நிலாவே வா


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : எஸ். ஜோவிதா

படைப்பு : நிலாவே வா

வெளியீடு : அருணோதயம் பதிப்பகம்

நிலா :

மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக பல வழிகளில் முயற்சி எடுக்கும் பெற்றோர், அவளது சம்மதம் கிடைக்கப் பெறாதது மட்டுமின்றி முந்தைய நாளில் ஏற்பட்ட ஒருசில சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, ஆண்கள் மற்றும் திருமணம் என்றாலே வெறுப்புடன் காணப்படுபவளை, விசத்தை குடித்து உயிரை துறந்து விடுவதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவளோ வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறாள்.

அப்பாவின் நண்பரின் மகன் திருமணம் எனும் ஆசையில்லாமல் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நாயகன், பெற்றோரின் ஆசையின் பேரில் அவளை மணந்து தன்னுடனே அழைத்துச் செல்கிறான்.

சதா புன்னகையும், நட்புடன் பழகும் கணவனுமாக இருப்பவனை விட்டு எதிர்பாராத விதமாக பிரிந்து சென்று விடுகிறாள் நாயகி. 

கணவனை விட்டுப் பிரிந்து செல்பவள் எங்கு போகிறாள்? இருவருக்கும் இடையில் நடந்ததென்ன? எதனால் திருமணம் மற்றும் ஆண்களை கண்டாலே அவள் வெறுக்கிறாள்? பிரிந்த தம்பதியர் மறுபடியும் ஒன்று சேர்கிறார்களா? என்பதை அழகான நகர்வுடன் அருமையாக சொல்லி இருக்கிறாங்க.

ஆரம்பத்தில் நிலாவின் மீது சில நேரங்களில் கடுப்பாக இருந்தது. பிறகோ, பாவமாகிவிட்டது. ஆனால் அவளது கணவராக வருபவர் சூப்பர். சரியான வாயாடி. அமைதியான மனைவிக்கு நேர் எதிர்பதமாக சதா பேசிக் கொண்டே இருக்கிறார். அவளைக் காணாமல் தேடி அலையும் இடமும், அவனது வசன உச்சரிப்புகளும் ரொம்ப பாவமாக இருந்தது. இறுதி அத்தியாயம் வாசிக்கும் போது கண்ணீராக வந்து விட்டது. முடிவு மாஸ் ... 

சிலரை போல நீட்டித்து எழுதாமல் அத்தோடு நிறுத்தியது நன்றாக இருந்தது. 

கீர்த்தி, நீரஜா சூப்பர்👌👌👌 நல்ல நட்புகள். பூஜா அத்தானுடன் கைப்பேசியில் மற்றும் நேரில் உரையாடும் இடங்கள் கலாட்டா🤣🤣

விருது வழங்கும் இடத்தில் வைத்து அநாகரீகமாக பேசிய பெண்களின் பேச்சுக்களை கேட்டதும் அப்படியே ஒண்ணு கொடுக்கலாம் போல இருந்தது. (நான் நினைச்சேன் ஜோவி,  நிலா அங்க வருவாளோன்னு... ஏமாத்திட்டா ... நானும் ஏமாந்துட்டேன்😏😏🤪🤪🤣🤣) அதே நேரம் அது சக்திதாசனின் ஏற்பாடாக இருக்குமோ என்று சந்தேகமாகவும் இருந்தது. அவர்களுக்கான அக்ஷய்யின் பதில்கள் அட்டகாசம். இப்படிப்பட்ட கணவனை விட்டுப் போயிட்டியே நிலா பேபி...

அக்ஷய்யை சந்தித்த அவளது பெற்றோரின் பேச்சும், அறையும், அவனது பதிலும்👏👏👏

இயல்பான எதார்த்தமான கதையோட்டம். அழகான எழுத்து நடையில் அருமையான நகர்வுகளுடன் நாவல் வாசிக்க ரொம்ப நன்றாக இருந்தது.

எழுத்துலகில் மேலும் நிறைய சாதிக்கவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐


Comments

  1. மிக விரைவாக படித்ததுக்கும், சுட சுட விமர்சனம் வழங்கியதுக்கும் முதலில் நன்றிகள். நாவலின் முடிச்சுகளை அவிழ்த்து விடாது நாசூக்காக விமர்சனம் சொன்ன விதம் 👏👏👏 12 வருஷங்கள் கடந்தும் இன்றும் விரும்பி தேடப்படும் ஒரு நாவலின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நாவல்.

    ReplyDelete

Post a Comment