காவ(த)ல் கொண்டேனடி கண்மணி



அமேசான் லிங் :


*************

அனுஷா டேவிட் சகோதரியின் விமர்சனம் :


"காவ(த)ல் கொண்டேனடி கண்மணி" தொடர்கதைக்கு கிடைத்த அருமையான விமர்ச்சனம்.

மிக்க நன்றி அனுஷா டேவிட் 
நன்றிகள் பல🙏🙏🙏
❤️❤️❤️

#கதைவிமர்சனம்

காதல் கொண்டேனடி கண்மணி - ஆனந்த ஜோதி

நாயகி வீட்டில் மாப்பிள்ளை பாக்ராங்க. ஆனால் ஏற்கனவே காதல் வயபட்ட நாயகி மாப்பிள்ளையை ஓட ஓட துரத்துர காமெடி செம. அடுத்து அவங்க வீட்டில் யாரையும் லவ் பண்றாளானு தெரிஞ்சிக்க அவ ப்ரெண்ட் கிட்ட கேப்பாங்க . அவங்களோட தவறுதலான புரிதல்ல நாயகியோட நண்பண் வீட்டில் பேசி திருமணம் வரைக்கும் வந்துடுவாங்க. நாயகி மறுகுவாள். அந்த சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நாயகியை காப்பாற்ற அவங்க பெத்தவங்க உயிரை விட்ருவாங்க. அதற்கு பின் அவளோட அத்தை வீட்டில் இருந்து ஏசிபியா கடின பயிற்சி பெற்று வருவாள். அங்கு தான் நாயகன மீண்டும் சந்திகிறாங்க. அதற்கு பிறகு என்னாச்சுனு கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

நண்பனின் துரோகம் பெற்றவங்களோட இழப்பு காதலனின் விலக்கம் என்று நாயகி ரொம்ப கஷ்டப்பட்டு போவாள். தீ விபத்துக்கான காரணி யார் எதற்கு அப்படி செய்தான் என்பது ட்விஸ்ட். அதன் பிறகும் நாயகியை கொலை செய்ய முயற்சி நடக்கும் அதன் பிண்ணணி என்ன யார் காரணம் என்பதும் அவனேதான் மெயின் வில்லன் என்பதும் இறுதியில் தான் தெரிய வரும். கதைல பல ட்விஸ்ட் வச்சிருக்காங்க. ஏசிபியும் ஏசிபி பொண்டாட்டியும் பண்ற கலாட்டா கலகல.

நாயகனின் அத்தை மகளின் குழந்தையை தானே எடுத்து எடுத்து வளர்க்கும் நாயகன் அதனால் வரும் பிரச்சினை, இறுதியில் அந்த குழந்தை யாருடையது என்பதில் பெரிய ட்விஸ்ட் வச்சிருக்காங்க.

கொஞ்சம் பெரிய கதை தான் பிளாஸ்பேக் வச்சிருக்காங்க. அங்கும் ஒரு ட்விஸ்ட். ரெண்டு பேரும் மோதி கொண்டு காதலில் தவித்து இறுதியில் எப்படி இணைகிறார்கள் என்பதை கதையில் பாக்கலாம். இன்னும் இது போல நிறைய கதைகளை எழுதுங்கள். வாழ்த்துக்கள் சிஸ்.

***********

Kalai Karthik சகோதரியின் விமர்சனம் :

"காவ(த)ல் கொண்டேனடி கண்மணி" அருமையான கதை. 

அஸ்வினியின் குறும்புத்தனம் செம.
ரிஷி காதலிக்கும்போது செய்யும் குறும்புத்தனம் சூப்பர். 

ரிஷி ஆளுமையான போலீஸ் அதிரடியான போலீஸ். தன்னவளை உயிராக நேசிப்பதும் சூப்பர். டூவிஸ்ட்கள் நிறைந்து இருக்கிறது. 

நவீன் சூப்பர் அஸ்வினியை பார்த்து கொள்வது சூப்பர். 

அருமையான கதை.❤️❤️❤️❤️❤️


Comments