கிரேக்க மணிமகுடம் பாகம் 1


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர்: பாரதிப்பிரியன்

படைப்பு : கிரேக்க மணிமகுடம் (சதிகளின் சதுரங்கம்)

வெளியீடு : விதைகள் பதிப்பகம்


சோழப் பேரரசர் கரிகால சோழருக்குப் பிறகு, சோழ அரியணையைக் கைப்பற்றுவதில் ஏற்படும் வாரிசு சண்டையும், அவர்களுக்குள் ஏற்படும் பகையைப் பயன்படுத்தி அயல்தேசத்திலிருந்து வரும் பகைவர்கள் எவ்வாறு தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறார்கள் என்பதையும் குறித்து, கிரேக்க மணிமகுடம் கதை மூன்று பாகங்களாக விரிவாக அலசுகிறது. வாரிசுகளுக்கு இடையேயான பகையை பகடைக்காயாக உருட்டி, எதிரிகள் விரிக்கும் வலைகளில் சிக்கும் முப்பெரும் அரசர்களை, பகைவர்கள் எப்படி தங்களின் சதுரங்க பலகையில் காய்களாக பயன்படுத்துகின்றனர் என்ற வரலாற்றை பின்னணியாக வைத்து புனையப்பட்ட கதை இது.

இளமாறன் :

சோழத் தனிப்படைத் தலைவனாகிய இவருக்கு சோழ இளவரன் மற்றும் முதன் அமைச்சரிடம் இருந்து ஓலை வருகிறது. "உடனே உறையூருக்கு வரவும்"

காரணம் புரியாவிட்டாலும், உடனே அங்கு விரைபவன் இடைபுகுந்த எதிரிகளை வெட்டி வீழ்த்தி அங்கு மறைந்திருந்த பெண்ணை காப்பாற்றியதுடன், திடீரென்று வரும் சோழத்து இளவரசருடன் நட்புடன் உரையாடிக்கொண்டு தப்பிச் சென்று விடுகிறான்.

சோழத்தையும், பாண்டிய அரசையும் தனக்கு கீழே கொண்டு வர துடிக்கும் சேரனுக்கு, கிரேக்க அரசும், சோழத்தின் நிர்வாகியும் உதவி புரிய, பாண்டிய அரசை வீழ்த்தி அவனது தங்கையை தன் வசப்படுத்த நினைப்பவன் எண்ணம் நிறைவேறுகிறதா? சேரனுக்கும், சோழ நிர்வாகிக்கும் உதவுவதன் மூலம் தமிழத்தில் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிக்க எண்ணும் கிரேக்க கடற்படை தளபதியின் எண்ணங்கள் ஈடேறுகிறதா?

 நாயகன் மீதான கோபத்தில் அவன் மணந்து கொள்ளப் போகிறவளை அடைய நினைத்து, இளமாறனை சிறையில் அடைக்கும் சேர மன்னனின் திட்டங்கள் அவனது ஆசைப்படியே நடக்கிறதா?

கிரேக்க அரசில் இளவரசனை கைப்பாவையாக வைத்து செயல்படும் கிரேக்க கடற்படை தளபதியின் எண்ணங்கள் என்னென்ன? 

கடற்கொள்ளையராக வருகின்ற ஆலிமா, சவ்ஜித்தாவுக்கு இடையில் உள்ள தொடர்பு என்ன ? கடற்பகுதியில் கிரேக்க படை வீரர்களை கதறடிக்கும் ஆலிமாவுக்கும், அவர்களுக்கும் உள்ள பகை என்ன?

சோழத்தை தனக்கு கீழே கொண்டு வரத் துடிக்கின்ற நிர்வாகி, பாண்டியனின் தங்கையை அடைய முயற்சி செய்ய அவனது திட்டங்கள் பலிக்கின்றதா? என்பதை பல கேள்விகளுடன், விறுவிறுப்பாக அட்டகாசமாக சொல்லியிருக்காங்க.

பெரிய கதைக்களம். மூன்று பகுதிகளாக மாறி மாறி நடக்கிறது. அட்டகாசமான எழுத்து நடை. காட்சிகள் ஒவ்வொன்றும் அப்படியே கண்முன் நிற்கிறது.

ஆலிமா, வாவ்!! வாட் எ பியூட்டி? திறமைசாலி, கோபக்காரி, அன்பானவள். என்று அனைத்தும் கலந்த கலவையாக வரும் இவரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது.

பாண்டிய மன்னன், தங்கையின் காதலன், நாயகனின் நட்பு👌👌👌 மனதில் அழகாக பதிந்தது.

மணிமேகலையின் அறிமுகமும், அவளது துணிச்சலும் அருமையாக இருந்தது. ஆனால், முத்தழகியின் சொல் பேச்சு நடந்த விதமும், இறுதி கட்சியும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. (அம்புட்டு தான் உனக்கு இல்லை இனிமேல்🤣🤣🤣)

குரைமுகன்களை பயன்படுத்தி தூது அனுப்பிய விதமும், பொறிகளை தகர்த்து எரிந்த இடமும் வெகு சிறப்பு.

ஆனால், மனசுக்கு கஷ்டமாக இருந்தது... அந்தக் காட்சியை வாசிக்கும் போது!

டையோனிஸ் கதாபாத்திரத்தை நான் என்னவோ நினைத்தேன். ஆனால் மாறி நடந்து விட்டது. அவரது நிலைக்கான காரணம் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

நெடுங்கிள்ளி, வேல்விழி, இன்பலீலாவதி, முத்தழகி, சவ்ஜித்தா, சித்திரைச் செல்வன், ஆதிரை நம்பி, போரிட்டஸ், ஞான பிரம்மர் எல்லாரும் கதையில் மறக்க முடியாத பாத்திரங்களாக உலா வருகிறார்கள்.

முடிவு மாஸ். அட்டகாசமான அடிதடி, எதிரிகளை திணற வைக்க எடுத்த வியூகங்கள், வாள் வீச்சு, பொறி உருண்டை தாக்குதல், போர் அம்புகள் எல்லாம் 👌👌👌👏👏

 விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது  சடாரென்று முடிச்சிட்டீங்க எழுத்தாளரே! ம்ப்ச் முடியல... உடனே மீதத்தையும் தெரியணும் போல ஒரே பரபரப்பா இருக்கு. சீக்கிரம் அடுத்த பாகத்தையும் அனுப்பிக் கொடுங்க.

கதையும் கதைக்களமும் ரொம்ப நல்லா  இருக்கு. கதைக்களம் பெரியது. கதாபாத்திரங்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். முதலில் யார் யார் என கொஞ்சமா குழம்பிட்டது. பிறகு தெளிவான நீரோடையை போல கதை நகர்வுகள் புரிபட்டது.

இனிவரும் பாகத்தில் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. அதை இங்கு குறிப்பிடுவது ஏற்புடையது அல்ல என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். கதைப் பற்றி உங்களுக்கும் தெரிய வேண்டும் என்றால் புத்தகத்தை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் எழுத்தாளருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐

Comments

  1. நன்றியும் அன்பும் சகோதரி... நல்ல விமர்சனம் கொடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து நல்ல கதைகளை தர முயற்சிக்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் நல்வாழ்த்துகளும் சகோ 💐💐

      Delete

Post a Comment