காத்திருந்தேன் கண்ணாளனே


அமேசான் லிங் :



எழுத்தாளர் மிருதுளா அஸ்வின் விமர்சனம் :


ஆனந்த ஜோதி அக்கா அவர்களின் முதல் தொடர்கதை காத்திருந்தேன் கண்ணாளனே. அருமையான கதை. 

நாயகி ரஞ்சனி பொறுமைசாலி, கலகலப்பு, தன் கணவன் மேல் உயிரையே வைத்திருப்பவள். மலரும் பருவத்தில் ஏற்பட்டது ஈர்ப்பு அல்ல..காதல் என்று உணர்ந்த தருணம் அழகு. சிறுவயதில் நடக்கும் திருமணம் அதை எதிர்கொள்ளும் விதத்தில் அவளும், அவளின் நாயகன் கோபியும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் அல்ல. அவள் படிப்பு தன்னால் கெடக் கூடாது என்று அவன் பிரியும் தருணம் என்று ஒவ்வொரு பரிமாணங்களில், ரஞ்சனி, கோபி பெஸ்ட் தான். 

கிருஷ்ணா செம. அவன் நண்பனுக்காக, அத்தானுக்காக அவன் எடுக்கும் முயற்சிகள் சூப்பர். இப்படி ஒரு நண்பன் அமைவது என்பது பெரும் பேறு தான். 

கதையின் நாயகன் ஒரு கம்ப்ளெட் package. 
செம கதை அக்கா.

எனக்கு review எழுத தெரியாது. இது தான் நான் எழுதின பெரிய review அக்கா.

*************

எழுத்தாளர் சிவானி செல்வம் விமர்சனம் :



ஹாய் ப்ரெண்ட்ஸ்..

முகநூலில் எனக்கு கிடைத்த நட்புகள் ஏராளம். அவர்களில் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவராக நான் உணரும் நபர்களில் ஆனந்த ஜோதி அக்காவும் ஒருவர். என் முகத்தை அவர் பார்த்ததில்லை; என் குரலை அவர் கேட்டதில்லை; ஆனாலும் எங்கள் இருவருக்குமிடையிலான அன்பு ஒருபோதும் குறைந்ததில்லை. 

இந்த மனுச மனசு இருக்கு பாருங்க மனுச மனசு, எழுத்துலகம்னு இல்ல, எந்த வேலை செஞ்சாலும் யாராவது நம்ம முதுகில் தட்டிக்கொடுத்து, "பரவாயில்லையே.. ரொம்ப நல்லா பண்ணிருக்கியே"ன்னு சொல்ல மாட்டாங்களான்னு ரொம்ப ஏங்கும். அப்படி ஏங்கிக்கிடந்தவர்களில் நானும் ஒருவள். அந்நேரம் என் முதுகில் தட்டிக்கொடுத்து நான் அடுத்த எட்டு எடுத்துவைக்க உதவி செய்தவர்களில் 
ஆனந்தஜோதி அக்காவும் ஒருவர். அவர் நல்ல ஒரு வாசகர் மற்றும் விமர்சகர். எந்த நாவலை வாசித்தாலும் அதிலுள்ள நிறைகளை மட்டும் கூறி எழுத்தாளரை மிகவும் ஊக்குவிப்பார். கிட்டத்தட்ட அன்னப்பறவை மாதிரி. 

அட! சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேனே. அதான் இவ்வளவு நாள் தீவிர வாசகராக இருந்த ஆனந்தஜோதி அக்கா இப்போது எழுத்தாளர் அவதாரம் எடுத்திருக்காங்க. "காத்திருந்தேன் கண்ணாளனே" என்று ஒரு தொடர்கதையையும் வெற்றிகரமாக எழுதி முடித்திருக்காங்க. அதற்கு முதலில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் 💗

###########

ஆனந்தஜோதி அக்கா அவர்களுக்கு...

முதல்கதை. நல்ல முயற்சி. கதையில் ஒரு சில பிழைகள் இருந்தாலும் கதையோட்டம் நன்றாக இருந்தது. நாயகன் பெயரிலேயே ஒரு ட்விஸ்ட் வைத்து, இப்படித்தான் கதை என்று யூகிக்கும் போது எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வந்ததெல்லாம் நன்றாக இருந்தது அக்கா. புதிய தகவல் கொடுக்கவேண்டும் என்று கன்னியாகுமரி, நாகர்கோவில் கோவில்களைப் பற்றி சொல்லியதெல்லாம் கதைக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையைக் காண்பித்தது. 

வாசகராக உள்ளபோது ரசித்ததை விட எழுத்தாளராக உள்ளபோது எழுத்துகளை அதிகம் ரசிக்கத் தோன்றும். நீங்கள் தற்போது வாசகராக இருந்து எழுத்தாளராக மாறியதில் ரொம்ப மகிழ்ச்சி அக்கா. தொடர்ந்து எழுதுங்கள். அடுத்து ஒரு அற்புதமான நாவலை கொடுக்கவும் வாசகர் மனதில் உங்களுக்கென்று தனியொரு இடத்தைப் பிடிக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா❣️

கதைத்திரி,

https://www.srikalatamilnovel.com/community/forums/anandhajothis-novels.347/

***************

எழுத்தாளர் வெண்ணிலா ராஜன் விமர்சனம் :



காத்திருந்த கண்ணாளனே by ஆனந்த ஜோதி

Hats off Jo...இவ்ளோ சீக்கிரம் கதை முடிச்சதுக்கு💐💐

ரஞ்சனி குறும்பு பண்ற கலகலப்பான பொண்ணு. காலேஜ் கேம்ப் வரப்ப எதிர்பாராத விதமா அர்விந்த் மீட் பண்றா. ஆனால் அங்க அவனோட செய்கைகளுக்கான ரீசன் புரியல.

இதற்கிடையில அனிதா வேற ரஞ்சனிகிட்ட திமிரா பேசிட்டு போக அந்த கடுப்புல ரஞ்சனி பதிலுக்கு பழி வாங்க அனிதா ரஞ்சனிய பழி வாங்கறதுக்காக அர்விந்த லவ் பண்ண சொல்றா.

ஒரு கட்டத்துல அர்விந்த் தன்னையுமறியாமல் லவ் பண்ண ஆரம்பிக்க, கிருஷ்ணா மூலமா என்ன நடந்ததுனு தெரிஞ்சு ஷாக் ஆயிடறான்.

ரஞ்சனியும், கோபிநாத்தும் எப்டி சேர்ந்தாங்க, அனிதா ஃபேமிலி அர்விந்த் குடும்பத்த எப்டி பழி வாங்கினிங்க?, அதுக்கு அவன் எப்டி பழி வாங்கினானு கதைய படித்து தெரிஞ்சிக்கோங்க.

கிருஷ்ணா உண்மையான நண்பன். அவன் இல்லாம அர்விந்த் மீண்டிருக்க முடியாது.

ராதா ஓடிப்போனானு பழிய போட்டு ஒரு குடும்பத்தையே சிக்கி சீரழிச்சிட்டாங்க.

ஆனால் பாவம் ஜோ எத்தன டைம் பிரிச்சிட்டீங்க.

கண்ணப்பர்,அர்விந்த் அம்மா இவங்கள எல்லாம் சுட்டு கொல்லணும். மகன், மகள விட அப்டி என்ன முக்கியமோ?

சிவா,வினோத் இவங்க குறிப்பிடத் தகுந்த கேரக்டர்ஸ்...

கதை விறுவிறுப்பா இருந்தது ஜோ. வாழ்த்துக்கள். உங்க அடுத்த கதைக்கு Waiting...

பி.கு: உங்க அளவுக்கு ரிவ்யூ வராது ஜோ. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. 

***************

ஜாஸ்மின் தீக்ஷா சகோதரியின் விமர்சனம் :


காத்திருந்தேன் கண்ணாளனே by ஆனந்த ஜோதி சிஸ்..
 கதை அருமை சிஸ்.. மலையாளம் கலந்த தமிழ்.. கோபம் மட்டும் விட்டுவிட்டு வந்தது நம்ம ரஞ்சுக்கு.. முழுவதும் படித்த பின் அவ கோவப்பட்ட இடமே தெரியாத மாதிரி ஆயிடுச்சு.. விஸ்வநாதன் அப்பா ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டார்.. அனிதா கதாபாத்திரம் நல்லா இருந்தது சிஸ்.. Negative character கூட அவளின் காரணங்களை சொல்லி positive ah காட்டிருக்கீங்க.. வாழ்த்துக்கள் சிஸ்.. ரஞ்சு nd அப்பா அழ வெச்சிட்டாங்க சிஸ்.. Nice one😍😍❤

**************

எழுத்தாளர் ஸ்ரீஷாவின் விமர்சனம் :


ஹாய் ஜோதி மா.

முதலில் வாழ்த்துகள்.கதை படிச்சுட்டேன்.

உங்களது முந்தைய கதைகளுக்கும் இதற்கும் அத்தனை வித்தியாசம்.போக போக உங்களது எழுத்தின் ஆற்றல் கூடிக்கொண்டு செல்வதில் மகிழ்ச்சி.எழுத்தின் ஓட்டம் சீராக உள்ளது.கதையின் பதிவுகளை சரியான கால இடைவேளையில் தருவது சிறப்பு.

இப்பொழுது கதை. " காத்திருந்தேன் கண்ணாளனே ".நல்ல தலைப்பு ,தலைப்பை கொண்ட கதை. ரஞ்சனியை வைத்து குழந்தை தொழிலாளர்கள் மீட்பு சொன்னது நன்று.அதோடு கோயில்களின் சிறப்பை குறிப்பிட்டது அருமை.திருப்பங்கள் நிறைந்த கதை.ரஞ்சனி,கோபி, கிருஷ்ணா,ராதா,சிவா என அனைவருடன் கதை மூலம் பயணிக்க முடிந்ததில் மகிழ்ச்சி .
கதையின் ஓட்டத்தில் இயல்பாக கதையுடன் ஒன்ற முடிகிறது.

சூப்பர் ஜோதி மா.இன்னும் நிறைய கதைகள் எழுதி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Comments