தர்ம கணக்கு

#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : எஸ். பர்வீன் பானு

படைப்பு : தர்ம கணக்கு

வெளியீடு : இன்றைய தினமலர் வாரமலர்

மனோகரன் :

அலுவலகத்தில் புரமோசனுக்காக தேர்வு எழுதிவிட்டு அதன் பதிலுக்காக காத்திருப்பவர் அது கிடைக்காமல் ஒவ்வொரு முறையும் தட்டிப் போனால் எந்த அளவுக்கு மன உளைச்சல் அடைவார் என்பதை அழகாக சுட்டிக்காட்டி இருக்காங்க. தன்னை நியாயவாதியாக நினைத்து அடுத்தவர்கள் செய்யும் தவறுகளை பெரியதாக பேசுபவனுக்கு அவனது மனையாளின் பதில் சரியான செருப்படியாக இருந்தது. 

சூப்பர்👌👌👌 மனையாளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நச்சென்று இருந்தது. 

இப்படித்தான் பல ஆண்கள் தன்னிடம் இருக்கும் தவறுகளை மறந்து (மறைத்து) விட்டு தன்னை யோக்கியமாக காண்பித்துக் கொள்கிறார்கள். இதனால் அவனை மணந்து வருபவள் படும் துயரத்தை கவனத்தில் கொள்வதே கிடையாது. அவளை மட்டம் தட்டியே தாழ்த்தி வைத்து விடுகிறார்கள். 

சிறுகதை அருமை சிஸ்டர். எதார்த்தமான கதைக்களம். நம் வீட்டில் நடப்பதை சிறுகதையாக வாசித்த அனுபவத்தை கொடுத்தது.

ரொம்ப நாளாக உங்க கதை வாசிக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அதற்கு இன்னைக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. நன்றிகள் பல ஈரோடு அருண் சார்🙏🙏

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சிஸ்டர்💐💐💐


Comments