பார்த்திபன் கனவு


பாகம் 1


பாகம் - 2


பாகம் - 3








#வாசிப்புஅறைகூவல் 

நூலின் பெயர் : பார்த்திபன் கனவு (பாகம் - 1)

ஆசிரியர் : கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாய அளவு : 10

இன்றைய வாசிப்பு : 10 அத்தியாயங்கள்

சோழ நாட்டின் காவிரி ஆற்றங்கரையின் சற்று தூரத்தில் அமைந்துள்ள குடிசையில் உள்ள பொன்னனும் வள்ளியும் பேசிக் கொண்டிருக்க, பார்த்திப மன்னர் வருகையும், பேச்சும் கதையோட்டத்தின் ஆரம்பத்தை விறுவிறுப்பு ஆக்குகிறது.

மிகப் பெரிய சோழ தேசமாக இருந்த காஞ்சி, பாண்டிய, பல்லவ அரசர்களால் சிற்றரசாக மாறி, பார்த்திப மன்னரின் அப்பா மகேந்திர சக்ரவர்த்தி காலத்தில் இருந்து கப்பம் கட்டி வருகிறது. பல்லவ படையுடன் நடந்த போரில் தோல்வியுற்ற மகேந்திர சக்ரவர்த்தி, சில நாட்களில் உயிரிழக்கிறார். அடுத்து உறையூருக்கு பார்த்திபன் மன்னராகுகிறான்.

பல்லவ மன்னர், சாளுக்கிய மன்னர் புலிக்கேசியை எதிர்த்து போரிட செல்லும் முன், பார்த்திபனையும் தமது படைகளுடன் வந்து சேரும்படி ஓலை அனுப்பினார்.

அப்படியே சம்மதித்த பார்த்திபன், அதற்கு நிபந்தனையாக, "அன்றிலிருந்து உறையூரில் இருந்து கப்பம் வாங்குவதை நிறுத்தி விட வேண்டும். சோழ நாட்டின் புலிக்கொடிக்கு தனி மரியாதை அளிக்க வேண்டும் " என்று செய்தி அனுப்பினார். அவர் பதிலளிக்காமல் சென்றதுடன்,   சாளுக்கிய அரசர் புலிக்கேசியை வென்று வாதாபி நாட்டை தீக்கிரையாக்குகிறார்.

அன்றிலிருந்து பார்த்திபன் பல்லவ மன்னருக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தி விட, அதை கேட்பதற்கு உறையூருக்கு வீரர்களை அனுப்பி வைக்கிறார்.

பார்த்திப மன்னர்,  'புரட்டாசி பெளர்ணமியில் வெண்ணாற்றங்கரையில் சந்திப்போம்' என்று கூறுகிறார்.

வீரர்களும் அங்கிருந்து அகன்று செல்கிறார்கள். போர் அறிவிப்பு விடப்படுகிறது. சோழ வீரர்கள் அங்கு செல்ல தயாராகுகிறார்கள். அரசரும் மகனை மனைவியிடம் ஒப்படைத்து தன்னுடைய கனவை நனவாக்கும் விதமாக வளர்க்க கூறுகிறார்.

பார்த்திபனின் கனவை அவர் மகன் நனவாக்குகிறானா? சோழ ராஜ்யம் விரிவடைந்து இமயமலையில் புலிக்கொடியை பறக்க விடுகிறதா என்று பாகம் - 2 ல் பார்ப்போம்!

இதில் ...

வள்ளி, தன் கணவனை போருக்கு போகக் கூடாது என்று கூறுவதும், அவன் சோழநாட்டு படையுடன் இணைந்து போரிட ஆசைப்படுவதும், அவனது பதில்கள் அதற்காக மன்னரை பார்க்க சென்ற விதம் அத்தனையும் அருமையாக இருந்தன.

வள்ளியின் தாத்தா, வள்ளி, சேனாதிபதி பேச்சுக்கள் தெரியாத விசயங்களை தெரிய வைக்கின்றன.

பொன்னன் முன்னிலையில் மகனிடம், பார்த்திப மன்னர் சித்திர மண்டபத்தில் வைத்து தன்னுடைய கனவை கூறிய இடமும், சித்திரங்களை பற்றிய பேச்சுக்களும் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கின்றன.

அரசரின் மீதான பாசத்தில் அழுத அரசியும், அவரது வாழ்க்கை தன்னால் தான் இப்படி ஆகி விட்டது என வேதனைப்படும் அரசரும் பிரமாதமான படைப்பு.

மீண்டும் எனது வாசிப்பு நாளைக்கு...


#வாசிப்புஅறைகூவல் 

நூலின் பெயர் : பார்த்திபன் கனவு (பாகம் - 2)

ஆசிரியர் : கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாய அளவு :  27

இன்றைய வாசிப்பு : (பாகம் - 2) முழுவதும்

பாகம் 1 - ல் சோழநாட்டு சிற்றரசர் ஆகிய பார்த்திப மகாராஜா, பல்லவ மன்னருக்கு கப்பம் கட்ட மறுத்ததால் அவர்களுக்கு இடையில் போர் நிலவியது. தனக்கு ஏதாவது ஆகி விட்டாலும் மகனை வளர்த்து பெரியவனாக்கும் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்தவர், மகன் விக்ரமனை அழைத்துச் சென்று சித்திர மண்டபத்தில் தன்னுடைய கனவுகளை கூறுகிறார். பல்லவருக்கும் அவருக்கும் இடையில் நடை பெற்ற போரில் தோல்வியுற்று வீர மரணத்தையும் தழுவுகிறார். அந்த நேரம் வந்த சிவனடியார் அவரிடம் பேசுகிறார்.

இனி பாகம் 2...

உறையூரில் கப்பம் கட்டி அரசனாக இருக்க விக்ரமன் சம்மதிக்க மறுக்கிறான். அவனது சித்தப்பா மாரப்ப பூபதி, அவனிடம் படை வீரர்களை ஏற்பாடு செய்திருப்பதாக தூண்டி விட்டதன் விளைவு, பல்லவ மன்னவரிடம் போரிட ஓலை அனுப்புகிறான். தகப்பன் எத்தனை பெரிய நபர் அவரையே எதிர்த்து போரிட முயல்கிறானே அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பல்லவ மன்னரின் மகள் குந்தவி கூறுகிறாள். சித்தப்பன் மாரப்ப பூபதியின பேச்சைக் கேட்டு ஏமாந்த விக்ரமன்,  பல்லவ மன்னரால்  நாடுகடத்தப்படுகிறான். மறுபடியும் இங்கு வந்தால் சிரசாக்கினைக்கு உள்ளாக்கப்படும் என கூறப்படுகிறது.

குதிரையின் மீது கைகள் பிணைக்கப்பட்டிருந்த விக்ரமனை பார்த்த குந்தவி, அப்பாவிடம் கூறி விடுவிக்க முயல்கிறாள். முடியாமல் போகும் அவனைக் காண மாமல்லபுரத்திற்கு விரைகிறாள்.

சிவனடியாராக வருகின்ற நபர் பொன்னன், வள்ளியிடம் நன்றாக பேசுவதுடன், விக்ரமனின் தாயிடமும் பேசுகிறார். சிவனடியாரை சந்தேகிக்கும் விக்ரமனின் சித்தப்பா சோழத்து நிர்வாகத்தின் மீதான ஆசையில் இங்கு நடப்பதை பல்லவ மன்னரிடம் தெரிவிக்கிறான். அவரிடம் சிவனடியாரை பிடித்து தன்னிடம் ஒப்படைக்க கூறுகிறாள் குந்தவி.

சோழ மன்னரின் பரம்பரை பொக்கிஷத்தை பொன்னனிடம் கண்டுபிடிக்க கூறும் விக்ரமனின் தாய் அருண்மொழி தேவியார், ஸ்தல வழிபாட்டுக்கு செல்கிறார். ஏற்கனவே அதை எடுத்து விட்ட பொன்னன் மாரப்ப பூபதியிடம் இருந்து தப்பிக்க, அதை சிவனடியாரிடம் கொடுக்கிறான். 

சோழ மன்னரின் பரம்பரை பொக்கிஷம் விக்ரமனின் வசம் செல்கிறதா? சிவனடியாராக வருகின்ற மர்ம நபர் யார்? இரண்டு இடத்தில் மட்டுமே பார்த்திருக்கும் விக்ரமன், குந்தவி மறுபடியும் சந்திக்கிறார்களா? நாடு கடத்தப்படும் விக்ரமன் மறுபடியும் வந்து எப்படி தன் அப்பாவின் கனவை நனவாக்குகிறான்? போன்ற கேள்விக்கான பதிலை பாகம் - 3 ல் காண்போம்.

பொன்னன், வள்ளி வருகின்ற இடம் நன்றாக இருக்கிறது. சிவனடியார் மர்மமாக தெரிகிறார். குந்தவி பல்லவ மன்னரிடம் பேசுகின்ற இடங்களும், விக்ரமனை பார்க்கின்ற இடமும் அருமையாக இருக்கிறது.

மாரப்ப பூபதி சரியான விசம். பொன்னன் வள்ளியை பின் தொடர்ந்து வந்து பேசுகின்ற இடங்களும், பொக்கிஷத்தை எடுக்க சென்ற நேரம் நடந்து கொண்ட முறையும் திகிலாக இருந்தது.

விக்ரமன் வருகிற காட்சி குறைவாக இருப்பதால் பாகம் - 3 ல் அவரது சாகசத்தை எதிர்பார்ப்போம்!
வாசிப்புஅறைகூவல் 

நூலின் பெயர் : பார்த்திபன் கனவு (பாகம் - 3)

ஆசிரியர் : கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாய அளவு :  40

இன்றைய வாசிப்பு : (பாகம் - 3) முழுவதும்

மாமல்லபுரம் நோக்கி இரத்தின வியாபாரி தேவசேனன், தன் ஆட்களுடன் செண்பக தீவில் இருந்து கப்பலில் வருகிறான். வரும் அமாவாசை அன்று திரும்பி சென்று விட வேண்டும் என்று தன்னுடன் வருபவர்களிடம் கூறி விட்டு செல்கிறான்.

அங்கு வந்து சிற்பங்களையும், சித்திரங்களையும் பார்த்துக் கொண்டு நிற்பதோடல்லாமல் சிற்பிகளிடம் பேசுகிறான்.

தன்னுடன் செண்பகத்தீவுக்கு வந்தால், பெரும் செல்வந்தனாக திரும்பி வரலாம் என்று கூறுகிறான். ஒரு கைப்பிடி ரத்தினத்தை அவனுக்கு கொடுத்து விட்டு செல்கிறான். அவனது மூட்டையை சுமந்து கொண்டு சித்ரகுப்தன் எனும் காது கேட்காது, பேச்சற்ற குள்ளன் நடந்து செல்கிறான். 

தேவசேனன் பல்லவ மன்னனின் மகளது பார்வையில் விழுகிறான். அவள் அவனை அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறாள். அவனும் சரியென்று சம்மதிக்கிறான்.

உறையூருக்கு செல்லுமிடத்தில் அடிதடி ஏற்படுகிறது. பல்லவ ஒற்றனால் காப்பாற்றப்பட்டு அவர் குதிரை மூலம் செல்பவன் பிரவாகத்தில் மாட்டுகிறான். ஒற்றனாக வருகிறவனும், தேவசேனனும் யார்? சித்ரகுப்தன் யாருடைய நபர்?
மழை வெள்ளம் கரைபுரண்டோட பிரவாகத்தில் மாட்டுகிற தேவசேனன் என்ன ஆகிறான்?

பொன்னன், பார்த்திப மன்னரின் மனைவி இறந்து விட்டதாகவும் ஒற்றைக் கை மனிதனால் கொண்டு செல்லப்பட்டதாகவும், பல்லவருக்கு தெரியாமல் தாய்நாட்டையும், தாயாரையும் பார்க்க வந்திருக்கும் விக்ரமனிடம் கூறுகிறான். காய்ச்சலில் விழுந்த விக்ரமன் பல்லவ மன்னரின் மகள் குந்தவியிடம் மாட்டுகிறான்.. இன்னொரு பக்கம் அவனது சித்தப்பா அவனை பிடிக்க அலைகிறார். 

ஒற்றனாகவும், சிவனடியாராக வருபவரிடம் காணப்பட்ட மர்மம், அதைக் கண்டுபிடிக்க எண்ணும் பொன்னன், காட்டுக்குள் மறைந்திருக்கும் கபால பைரவனை கண்டுபிடிக்க செல்லும் இருவர் என கதை மர்மமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது. எதற்காக அந்த கபால பைரவன், விக்ரமனை நரபலி கொடுக்க முயல்கிறான்? ஒற்றைக் கை மனிதனிடம் சிக்கி உள்ளதாக கூறப்படும் அருண்மொழியின் நிலை, பல்லவ மன்னரால் நாடு கடத்தப்பட்டு மறுபடியும் மாறுவேடத்தில் வந்திருப்பதை அறிந்தால் ஏற்படும் பிரச்சனைகள்? என பாகம் 3 அருமையாக இருக்கிறது.

பல்லவ மன்னர் நரசிம்ம பல்லவர் அட்டகாசம். மகளிடம் பேசும் இடம், இறுதி காட்சி அத்தனையும் அழகாக மனதில் பதிகிறது. 

விக்ரமன் மாறுவேடத்தில் தாயகத்திற்கு வந்து தாயாரையும் பார்க்க முடியாமல், நரபலி கூட்டத்தினரிடமும், சித்தப்பா மாரப்ப பூபதியிடமும் மாட்டி விடாமல் தப்பிக்க நினைத்து மாட்டுவதும், இறுதி காட்சிகள் அத்தனையும் வெகு சிறப்பு. குந்தவியை பார்த்து அவன் படுகிற பாடு பேஷ் பேஷ் பிரமாதம்!!

பொன்னன் தான் கதையில் பாதிக்கு மேலாக வருகிறான். விக்ரமனிடம் அவன் கொண்ட பாசம் மனதை நெகிழ வைக்கிறது. வள்ளி-> பல்லவரே, 'இது போல் ஒரு பெண்ணை பார்த்ததில்லை' என்று கூறும் விதமான பாத்திரம்.

எழுத்தாளருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்💐💐💐


Comments