மறுகும் நீ! உருகும் நான்!


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : வித்யா வெங்கடேஷ்

படைப்பு :  மறுகும் நீ! உருகும் நான்!

வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி

லிங் :


கணவருடன் கவுன்சிலிங் கொடுக்கும் இடத்திற்கு சென்று அங்கு வந்த தம்பதியரின் பிரச்சனைகளை கேட்டுக்கொண்டு விவகாரத்திற்கு ஏற்பாடு செய்து விடலாம் எனும் இடத்தில் இருந்தே கதையின் ஓட்டம் நம் வாழ்க்கையில் நடப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

கணவன் மனைவி இருவரும் மாறி மாறி குற்றங்களை சுமத்த, அதற்கான கவுன்சிலிங் கொடுக்கும் பெண்மணியின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும்? குடும்பத்து நபர் மீதான கோபத்தில் அவள் கணவனை பிரிந்து சென்று விடுகிறாளா? அந்த அளவிற்கு இருவருக்கு இடையிலும் நடந்ததென்ன என்பதை சிறுகதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்றிருக்கும் ஒரு பெண் கணவனிடமும், அவன் வீட்டாரிடமும் எதிர்பார்ப்பது பாசத்தையும், அக்கறையையும், தன்னையும் அவர்களில் ஒருவராக ஏற்று வாழும் வாழ்க்கையும் தான். அதே அவர்களிடமிருந்து கிடைக்ககூடிய அளவுக்கு மீறிய அந்தரங்க தலையீடுகள், புதியதாக வாழ வந்திருக்கும் பெண்ணின் வாழ்க்கையில் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ரொம்ப அழகாக சொல்லியிருக்காங்க.

அதேநேரம் நாயகன் பாத்திரமும் மனதில் அழுத்தமாக பதிகிறது. பாவம் தான் பெற்று வளர்த்தவரையும், உடன் பிறப்புகளையும் பிரித்து பார்க்க முடியாமல், அவர்களை எதிர்த்து பேசவும் கஷ்டப்படுத்தவும் செய்யாமல், மனையாளுக்காகவும் பேச முடியாமல் திண்டாடுகிறார்.

முடிவு செம... சிறுகதை சமூகத்தில் நடந்த நிஜ சம்பவத்தை அப்படியே கண்முன்னே வாசித்த அனுபவத்தை கொடுத்தது. 

எழுத்தாளரின் எழுத்துக்களில் இது எனது முதல் வாசிப்பு. அழகான எழுத்து நடையில் அருமையான நகர்வுகள். சிறுகதை வாசிக்க நன்றாக இருக்கிறது. நீங்களும் வாசித்து மகிழுங்கள் தோழமைகளே...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐

Comments