பஜ்ரு தொழுகை

#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : பஜ்ரு தொழுகை

வெளியீடு : விகடகவி

லிங் :


பயஸ் :

பஜ்ரு செய்ய ஆசைப்பட்டு ஒவ்வொரு முறையும் தடைபடுவதால் கொதிக்கும் பயஸ், மனையாள் எழுப்பாத கோபத்தில் அவரிடம் வாதம் செய்து விட்டு, அவரது கூற்றையும் ஏற்காமல் பள்ளிக்கு சென்று உதவி கேட்கிறார்.

அவர் ஆசைப்படி பஜ்ரு செய்கிறாரா? எதனால் அவர் கேட்கின்ற நபர்கள் உதவி செய்ய மறுக்கிறார்கள்? செய்வதால் ஏற்படும் பயன் போன்றவற்றை அழுத்தமான களத்தில் அழகாக சொல்லியிருக்காங்க.

ஒரு இந்துவாகிய எனக்கு முஸ்லீம்களின் தொழுகை, சடங்கு எதுவுமே தெரியாது. சாரின் சிறுகதைகள் வாசிப்பின் மூலம் அவ்வப்போது தெரிந்து கொள்வேன். அதில் இதுவும் ஒன்றாகி விட்டது.  'விடா முயற்சி எதையும் சாதிக்க தூண்டும்' என்பது ரொம்ப சரியாக இருக்கிறது.

சிறுகதை வெகு சிறப்பு. அதில் வந்த கருத்தும், அவனது வார்த்தையாடலும் நன்றாக இருந்தது.

 மனமார்ந்த நல்வாழ்த்துகள் சார்💐💐💐





Comments