பிரிவரிதடி பனிமலரே!


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஹில்மா தாவுஸ்

படைப்பு : பிரிவரிதடி பனிமலரே!

வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி

லிங் :


கல்லூரி பேராசிரியராக வரும் நாயகனை காதல் மணம் புரிந்து பிரிந்திருக்கும் நாயகி, அவன் பிரிவால் கண்கலங்குவதுடன், அவனுக்கு வேறு திருமணமாகி விட்டதாக நினைத்து அழுது கொண்டிருக்க, எதற்கந்த பிரிவு, அவன் நிஜமாகவே வேறு மணந்து புரிந்து விட்டானா என்ற கேள்வி ஆரம்பத்திலேயே எட்டிப் பார்க்கிறது.

மனையாளுக்கு தெரியாமல் காய்களை நகர்த்த முயன்றவன் நிலைமை, பாவம் தான் ....

கதை நகர்வு நல்லா இருக்கு. பிளேஸ் பேக்கில் அவளது காதலும், திருமணமும், அதற்குப் பிறகான பிரிவும் இயல்பான கதையோட்டமாக இருக்கிறது.

நாயகனின் அமைதியும், காதலும், நாயகியின் பரிதவிப்பான முகமும்👌👌👌 நாயகனின் தாயாரின் பேச்சில் காணப்பட்ட கடுமையும் ஒரு கதை வாசித்த அனுபவத்தையே கொடுத்தது.

 இறுதியில் அவளது அழுகையும், வார்த்தையாடலும் கண் கலங்க செய்து விட்டது.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

Comments