ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ராஜேஷ்குமார்

படைப்பு : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?

அமேசான் லிங் :


ஆரம்பமே காவல் அதிகாரி வேகமாக நடந்து சென்று இரயில்வே நிலையத்தில் காணாமல் போன 'முழுமதி' என்ற பெயருடைய பெண்ணைப் பற்றி விசாரிப்பதில் துவங்குகிறது. 'ரெயின்போ' சமூகநல மேம்பாட்டு அமைப்பை சார்ந்த ஏழு பெண்கள், ஒரு மீசை ஆசாமிக்காக பயந்து, தங்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு வந்த பெண் காணாமல் போய் விட்டாள் என்று புகார் அளிக்கின்றனர்.

அவர்களை வர வைத்த அரிமா சங்க தலைவியின் கேள்வியும், கோபமும், கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு வருகையில், திடீர் திடீரென்ற மரணங்கள் ஏழு பெண்களில் இருவருக்கு நிகழ்கிறது. விசாரணை சூடு பறக்கிறது.

பத்திரிகை நிருபர்களின் அவசரமும், காவலர்களின் விசாரணையும், அரிமா சங்க தலைவியால் ஏற்படும் மாற்றங்களும், தலையீடும் கதைக்களத்தை வேகமாக கொண்டு செல்ல உதவுகிறது.

இறந்து போன பெண் யார்? எதனால் அவளைக் கடத்தினார்கள்? ஊத்துக்குழியில் சிக்கிய பிணம் யாருடையது? ஏழு பெண்களையும் எதற்காக சத்யவதி வரச்செய்கிறார்? இக்கொலை வழக்கில் மாட்டி நம்மையே பல சமயங்களில் குழப்பிவிடும் சத்யவதியின் கதாபாத்திரம் எதிரியா? நல்லவரா? என்று பல கேள்விகளுடன் அட்டகாசமாக கதைக்களம் நகர்கிறது.

நித்தியானந்தத்தின் விசாரணை அட்டகாசம். மருத்துவரின் பரிசோதனைகள் இறப்பை கண்டுபிடிக்கின்ற விதம் அத்தனையும் பிரமாதம்.

நாவல் ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது சார். உங்கள் கதைகளை நான் சிறு வயதில் இருந்தே படித்து வருகிறேன். எல்லாமே கிரைம், போலீஸ் விசாரணை என்று அதிரடியாகவே இருக்கும். 

நாவல் வாசிக்க ஆர்வமுடையவர்கள், அமேசான் லிங்கில் படித்துப் பாருங்கள் தோழமைகளே...

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் சார்💐💐💐
 

Comments