மேனி கொதிக்குதடி

#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : Mithra Ravi

படைப்பு : மேனி கொதிக்குதடி

வெளியீடு : பிரதிலிபி


எழுத்தாளர் Mithra Ravi அவர்களின் குறுநாவல் வாசித்தேன்.

ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், ரசனை மிகுந்ததாகவும் காணப்பட்டது. இன்னும் நீட்டித்து எழுதினாலும் வாசிக்க நன்றாகவே இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.

நேத்ரன் :

பரம்பரை தொழிலான நகை விற்பனை செய்வதை விட்டு வேறு தொழிலில் இறங்கி சாதிக்க எண்ணும் இவர், வெளிநாட்டிற்கு வேலை விசயமாக சென்று விட்டு வரும் போது, காதலித்த பெண்ணாகிய அத்தை மகளுக்கும், நகைக்கடை உரிமையாளரின் மகனுக்கும் திருமணம் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைவது மட்டுமின்றி,  அவர்களின் பேச்சால் கடுமையாக தாக்கப்பட்டு வெளியேறிவிடுகிறார்.

காதலித்தவனை நம்பி சுற்றுலாவிற்கு போவதாக கூறிவிட்டு அவனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக பெங்களூருக்கு செல்லும் நாயகி, ஆபத்தில் அவனிடம் வந்து சேர, அதற்கு பிறகாக நடக்கும் தகிடுதத்தம் கதையை அட்டகாசமாக நகர்த்த உதவுகிறது.

'விரும்பல்ல, அடுத்தவங்க பார்க்கிறதால் செய்றேன்' என்று அடிக்கடி கூறி கடுப்படிக்கும் இடம்🤣🤣🤣 மற்றும் பல இடங்கள் வாசிப்பிற்கு ரசனையை கொடுத்தது. திடீர் திடீரென சிரிப்பும் தோன்றி கதையின் மீது ஒரு வித லயிப்பையும் ஏற்படுத்தியது.

அழகான களம், அருமையான நகர்வு, அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ளும் வகையில் கதையோட்டம், (? ... "... "  '....'  ! ) எழுத்து நடையில், இன்னும் கவனம் செலுத்தி, இடம் விட்டு பதிவு செய்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்.

அடுத்த முறை வாசிக்கும் போது உங்களின் எழுத்துக்கள் மாறுபட்டு ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் சகோதரி 💐💐💐

Comments