எழுத்தாளர் சுரேஷ் பாலா சார்

 



நேர்காணல்:


வணக்கம் சார்🙏🙏🙏


பிரபல முன்னணி எழுத்தாளரும், திரைப்பட கதாசிரியருமான நீங்கள் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாக நேர்காணலுக்கு சம்மதம் தெரிவித்ததற்கு என்னுடைய நன்றிகள் சார் 🙏🙏🙏🙏


உங்களுடைய கதைகள் பல வாசித்த அனுபவம் இருந்ததால், உங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது. அதை கேள்வியின் வாயிலாக அனுப்பு கொடுத்தேன். பதிலளித்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏


****

பெயர் :


சுரேஷ் பாலா


***

மொத்தம் எத்தனை நாவல் எழுதியிருக்கீங்க : 


சற்றேறக் குறைய 500


***

சிறுகதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :


 சற்றேறக் குறைய 550


***

எப்போதில் இருந்து நாவல் எழுத வேண்டும் என்கிற ஆசை உருவானது : 


சிறு வயதிலிருந்தே எழுத்தின் மீது காதல் உண்டு


***

எத்தனை வருடங்களாக தொடர்ந்து நாவல் எழுதி வருகிறீர்கள்: 


1980 முதல்


***

உங்களுடைய எழுத்து அனுபவத்தை பற்றி சொல்ல முடியுமா : 


முகநூலில் படியுங்கள்


***

 உங்கள் படைப்புகள், மற்ற எழுத்தாளரை விட மாறுபட்டு இருப்பதாக நினைக்கிறீங்களா : 


 வாசகர்களே பதில் சொல்ல முடியும்


***

ஒரு நாவல் எழுதும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று ஏதாவது இருக்கிறதா : 


யாருக்காக எழுதுகிறோம், புத்தகத்தின் அளவு என்ன என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்


***

நீங்கள் இதுவரையில் எந்தெந்த நாளிதழ், பத்திரிகையில் எல்லாம் உங்களுடைய படைப்புகளை வெளியிட்டு உள்ளீர்கள் : 


தமிழில் வெளியாகும் பெரும்பாலான ஜனரஞ்சக பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும்..


***

 படைப்புகள் குடும்ப நாவலாக வெளியிடப்படுமா அல்லது கிரைம், திரில்லர் வகை சேர்ந்ததா:


இரண்டு வகை எழுத்தும் உண்டு என்பதை வாசகர்கள் அறிவார்கள்


***

உங்கள் நண்பருடன் இணைந்து கதை எழுதுவதாக தெரிய வந்தது. இருவரின் நட்பு பற்றி சொல்ல முடியுமா :


 கல்லூரியில் சந்தித்தோம். நண்பர்களானோம். எழுத்தில் பொதுவான ரசனை இருந்ததால், இணைந்து எழுதுகிறோம்.


***

இருவர் சேர்ந்து இத்தனை வருடங்களாக தொடர்ந்து எழுதி வந்திருக்கிறீர்கள் இருவரது எண்ணவோட்டமும் ஒரே திசையில் பயணிப்பதாக நினைக்கிறீர்களா : 


ஆம்


***

 உங்களது படைப்புகளில் பெரும்பாலான துப்பறியும் நாவல்களில் நரேந்திரன் மற்றும் வைஜெயந்தி இடம் பெறுவதாக தெரிந்தது. அதற்கான காரணமாக நீங்கள் கூற நினைப்பது :


 ஈகிள்ஸ் ஐ துப்பறியும் நிறுவனத்திடம் வழக்கு வந்தால், அவர்கள் பங்குகொள்வார்கள். வேறு காரணமில்லை.


***

நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களை வெகுவாக கவர்ந்தது : 


இனிமேல்தான் வரவேண்டும்!


***

இன்றைய எழுத்துக்களை பற்றி சொல்லுங்க :


எல்லோரிடமும் ஆர்வம் இருக்கிறது. சிறப்பாக எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பொதுவாக எழுத்துப் பிழையும், இலக்கணப் பிழையும் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டால் நலம்.


***

அந்நாளில் குறைந்த எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்களது பெயரும் பளீரிட்டது. இப்போது எழுத்தாளர்கள் அதிகரித்து விட்டனர். அதுபோல் அவர்களது படைப்புகளும், பெயரும் மிளிருவதாக எண்ணுகிறீர்களா : 


நல்லதுதானே?


***

விருதுகள் வாங்கிய அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா : 


அமுதசுரபி, கல்கி, ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பெருமைமிக்க பத்திரிகைகள் எங்கள் சிறுகதைகளுக்குப் பரிசளித்துள்ளன.


***

இன்றைய அறிமுக எழுத்தாளர்களான என்போன்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது : 


எழுதத் தொடங்கும் முன், நிறைய படியுங்கள்.


***

ஒரு நாவலாசிரியரான உங்களுக்கு திரைப்பட துறையின் மீது நாட்டம் வந்தது எப்படி : 


கல்கியில் திரைப்பட விமர்சனங்கள் எழுத வாய்ப்பு கிடைத்தபோது! பிற்பாடு திரைத்துறையினர் எங்களுக்கு அழைப்பு விடுத்தபோது.


***

கனா கண்டேன், அயன், கோ, அனேகன், கவண், ஆரம்பம், யட்சன், தனி ஒருவன், மாற்றான், சாணக்யா, ரெண்டு, வேலாயுதம், வேலைக்காரன் …. திரைப்படங்களுக்கு வேறு நபர்களுடன் இணைந்து திரைகதை எழுதி இருக்கீங்க. அது பற்றிய உங்களது கருத்து : 


இயக்குநருடைய எண்ணப்போக்கை உடனிருந்து அறிந்து, இணைந்து திரைக்கதை அமைப்பது திரைப்படத்துக்கு வலு சேர்க்கும் என்பது எங்கள் நம்பிக்கை.


***

நீங்கள் எழுதி வெளிவந்த படத்தன்று உங்களது எதிர்பார்ப்பாக நினைப்பது : 


ரசிகர்களுக்குப் படம் பிடிக்க வேண்டும், பணம் போட்ட தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி கிட்ட வேண்டும்!


***

கனா கண்டேன், அயன், அனேகன், தனி ஒருவன், மாற்றான், சாணக்யா, வேலாயுதம் போன்ற திரைப்படங்கள் நானும் பார்த்திருக்கேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அருமையான கதைக்களம். ஒரு நாவல் எழுதும் போது இருக்கும் சிரமத்தை விட திரைக்கதை எழுத ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டும். அப்படி இருக்க, உங்களது கடின உழைப்பும், அது பெற்று தந்ததாக நீங்கள் நினைப்பதும் : 


ரிஸ்க் என்ற சொல்லைத் தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது. உழைப்பும், எடுத்துகொண்ட களம் பற்றிய ஆராய்ச்சியும் அவசியம்.


***

இன்றைய தமிழ் சினிமாக்களை விட தெலுங்கு திரைப்படமே அதிக அளவில் பேசப்படுகிறது என்று சொல்பவர்களுக்கு உங்களது பதில் : 


அப்படியா?


***

ஒருவர் மட்டும் எழுதுகின்ற படைப்பிற்கும், இருவர், பலர் கூட்டாக இணைந்து எழுதுவதற்கும் உள்ள வித்தியாசங்கள் : 


ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்த சிந்தனை உள்ளவர்கள் இணையும்போது கூடுதலான கோணங்களில் கதையைப் பார்க்க முடியும்!


***


உங்கள் நெருங்கிய நட்பில் உள்ள எழுத்தாளர்கள் :


 எல்லோரும்!


***


நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள் : 


Non-fiction


***


முன்பு நாவல்கள் பெருமளவு விற்பனை ஆவது போல தற்சமயமும் நிகழவில்லை வீழ்ச்சியடைந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். அதுபற்றி உங்களது கருத்து:


 வாசகர்களுக்கு வாசிப்பு தளம் விரிவடைந்துகொண்டே வருவதால் நாவல் புத்தகங்களை மட்டுமே படிக்கக் காத்திருக்க அவசியமின்றிப் போய்விட்டது.


***


எழுத்து துறையில் உள்ள பொலிடிக்ஸ் பற்றி கூற நினைப்பது : 


நானறிந்த எழுத்தாளர்கள் அனைவரும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள். யாரும் யாருக்கெதிராகவும் அரசியல் செய்வதில்லை.


***


திருட்டு pdf ஒழிக்க என்ன செய்யலாம் என்கிறீர்கள் : 


வாசகர்கள்தாம் உறுதியேற்க வேண்டும்.


****

தனிப்பட்ட முறையில் நீங்கள் சொல்ல விரும்புவது : 


நட்பைப் பேணுங்கள்!


****


மனமார்ந்த நன்றிகள் சார்🙏🙏


சிறு வயதில் இருந்தே தற்சமயம் வரையில் உங்களுடைய நாவலை வாசித்து வரும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருத்தி. உங்களிடம், பேசியதும், நேர்காணலுக்கான கேள்வி பதிலை பெற்றுக் கொண்டதும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


பிஞ்ச் ஆப்பில் நிறைவு பெற்ற "விடாதே துரத்து" தொடர்கதை ரொம்ப நன்றாக இருந்தது. தற்சமயம் தொடர்கதையாக வருகின்ற "தூண்டில் கயிறு" தொடர்கதையும் ஒவ்வொரு அத்தியாயமும் மிகுந்த எதிர்பார்ப்புடன், விறுவிறுப்பாக வருகிறது.


மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் , திரையுலகில் சாதிக்கவும் என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் 💐💐💐

 




Comments