பிரியதர்ஷினி ரதீஸ்

 

#எழுத்தாளர் அறிமுகப்படலம்
இது நம்ம ஏரியா

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய அறிமுக எழுத்தாளர் பிரியதர்ஷினி ரதீஷ் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள நேர்காணலை வாசியுங்கள் :

பெயர்: பிரியதர்ஷினி ரதீஸ்.


பிறந்த ஊர் : மதுரை


படிப்பு : மேனேஜ்மெண்ட் டிப்ளோமா.


பணி: தற்போது வீட்டில் இருந்தபடியே பிசினஸ் பண்ணுறேன்.


தளம் : நறுமுகை நாவல்ஸ்.


அமேசான் பெயர் மற்றும் லிங்: இல்லை


தற்சமயம் எழுதி கொண்டிருக்கும் லிங்: நேச நெஞ்சத்தின் தேடல் சுகமானது.. 


உங்களுடைய புத்தகத்தின் பெயர் மற்றும் கிடைக்கும் முகவரி : இன்னும் எனது கதை புத்தகமாக வரவில்லை.. 


*****

உங்களுடைய முதல் கதையின் பெயர்:

என்னருகில் நீ இருந்தால் 


*****

மொத்தம் எத்தனை எழுதியிருக்கீங்க :

நான்கு கதை முடிந்துவிட்டது.. இரண்டு கதை ஆன்கோயிங் போகுது சிஸ்.


*****

உங்கள் படைப்புகளின் பெயர்கள் :


என்னருகில் நீ இருந்தால்..

உன் நினைவே என் சுவாசமானது.

முள்ளில் மலர்ந்த காதல்

மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை..

நேச நெஞ்சத்தின் தேடல் சுகமானது.

சைவமோ?.. காதல் அசைவமோ?..

சந்தனக்காற்றில் கவிபாடும் காதல்.

அழைத்தால் வருவாயோ அன்பே. இது இரண்டும் நான் இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை.. 

...
அருமையான பெயர்கள்

*****

உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா :


என்னை பற்றி சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை .. 


*****

உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :


எழுதுவது எனக்கு கிடைத்த மிகபெரிய வரம்..  எழுதுவதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்கின்றேன்..


*****

எதனால் நாவல் எழுதும் ஆவல் உங்களுக்கு பிறந்தது:


கதை படிப்பது எனக்கு அலாதி இன்பம்.. பாடசாலையில் படிக்கும் காலங்களில் பாடப்புத்தகத்தின் நடுவில் கதை புத்தகம் எப்பொழுதும் இருக்கும்.. ஆசிரியரிடம் மாட்டுவதும் உண்டு.. இதனால் வீட்டில் அம்மாவிடம் திட்டு வாங்கி நூலகம் செல்லக்கூடாது A/L படித்து முடிக்கும் வரை என்று சத்தியம் வாங்கினார் அம்மா.. அதன் பின் இரண்டு வருடங்கள் நூலகம் செல்லவில்லை..  பொது தேர்வு முடிந்த இறுதி நாள் பாடசாலையில் இருந்து நூலகம் சென்று கதைபுத்தகம் எடுத்துக்கொண்டுதான் வீட்டிற்கே சென்றேன்..


பசி தூக்கம் மறந்து கதை படிப்பேன்.. இவ்வாறே கதையின் ஊடாக எனது வாழ்வு சென்றது.. இதே கதையின் ஆர்வதினால் தான் எனது அம்மாவின் இறுதி நாள் அன்றும் கதை இடையில் நிற்கிறது நீங்க படுத்து கொள்ளுங்கள் என்று அம்மாவிடம் கூறிவிட்டு நான் எனது அறைக்குள் சென்றுவிட்டேன்.. 


நான் சென்று அரைமணி நேரத்தில்  ஹார்ட் அட்டாகினால் எனது அம்மாவின் உயிர் பிரிந்து விட்டது..


நினைத்து வருந்தாத நாளே இல்லை..


அப்படி இருந்தும் அம்மாவின் பிரிவில் இருந்து என்னை மீட்டு எடுத்ததும் இதே கதை தான்..


நேரம் காலம் பார்காமல் எனது வேலைகளை முடித்துக்கொண்டு கதை படித்தேன்.. 


இறுதியில் எனது அத்தை தமிழ் ஆசிரியர் வள்ளியம்மை அவர்தான் எனது எழுத்து ஆர்வத்தை தூண்டி விட்டார்.. இவர்தான் கதை புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தவரும்.. அவர் சொல்லி மூன்று வருடங்கள் கடந்துவிட்டது.. 


எப்படி எழுதுவது யாரிடம் கொடுப்பது பற்றி எதுவும் தெரியாது அதனால் நானும் ஆர்வம் காட்டவில்லை.. பின்பு 2019ம் ஆண்டு எனது ஊரைவிட்டு கணவரின் ஊருக்கு வந்த பின் அங்கு நூலகமே இல்லை என்பதை தெரிந்துகொண்டு கைபேசியில் எழுத்தாளர் சொர்ணா சந்தனக்குமார் அவரின் பெயரை போட்டு பார்த்தேன்.. எனது ஊரில் நான் அவரின் கதை தான் இறுதியாக படித்தேன்.. 


அவரின் கதை mm தளத்தில் வந்தது அன்றில் இருந்து மட்டற்ற மகிழ்ச்சியில் அங்கிருந்த அனைத்து முடிவடைந்த கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன்..  அப்போது எனது மனதில் தோன்றியது ஃபுல் விருந்தே கிடைத்துவிட்டது.. என்பதுதான்..


mm தளத்தின் மூலம் சொர்ணா அக்காவிடம் அறிமுகம் கிடைத்தது முகநூல் இன்பாக்ஸ் மூலம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.. 


அவரின் மூலம் தான் எழுதுவது எப்படி என்கின்ற அனைத்து தகவலும் எனக்கு கிடைத்தது.. அதை பயன்படுத்தி mm தளத்தில் எனது பிறந்த நாள் அன்று எனது எழுத்து பயணமும் ஆரம்பித்தது.. 


...
நல்லது அருமையான பதில். மேலும் நிறைய எழுத வாழ்த்துகள்

*****

உங்களுடைய முதல் படைப்பை  தளத்தில் பதிவிட்டு வாசிக்கும் போது உங்களது மனநிலை என்னவாக இருந்தது :


சிறகின்றி பறந்தது பானுமா  கோமதி ஆனந்த் மற்றும் ஏனைய வாசகர்களின் வரவேற்பை கண்டு மனம் பூரித்து போனது.


*****


நீங்கள் எழுதிய படைப்புகளை வாசித்த வீட்டாரின் கருத்துகள்:


உறவுகள் மற்றும் நட்புகள் ஊக்கமளித்தார்கள்.. 


******

நீங்கள் எழுத வந்த பிறகு உங்கள் வீட்டில் கிடைக்கும் ஆதரவு பற்றி சொல்ல முடியுமா: 


நான் எழுதுவது எனது கணவரை தவிற கணவர் வீட்டில் யாருக்கும் பிடிப்பதில்லை.. எனக்கென்று கிடைக்கும் நேரத்தில் மாமியாருக்கு தெரியாமல் எழுதுகிறேன்.. அவரிடம் எழுவது இல்லை என்று கூறிவிட்டேன்.. இது கணவரின் ஏற்பாடு வீண் வாக்குவாதங்களை தடுப்பதற்காக.. 


*****

உங்களது எழுத்துகளை வாசித்ததும் கருத்து சொல்லும் விதமாக வீட்டில், உறவினர்கள், நட்புகள் யாராவது இருக்கிறார்களா :


எனது தம்பி மற்றும் நண்பர்கள் இருகிறார்கள். கணவரிடம் எழுதும் முன்பு கதையை சொல்லி அபிப்பிராயம் கேட்பேன் அவரும் சில திருத்தங்கள் சொல்லி சிலநேரம் டைப் பண்ணியும் தந்து ஊக்கப்படுத்துவார்.


*****


படிக்கும் காலங்களில் கவிதை எழுதியிருப்பதாக சொல்லும் நீங்கள் ஏன் அதற்குப் பிறகு முயற்சி செய்யவில்லை? தற்சமயம் எழுதும் படைப்புகளில் உங்களது கவிதை வரிகள் இடம் பெறுவது இல்லையா :


இல்லை.. காதலில் விழுந்த போது கவிதை எழுதும் ஆர்வம் வந்தது.. திருமணத்தின் பின் வாழ்வின் நிதர்சனம் புரிந்தபின் கற்பனை கவிதைகள் என்னை ஈர்க்கவில்லை.,


*****

நிஜ சம்பவத்தை அடிப்படையாக ஆரம்பித்து, கற்பனையுடன் உங்களுடைய படைப்புகளை நிறைவு செய்வதாக சொல்லியிருக்கீங்க. நிஜ சம்பவம் என்றால் எப்படிப்பட்டாதாக இருக்கும்:


நான் இருக்கும் சூழலில் நடப்பவை மற்றும் செய்திகளில் பார்ப்பது கேட்பது போன்ற சம்பவங்களே கதையில் கற்பனை கலந்து சுவாரஸ்யமாக கொடுப்பேன்..


*****

பாடசாலை காலங்களில் சிறுகதை போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றிருப்பதாக சொல்லும் நீங்கள். எப்படி கதை எழுதும் ஆவலை வளரச் செய்திகள். அந்த எழுத்து திறனே என்னால் நாவல் எழுத முடியும் என்னும் ஊக்கம் தந்தது..


*****

மதுரை மாவட்டத்தில் பிறந்திருக்கும் நீங்கள், உங்கள் படைப்புகளில் சொந்த ஊர் பற்றி எழுதிய அனுபவம் இருக்கிறதா :


பிறந்த ஊர் வைத்து முதல் கதை எழுதி உள்ளேன்.. நான் வாழும் ஊர் வைத்து எழுதும் கதை எனது அடுத்த கதைகளில் ஒன்றாக வரும்..


*****

உங்கள் ஊரின் சிறப்பியல்புகள் பற்றி சொல்ல முடியுமா :


ஆற்றில் மீன்பிடிப்பது கேள்வி பட்டிருபீர்கள் அதே ஆற்றில் அனைத்துவகையான இறால் மற்றும் கடல் மீன்கள் நண்டும் எங்களது ஊரில் சிசனின் போது பிடிக்கலாம்.. கோவில்கள் விசேசமானவை.. 


*****

நீங்கள் எழுதிய படைப்புகளில் வாசகர் ரீதியில் வெற்றி பெற்ற படைப்பு என்றால் எதை சொல்ல நினைக்கிறீங்க :


மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை இந்த கதை அதிகமான வாசகர்கள் மற்றும் விமர்சங்களை பெற்றுத்தந்தது..


*****

உங்கள் படைப்பிற்கு கிடைத்த மிகச்சிறந்த வெகுமதியாக நீங்கள் நினைப்பது :


எழுத்தாளர் மற்றும் வாசகர்களின் தோழமைகள் அதிகமாக கிடைத்தது.... 


*****

முகநூலில் உங்களுக்கு கிடைத்த நட்புகள் :


இல்லை


*****


உங்களுடைய பொழுது போக்கு :


கதை படிப்பது.. எழுதுவது.


*****


உங்களுக்கு பிடித்த பிரபல முன்னணி எழுத்தாளர்கள்:


சொர்ணா சந்தனக்குமார் .. மல்லிகாமணிவண்ணன்.

பிரஷா.

சுவிதா

மிலா.

மகேஸ்வரி ரவி அவங்க தற்போது உயிருடன் இல்லை

சவிதாமுருகேசன்.

லதாபைஜு

சரயு

ரமாலக்ஷுமி

உமாசரவணன்.

வித்யா வெங்கடேஸ்.

ரேணுகா முத்துகுமார்.

ஷபானா

சரண்யா ஹேமா

ஆனந்தஜோதி

கிரிஜா சண்முகம்

ஹேமா அசோக்..  இவர்கள் அனைவரும் எனது எழுத்து பயணத்தில் எனக்கு வழிகாட்டிகள்.. 


நான் இவர்களின் எழுத்துக்களை அனுபவித்து ரசித்து படித்துள்ளேன்.. இவர்களின் அறிமுகம் எனக்கு கிடைத்த வரம்..


...
எனது எழுத்துக்களையும் வாசித்திருக்கிறீர்களா? மிக்க மகிழ்ச்சி சகோதரி 🙂🙂🙂

*****

உங்களுக்கு பிடித்த ஆன்லைன் எழுத்தாளர்:


அனைத்து எழுத்தாளர்களும்.. எழுத்தாளர் என்கிற பெயர் ஒன்று போதும் பிடிப்பதற்கு.. 


*****

நீங்க வியந்து நோக்கும் எழுத்தாளர் யாராவது இருக்கிறார்களா :

ஆம் 


*****


ஒரு நாவல் எழுதும் முன்பு இத்தனை அத்தியாயம், வார்த்தை, கவிதை, வருணனை வர வேண்டும் என்று முடிவு செய்து பின்னர் எழுதுபவரா நீங்கள்..


ஆம் அனைத்தும் முன்பே குறித்துவைத்துக்கொள்வேன்..


*****

நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களை கவர்ந்தது எது:


இரண்டாவது கதை உன்நினைவே என் சுவாசமானது.


*****


உங்கள் படைப்புகளை வாசிப்பவர் உள்ளிடம் எதிர்பார்ப்பது :


யாரையும் புண்படுத்தாத பயனுள்ள கதைகளை..


*****

விமர்சனங்கள் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க :


விமர்சனம் ஒருகதையை படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கவேண்டும்.


*****


உங்க  கதைக்கு பெயர் தேர்வு செய்யும் முறை..


கருவை வைத்து.. எனது கதையின் தலைப்பின் மூலமே கதையின் கருவை இலகுவாக கண்டுகொள்ளமுடியும்.. 


******


நீங்கள் எழுதிய படைப்புகளில் ஏதேனும் ஒன்று பற்றி விவரிக்க முடியுமா:


எஸ் எனது முதலாவது கதை இந்த காலத்து இளம் பெண்களின் அழகு மோகம் பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும் சுவாரஸ்யமாக கொடுத்து உள்ளேன்.. என்னருகில் நீ இருந்தால் கதை..


*****



உங்கள் கதைகளை வாசகர்களின் கருத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்த அனுபவம் உண்டுமா:


இல்லை கதையின் இறுதி.. மற்றும்  அத்தியாயத்தின் இறுதி என அனைத்தும் முடிவு செய்து விட்டுதான் எழுத ஆரம்பிப்பேன்..


*****

உங்கள் கதைகளில் ஏதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :


எஸ். எனது இரண்டாவது கதையில் ஒரு மருத்துவ சிக்கல் பற்றியதை கூறிஉள்ளேன்.. ஏனைய இரண்டு கதைகலும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும்.


*****

தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


வாசிப்பே ஒரு மனிதனை முழுமையடைவைக்கிறது.. 


....

நிஜம் தான்.


*****


உங்கள் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது :


தோழிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.. மேலும் உங்களது ஆதரவை தந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.. 


*****

மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏


உங்களது கேள்வி பதில்கள் மிகவும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐






Comments

  1. ஹாய் ப்ரியாமா...
    உங்க கதைகளில் நான்கு கதைகள் நான் படித்திருக்கிறேன்.
    மிகவும் எதார்த்தமான கதையாக இருக்கும்...

    நிஜத்தில் நடக்கும் கஷ்டங்களை எந்த மேல் பூச்சும் இல்லாமல் அப்படியே கொடுப்பதில்
    முள்ளில் மலர்ந்த காதல் வித்தியாசமான முயற்சி மனதை நெருடிய கதைகளில் ஒன்று

    மூங்கில் காட்டில் இசைக்கும் வீணை என்னை மிகவும் நெருக்கத்தில் வைத்து கதை அதற்கு தான் நான் முதலில் விமர்சனம் எழுதினேன்....

    இப்போது ஆன்கோயிங்கிலில் இருக்கும் கதைகள் படித்து கொண்டிருக்கிறேன்....
    எழுத்து உலகத்தில்
    தங்களின் எழுத்துக்கள் மென்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்....💐💐💐💐😍🥰❤️🎊🎁🎉❣️❣️👍👍

    ReplyDelete

Post a Comment