ரம்யா அனாமிகா

 #எழுத்தாளர்அறிமுகப்படலம்

இது நம்ம ஏரியா

21 - 02 - 2022

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய அறிமுக எழுத்தாளர் ரம்யா அனாமிகா அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ :


பெயர்: ரம்யா அனாமிகா

பிறந்த ஊர் : திருச்சி(துறையூர்)

படிப்பு : MCA

பணி: Review checking and data scrap(part time job)

தளம் : tamilanovelwriters , sahaptham , Wattpad, pratilipi

அமேசான் பெயர் மற்றும் லிங்: ரம்யா அனாமிகா

https://www.amazon.com/s?i=digital-text&rh=p_27%3A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+Ramya+Anamika&s=relevancerank&text=%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+Ramya+Anamika&ref=dp_byline_sr_ebooks_1

தற்சமயம் எழுதி கொண்டிருக்கும் லிங்:

https://www.tamilnovelwriters.com/community/forums/ramya-anamikas-imsai-kaathali.745/

உங்களுடைய புத்தகத்தின் பெயர் மற்றும் கிடைக்கும் முகவரி : சமுத்திரத்தில் ஓர் காதல் 

பிரியா நிலையம்,51 கௌடியா மடம் சாலை,

இராயப்பேட்டை,

சென்னை-600014

*****

உங்களுடைய முதல் கதையின் பெயர்: 

சமுத்திரத்தில் ஓர் காதல்

*****

எழுத வந்த வருடம் :

ஏப்ரல் 19 2018

*****

மொத்தம் எத்தனை எழுதியிருக்கீங்க : 

நாவல்-6 , குறுநாவல்-2

*****

உங்கள் படைப்புகளின் பெயர்கள் :

நாவல்:

1. சமுத்திரத்தில் ஓர் காதல்

2. உனக்காக மீண்டும் வருவேனடி

3. வரமாய் வந்தவனே

4. காவலனின் கைதி அவள்

5. நீயே என் காதல் நீயே என் மோதல்

6. யாசிக்கிறேன் உன் காதலை

7. மாயவனின் மாயவதி (ஆன் கோயிங்)

8.இம்சை காதலி(ஆன் கோயிங்)


குறு நாவல்

1. நான் அறியா காதலனே

2. இம்சையரசனின் இம்சைராணி

….

3 நாவலும், 7வது ஆன் கோயிங் கதையும் படிச்சிருக்கேன்

*****

உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா : 

என்னை பத்தி சொல்லனும்னா நான் அப்பாவின் தேவதை, அம்மாவின் செல்லம், அக்காவின் முதல் குழந்தை, தங்கையின் இம்சை தோழி, அக்கா பெண்ணின் சாக்லேட்டின் பங்குதாரர், நண்பர்களின் சேட்டைகாரியும் கஷ்டத்தில் பங்குதாரரும். ரொம்ப பிரெண்ட்லி, தூங்குறப்ப மட்டும் தான் வாய் முடுவேன். அப்பறம் போதும் இதுக்கு மேல சொன்ன என் ஃப்ரெண்ட்ஸிப் கடல்ல கவுந்துரும்🙊🙊

...

🙂🙂

*****

உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா : 

என் அனுபவத்த சொல்லறளவுக்கு நான் இன்னும் வளர்லன்னு நினைக்கிறேன். இன்னும் நிறைய கற்றுக்கனும். 

*****

எழுத வந்த இத்தனை வருடங்களில் நீங்கள் கற்றுக் கொண்டவையும், விலக்கி வைத்தவையும் யாவை : 

எனக்கு தமிழ் பிழை இல்லாம ஒரு வரிக் கூட எழுதத் தெரியாது இப்ப ஓரளவுக்கு ( இன்னும் முழுசா இல்ல) பிழை இல்லாம எழுத வந்ததுக்கு அப்பறம் தான் கற்றுக்கிட்டேன். நான் எழுத வந்ததுக்கு அப்பறம் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ், அண்ணா, அக்கா கிடைச்சுருக்காங்க ஒரு சில ஃப்ரெண்ட்ஸ் லைஃப் லாங் என் கூடவே இருக்கறளவுக்கு ரொம்ப க்ளோஸா கிடைச்சிருக்காங்க. 

...

நல்லது

*****

முதல் படைப்பு எழுதும் போது தமிழ் தவறில்லாமல் வந்ததா. இதற்கு அடுத்த காட்சி இந்த மாதிரி வர வேண்டும் என்று திட்டமிட்டு எழுதினீர்களா :

திட்டமிட்டு தான் எழுத ஆரம்பிச்சேன் ஆனா எழுத்து பிழை ரொம்ப ரொம்ப அதிகமா இருந்தது.

*****

எதனால் நாவல் எழுதும் ஆவல் உங்களுக்குப் பிறந்தது: 

நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு கற்பனைகள் இருக்கும், நம்மால் உருவாக்கப்பட்டு, நமக்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொண்டு, நம்மால் மட்டுமே பார்க்கக் கூடிய அற்புதமான உலகத்தில், என் எழுத்துக்கள் மூலம் உங்களின் வாசிப்பினால் என் வடிவத்திற்கு உயிர் தந்து உங்களில் ஒருவராக இணையனும்னு தான் எழுத ஆரம்பிச்சேன்.

*****

முகநூலில் உங்களுக்கு கிடைத்த நட்புகள் :

 நிறைய பேர் இருக்காங்க சொல்ல ஆரம்பிச்சா லிஸ்ட் போயிக்கிட்டே இருக்கும் . 

*****

உங்களுடைய பொழுது போக்கு : 

கதை படிக்கிறது, ஓவியம் வரையறது, பாட்டு கேக்குறது, சீரியல் அண்ட் முவி பாக்குறது.

*****

உங்களுக்கு பிடித்த பிரபல முன்னணி எழுத்தாளர்கள்: 

முத்துலெட்சுமி ராகவன் அம்மா, ரமணிசந்திரன் அம்மா, தமிழ் நிவேதா, நிவேதா கார்த்திக்கேயன், சக்தி திருமலை, சுபஸ்ரீ கிருஷ்ணவேணி, ரம்யா சுவாமிநாதன்.

*****

உங்களுக்கு பிடித்த ஆன்லைன் எழுத்தாளர்: 

யுவ கார்த்திகா அக்கா, சரண்யா ஹேமா அக்கா, ஜனனி நவின் அக்கா, பொம்மு அக்கா, மல்லிகா மணிவண்ணன் அக்கா, நித்யா கார்திகன் அக்கா, வநிஷா அக்கா,வேதா விஷால் அக்கா, இன்னும் நிறைய பேர் இருக்காங்க.

*****

நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள் : 

லவ் அண்ட் ரொமான்டிக் ஸ்டோரி, ஆன்டி ஹீரோ ஸ்டோரி.

*****

நீங்க வியந்து நோக்கும் எழுத்தாளர் யாராவது இருக்கிறார்களா : 

 படிக்கிற எல்லா கதையோட எழுத்தாளரையும் ரொம்ப வியந்து தான் பாக்குறேன். எப்படி அவங்க இப்படியெல்லாம் எழுதுறாங்கன்னு அடிக்கடி யோசிப்பேன்.

*****

நிஜ கதை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வரமாய் வந்தவனே எழுதி இருப்பதாக சொல்லி இருக்கீங்க. அந்த படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா : 

ஒவ்வொரு பொண்ணுக்குமே நமக்கு இப்படிப்பட்ட கணவர் வரனும்னு ஒரு கற்பனை இருக்கும். ஷ்யாம் யூதன் கேரக்டர் எனக்கும் வர கணவர் இப்படி இருக்கனும்னு ஒரு சின்ன ஆசை, அத வச்சு தான் எழுத ஆரப்பிச்சேன். முன்னாடி காலத்துலயும் சரி இப்பவும் சரி நிறைய பேர் வீட்ல பாகுபாடு காட்டி தான் வளர்க்குறாங்க சிலர் வெளிய சொல்றாங்க சிலர் இது தான் வாழ்க்கையின்னு சொல்றது இல்ல, ஒரு கண்ணால இந்த உலகத்தை பார்க்க முடியாது ரெண்டு கண்ணால தான் பார்க்க முடியும் எல்லா குழந்தையும் நாம பெற்ற குழந்தை தான்னு பாகுபாடு காட்டாம வளர்கனும், குறை இல்லாம யாரும் இல்ல, நம்ம சரிபாதியோட குறையையும் நிறையா மாற்றுறது தான் காதல் அத தான் இந்த கதைல சொல்லிருப்பேன்.

*****

ஒரு படைப்பு எழுதும் முன்பு நீங்கள் செய்வது என்ன: 

முதன் முதலில் எழுத ஆரம்பிக்கும் போது எல்லாத்தையும் நோட்ல எழுதிட்டு தான் டைப் பண்ணுவேன் சில எழுத்தாளர் அக்கா, ஃப்ரெண்ட்ஸ் நேரா டைப் பண்ண சொன்னாங்க, ஆனந்த ஜோதி அக்கா குறிப்பு எடுத்து வச்சுட்டு எழுத ஐடியா கொடுத்தாங்க அத தான் இப்ப பண்ணுறேன். 

*****

ஒரு படைப்பு எழுதி முடிக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் நாட்கள் : 

நாட்கள் இல்ல மாதங்கள் தான் 🤭🤭 மூன்று மாதங்கள் ஆகுது நானும் அத சரி பண்ண முயற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன்.

*****

போட்டிகதைகளில் பங்கேற்ற அனுபவம் இருந்தா அதைப் பற்றி சொல்லுங்க: 

ரொம்பலாம் அனுபவம் இல்லை ரெண்டு போட்டிகள்ல மட்டும் தான் நான் சேர்ந்திருக்கேன். அதுல ஜெயிக்கனும் அப்படிலாம் நான் நினைச்சது இல்ல. என் கதைய படிச்சு ஹாப்பிய இருக்கனும், கதைய சொன்ன தேதிக்குள்ள முடிக்கனும் அது மட்டும் தான் நான் எப்போதுமே நினைப்பேன். 

*****

ஒரு கதை எழுதும் முன் வர்ணனை, வார்த்தை, கவிதை, அத்தியாயங்கள் அனைத்தும் இத்தனை இருக்க வேண்டும் என்று திட்டமிடுபவரா நீங்கள் : 

ஒரு அத்தியாயத்திற்கு இத்தனை வார்த்தைகள் இத்தனை அத்தியாயம் இந்த கதைய முடிக்கனும்னு முடிவு பண்ணிடுவேன்.

*****

உங்கள் எழுத்திற்கு கிடைத்த மிகச் சிறந்த வெகுமதியாக நினைப்பது : 

ரீடர்ஸ் படிச்சுட்டு அடுத்த அத்தியாயத்தில் எப்பன்னு கேக்குறதயே நான் வெகுமதியா தான் நினைக்கிறேன்.

*****

நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களை வெகுவாக கவர்ந்தது எது, ஏன் : 

சமுத்திரத்தில் ஓர் காதல் நாவல்ல வர சமுத்திர நந்தினி கேரக்டர் நிதானமா பிரச்சினை பற்றி யோசிச்சு முடிவு எடுக்குறது என்னை ரொம்ப கவர்ந்தது. 

*****

மாயவனின் மாயவதி பேண்டஸி கதை. சில அத்தியாங்களில் நின்று விட்டது. மறுபடியும் பதிவிடும் எண்ணம் இருக்கிறதா : 

ஆமா அந்த கதைய இப்ப எழுதிட்டு இருக்கேன் மொத்தமா எழுதுனதும் உங்களிடம் சேர்த்துருவேன்.

...

போடும் போது சொல்லுங்க. மீதியை வாசித்துவிடலாம்.

*****

போலீஸ் கதை இரண்டு எழுதியிருப்பதாக சொல்லியிருக்கீங்க. அப்படி ஒரு கதை எழுதும் ஆவல் உங்களுக்கு எப்படி வந்தது? அதில் வர கூடிய காட்சிகளை எங்கனம் நிர்ணயம் செய்கிறீர்கள் : 

1.உனக்காக மீண்டும் வருவேனடி தான் நான் ஃபர்ஸ்ட் எழுதுனது போலீஸ் குடும்பத்த சேர்ந்தவளுக்கு போலீஸ் பிடிக்காம போலீஸே கணவராக வந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சேன் அப்படி தான் அந்த கதைய எழுதுனேன்.

2.காவலனின் கைதி அவள். ரவுடி கிட்ட சண்ட போட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சேன் ஆனா அவள யாரு காப்பாற்றுறது அதுக்கு தான் ஹீரோவ போலீஸாகிட்டேன்🤭🤭

...

😂😂😂அருமையாக பதில்

****

ஒரு நாவல் எழுதும் முன் டைரியில் எழுதி வைத்து விட்டு, எழுத்திற்கு மெருகேற்றுபவரா அல்லது மனதில் ஓடுவதை அப்படியே வார்த்தைகளாக கோர்த்து அத்தியாயமாக மாற்றுபவரா : 

முதல்ல எழுதி தான் டைப் பண்ணுனேன். இப்ப மனதில் ஓடுவதை அப்படியே டைப் பண்ணிடுவேன்.

*****

ஒரு படைப்பில் வர்ணனை, கவிதையின் தாக்கம் வாசிப்பவர் மனதில் என்ன விதமான உணர்வுகளை தோன்ற செய்ய வேண்டும்: 

இந்த கவிதை வர்ணனைகள் நமக்கானதுன்னு கற்பனை உலகத்துல மிதக்கனும். அதில் வரும் சோகம், மகிழ்ச்சி, அழுகை அத்தனையிலும் நாமும் இணைந்து இருக்குற மாதிரி தோணனும்.

*****

அதென்ன இம்சை தோழி உங்களுக்கு இப்படி ஒரு பட்டப் பெயர் கொடுத்தது யாரு? எதனால் அப்படி ஒரு பெயர் கிடைத்தது அல்லது நீங்களாக சூட்டிக் கொண்டீர்களா :

 ஃப்ரெண்ட்ஸ ரொம்ப தொல்லை பண்ணுவேன் அதுனால இம்சைன்னு பேரு வச்சாங்க. உங்களால் நான் எழுதுறேன்குற பேருல ரொம்ப இம்சை பண்ணுறேன்ல நான் உங்க தோழி அதுனால ரெண்டையும் இணைச்சுட்டேன்🤭🤭

*****

திருச்சி உங்க ஊர் இல்லயா அங்குள்ள அரண்மனை, மலைக்கோட்டை எல்லாம் சுற்றி பார்த்திருப்பீர்கள். அது பற்றி படைப்புகளில் எழுதிய அனுபவம் இருக்கிறதா. உங்கள் ஊரில் வேறு என்னென்ன ஸ்பெசல் உள்ளது : 

மலைக்கோட்டை பிள்ளையார், கல்லணை, சென்னைல டி நகர் மாதிரி இங்க பஜார் இருக்கு நிறைய ஷாப்பிங் பண்ணலாம், திருச்சில இருந்து கொஞ்சம் தள்ளி புலியஞ்சோலைன்னு ஒரு பிளேஸ் இருக்கு ரொம்ப நல்லா இருக்கும் ஆனா நானே போனது இல்ல😅. 

*****

போட்டியில் கிடைக்கும் வெற்றி தோல்வி பற்றிய உங்களது கருத்து : 

நாம அதுல கலந்து எழுதி முடிக்கிறதே வெற்றி தான் என்னைய பொறுத்தவரைக்கும்.

*****

உங்கள் கதைகளில் ஏதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா : 

சமுத்திரத்தில் ஓர் காதல் - வயசானவங்க கிட்ட இருந்து அவங்க பேரப்பிள்ளைகளல பிரிக்கக் கூடாது அவங்களை ஆசிரமத்துல சேர்க்கக் கூடாது. குடும்பத்துக்குள்ள பல பிரச்சனைகள் வரலாம் விட்டுக் கொடுக்கும் உறவுவென்றும் கெட்டு போவது இல்லை.

...

நிஜம் தான்

*****

நீங்கள் எழுதிய படைப்புகளை வாசித்த வீட்டாரின் கருத்துகள்: 

வாசித்தது இல்லை என் தங்கையிடம் முழுகதையை சொல்லிவிட்டு தான் நான் எழுத ஆரம்பிப்பேன். 

*****

நீங்கள் எழுத வந்த பிறகு உங்கள் வீட்டில் கிடைக்கும் ஆதரவு பற்றி சொல்ல முடியுமா:

 ஆரம்பத்தில் என் தங்கையை தவிர யாருமே எனக்கு ஆதரவு தரல இப்பதான் எழுதச் சொல்லி விட்டுட்டாங்க.

*****

உங்களது எழுத்துகளை வாசித்ததும் கருத்து சொல்லும் விதமாக வீட்டில், உறவினர்கள், நட்புகள் யாராவது இருக்கிறார்களா:

 என் தங்கை மற்றும் என் கதைய எடிட் பண்ற என் ஃப்ரெண்ட் மாப்பி(சனா)

*****

தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா : 

நானும் இந்த எழுத்தாளர் உலக்கத்துக்கு வந்து மூன்று வருஷத்துக்கு மேல ஆச்சு என்னைய நிறைய பேருக்கு தெரியாது. நம்ம எழுத்து உங்கள கவர்லயோன்னு பலதடவை யோசிச்சுருக்கேன்‌. நிறைய பேர் அவங்க எப்போதும் படிக்கிற எழுத்தாளர் கதைய மட்டும் தான் படிக்கிறாங்க ஏன் நீங்க மற்ற எழுத்தாளர் (இன்கிளுடிங் மீ) கதைய படிச்சு அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாது?? நீங்க படிச்ச கதைல வர குறை நிறைய நீங்க படிக்கிற எழுத்தாளர் கிட்ட சொல்லாம்ல அவங்களும் திருத்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்ல. என் கதைய மட்டும் இல்ல கண்மணிஸ் நிறைய எழுத்தாளர்கள் அப்படி தான் நினைக்கிறாங்க எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க இது என்னோட கோரிக்கை 🙏.

*****

உங்கள் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது : 

நிறைய மட்டும் இல்ல குறையையும் என்கிட்ட சொன்ன நான் கண்டிப்பா திருத்திப்பேன். நான் ரொம்ப பிரண்ட்லி என் கிட்ட பேச எந்த தயக்கமும் வேணாம். அப்பறம் எனக்கு இந்த மாதிரி ஒரு கதை படிக்கனும் உங்க எழுத்து நடையிலன்னு சொன்ன கண்டிப்பா உங்களுக்காக நான் எழுதுவேன் கண்மணிஸ்.

****

வாசகர் கேள்வி பதில் :.

Ramya Anamika ‌கேள்வி தானே இப்போது கேட்கிறேன் சகி கதையில் எப்போதும் ஹீரோயின் வாலுங்களா இருக்காங்க அதுமாதிரி நீங்களும் இருப்பேங்களா? சகி❤️❤️: 

ஆமா நா கொஞ்சமா வாலு தான் சகி

*****

Kathal yaanai varugiraan remo... muththa thandhathal muttuvan remo.... appala idhayangal bathiram remo... ramp walk remo🤭🤭 ipdi ellam paadura alavu remo char ku hero unga kathaila kamichurukeengala😝: 

இல்லை. இனிமே அந்த மாதிரி எழுத முயற்சி பண்ணுறேன்.

*****

Unga stories ah pudhusa padikura readers ku ithula irundhu start pannunga da neenga ellam, apdinu sonna entha story ah suggest panuveenga🙃: 

என் முதல் கதை சமுத்திரத்தில் ஓர் காதல் சொல்லுவேன் அது எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான். அது கிடைக்கலனா எந்த கதை கிடைக்கிறதோ அதை படிங்க. மறக்காம உங்க கருத்தை சொல்லிடுங்க.

****

1. Nee eppoolerunthu eluthe start panne: ஏப்ரல் 19 2018

2. Pudiche writer yaaru: முத்துலெட்சுமி ராகவன் அம்மா, ரமணிசந்திரன் அம்மா

3. Ethunaale story elluthe start panne: என் கற்பனை உலக்கத்தில் பயணித்து என்னோட உங்களை இணைந்து இருக்க தான்.

4. Fav novel enne anu: நா படிச்ச முதல் நாவல் தான் எனக்கு எப்போதுமே ஃபர்ஸ்ட் ஃபாவர்ட்- அவனுக்கு நான் அழகு கதை.

5. Enthe Maari story pidikkum: லவ் ஸ்டோரி, ஆன்ட்டி ஹீரோ ஸ்டோரி. 

6. Idhuvaraikkum ethune Novels elluthirukkea 6 நாவல் 2 குறுநாவல்

*****

முதல் முதலில் அப்டேட் போட்டதும் வந்த முதல் கமெண்ட் யாரு? என்ன சொன்னாங்க?: 

ஆஷிக் அண்ணா அவங்க தான் நான் எழுத்து உலகத்துக்கு வந்ததும் முதல்ல கமெண்ட் பண்ணுனாங்க. Super ma all the best இந்த கமெண்ட் தான் ஃபர்ஸ்ட் வந்தது.

*****

மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏

உங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐

Comments