கள் வடியும் பூக்கள்







https://www.facebook.com/share/p/8G4LhsAJ8EPACbKD/?mibextid=oFDknk

அக்னி சாட்சி

ஆரம்பமே ஆராதனா அதிரடி அர்ஜூன் அமைதி செம
ஆராதனா கண்டிஷன் கல்யாணம் கொஞ்சம் கடுப்பாக இருந்தது அவளின் பிளாஸ்பேக் ரொம்பவே கஷ்டமா இருந்தது 
ஆனாலும் சில நேரம் ஆராதனா முட்டாள்தனமாக நடந்தது கொஞ்சம் கடுப்பேதியது ஆனாலும் அவளின் கஷ்டங்களால் அவளின் நிலமை புரிந்தது
கந்தவேல் மாதிரியும் குடும்பத்திற்கு துரோகிகள் இன்றும் இருக்கிறார்கள் மதிவாணன் மாதிரியும் ஆர்த்தியின் கணவன் அவனின் சகோதரிகள் தாய் மாதிரியும் சுயநலவாதிகள் இருக்கதான் செய்கிறார்கள் 
அர்ஜூனின் குடும்பம் செம
சந்தோஷ் அருமையான மனிதன்
ஆராதனாவின் தவறான புரிதலினால் நல்லவன் கெட்டவனாக காட்டப்பட்டது தான் நிதர்சனம்
முடிவு அருமை

******************
பிரவீனா தங்கராஜ்


Writer : Mark-20 
அக்னி சாட்சி 

   தனக்கு திருமணம் வேண்டாமென்று முடிவாக இருக்கும் ஆராதனா, தாய் அக்காவின் கட்டாயத்தால் மணக்க விதிமுறை போடுகின்றாள். 

   அர்ஜுனும் விருப்பமில்லாது பெண் பார்க்க வந்தவன் ஆராதனா போடும் விதிமுறையில் நகைத்து மறுக்க வந்தவன் மணக்க சம்மதிக்கின்றான்.‌

   ஏன் திருமணம் என்றால் மறுக்கின்றாள்? இதை கண்டறிய அர்ஜுன் தன் அண்ணியிடம் கலந்தாலோசிக்க, ஆராதனா குடும்ப பின்னனி தெரிய வருகின்றது. 

   ஆராதனா தந்தைக்கு வேறொரு குடும்பம் இருக்க, அக்கா வாழ்வும் திரிசங்கு சொர்க்கமாக, தனக்கு மட்டும் வாழ்க்கை சொர்க்கமாகவா அமையுமென்ற சலிப்பு.

  அர்ஜுன் அவள் நினைப்பை பொய்யாக்குகின்றானா? இல்லை அவளை நல்லபடியாக புரிந்து கொள்கின்றானா? 
  
   ஆரம்பத்துல அர்ஜுனை பிடிச்சது. அதென்னவோ கடைசில சந்தோஷை பிடிக்குது. யார் இந்த சந்தோஷ் என்பது லிட்டில் டிவிஸ்ட்.

வாழ்த்துகள்🎉


Comments