பாசமெனும் பள்ளத்தாக்கில்




#ஜோதிரிவ்யூ

நாவல் : பாசமெனும் பள்ளத்தாக்கில்

எழுத்தாளர் : Vidya Venkatesh

தளம் : வைகை தமிழ் நாவல்ஸ்

லிங் : https://vaigaitamilnovels.com/forum/forums/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.806/

மனைவி இறந்து ஆட்டிஷம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மகள் மதுமிதாவுடன், பணி நிமிர்த்தம் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருகிறான் கணித பேராசிரியரான நாயகன் குணா. சொந்தவூருக்கு வருபவனை அவனது பெற்றோர் ஏற்றுக் கொள்ள மறுக்க, அவளது மகளுக்கும் அதே நிலை ஏற்படுகிறது.

ஊருக்கு வந்தவனிடமிருந்து மதுமிதாவை பார்த்த யமுனாவின் தங்கை சுதா, அவளது பாதுகாப்பு பொருட்டு தன்னுடன் வைத்துக் கொள்ள திட்டமிட, அங்கிருந்து ஆரம்பிக்கிறது போட்டி.

தனியொருவனால் குழந்தையை சரிவர பார்க்க முடியாது. அதிலும் அவளது உடல் நிலை... என்று பலவற்றையும் சுட்டிக்காட்டி பேசுகிறாள். குணாவின் தாயார் என்னவென்றால் அவனை மறுதிருமணம் செய்து பேத்தியை பார்த்துக் கொள்ள வலியுறுத்துகிறார். அவன் எடுக்கும் முடிவென்ன? எதற்கு அவர்கள் மீது அத்தனை கோபம்? சுதாவின் திருமணம் நடக்குமா? என்று ஒரு சில கேள்விகள் எழுகிறது.

இந்த இடத்தில் புதிய பெண்ணின் குறுக்கீடு வருகிறது. ஏற்கனவே மகளுக்கு ஆதரவாக பேசினாள், அவளும் திருமணமாகி கணவனை பறிகொடுத்து மகனுடன் இருப்பவள் போலும் என்ற எண்ணத்தில், அவளை மணப்பதற்கு கேட்கிறான் குணா. அவளோ, அதில் இருந்து அவன் வாழ்க்கையில் கேள்விக்குறியாக தொடருகிறாள்.

லாயர் மூலம் அக்கா மகளை தன்வசப்படுத்த நினைக்கும் சுதா, அதற்காக சம்மதித்து குணாவை பற்றி அலசி ஆராயும் லாயர், அவன் மோசமானவன் என திட்டும் பல்லவியின் அண்ணன், குணாவிற்கு உதவும் அஷ்வின், தகப்பன் மீதான பாசத்தில் வேறு யாரையும் ஏற்க மறுக்கும் மகள், பேத்தி, மருமகனை வெறுக்கும் மாமியார் என களம் வேகமாக நகர்கிறது.

பல்லவி தன்னிடமிருந்து குழந்தையை அபகரித்து சுதாவிற்கு கொடுக்க வருவதாக எண்ணி அவளை வெறுக்கும் குணா, இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறானா? குழந்தையின் நிலை? வீட்டார் வெறுக்கும் அளவிற்கு நடந்ததென்ன? என்று பல கேள்விகளுடன் கதையை கொண்டு செல்கிறார் நம் எழுத்தாளர்.

இதில் வருகிற மதுசூதனன் பாத்திரம் சரியான திட்டமிடல் ஏதுமின்றி செயல்பட்டதாக தோன்றியது. வீட்டிற்கு தெரியாமல் காதல் மணம் புரிபவன், தங்கைக்கு திருமணம் நடந்த பின் தன் காதலை வெளியே சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டு, அவளுடன் இணைந்து வாழ்ந்தது சரியா தவறா? சரி அப்படியே வைத்துக் கொண்டாலும், அவள் வயிற்றில் கரு தாங்கி நின்றாலும், குழந்தை பெற்றாலும் ஏற்கத்தானே வேண்டும்? அந்த இடத்தில் மட்டும் முடியாது என்பதும் ஏற்க மறுப்பதும் முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.

கட்டிய மனைவி, பெற்ற மகளுக்கு அவன் நியாயம் செய்யவில்லை. அதற்கான தண்டனையும் மிகச்சரியாகவே கிடைத்து விட்டது. காவலன் எனும் பதவியில் இருப்பவன் திருமணம் செய்ய கூடாது. காதலிக்க கூடாது என்றெல்லாம் எந்தவொரு சட்ட திட்டமும் கிடையாது.

அவர்களும் எல்லா விதமான உணர்வுகளால் படைக்கப்பட்ட சாதாரண ஜீவராசிகள் தான். வாழ்க்கையில் ஏற்படுகிற எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளையும் கடந்து செல்லும் அளவிற்கு தைரியமும், மனப்பக்குவமும், புத்திசாலித்தனமும், குடும்பத்து மீது பாசமும், காதலித்தவள், கட்டியவள் மீது நேசமும், தன் உதிரத்தில் ஜனித்த மகவின் மீது அன்பும், அக்கறையும், பாரத நாட்டின் மீதான பற்றும் கொண்டிருக்க வேண்டும். இது ஏதுமின்றி சுயபுத்தியை தொலைத்து தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல பேசுவதும், அதையே பிடித்துக் கொண்டு தொங்குவதும் ஒரு நல்ல ஆண்மகனுக்கு அழகல்ல!

ஆக, குணா தான் எல்லா வகையிலும் ஆளுமையுடன் நிமிர்ந்து நிற்கிறான். நம் அனைவர் மனதையும் வெகுவாக கவருகிறான். மதுசூதனன் நிச்சயமாக யார் மனதையும் வென்றிருக்க வாய்ப்பில்லை என்பதே என்னுடைய எண்ணம். அதனால், ரைட்டரம்மா இந்த ஆன்ட்டி ஹீரோ பட்டத்தை குணாவிடம் இருந்து மாற்றி இவனுக்கு சூட்டுவோமாக!!

யமுனா, பல்லவி பாத்திரங்கள் சரியான அலட்டலும், அதிரடியும் நிறைந்த தீபாவளி பட்டாசுகள். என்னா வெடி!! அதிலும் குணாவை படுத்தும் பாடு, அதனால் தான் அவனும் அப்படி நடந்து கொண்டான் என்று வாசிக்கும் போதே நமக்கு புரிந்து விடுகிறது. ஆரம்பத்தில் ஓடிய கதையோட்டம் புரியாமல் குழப்பி விட்டது. பிறகோ , என்னங்கடா இது, இப்படி ஆகிற்று என எண்ண செய்கிறது.

மதுமிதா சுட்டி!! குணாவிடம் காட்டுகிற பாசத்திலும் 'மா..மா.. மாமா' என்று அன்பை செலுத்துவதிலும், பல்லவியிடம் போட்டிப் போடுவதிலும் நல்ல நடிப்பு.

அஷ்வின் அருமையான நண்பன். சரண், மஞ்சரி சூப்பர்...

அவனது அம்மா பாத்திரம் அருமை; குணாவின் மாமியார் நமக்கு பிடிக்கா விட்டாலும் மகளை உயிரோடு பறிகொடுத்தவரின் பாதிப்பு என்ற எண்ணத்தில் விட்டுவிடலாம்.

ஆட்டிஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை பற்றிய தகவல்கள் வெகுசிறப்பு.

முதலில் குழப்பி விட்டு பின் தெளிந்த நீரோடை போல கதைக்களம் நகர்கிறது. எழுத்தாளருக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐

Comments