தீர்க்க சுமங்கலி விமர்சனம்


கலை கார்த்திக் விமர்சனம் :

முகநூல் லிங் :


தீர்க்க சுமங்கலி  கதை அருமை. உண்மையான காதல் நட்பு சூழ்நிலையால் வில்லியாவது உடல் உறுப்பு திருட்டு கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து கொண்டு போயிருக்கேங்க வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். காதல் செய்கிற  ஜோடிகள் எதிர்பாராத பிரச்சினை பிரிகிறது  இளங்கோ தன் காதலை ஜெயிச்சுட்டு பின்னர் நண்பன் தங்கை காதலை சேர்க்க வைக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை களைந்து  சாவை நோக்கி செல்கிறான் இளங்கோ இவன் நல்ல நண்பன் அண்ணா பையன் காதலன் கணவன் நல்ல மருத்துவன் இவன் தான் ஹீரோ. ஆதவன் தனது அவசரதனத்தால் குளறுபடி ஆக்குவதை நண்பனாக இளங்கோ திருத்தவது செம. கவி இவள் சந்தர்ப்பவசத்தால் வில்லியாகிறாள். ஸ்வாதி பெரிய இவள் காதலை வேற ஒருத்திக்காக  போவது டூ மச் இவள். சுமி இவளுக்கு ஏகா கிராக்கி இவளை சுற்றி மாப்பிள்ளை வருவது சூப்பர் இவளும் அவசரகுடுக்கை. அம்மா டூ மச் பின்னர் 👍. மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். தீர்க்க சுமங்கலி இவங்க கதையை எழுதி முடிச்சுவுடன் மூஞ்சி புத்தகத்தை விட்டு போய்விட்டாங்களா டேக் பண்ண முடியவில்லை.

சாந்தி நாகராஜ் :

#கனா_காணும்_பேனாக்கள்

#kkp_33

 #தீர்க்க_சுமங்கலி

 நல்ல ஒரு அருமையான கதை. குடும்ப பாசம் உண்மையான காதல்,அருமையான நட்பு, உடலுறவு திருட்டு, பிஸ்டு சஸ்பென்ஷன் ரொம்ப அருமையா கொண்டு போய் இருக்காங்க எழுத்தாளர். 👌👌

 இளங்கோ நம்ம ஹீரோ ஒரு அன்பான பாசமிகு அண்ணனா, உண்மையான காதலனா, நேர்மையான மருத்துவனா,அருமையான நண்பனா, பொறுமை நிறைந்த மனிதனா இவனோட கேரக்டர் ரொம்ப ரொம்ப அருமை 👏👏👏👏

 சுவாதிகா ஒரு நல்ல பொண்ணா இவளோட காதலும் சரி, இவளோட புரிதலும் சரி ரொம்ப ரொம்ப நிறைவாய் இருந்தது👌👌👌

 சுவாதிகா, சுமி, கவி இவங்க மூணு பேரோட கேரக்டர கதையை படிக்கிறப்ப ஆரம்பத்துல நாம ஒரு மாதிரி அவங்கள ஜட்ஜ் பண்ணா அதுக்கு அப்படியே ஆப்போசிட்டா அவங்களோட கேரக்டரையே மாற்றி இருக்காங்க ரைட்டர் 🤣🤣

 ஆதவன் இளங்கோ இவங்க இரண்டு பேரோட நட்ப ரொம்ப ஆழமா ரொம்ப நல்லா கொண்டு போய் இருக்காங்க. ரெண்டு பேரும் கடைசி வரை நட்புக்கு இலக்கணமாய் இருக்காங்க சூப்பர் 👌👌👌👌

 ஆதவன் அவங்க அப்பா அம்மா இவங்களோட அவசரத்தனத்தினால் ஏற்படுகிற பிரச்சனைகளை இளங்கோ ரொம்ப பொறுமையா கையாள்வது சூப்பரா இருக்கு 😍😍😍

 தங்கையின் வாழ்க்கையை சீர்படுத்துவதற்காக வெளிநாடு போகும் அதுவும் இளங்கோவிற்கு ஏற்படும் ஆபத்தும் அங்க அவன் கண்டுபிடிக்கும் மருத்துவத் திருட்டும் கதையை பரபரப்பா இழுத்துட்டு போகுது 👌👌

 மருத்துவத்துறையில் சாதிக்கணும் ஏழை மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைக்கிற இளங்கோ மாதிரி ஆளுகளுக்கு மத்தியில வறுமையில் தவிக்கும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களின் உடல் உறுப்புகளை திருடிவிற்கும் எட்வர்ட் மாதிரியான ஆளுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.😡😡😡😡

 அருணா ஸ்வாதிய தவறா பேசும் போது அவளை ரெண்டு போடு போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் ஆனா அது யாருமே செய்யாம விட்டுட்டாங்க 😔😔😔

 அருணா கருணாகரன் ரெண்டு பேரையும் அப்படியே விட்டது மனசுக்கு பிடிக்கல 😡😡😡

 கணவன் இல்லாத சூழ்நிலையிலும் தான் பொறுப்பாக நடந்து கணவனின் தங்கைகளுக்கு பாதுகாப்பாகவும் கருணாகரனை எதிர்த்து தைரியமாகவும் செயல்பட்ட சுவாதிகாவின் தைரியம் அருமை 👏👏👏👏

 குடும்பம் பாசம் நட்பு காதல் உடல் உறுப்பு திருட்டு இடையில கொஞ்சம் அரசியல் கதை இன்னும் கதை ரொம்ப நல்லா கொண்டு போனாங்க.
 இறுதி அத்தியாயம் மட்டும் கொஞ்சம் அவசரமா முடிச்சுட்ட மாதிரி இருக்கு. ஆதவன்-சுமி,; கவி மகேந்திரன் இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் காட்சி அமைப்புகள் வைத்திருக்கலாம்.

 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐

சித்ரா சரஸ்வதி :

வைகைத் தளம் கனா காணும் பேனாக்கள் 2023 போட்டிக் கதை தீர்க்க சுமங்கலி எனது பார்வையில். மருத்துவர்களான இளங்கோ மற்றும் ஆதவன் கல்லூரிக் காலத்தில் இருந்து நண்பர்கள். இளங்கோவை ஆதவனின் மருத்துவமனையில் பணியாற்ற கேட்டு பணியில் இருக்கிறான். அவன் அந்த மருத்துவமனையில் படிக்கும் பொழுது காதல் செய்த ஸ்வாதிகாவை சந்திக்கும் அவன் பழைய நிகழ்வுகளால் பிரிந்தவர்கள் மீண்டும் திருமணத்தில் இணைகிறார்கள். ஆதவன் இளங்கோவின் சின்ன தங்கை சுமித்ராவை விரும்புகிறான். பெரிய தங்கை கவிப்ரீயாவை தவறாக நினைக்க எதிர்பாராத திருப்பம் தருகிறார் எழுத்தாளர். வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக செல்லும் இளங்கோ விபத்தில் இறக்க ஸ்வாதிகா தீர்க்க சுமங்கலியா என்ற கேள்விக்கு பதிலைத் தந்திருக்கிறார் எழுத்தாளர். 

சித்ரா தேவி :


#கனா_ காணும்_பேனாக்கள்
#vaigai_ tamil _ novels
தீர்க்க சுமங்கலி விமர்சனம் 

இளங்கோ நல்ல அண்ணன், நல்லமகன், நல்ல கணவன், நல்ல தோழன்… தன் கூடப் பிறந்த சகோதரிகளுக்கு தந்தையுமானவனாக இருக்கிறான். கல்லுரி காலத்தில் காதலில் விழுபவனின் காதல் பாதியிலே மாயமாகிறது. அவனது காதலி அவனை விட்டு விலகுகிறாள். அதற்கு காரணம் என்று அவனது சகோதரியை நினைத்தால் நடந்ததோ வேறு. காதலியை கரம் பிடித்தவன், தங்கைகளுக்கும் பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நாடு விட்டு நாடு செல்பவன், அங்கு பணிபுரியும் மருத்துவமனையில் நடக்கும் நாச செயலைக் கண்டுப்பிடித்து, ஆபத்தில் மாட்டிக் கொள்கிறான். அதிலிருந்து நல்லபடியாக மீண்டு வந்தானோ, அவன் மனைவி தீர்க்க சுமங்கலியாக இருப்பாளா என்று சஸ்பென்ஸுடன் கதையை கொண்டு செல்கிறார். ஆதவனுடான நட்பு அருமை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி. 

ஜீனத் சஹீபா :


வைகை தளத்தின் போட்டி கதைகள்
#கனா_காணும்_பேனாக்கள்
#kkp33 
தீர்க்க சுமங்கலி 

இளங்கோ.. ஆதவன்.. மருத்துவர்கள் ஆன இருவரும் கல்லூரி கால நண்பர்கள்.. தாய் மற்றும் மூன்று சகோதரிகளுடன் வாழ்ந்து வருபவன் இளங்கோ தந்தை இல்லாமல் சகோதரிகளின் பொறுப்புணர்ந்து அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நினைக்கும் பாசமான சகோதரன் 🥰 தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கும் நிலையில் சந்திக்கிறான் சுவாதிகாவை இளங்கோ.. மருத்துவனாக அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்து ஆபத்து நிலையில் இருந்து காப்பாற்றிக் கொண்டு வரும் இவன் மீது அளப்பரியா பாசம் ஏற்படுகிறது சுவாதிகாவின் தந்தைக்கு.. தன் மகளுக்கும் இளங்கோவிற்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறார் அவர்.. இளங்கோவிடம் மகளின் பாரா முகம் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.. காரணம் இல்லாமல் தன்னை விட்டு பிரிந்து சென்ற சுவாதிகாவை கண்ட இளங்கோ பிரிவுக்கான காரணத்தை அறிய முற்படிகையிலேயே இருவருக்கும் திருமணத்தை முடிவு செய்கிறார் சுவாதிகாவின் தந்தை.. இந்நிலையில் ஆதவன் இளங்கோவின் தங்கை சுமித்ராவின் மேல் காதல் கொண்டு அவளை மனம் முடிக்க நினைத்தேன் சிறு ஊaடலால் பிரிகிறார்கள் இருவரும் 😔 மற்றொரு தங்கையான கவிப்பிரியா யாரிடமும் ஒன்றாமல் தனித்திருக்கிறாள் அவள் மனதில் இருந்த கவலை என்ன என்பதையும் கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் 🥰 நிறைய டிவிஸ்டுடன் நகர்ந்தது கதை.. எழுத்துப் பிழை இல்லாமல் இருந்தது சிறப்பு 👏👏
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰❤️🌹

.......

அப்சரஸ் பீனா லோகநாதன் :


கனா காணும் பேனாக்கள் போட்டி கதைகளில் முடிந்திருக்கும் இரண்டாவது கதை.....

கதை: தீர்க்க சுமங்கலி 
ஆசிரியர்: KKP 33 

அருமையான மகன்
அக்கறையான
அண்ணன்
அன்பான காதலன் 
அரவணைப்பான கணவன்.....
அமைதியான மருத்துவன்
அரிதான புரிதல் கொண்ட நண்பன் என்று
அனைத்து நல் குணங்களும் கொண்ட
அமைதியான  நாயகன்
ஆனால் நிதானமாக எடுத்த காரியத்தை சாதித்து காட்டும்
அதிரடி மன்னன் இளங்கோ......

தனக்குள்ளே அழுது 
தாய் தந்தையுடன் 
தனித்து வாழும் நாயகி....
தன் நிலைக்கு 
தானே காரணமாய் 
தனக்கு தானே தண்டனையாக திருமணத்தை தவிர்த்து
தவித்து வாழும் மங்கை 
ஸ்வாத்திகா....

தங்கையின் துறுதுறுப்பூ
தாயின் கோவம் 
தமக்கையின் உதாசீனம்
தன் அண்ணனுக்கு தெரியாத ரகசியம் என 
தீர்க்கபட வேண்டிய 
பல பிரச்சனைகள் உடன் 
ஆரம்பிக்கும் கதை.....

ஆதவன் இளங்கோ நட்பு..
கல்லூரி காலத்தில் இருந்தே தொடரும் நட்பு 
குடும்பத்தில் ஒருவனாக 
மாறும் ஆழமான பந்தம்....
மருத்துவராக இருவரும் ஒரே 
மருத்துவமனையில் ஒன்றாக பணி புரிய....
ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக 
தவறு செய்யும் போதும் திட்டி திருத்தி புரிந்து கொள்ளும் நட்பு வரம்.....

ஒருதலை காதல் கொண்டு 
உடலை வருத்தி 
உள்ளம் கலங்கி நிற்கும்
ஒருத்தி....

தன் காதலால் ஒரு குடும்பம் கண்கலங்கி நிற்பதை காண முடியாமல் 
தன் காதலை 
தியாகம் செய்து 
தவிக்க விட்டு செல்லும் ஒருத்தி.....

கண்ணாலே ஒருத்தன் 
காதலியை பார்த்து கொண்டு 
காதலை வளர்க்கிரான்
காதலியே காதலுக்கு எதிராக அமைந்து 
கண்ணீரில் கரையும் ஒருத்தன்........

வெறுப்பாய் சுற்றும் ஒருத்தி
வில்லத்தனம் செய்ய காத்திருக்கிறாள்....

சொந்தம் என்று சொல்லி ஒருத்தி 
சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு வருகிறார்.....

திட்டங்களை எல்லாம் முறியடித்து 
தங்கையின் சோகத்தை களைய வேண்டும்
தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க வேண்டும்.
தன் மனைவியின் 
மனதை புரிந்து அவளையும் சந்தோசமாக 
வைத்துக் கொள்ள வேண்டும்...பல
கடமைகளை நிறைவேற்ற
கடல் கடந்து செல்லும்
கதையின் நாயகன்
நிலை என்ன????
மருத்துவ திருட்டு
மாஃபியா கூட்டம் என 
நடக்கும் சதியை
மருத்துவன் கண்டுபிடிப்பது அதில் மாட்டிக் கொண்டு
மாண்டு போனானா மீண்டானா???

கணவனின் கடமையை 
தன் கடமை என்று எண்ணி மனைவி 
செய்யும் செயல்கள் என்ன?
கதையின் முடிவில் 
கதையின் தலைப்புக்கு ஏற்ப தக்க பதிலாக 
தந்தது அருமை...

தாய் தங்கையின் 
தவறான புரிதலில் 
தன் கோபத்தால்
தள்ளி நின்று 
தவிக்கும் கவிப்பிரியா.... 😭😭😭😭...

ஆதவன் சுமத்திரா மேல் காதல் கொள்ள 
ஆதவன் பெற்றோர்
கவிப்பிரியாவை சம்மந்தம் பேச....
சுமத்திராவிர்க்கு சொந்தத்தில் 
கருணாகரனுக்கு பேசி வைக்க....
முக்கோண வடிவ பிரச்சனை🤧🤧🤧....

ஆதவன் சுமித்ரா பேச்சுக்கள் 
ஆரம்பத்தில் சிரிப்பு வெடி 
அப்புறம் 
ஆதவனை பிரிந்து கண்ணீரில் நமத்து போய் ...
ஆதவன் கலங்கி நிற்கும் நிலையில் 
அவனை அரவணைத்து 
பின் முடிவில் 
அதிரடி வெடியாக    சரவெடியாக😘😘😘😘.....
Cute and little love story🤩🤩🤩🤩அட்டகாசம்....

கவியின் தனிமைக்கு காரணம் என்ன???
கவிக்கு துணை யாரோ...
காதல் கொண்ட ஆதவன் 
கதி என்ன???? சுமித்திரா 
கல்யாணம் யாருடன்???🤔🤔🤔🤔

தாயாக மகளை நம்பாமல் இருப்பதும் பின் 
தன் மருமகளை நம்பி 
பேசுவதும் 
முத்துலட்சுமி அம்மா அருமை..👍🏻👍🏻👍🏻👍🏻

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்....
இளங்கோ 💕 ஸ்வாத்திகா
காதல் புரிதல் மனைவியாக 
கணவனின் செயலில் 
கடமைகளை நிறைவேற்ற
காதலுடன் பிரிவை ஏற்க்கும் 
காதல் மனைவி 
ஸ்வாதிகா அற்புதம்...
காதலுக்காக 
கண்ணீரில் துவண்டாலும் 
கணவனின் காதலில் 
கரைவதும்....
காலத்தின் தேவையில் துணிந்து செயல் படுவது 
பெண்களின் மன பலத்தை வெளிக்காட்டுகிறது...👏👏👏👏.
ஸ்வாதிகா😘😘😘

 
வினாக்களும் 
விடைகளும் உடனுக்குடன் 
விறுவிறுப்பாகவும் 
விவரித்து கதை முடித்தது
அருமையோ அருமை🤝🤝🤝💐💐💐💐 ....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா....👏👏👏👏👏👍🏻👍🏻👍🏻💐💐💐🤩🤩🤩

கௌரி கார்த்திகேயன் :

#கனா_காணும்_பேனாக்கள்_2023

#கௌரிவிமர்சனம் 

#தீர்க்க_சுமங்கலி

கதைக்களம்: குடும்பம், காதல், ஃப்ரெண்ட்ஸ்ஷிப், சடன் டுவிஸ்ட் & டர்ன்ஸ் ……

சின்ன வயசில் மாரடைப்பால் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரும் இளங்கோ ….

டாக்டர்🥰🥰🥰🥰🥰

தாய், தன்னையும், சகோதரிகளையும் தனியாள நின்னு வளர்த்ததால், தான் இருதய நிபுணராக ஆள் ஆகி அவங்களை பார்த்துக்கணும் அப்படினு சின்ன வயசிலேயே எண்ணம்…..

அதன் படியே டாக்டரா ஆகிறான்….

காலேஜ்ல இருந்து உயிர் நண்பனா ஆது….

படிச்சி முடிச்சி, ஆது ஓட ஹாஸ்பிடலையே ரெண்டு பேரும் வேலை பார்க்கறாங்க….

அவரச சிகிச்சைக்கு போகும் தான் பார்க்கறான் தொலைந்த காதலை🥺🥺🥺🥺🥺

அவள், ஸ்வாதி….

தொலைந்த காதலா?????

ம்ம், அவன் அறியாமல் தொலைந்த காதல்!!!!!

ஏன் என்ன ஆச்சி, இதற்கு நடுவில் குடும்பகளில் வரும் சின்ன சின்ன கோவங்கள்…எல்லாம் கதையில்…..

இளங்கோ, நாம் கடந்த இல்ல கடக்கும் சராசரி ஆண்மகன்….தனியா வளர்த்த தாய் மேல ரொம்ப பாசம்….சகோதரிகள் மேலையும்…..

லட்சிய பாதையில் செல்லும் போது, அவனை அறியாமல் அழகான காதல்…..

சில காலம் கடந்து அதுவும் காரணம் சொல்லாமல் கடந்து போக….

தன்னிலே இறுகி போறான்….

உயிர்ப்புடன் வெச்சிருப்பது ஆதுவின் நட்பு மட்டுமே…..

ஸ்வாதி, இவ பிரிஞ்சி போறப்ப அவன் மீதும் பிழை இல்ல & இவ மீதும் இல்ல….

அப்பறம் ஏன்?????

சில சுயநல மனிதர்களால்( எனக்கு அப்படி தான் தோணுச்சு & இப்பவும்) அவள் இவனை விட்டு பிரிந்து போக…..

தொடர்பில்லாமல் காதல் தொடு வானம் வரை வளர்ந்தது தானே தவிர தொலைந்து போகல….

ஆது, இப்படி ஒரு ப்ரெண்ட் கிடைக்க இளங்கோ உண்மையா லக்கி தான்….

இளங்கோவை விட இவனை ரொம்ப பிடிச்சது🥰🥰🥰🥰

முத்து லக்ஷ்மி, நல்ல அம்மா இளங்கோக்கு…..

சுமி, சரியான வாய் அதே நேரத்தில் எல்லாத்திலும் பொறுப்பும் கூட….

கவி, முதல் பாதியில் தப்பா நினைச்சிட்டேன் இவளை…..

இன்னும் சிலர் இருக்காங்க அவங்க எல்லாம் கதை ஓட்டத்தில் தெரிஞ்சுக்கோங்க…..

குடும்பம், காதல் அப்படினு போற கதையில் திடீர் திருப்பமாக…..

இதை எதிப்பார்க்கல😳😳😳😳😳

கதை நல்ல இருக்கு, அங்க அங்க சில குழப்பங்கள் வருது🤷🤷🤷🤷🤷

இன்னும் க்ரிஸ்பா கதை சொல்லி இருக்கலாம் ரைட்டர் ஜி….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

மிருதுளா அஸ்வின் :

Comments