#எழுத்தாளர் அறிமுகப்படலம் சீசன் இரண்டு
4.
பெயர்: ஸஹ்ரா நஸீர்
சொந்த ஊர்: இலங்கை களுத்துறை எனும் ஊரை சேர்ந்தவள்
படிப்பு: கொலிபைட் டு எட்வான்ஸ் லெவல்
பணி: இல்லத்தரசியாக இருக்கின்றேன்
தளம்: வாட் பேட் -zaro_faz
அமேசான் பெயர்: நான் எனது கதைகளை இன்னும் அங்கு பதிவிடவில்லை .
******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
ஆம் சொல்லலாம். நான் ஸஹ்ரா நஸீர் கதைக்கும் சரி நிஜத்திலும் சரி எனது பெயர் இதுதான் வீட்டில் மூத்த மகள். எனவே பத்தொன்பதிலே திருமணம் முடித்து வைத்து விட்டார்கள். அத்தோடு படிப்பும் பாடசாலை படிப்பு மட்டும் தான். அதற்கு காரணம் நான் தான் படிக்க சொன்ன பெற்றவர்களிடம் முடியாது என்று வீட்டில் இருந்து விட்டேன். அதற்காக கொஞ்சம் கவலை பட்டு கொண்டு தான் இருக்கின்றேன்.
....
🙂🙂🙂
*******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
ஆரம்பத்தில் வாசகியாக மட்டுமே இருக்கும் காலத்தில் ரமணிசந்திரன் அவர்களின் கதையை தான் விரும்பி படிப்பேன். எழுத ஆரம்பித்த பின்பு ராஜேஷ் குமார் மற்றும் சிலரது நாவல்கள் படிப்பேன்.
******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
நான் பாடசாலை படிக்கும் போது தான் எனது முதல் கதை எனக்குள் வந்தது அதை என் சகோதரியிடம் மட்டும் சொல்லியும் உள்ளேன் ஆனால் அதற்கு இன்று வரை நான் எழுத்தால் உயிர் கொடுக்கவில்லை அத்தோடு அந்த கதையை விட்டு விட்டேன் பின்பு அடுத்த வருடமே கையில் பேனாவை வைத்து கொண்டு ஒரு நோட் புக்கையும் வைத்து கொண்டு எழுதுறேன்னு சுற்றினேன் அது பாதியிலை புட்டுகிச்சி.
அதன் பின்பு அடுத்த வருடமே இரண்டு சிறுகதைகள் எழுதினேன் அதுவும் எனது மொபைலில் இருந்த மெமோ எனும் எப்பில் தான் அதை வாட்சப்பில் எனது நண்பர்களுக்கு அனுப்பியும் வைத்தேன் அவர்கள் பாராட்டியதும் இன்னும் ஒரு சிறுகதை எழுதினேன் அத்தோடு என் வாழ்வில் நடந்த சில கசப்பான அனுபவமும் என்னை சுற்றி இருந்த சிலருக்கு நடந்த கசப்பான அனுபவத்தையும் சேர்த்து வைத்து ஒரு கதை எனக்குள் உதித்தது அதை தொடர் கதையாக்குவோம் என்று. மீண்டும் மெமோவில் தான் எழுதினேன் அந்த எப்பில் 500 சொற்கள் தான் எழுதவும் முடியும் எனவே அதன்படியே ஒவ்வொரு பகுதியும் குட்டியாக தான் இருந்தது.
அப்படி எழுதி அதை என்னை பாராட்டிய நண்பர்களுக்கு அனுப்புவேன் பின்பு வாசிக்கும் அனைவரையும் க்ரூப்பாக இணைத்து அதில் பதிவிட்டேன்.
அத்தோடு எனது இரண்டாவது கதையும் அப்படி தான் உருவாக்க பட்டது. மூன்றாவதும் அப்படியே அதன் பின்பு ஒருவர் மூலம் என்னை வந்தடைந்த எப் தான் வாட்பெட்
எனது நான்காம் கதை தான் வாட்பேடில் எழுதப்பட்டது ஆனால் முக்கியமான விடயம் என்ன என்றால் எனது அந்த நான்கு கதையுமே தங்லீஷில் தான் இருக்கும் அப்போது நான் வட்பேடில் சந்தித்த சகோதரி தான் தமிழ் fontல் எழுத சொல்லி ஆர்வமூட்டினார்கள்
அதன் பின்பு நான் அடைந்த பாராட்டுகள் கொஞ்சம் அழகானவை தான்.
நான் இன்று பன்னிரண்டாம் கதையை ஆரம்பிக்க உள்ளேன் என்றால் அதற்கு காரணம் எனக்கு வலியை தந்து சென்ற சில உறவுகளும் ஆர்வமூட்டிய வாசகர்களும் என் சகோதரிகளும் தான்.
....
மிகவும் அருமையான அனுபவம்
*****
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
தனிமையில் இருந்த என் வாழ்க்கை
*******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
ஹம் நீ தான் என் காதலா என்ற நாவல் தான் காரணம் நான் தமிழ் எழுத்தில் எழுதிய முதல் கதை அது.
******
நீங்கள் எழுதிய மொத்த நாவல்:
பதினொரு நாவல்கள்
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
ஆறு வருடங்கள் என்று நினைக்கிறேன்
******
தொடர்கதை எழுதுவது ஈஸியா நாவல் எழுதுவது ஈஸியா:
ஆரம்பத்தில் எழுதியது தொடர் கதை தான் இப்போ நாவல் வடிவு. இரண்டுமே எனக்கு கஷ்டமில்லை
*****
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
தற்போது நான் ப்ரீயாக உள்ளேன் அடுத்த கதைக்கான ச்க்ரிப்ட் சிந்தித்து கொண்டு இருக்கின்றேன் 2 வாரங்களுக்கு முன்பு தான் கல்லுக்குள் ஈரமா எனும் கதையை முடித்ததே
******
உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் :
1)தனிமையில் இருந்த என் வாழ்க்கை
2)அழகான சதிகாரி
3)நாமிருவர்
4)உனக்காக நான் இருப்பேன்
5)நீ தான் என் காதலா
6)கானலாகிய வாழ்க்கை
7)குற்றம் யார் செய்தது
8)சதியே விதியாய்
9)சந்திப்போமா
10)மீண்டும் வருவாயா
11)கல்லுக்குள் ஈரமா
********
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா:
ஆம் பிரதிபிலிலியில் ஒரு போட்டியில் பங்கேற்று
உள்ளேன் அத்தோடு அங்கி சிறகுகள் என்ற குழு நடாத்திய சிகரேட்டு பாவனை பற்றிய சிறுகதையில் இரண்டாம் இடம் பெற்றேன்
******
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
என்னை வெளி உலகுக்கு அறிமுகம் செய்த என் முதல் கதை தனிமையில் இருந்த என் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்த கதை. அத்தோடு என்னேயும் என் எழுத்தையும் அழகாக காட்டி அதிக வாசகர்கள் வாசித்த நீ தான் என் காதலா கதையும் எனக்கு பிடித்தவைகள்
******
உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
நீ தான் என் காதலா-வித்யா வேல்,சூர்யா
தனிமையில் இருந்த என் வாழ்க்கை-ரஜீவ், ஹாஷினி
மீண்டும் வருவாயா- ஸ்ரீ ஹரி
சதியே விதியாய்- ரஜீவ் ப்ரகாஷ்
யோசித்துப் பார்த்தால் இன்னும் இருக்க வாய்ப்பு இருக்கு கேள்வியை கண்டதும் மனதுக்குள் வந்தது இவர்கள் தான்
....
அருமை சிஸ்
******
உங்கள் நாவல்orதொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது:
நீ தான் என் காதலா மற்றும் கானலாகிய வாழ்க்கை
*******
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
எனக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. எனது இந்த இருபத்தி மூன்று வருட வாழ்க்கையில் என்னை முழுமையாகத் தெரிந்து கொண்டவர்கள் யாருமில்லை.
12 வருடம் படித்த பாடசாலையில் கூட யாருமே நண்பர்கள் இல்லை அத்தோடு திருமண வாழ்க்கை அதன் பின்பு நட்பு தேட எனக்கு நேரமே இல்லை.
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
எனக்கு புதிராக இருக்கும் விடயங்கள் தான் பிடிக்கும். எனவே அது போன்றவை தான் வாசிக்க விரும்புகிறேன் ஆனால் இந்த இரண்டு வருடமாக எந்த புத்தகங்களும் வாசிக்கவில்லை
******
உங்கள் கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
நன்றி எனும் சொல் மிக சிறிது எனவே சிறந்த கதை ஒன்றை அடுத்து தருகின்றேன்.
விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டுமா.நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:
ஒரு சிறுகதைக்காக சர்டிபிகேட் வாங்கி உள்ளேன் அதை பற்றி மேலே கூறியுள்ளேன்
******
தொடர் கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்க வேண்டும்:
சத்தியமாக தெரியாதுங்க நான் எனக்கு பிடித்த மாதிரி தான் முதல் அத்தியாயம் தொடர்ந்து கடைசி வரை எழுதுவேன் அது போன்றே அனைத்து எழுத்தாளர்களும் அவர்களுக்கு பிடித்தது போன்று எழுதுவது தான் சிறந்த முறை
*******
ஒரு நாவல் or தொடர் கதையை கையில் எடுத்து வாசித்தவுடன் எதனால் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகின்றனர்:
வர்ணிப்பது அளவுக்கு மீறாமல் கதை செறிவு அதிகமாக இருந்தால் எனக்கு பிடிக்கும்
******
ஏன் சலிப்பாக இருப்பதாக நினைத்து மாற்றி விடுகிறார்கள்?
அளவுக்கு மீறிய வர்ணனைகள் தான் என்னை பெரும்பாலும் புத்தகத்தை மூட வைப்பது
******
வீட்டில பசங்க கணவர் யாருடனாவது சிரித்து பேசி மகிழ்ந்தபடி கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
கணவனுடன் நான் பெரிதாக இதை பற்றி பகிர்ந்தது இல்லை.... எழுதுவது தெரியும் அவருக்கு.... ஆனால் அதை தடுக்கவில்லை தட்டி கொடுத்துமில்லை
******
நேரடியாக நடந்த சம்பவத்தை கதையாக எழுதிய அனுபவம் இருக்கிறதா :
ஆம் உண்டு நடந்த ஒரு சம்பவத்தின் கரு மட்டும் என்னை வியக்க வைத்தது எனவே அதை நானும் கதை கருவாக வைத்து எழுதி உள்ளேன்
*****
கதை எழுதும் முன்பு டைரியில் எழுதி வைத்து எழுதும் பழக்கம் உடையவரா அல்லது மனதின் வார்த்தைகளை கோர்வையாக வடிவமைப்பீர்களா :
இது வரை நான் எதையும் குறிப்பு எடுத்து செய்து இல்லை எழுதும் போது தோன்றுவதை எழுதுவேன்
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நிலைத்தால் தயங்காமல் சொல்லலாம் :
தனிப்பட்ட முறையில் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை..... என்று தான் சொல்வேன்...
நானும் கற்பதன் தான்
நாவல் எழுதும் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏதாவது உண்டா?
அதிகமான ஆட்களின்றி ஒரு சிலர் மட்டுமே இருந்தால் குழப்பம் ஏற்படாது அத்தோடு கன்டினியூஸ் மிஸ் ஆகாது இருந்தால் நல்லது நன்றி
.....
மிக்க நன்றி🙏🙏 சகோதரி
உங்களது பதில் எதார்த்தமாகவும் அருமையாகவும் இருந்தது.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் நாவல்களை வாசித்தவர்கள் அதைப் பற்றிய கருத்தை தெரிவிக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்.
நன்றி
Comments
Post a Comment