம். இல்லையா ஜஸ்ட் இக்னோர் நெகடிவிட்டி.

*****

எழுத்தாளர் அப்படிங்கிறது தாண்டி வேறு எதில் உங்களோட முத்திரையை பதிக்கணும்னு நினைக்கிறீங்க..?

அப்பிடி எதுவும் இல்லை சிஸ். இதையே சிறப்பா செய்யணும்.

*****

செந்தில் குமார்

உங்களை‌ எழுத்தாளராக உணர்ந்த முதல் தருணம் அல்லது மற்றவர்கள் உங்களை எழுத்தாளராக ஏற்று கொண்ட முதல் தருணம்  உங்கள் மனதிற்குள் என்ன தோன்றியது?

Pratilipi la முதல் கமெண்ட் வந்த நிமிஷம். அந்த feel விவரிக்க வார்த்தையே இல்லை.

******

கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது உங்களுக்கு குடும்பத்தார் ஆதரவு கிடைத்ததா? மற்றவர்களின் கேலி கிண்டல்களை எப்படி கடந்து வந்திர்கள் ?

எனக்கு தடை எதுவும் சொன்னது இல்லை. அதே போல சீரியஸ் கேலிகள் கூட இல்லை. எல்லாரும் ரொம்ப சப்போர்ட்டிவ்.

*****

நீ எல்லாம் எழுத்தாளரா என யாராவது சொல்லி இருக்காங்களா?

அது ஒருத்தங்க மட்டும் கோவத்துல சொல்லி இருக்காங்க. ஆனா அந்த பர்சன் மனசுக்குள்ள என்னை நினச்சு பெருமை படுறது தெரியும். பின்ன என் பேரோட அவங்க பேரும் தான பேமஸ் ஆகுது.

*****

இதுவரை எழுதிய கதைகளில் இது தான் எனது பெஸ்ட் கதை இதே போல இன்னோர் கதை எழுத முடியுமா என்று நினைத்தது உண்டா?

தித்திக்கும் தேனமுதே..

இந்த கதையை நான் திருப்பி திருப்பி நிறைய முறை படிச்சுருக்கேன். ஒவ்வொரு முறையும் தோணும்.. நான் தான் எழுதினேனான்னு. பேருக்கு ஏத்த மாதிரி வார்த்தைகள்ல தேன் சாரல் தெளிச்சுருக்கும். இது போல இப்ப யோசிச்சா கூட வார்த்தைகள் சிக்குறதில்ல.

*****

மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏

உங்களது கேள்வி பதில்கள் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய னமார்ந்த வாழ்த்துகள்💐💐💐




Comments