மின்னலே நீ வந்த வேளையில்


அமேசான் லிங் :


கலை கார்த்திக் சகோதரியின் விமர்சனம் :


மின்னலே நீ வந்த வேளையில் ஆனந்த ஜோதி சகி எழுதி முடித்த கதை. கதை அருமை. சித்தார்த் மென்மையானவன் கடமை தொழிலாளர்கள் நலன் என வாழ்கிறான் அவனையும் காதலில் அடாவடிக்காரனகவும் அதிரடியாக மாற்றுகிறாள் மின்னலை போல ஒருத்தி . 

அவளும் அவனை விரும்புகிறாளா?
பிரச்சினைகளைத் தீர்த்து இருவரும் இணைந்தார்களா ?. 

கதை சுவாரஸ்யமாக கொண்டு போய் உள்ளார்கள். கதையில் சஸ்பென்ஸ், காதல், டுவிஸ்ட் துரோகம், கொலை, பழிவாங்கல், நட்பு, பாசம், குறும்புத்தனம், அடாவடித்தனம் அனைத்தும் கலந்த அருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.❤️❤️❤️

**********

தர்ஷினி சகோதரியின் விமர்சனம் :


#புதினம்_வாசகர்

மின்னலே நீ வந்த வேளையில்- ஆனந்த ஜோதி

புகைப்படத்துல பார்த்து தனக்கு கீழே பணிபுரிவரின் தங்கையின் மீது ஆசை கொள்ளும் எம்.டி, அவளை மணந்து கொள்ள ஆசை கொண்டு பெண் கேட்பதும், அதற்கு அவளது தந்தையின் அதிரடியான பதிலால் திகைத்து விபத்திற்குள்ளாவதும் எதிர்பாராதது. திடீரென்று விபத்தில் சுயநினைவை இழப்பவன் மறுபடியும் சுயநினைவு பெறுகிறானா? எதற்காக அவளது அப்பா அவனை வெறுக்கிறார்? விபத்தில் சுயநினைவை இழந்தவனை காப்பாற்ற அவனது நண்பன் செய்யும் காரியம் என்ன??அப்பாவால இப்படி ஒரு விபத்து ஏற்பட்ருக்குனு தெரிஞ்சா அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா??

திடீரென்று வரும் நாயகன், தேயிலை தோட்டத்தின் அழகை ரசித்துக் கொண்டிருப்பவள் மீது மையல் கொள்வதும், அவளிடம் பேசி பழகிட ஆசை கொள்வதும், முடியாமல் கலங்குவதும் பாவமாக இருந்துச்சு.அவ மனசுல யாரு இருக்காங்க??என்று நிறைய கேள்விகள் 🙄🙄🙄

தன்னோட அத்தானை விரும்பினாலும் அப்பா பார்க்கற மாப்பிள்ளைக்கு ஓகே சொல்ற சங்கரி, காதல், கடமை, பாசத்திற்கு இடையில் தத்தளிக்கும் பத்திரிகை ரிப்போர்ட்டரான ஸ்ருதி, தன்னோட பாஸ்க்காக அப்பாவை எதிர்த்து பேசுற சர்வா, உயிரா ஒரு பெண்ணை நேசிக்கிற சித்தார்த் நட்புக்கு இலக்கணமான சுரேன்,யூகிக்க முடியாத முடிவு, திருப்பங்கள் 🤩🤩🤩🤣🤣 இப்படி பல விஷயங்களை இணைக்கும் மையப்புள்ளி எது என காதல், நட்பு, பாசம், ட்விஸ்ட் உடன் கதை பயணிக்கிறது… மரகதம் விஷயத்துல 🙄🙄👍👍... 
வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐

*********

தர்ஷினி சகோதரியின் மற்றுமொரு விமர்சனம் :

மின்னலே நீ வந்த வேளையில்-ஆனந்த ஜோதி

தன்னோட அத்தானை விரும்பினாலும் அப்பா பார்க்கற மாப்பிள்ளைக்கு ஓகே சொல்ற சங்கரி,காதல், கடமை, பாசத்திற்கு இடையில் தத்தளிக்கும் ஸ்ருதி,தன்னோட பாஸ்க்காக அப்பாவை எதிர்த்து பேசுற சர்வா,நட்புக்கு இலக்கணமான சுரேன் தன்னோட நண்பன் குணமாகவேண்டும் என்பதற்காக காதலிக்கறமாதிரி நடிக்க அழைத்து வரும் ஒரு பெண்,ரிப்போட்டரா எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் ஸ்ருதி,உயிரா ஒரு பெண்ணை நேசிக்கிற சித்தார்த்(இவனோட காதல்,குறும்பு,உரையாடல் செமையா இருந்துச்சு)...இப்படி பல விஷயங்களை இணைக்கும் மையப்புள்ளி எது என காதல்,நட்பு,பாசம்,ட்விஸ்ட் உடன் கதை பயணிக்கிறது...மரகதம் விஷயத்துல 🙄🙄👍👍...நிறைய சொல்ல ஆசைதான்.பட் ட்விஸ்ட்டை சொல்லிட்டான்னா ரைட்டர் அக்கா அடிக்க வந்துடுவாங்கனு சொல்லிட்டு 🏃🏃🏃🏃.... வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐

***********

தீக்ஷிதா லெஷ்மி சகோதரியின் விமர்சனம் :


#புதினம்_வாசகர் 
#புதினம்2021 
#திக்ஷிதா_ரிவ்யூ

கதையின் ஆசிரியார் : ஆனந்த ஜோதி 

கதையின் பெயர் :மின்னலே நீ வந்த வேளையில்.

புதினம் போட்டி கதை.

ஸ்ருதி சுறுசுறுப்பான குறும்புத்தனமான பெண்.. அதே சமயம் பொறுப்புள்ள பெண்ணும். அம்மா அப்பாவிற்கு செல்ல மகள். அண்ணனுக்கு அன்பு தங்கை. அக்காவிற்கு பாசமான தங்கை. 
அவளின் அவனுக்கு உயிரானவள். 

நளராஜன் பேச்சிலே தன் மனம் கவர்ந்தவளை கட்டியிழுக்கும் வார்த்தை ஜாலம் படைத்தவன். எதிலும் பொறுமை, யோசித்து செயல்ப்படுபவன். அவனின் அவள் மேல் உயிரையே வைத்து இருப்பவன். கற்பனையில் அவளுடன் பல கனவுகளை கண்டவன். அவனை சார்ந்தவர்கள் மீது அன்பை பொழிபவன். 

சித்தார்தன் அழகானவன் அறிவானவன். எதிலும் வேகம் அனைத்திலும் யோசித்தாலும் அதில் சில தடுமாற்றம் அடைபவன் அவளுக்காகவே தன் மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தவன். அவனின் ஒவ்வொரு செல்லும் அவளின் பெயரை மட்டுமே உச்சரிக்கும். 
கூடவே இருந்து குழி பறிக்கும் துரோகிகளை மனதால் வெறுத்து தள்ளி வைப்பவன். அது அவனின் சொந்தமாக இருந்தாலும் சரி.

நித்திலன் பிரிந்த சொந்தங்களை இணைக்க அவன் எடுத்த முயற்சி அருமை. ஆனால் அதில் அவன் மனம் இருப்பக்கமாக தள்ளாடியது தான் கஷ்டமா இருந்துச்சி. 

சங்கரி மனம் விரும்பியவனிடம் தன் மனதை வெளிப்படுத்தினாலும் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றது அருமை. 

சர்வா, சுரேன், சந்துரு, சவீதா நட்புக்கு மதிப்புக் கொடுத்து அவர்களின் நட்புக்கு ஒவ்வொரு இடத்திலும் பக்க பலமாக துணையாக நின்றவர்கள். 

நல்ல கதை... வெற்றி பெற வாழ்த்துகள் அக்கா. 

என்றும் ப்ரியமுடன் 
திக்ஷிதா லட்சுமி. 

http://annasweetytamilnovels.com/mnvv_1/

Comments