உன் கையில் என்னைக் கொடுத்தேன்


எழுத்தாளர்: வெண்ணிலா ராஜன் 

படைப்பு : உன் கையில் என்னைக் கொடுத்தேன்

வெளியீடு : உத்ரா சித்தார்த் தளம்

லிங் : 



நிஜ சம்பவத்துடன் கற்பனை கலந்து எழுதி இருக்கும் எழுத்தாளருக்கு வாழ்த்துகள்💐💐 முதல் பாதி அழுத்தம் என்றால் மறு பாதி நகைச்சுவையும், காதலும் கலந்து வருது. கதைக்கான எனது கருத்துப் பரிமாற்றம் இதோ...

நேத்ரா :

தகப்பனை இழந்து தாயுடன் வசித்து வருபவள். வீட்டில் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை மணந்து கொண்டு சென்று, அங்கு கணவன் வீட்டாரிடம் கொடுமைகளை அனுபவிக்க, அதிலிருந்து மீண்டாளா இல்லை அவர்களின் அக்கிரமம் தொடர்கிறதா என்பதே கதைக்களம்.

நிஜமாகவே கதை வாசிக்கும் போது ரொம்ப பீலாகிட்டது. இப்படி கூடவா மனுஷங்க இருக்காங்க என்று. ஆனால், இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாகவும் இருந்தது.

இந்த கதையை வாசிக்கும் போது மனம் எங்கெல்லாமோ தாவி ஓடி நிம்மதியையும் பல சமயங்களில் பறித்து விட்டது.

பெத்த மகள் கணவன் வீட்டில் சுகமாக வாழ வேண்டும் என்று எண்ணும் பெற்றோர், தன் வீட்டிற்கு வருபவளிடம் இத்தனை கடுமையை காட்டுவது உகந்தது அல்ல.

கணவனாக வருபவன் சரியான அரை மெண்டலாக தெரிந்தான். இன்னும் நாலு கொடுத்தாலும் மனம் ஆறாது.

காரணமில்லாமல் அடிப்பதும், ஏன் என்னவென்று கேட்காததும் அக்கிரமத்தின் உச்சம். 

அவனது பெரியப்பா ஏண்டா பேமானி!  உனக்கு இந்த வயசுல சின்னபொண்ணு கேட்குதாடா? தூக்கிப் போட்டு மிதிக்கணும் போல இருந்தது.

அப்பா, அம்மா, கணவன், அவன் தங்கை இத்தனை பேர் சேர்ந்து அவளை படுத்திய சித்ரவதை நிஜமாகவே வாசிக்க முடியல. அத்தனை வருத்தமா இருந்தது. உங்களுக்கு எல்லாம் கடவுள் என ஒருவர் இருந்தால் கண்டிப்பாக தருவார்.

கதிர் சூப்பர். அவனது வரவும் பேச்சும் அட்டகாசம்👌👌👌(சில சமயத்து பேச்சு ஓவர்டா மாமு)

அமுதாவின் பேச்சுக்கள் பல சமயம் வெறுப்பை கிளறியது. இருப்பினும் அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று புரியாமலும் இல்லை.

சத்தியமூர்த்தி பெயரையே கொன்று விட்டான் படுபாவி. சுயநலமிக்க உலகமிது என்பதை இக்கதையின் வாயிலாக அதிகமாகவே அறிந்து கொண்டேன்.

ஆரம்ப கதையை சற்று நீட்டித்து கதையோட்டத்தை இன்னும் பெரியதாக கொண்டு சென்றிருக்கலாம் போல தோன்றியது. ஏன்னா, ஆரம்ப அழுத்தம் மனதை விட்டு அகலவே இல்லை. அந்த கதையை அப்படியே மாற்றி விட்டது பின் பாதி.

நானும் வருமோ ஏதாவது என பார்த்தால்... அடிதடி தான் மிச்சம்😜😜🤣🤣

(நிலா, ரொமான்ஸ் எழுத வராது என்று சொல்லி விட்டு பின்னிட்டீங்க போங்க😜😜😜 செம கிஸ் 🤣🤣🤣🤭 அதான் உங்க வீட்ல அப்படி சொல்லியிருக்காங்க போல)

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐💐 




Comments