விழியால் உயிரில் கலந்து


அமேசான் லிங் :



மிருதுளா அஸ்வின் சகோதரியின் விமர்சனம் :


ஆனந்த ஜோதி அக்கா வின் கதை விழியால் உயிரில் கலந்து..

இந்த கதையை நான் ரொம்ப லேட்டா தான் படிச்சு முடிச்சேன்.

கண்டதும் காதல் என்று சொன்னாலும், சிறு வயதில் தன்னோடு விளையாடியவளை 15 வருடம் கழித்து பார்க்க, அந்நொடி அவள் மேல் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டிய ரகுவின் காதல் மிக அழகானது.

அவனவள் காதலும் குறைந்ததல்ல... ரகு அத்தான் என்று அவள் அழைக்கும் விதம் ஸ்வீட்.

செல்வம் நித்தியா ஜோடியும் அருமை.

நாயகன் ரகுவும், நாயகி ஜோதியும் ஒருவருக்கொருவர் உயிராய் நேசிக்க, வில்லியாக வந்தவள் தான் ரோஷினி. 

ரோஷினி அவர்களை பிரிக்க எண்ணற்ற தகிடுத்தத்தம் செய்ய, அதில் ஜோதி எதிரபாராமல் மாட்டிக்கொள்ள, ரகு என்ன செய்தான்? தன் ஜோதியை காப்பற்றினானா? ஜோதியின் கதி என்ன? ரோஷினியின் குற்றம் வீட்டாருக்கு தெரிந்ததா? அவள் முடிவு தான் என்ன? ரகுவும் ஜோதியும் ஒன்று சேர்ந்தார்களா என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள் ஆனந்த ஜோதி அக்கா 😍😍😍💐💐

**********

எழுத்தாளர் அனிதா ராஜ்குமாரின் விமர்சனம் :


ஆனந்த ஜோதி அவர்களின், 'விழியால் உயிரில் கலந்து'
😍😍😍😍🥳🥳🥳🥳🤩🤩🤩🤩
 
ப்ரதிபிலியில் சிறு கதையாய் வந்து பெருங்கதையாய் ஆனந்த ஜோதியின் கை வண்ணத்தில் புது பொலிவுடன். 
வாழ்த்துக்கள் சகி. 

உங்க குடும்ப நாவல் எல்லாமுமே மனிதர்களின் மன உணர்ச்சிகளை அழகாய் வெளிக்காட்டும். ஒவ்வொரு கதையும் ஒரு விதம். எதைசொல்ல , எதைவிட என்று குழம்பி தான் போவோம் .

இவர் கதைகளில் காதல், கலாட்டா, ரசனை , நகைசுவை என்று பல் சுவை விருந்தே இருக்கும். குடும்பங்களில் தினசரி நடப்பதை கண் முன்னே கொண்டு வந்து விடுவார். கதாபாத்திரங்களுடன் நாமே வாழ்வது போன்ற உணர்வு வெளிப்படும்.

தவறான கருத்துக்கள், எதிர்மறை எண்ணங்கள், அநாகரீமான வார்த்தைகள் இல்லாமல் படித்து மகிழ வைக்கும் தரமான படைப்புகள் இவருடையது.

வாழ்த்துக்கள் சகி. 💐💐💐💐      
 
💖💖💖விழியால் உயிரில் கலந்து 💘💘💘

கதை தலைப்பிலேயே கதை எதைப் பற்றியது என்று சொல்லி விடுகிறார்.

முதல் பார்வையில் ஏற்படும் காதல் உயிர் வரை எப்படி கலக்கிறது. யாரின் உயிர் யாரோடு கலக்கிறது என்ற அழகான காதல் கதை.

முதல் பார்வையில் வரும் காதல். அதனால் வரும் பிரச்சனை. நம்பிக்கை வாழ்க்கையில் எத்தனை முக்கியம் என்று வாழ்க்கை பாடமே எடுத்து விடுகிறார்.

 முதல் பார்வையில் காதல் என்று சுலபமாய் சொல்லி விடுகிறோம். அதனால் ஏற்படும் பல பிரச்சனைகளை அழகாய் எடுத்துப் போய் இருக்காங்க. 

திருமணம், காதல் என்று உறவாய் இருந்தாலும் அதில் நம்பிக்கை மிகவும் முக்கியம் என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லி இருக்காங்க.

ஜோதி மேல் முதல் பார்வையில் காதல் கொள்ளும் ரகு சோ ஸ்வீட். 

அதன் பின் வரும் பிரச்சனைகள் என்ன, எதனால், யாரால், எப்படி ரகு, ஜோதி இதைக் கடந்தார்கள், காதல், திருமணம் தப்பியதா மிக அழகாய் அவருக்கே உரிய பாணியில் கொடுத்து அசத்தி உள்ளார்.      
      
ரோஷினி போன்றவர்கள் அதிகரித்து வருவதும், இவர்களைப் போன்றவர்களால் குடும்பங்கள் சிதறி போவதும் வருந்தத் தக்கதே. பாவம் ரகு, ஜோதி.  

ரோஷினி போன்றவர்களுக்குத் தண்டனை நிச்சயம் கொடுக்க வேண்டும். இந்தப் பிள்ளை ஏன் எப்படி செய்யுது என்று கோபம் தான் வருகிறது.

ரோஷினி என்ன செய்தாள், ரகு ஜோதி என்ன ஆனார்கள். இவரால் காதல் விழியோடு நின்று விட்டதா, தடைகளைத் தாண்டி இந்தக் காதல் ஜோடி உயிரோடு கலந்து விட்டதா என்பதை கதை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

கதையை நான் சொல்லப் போவதில்லை. சுவாரசியம் குறைந்து விடும்.
வாழ்த்துக்கள் சகி.
உங்களின் அடுத்த படைப்பிற்காக இப்பொழுதிலிருந்து காத்திருக்க ஆரம்பித்து விட்டேன். ஒரே குறை கதை சீக்கிரம் விட்டது. 

மிஸ் ரகு அண்ட் ஜோதி.

எழுத்துலகில் பல வெற்றிகளைக் குவிக்க , மேலும் சிறந்த படைப்புக்களை கொடுத்து எங்களை வியக்க வைக்க வாழ்த்துக்கள். 💐💐💐💐

congratulations for your success💐💐💐
hearty thanks for such a wonderful novel

with lots of love💖💖💖
yours
ANITHA Anitha Rajkumar
  
https://www.srikalatamilnovel.com/community/forums/anandhajothis-novels.347/

*******

எழுத்தாளர் வெண்ணிலா ராஜன் அவர்களின் விமர்சனம் :


விழியால் உயிரில் கலந்து - ஆனந்த ஜோதி

ஜோதி & ரகு

ஜோதியை பார்த்த முதல் பார்வையிலேயே ரகு காதல் கொள்ள அடுத்தடுத்து பிரச்னை ஆரம்பமாகிறது.

ரோஷினியிடம் தங்கையை போல் பாசம் வைத்தவன் அவள் நடந்து கொண்ட விதத்தில் அவனது கோபம் கட்டுக்கடங்காமல் போகிறது.

ஜோதியின் அப்பா அவரது தங்கையை உயிராக நினைக்க அதனால் ஜோதி படாதபாடு படுகிறாள்.

இதுக்கு மேலயும் ஏதாவது சொன்னா கதைய சொல்ற மாதிரி வந்துடும். கதைய படிச்சு தெரிஞ்சிக்கோங்க பிரண்ட்ஸ்...

ஸாரி ஜோ.. கொஞ்சம் லேட்டாகி விட்டது. மன்னிச்சுக்கோங்க ஜோ

இதே போல உங்க எக்ஸ்பிரஸ் ரைட்டிங்ல நிறைய கதைகள் எழுதனும் ஜோ...

வாழ்த்துக்கள்💐💐

************** 

Comments