அள்ளிக் கொண்ட தென்றல்

#ஜோதிரிவ்யூ

படைப்பு : அள்ளிக் கொண்ட தென்றல்

வெளியீடு : வைகை தளம்

எழுத்தாளர் : இன்பா அலோசியஸ்

அத்தியாய அளவு : 27

லிங் : 


ஒற்றை மகள் மீது உயிரையே வைத்து, அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்கிறார் நாயகியின் அப்பா. மனைவி கூட அவர்களுக்கு இடையில் வர முடியாத அளவிற்கு அவர்களின் பாசப்பிணைப்பு காணப்படுகிறது. அப்படிப்பட்ட மகளது திருமணம் அவரது விருப்பத்தையும் மீறி, எதிர்பாராத விதமாக மனைவி மற்றும் நாயகனின் அம்மாவால் நடக்க, அதனால் அவர் எடுக்கும் முடிவுகள் மகளது வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது? அதனால் பாதிக்கப்படும் மகள், மருமகனின் நிலை என்று களம் அருமையாக நகர்கிறது.

 முதல் பார்வையில் நாயகியை பிடித்து விடும் நாயகன், அதை அவள் அப்பாவிடமே கூறி அவரை கோபப்பட செய்வதும், அவளிடம் பேசும் இடமும் நன்றாக இருக்கிறது. அதே நேரம், திருமணமான பிறகு அவனிடம் பல பரிமாணங்கள் தென்படுகிறது. மாமனார், மருமகன் மோதும் இடங்கள் இனி என்ன நடக்கப் போகுதோ எனும் எதிர்பார்ப்பையும், ஒரு வித பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

நாயகி அப்பாவியான தோற்றம். அப்பா.. அப்பா.. என பின்னாடியே சுற்றும் சிறு பிள்ளையை போலவே காட்சியளிக்கிறார். நாயகனின் முதல் பார்வையில் தடுமாறுவதும், திடீர் திருமணத்தால் பயந்து போவதும், அப்பா தனக்கு நல்லது செய்வார். தனக்கு பிடித்தது அவருக்கும் பிடிக்கும். தான் அவரது விருப்பம் போல் நடந்து கொண்டால் அவரும், தனது விருப்பத்தை செவிசாய்ப்பார் என்று காத்திருப்பதும், தகப்பனுக்கு பயந்து கணவனிடம் பேசும் இடங்களும், கண்ணாடி சம்பவமும், தனது எதிர்கால வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது என்று உணரும் இடமும் நன்றாக இருக்கிறது. (ஆனாலும், எங்களை ரொம்பவே சோதிச்சிட்டீங்க அம்மணி. உங்களின் எதிர்மறை நடவடிக்கை சூப்பர் போங்க... )

பரமேஸ்வரன் என்ற பெயரை நாயகியின் அப்பாவிற்கு வச்சிட்டதால் வாய் விட்டு நாலு வார்த்தை திட்ட முடியல. என்னா வில்லன் வேலை பார்க்கிறார் மனுஷன். ஆரம்பம் முதல் இறுதி வரை அவரைப் பிடிக்கவே இல்லை. அம்மா பாத்திரம் பிரமாதம். நாயகனின் அக்கா, அத்தான், மகள், அம்மா அத்தனையும் அருமையான தேர்ந்தெடுப்பு.

நாயக, நாயகியின் உணர்வுப்போராட்டம் மனதை வருத்தவும், நெகிழவும் வைக்கிறது.

தொடர்கதை வாசிக்க நல்லா இருக்கு. இதுவரை வாசிக்காதவர் இருந்தால் வாசித்து மகிழுங்கள்.

மேலும் நிறைய எழுத வாழ்த்துகள் சகோதரி💐💐💐

Comments