காதல் சதுரங்க ஆட்டம்


































அப்சரஸ் பீனா லோகநாதன் :


*****

எழுத்தாளர் வித்யா வெங்கடேஷ் அவர்களின் சிறப்பான விமர்சனம் :


💞காதல் சதுரங்க ஆட்டம் by  வாகைப் பூ💞

பேராசையாக மாறிய சிலரின் பணத்தாசை, பதவி ஆசை, அதனால் நிலைகுலைந்த ஒரு அன்பின் கூடு, அதை சரிசெய்ய மெனக்கெடும் ஒரு தாரகை என்று சூப்பர் சஸ்பென்ஸுடன் அழகிய கதை தந்த வாகைப் பூ அவர்களுக்கு என் அன்பு கலந்த பாராட்டுக்கள்.

ஒரு கதையில், ஒரு ஹீரோ, ஒரு வில்லன், ஒரு Comedian, ஒரு துணை நடிகர் என்று வெவ்வேறு கதாபாத்திரங்கள் இருப்பது இயல்பான விஷயம். ஆனால் இந்த ஆத்தரோ, ஒருவனையே அனைத்து வேடமும் ஏற்று நடிக்க வைத்துவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை! ஆல்-இன்-ஆல் கார்த்திக் அவர்களே!!!!

"அடேய் கார்த்திக்! நீ நல்லவனா! கெட்டவனா!" என்று கணிக்கவே முடியாத அளவிற்கு நன்றாகக் குழப்பிவிட்டீர் ஆத்தரே! 😂😂😂😂😂😂

இவனும் சராசரி ஆன்ட்டி ஹீரோவாக உள்ளானே என்று ஒரு கட்டத்தில், கதையைத் தொடர்ந்து படிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். ஆனால், கிருத்திக்கா எதற்காக இத்தனையும் செய்கிறாள் என்று அறியவும் ஆவலாக இருந்தது! அதனால் தொடர்ந்து படித்தேன்.

முதல் சந்திப்பில், மிஸ்டர் ரோமியா, கிருத்திக்காவிடம் செய்த லூட்டிகளைப் படித்து, அடப்பாவி என்றானது. ஆனால் அவன் கிருத்திக்காவிடம் மனம்விட்டு பேசிய அந்தக் காட்சியில், ஒரு ஆண்மகன் இத்தனை வெளிப்படையாக, உண்மை உணர்வுகளை, மனைவியிடம் ஒப்புக்கொள்ள முடியுமா என்று வியக்கும் அளவிற்கு ஆத்மார்த்தமாக மாறியது. 

(இதனால் ஹீரோயின் ஆர்மி வாசகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்...கார்த்திக் செயல்களைக் கண்டு திடுக்கிட்டு, கதையை பாதியில் விட்டுவிடாதீர்கள். நம்பி முழுக்கதையும் படியுங்கள்! ஆத்தர் அவன் செயல்களை நன்றாகவே நியாயப்படுத்தி இருக்கிறார்!!!)🤗🤗🤗🤗

ஆன்ட்டி ஹீரோ கார்த்திக், காதல் மன்னனாக...இல்லை...இல்லை....முழுசாக மாறிய காதல் கணவனாக மாறி, மனைவியின் அழகை மூச்சுவிடாமல் வர்ணிப்பாரே...அம்மாடியோ முடியல ஆத்தரே....S.P.B's மண்ணில் இந்தக் காதல்.....பாடல் மெட்டில் படித்தேன்!😂😂😂😂😂😂😂உங்கள் கற்பனை வளம் அதில் பிரதிபலித்தது. 😍😍😍😍😍

அண்ணி-நாத்தனார் புரிதல் மிகவும் அழகு.

அண்ணை-தங்கை உரையாடல்கள்(குறிப்பாக கொலு பொம்மை காட்சி) சற்று பொறாமை படும் அளவிற்கு இருந்தது என்று கூட சொல்லலாம். சூப்பர் ஜி!

அகல்யா-சாம்பவி இருவரின் பேச்சிலும், செயலிலும் தன்னலம் அப்பட்டமாகத் தெரிந்தாலும், சஸ்பென்ஸ் உடையும் போது, அவர்களின் குணங்களை பெரிதாகக் கொச்சை படுத்தாமல், எழுதிய உங்கள் கற்பனைக்குச் சிறப்பு பாராட்டுக்கள்.

காதலுக்கும்-ஈர்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை, ஹரிசந்திரன் மகனுக்கும் புரியவைக்கும் இடம் அருமை. அதை உணர்ந்து கார்த்திக் தன்னைத்தானே திருத்திக்கொள்ளும் இடங்களும் செம்ம சூப்பர்.

உண்மை அன்பு என்றுமே தோற்காது என்று உணர்த்தும் வகையில் அழகிய குடும்ப கதை தந்த வாகைப் பூ இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்.

பின்குறிப்பு:

முடிந்தவரை சஸ்பென்ஸ் உடைக்காமல், கதையில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன் சகி! சஸ்பென்ஸ் உடைக்கும் வகையில் ஏதாவது எழுதியிருந்தால், சொல்லுங்கள் சகி! திருத்தி பதிவிடுகிறேன்!

*****

சாந்தி நாகராஜ் சகோதரியின் விமர்சனம் :


# நந்தவனம் குறுநாவல் போட்டி

 கதை :காதல் சதுரங்க ஆட்டம்

எழுத்தாளர்: வாகைப்பூ

 தலைப்பிலேயே தெரியுது இது காதலை மையமாக வைத்து ஆடாப்போற ஆட்டம்னு .

 நாயகன் கார்த்திக் தன் மனதில் தோன்றும் உண்மையான காதலுக்கும் வெளிப்புறத் தோற்றத்தினால் ஏற்படும் ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆடும் காதல் ஆட்டம்.

 கிருத்திகா,சாம்பவி,கார்த்திக் மூவரும் தங்கள் வாழ்வில் ஆடும் காதல் ஆட்டத்தினை ரொம்ப விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத பல ட்விஸ்ட்களை வைத்து நல்ல சுவாரசியமான முறையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நல்ல முறையில் வழிநடத்தி மனதில் பதியும் படியாக கதையை அழகாக வடிவமைத்திருக்கிறார் ஆசிரியர்.

 கிருத்திகாவின் மயக்கத்திற்காண காரணத்தை சரியாக சொல்லாத மாதிரி இருக்கு.
 அது அவளோட நடிப்பா இல்லை யாராவது வேணும்னே மயக்கம் அவளுக்கு மயக்கம் வர மாதிரி செஞ்சாங்களான்னு இன்னும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம்

 காதல் ஆட்டம் சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

******

கடம்ப மலர் :

#நந்தவனம்_குறுநாவல்_போட்டி 
#பூக்களுக்கு_பூவின்_விமர்சனம் 

காதல் சதுரங்க ஆட்டம் - வாகைப் பூ 

எங்கிருந்து ஆரம்பிக்க.. எப்படி ஆரம்பிக்க.... சரி அவங்களை போலவே ஆரம்பிப்போம். ஒரு விபத்தை காட்டி ஆரம்பிக்குது கதை. சரசரன்னு அடுத்து ஒரு கல்யாணம். சரி வருத்தத்தைப் போக்க ஒரு சந்தோஷ நிகழ்வு ன்னு நினைச்சா.. அங்க ஒரு டிவிஸ்டு.. ரைட்டு... அப்படின்னு தொடர்ந்து படிச்சேனா.. ஹீரோ கார்த்திக் ரொம்ப டெரர் பீஸா தெரிஞ்சார். திட்டுறார், சூடா ஏதாவது கொட்டினாலும் கண்டுக்க மாட்டேங்கரார். ரொம்ப கோபம் வருது அவருக்கு.

அதுக்கு மேல அவருக்கு பெரிய குழப்பம். முதல்ல காதலிச்ச பொண்ணு மேல காதலா இல்ல கிருத்திகா மேலையான்னு. அப்பறம் கண்டுபிடிச்சு தெளிவாகிடறார்.

அப்பறம் கதை முழுக்க ஒரே டிவிஸ்ட் தான். ஒரு விஷயம் நடக்குது. அப்பறம் அதுக்கான விளக்கம் பிளாஷ்பேக் ல வருது. அதே போல தான் நிறைய இடத்தில வருது. அப்ப மட்டும் எனக்கு பாதி புத்தகத்துல கதையை ஆரம்பிச்சு அப்பப் புக்மார்க் வச்சு முன் பக்கம் போய் போய் பார்த்துட்டு வந்த ஃபீல் இருந்தது.

அகல்யா, கோகுல் அதிகம் வரல. ஆனாலும் அகல்யா அங்கங்க வந்து வில்லத்தனம் பண்ணிட்டு போறா.

காயத்ரி, புவனா, ஹரிச்சந்திரன் பாத்திரங்கள் அளவா வந்து போறாங்க. 

பிளஸ் ன்னு பார்த்தா கதையை விறுவிறுப்பாக கொண்டு போயிருக்காங்க. 

ஆனாலும் சில இடத்தில லாஜிக் இடிச்சது. அதை பின்னாடி விளக்கி இருந்தாலும் அக்சப்ட் பண்ண முடியல.

முக்கியமா எதிரியோட வீட்ல பொண்ணு எடுக்க கோகுல் எப்படி சம்மதிச்சிருக்க முடியும் ன்னு கேள்வி என்னை இன்னும் பிராண்டிகிட்டே இருக்கு. கதையில் அதுக்கு விளக்கம் இருந்த மாதிரி எனக்கு நினைவு இல்ல. இருந்தா சொல்லுங்க சிஸ்டர்.

மத்தபடி கதை வேகமாக விறுவிறுப்பா   படிக்க சுவாரஸ்யமா இருந்தது. இதுக்கு என்ன பிளாஷ்பேக் இருக்கும்ன்னு ஒவ்வொன்னுக்கும் யோசிக்க வைக்கிறாங்க.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்.

*****

Comments