சுந்தர முடியும் இந்திர ஆரமும்


முகநூல் பதிவு :







#ஜோதிவிமர்சனம்

#வாசிப்புஅறைகூவல் 

புத்தகத்தின் பெயர் : சுந்தர முடியும் இந்திர ஆரமும்

ஆசிரியர் : உளி மகிழ் ராஜ்கமல்

வெளியீடு : விதைகள் பதிப்பகம்

புத்தகத்தின் விலை : 250

புத்தகத்தின் அளவு : 17 அத்தியாயம் 214 பக்கங்கள்

சோழத்தின் மாமன்னரான இராஜாதிராஜன் அரசபையில் வீற்றிருக்க, நெல்லையை ஆண்டு வருகிற குலசேகரப் பாண்டியன், மதுரை மாநகரை ஆட்சி செய்து வருகின்ற வீரபாண்டியனை எதிர்த்துப் போரிட போர்ப்படை உதவி கேட்டு ஓலை அனுப்பியது பற்றி விவாதம் நடைபெறுகிறது.

ஈழத்து அரசனை எதிர்த்து போர் புரிய அவர்கள் படை தயாராகி வருகின்ற நிலையில், குலசேகரன் உதவி கேட்டதால் அது பற்றி பேசப்பட்டது. ஈழத்து அரசனை அவன் நாட்டிற்கு சென்று துரத்தியடிப்பதுடன், அருகில் உள்ள பாண்டிய நாட்டில் அமர்ந்து சோழத்தையும், பாண்டியத்தையும் ஒன்று சேரவிடாமல் பிரிவினை ஏற்படுத்தி வருவதுடன், தென்னகத்தை முழுவதும் தனக்கு கீழே கொண்டு வரத் துடிக்கும் ஈழத்து நபர்களை அடித்து துரத்தி, வீரபாண்டியனையும் தோல்வியை கவ்வச் செய்து பாண்டிய நாட்டை மீட்டு குலசேகரப் பாண்டினிடம் ஒப்படைத்தால் ஈழத்தவர் மறுபடியும் இங்கு நுழைய முடியாது. அத்துடன் தனக்கு கட்டுப்பட்டதொரு ஆட்சியை அமைக்க நிபந்தனை விதிக்கலாம் என்று அரசர் முடிவு செய்கிறார்.

சோழ மன்னரின் சேனாதிபதி குலசேகரப் பாண்டியனை சந்தித்து, சோழம் போர்ப்படை உதவி அழிப்பதாக கூறிவிட்டு எங்கு, எப்போது போர் துவங்க போகிறது? என்று கேட்டுவிட்டு செல்கிறார். நிபந்தனை விதிக்கவில்லையே என்று குலசேகரப் பாண்டியன் யோசிக்கிறான்? அதே எண்ணம் சேனாதிபதிக்கும் எழுகிறது.

சோழ மன்னனின் உதவியுடன் குலசேகரப் பாண்டியன் மதுரைக்கு போர் தொடுத்து வரப்போகும் விசயத்தை அறிந்த வீரபாண்டியன், எதிரியுடன் போர் உதவி கேட்க சென்று விட்டானே என்று அதிர்ச்சியடைகிறான்.

அவ்வேளையில் சோழனின் சிரத்தை அறுத்து கோட்டை வாயிலில் தொங்கவிடுவேன் என்கிறான் ஈழத்து தண்டநாயகன். அது அப்படியே சேனாதிபதியின் செவியை அடைய சொன்னவனை அது போல் செய்ய திட்டமிடுகிறார் அவர்

போர் முடிகிறது. வீரபாண்டியன் தப்பி ஓடுகிறான். ஈழத்து படைகள் சிதறியடிக்கப்படுகின்றன. குலசேகரன் ஆட்சியில் அமர்த்தப்பட்டான். ஈழத்து அரசன் கோபத்தால் வெடிப்பதுடன், குலசேகரப் பாண்டியனை தன் வசப்படுத்த முயல்கிறான். மருமகன் எதிர்ப்பதால் நாடு கடத்தப்படுகிறான். அது போல், குலசேகரனால் பாண்டிய நாட்டு முக்கியமான தலைவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

தன் ஆளை வைத்து தன்னை தோல்வியடைய செய்தது போல ஈழத்து அரசனும் குலசேகரப் பாண்டியனை தன் வசப்படுத்தி அவன் மூலம் பாண்டிய நாட்டிற்குள் நுழைவதுடன், சோழ நாட்டையும் கைப்பற்ற திட்டமிடுகிறான். அவனது எண்ணப்படி குலசேகரப் பாண்டியன் அவனது பேச்சை ஏற்கிறானா? இல்லை சோழனுக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறானா? சோழ மன்னருக்கும் பாண்டியத்திற்கும் தொடர்ந்து வந்த பிரிவினைகள், பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறதா? சோழ மன்னரிடம் உள்ள பாண்டிய நாட்டு அரசுடைமை பொருளாகிய சுந்தர முடியும் இந்திர ஆரமும் பாண்டிய நாட்டு அரியணையை அலங்கரிக்க சோழன் அனுமதி அளிப்பானா? குலசேகரப் பாண்டியன் ஈழத்துடனான உறவு ஏற்படுத்திக் கொண்டால் அதற்கான சோழனின் பதிலடி என்னவாக இருக்கும்? போன்ற பல கேள்விகளுடன் கதைக்களம் அருமையாக நகர்கிறது.

 எழுத்து நடை, கதையோட்டம் ரொம்ப நல்லா இருக்கு. சுவராஸ்யமும் விறுவிறுப்பும் கலந்து வாசிக்க தூண்டுகிறது.

சோழர் அரண்மனையில் உள்ள சேனாதிபதி, அமைச்சர் அனைவரும் அருமையான தேர்ந்தெடுப்பு. பாண்டிய நாட்டில் உள்ள பாண்டியராசன், மாறன் சுந்தரன் போன்றோர் தேவையில்லாமல் பேசி குலசேகரனை தூண்டி விட்டு விட்டனர். (உங்களால் தான் கைக்கு எட்டியது பயன்படாமலே போச்சு)

சீவல்லவன் பாத்திரத்தின் செயல்பாடுகள் அழகாக இருந்தன. அதுபோல கற்குடி மாரனாரும், அஞ்சு நாட்டாழ்வாரும் சூப்பர். சரியான பதிலடி கொடுக்கிறாங்க. அவர்கள் நாட்டு மக்கள் மீதான பாசமும், மண்ணின் மீதான விசுவாசமும் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது.

முடிவு அபாரம்👏👏 சோழத்து மன்னரின் பேச்சும் செயல்பாடும் பிரமாதம்👌👌👌

இந்த கதை சென்ற வருடம் படித்திருந்தாலும், புத்தகம் ஊரில் வைத்து விட்டு சென்றதால் விமர்சனம் அளிக்க முடியவில்லை. மீண்டும் முதலில் இருந்து வாசித்து வாசிப்பு போட்டிக்காக பதிவிட்டு உள்ளேன்.

மேலும், இந்த கதையை முதன் முதலாக வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது..

 ஆரம்பத்தில், வீரபாண்டியனை சோழனும் குலசேகரனும் எதிரிகளாக கருதி பேசியதும், போரில் தோற்கடித்து துரத்தி விட்டதும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது. ஏன்னா அவர் தான் ஹீரோன்னு நினைச்சிருந்தேன். தொடர்ந்து வாசிக்க முடியாத அளவுக்கு கஷ்டமா இருந்தது. அவரைப் போய் இப்படி பண்ணி விட்டார்களே என்று பீலிங்காவும்  இருந்தது. மொத்தமா படிச்ச பிறகுதான் நிம்மதி. அப்படா!! வீரபாண்டியன் எப்பவும் நமக்கு ஹீரோ தான்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். அவர் வரும் காட்சி கொஞ்சமா இருந்தாலும் நான் முழு மனதுடன் ரசித்தேன்.  (முன்பு படித்த நாவல்களில் வந்த இதே பெயரும், கேப்டன் பட பெயர் பாதிப்பாகவும் இருந்திருக்கும் 🤣🤣🤣)

மேலும் நிறைய எழுதவும் விருதுகள் பல வாங்கவும் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐

Comments