#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#இதுநம்மஏரியா
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் நபர் தாமரை....
அவர்களைப் பற்றிய விபரங்கள் :
பெயர் : தாமரை
சொந்த ஊர் : சென்னை
படிப்பு : M.Phil.
பணி : இல்லத்தரசி ( வீட்டில் இருந்தபடியே ஹிந்தி வகுப்புக்கள்)
தளம் : எஸ்எம்எஸ் கம்யூனிட்டி
அமேசான் பெயர்: தாமரை thamarai
********
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
புதிது புதிதாக முயற்சிகள் செய்வதில் ஆர்வமுள்ளவள். தமிழ் பிடிக்கும். மொழி ஆராய்ச்சி பிடிக்கும்.
எனது ரசனைக்கு உட்பட்ட கலைகளில் ஆழ்ந்து போவது பிடிக்கும்.
******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
பாலகுமாரன், சுஜாதா, இந்திரா சௌந்தரராஜன், காஞ்சனா ஜெயதிலகர், ரமணி சந்திரன், ஜெயசக்தி, உஷாந்தி, நிவேதிதா ஜெயானந்த், ஸ்ரீகலா, வநிஷா, விஜயமலர், சம்யுக்தா
******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
சொன்னால் சிரிக்காதீர்கள், எழுத்து அனுபவம் எனக்கு, சமையல் செய்வது போலவே உணர்வாகும். முதலில் அம்மா உணவு, ஹாஸ்டல் உணவு , விதவிதமான ஹோட்டல் உணவுகள் உண்டு மகிழ்ந்து, கடைசியில் கையைச் சுட்டு அனுபவப்பட்டு, நிறை குறை அறிந்து நமது ருசிக்கு சமைப்பது போல, வாசிப்பில் நமது ருசிக்கு படைப்பதே எழுத்து. எனது எழுத்துக்களை, என்னோடு ஒத்த சிந்தனை உள்ளவர்கள் படிக்கிறார்கள் என்பது எனது எண்ணம்.
....
ஒப்புமை அபாரம்😂😂😂😂
******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
சேதி என்ன வனக்கிளியே...
********
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
ஸ்ரீகலா,ராஜி அன்பு, விஜயமலர்
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
மெல்லிய காதல் இழையோடும் கதைகள், இயல்பான நடையில் உறவுகள் சமூக நன்மை வலியுறுத்தி செல்லும் கதைகள்.
******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
எனது முதல் கதை பலரின் கவனம் ஈர்த்தாலும், இரண்டாம் கதையான 'உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.' எழுத்துலகில் தனிமரியாதை பெற்றுத் தந்ததாக உணர்ந்தேன்.
******
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
முடித்தது 4 எழுதிக் கொண்டிருப்பது 1
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
அக்டோபர் 2018ல் தொடங்கினேன். 2-3 வருடங்கள்..
*****
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே..
******
உங்கள் நாவல்களின் பெயர்கள் :
1.சேதி என்ன வனக்கிளியே…
2. உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.
3. ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்.
4. மஞ்சள் வானில் மயங்கும் கதிரே..
5. கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே..
*******
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
ஒவ்வொரு நாவலும் ஒரு களத்தில், தளத்தில் இருக்கும்.
1 கிராமிய குடும்ப கதைக்குள் காதல் , 2 வது வரலாற்று நடை மற்றும் சமூகம், 3 வது த்ரில்லர் சஸ்பென்ஸ், 4 வது அமானுஷ்யம் என நான்கு நாவல்களும் நான்கு விதம்.
தற்போது எழுதும் 5 வது கதை இளமைக் கொண்டாட்டமாய், ஒவ்வொரு வசனத்திலும் நகைச்சுவை இழையோட கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
.....
அருமையான பதில் சிஸ்டர்
******
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நாவல்கள்:
வரலாற்று நாவல்கள், மென் காதல் கதைகள், நகைச்சுவையுமாக இயல்பாக நகரும் கதைகள்.
********
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
பெற்ற பிள்ளைகள் அனைவரையும் அன்னைக்குப் பிடிக்கும், அதே போல,
நான் படைத்த அனைவரையும் எனக்குப் பிடிக்கும். என் உள் மனதிற்கு பிடித்தது போலத்தான் நாயக நாயகியரைப் படைத்தேன்.
********
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :
இரண்டாவது நாவல் " உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்" வரலாற்றுக் கதையும் நிகழ்காலத்தில் தற்போது நடப்பதும் ஒரே அத்தியாயத்தில் வருவது போல, "அன்று/இன்று" என்று கொடுத்தேன்..
அது பலருக்கு ஆச்சரியத்தையும், அனைவரின் அபிமானத்தையும் கொடுத்தது.
******
உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
உங்களுக்கு நிறைய பொறுமை மற்றும் அன்பு..தோழமைகளே..
என்னையும் ஒரு கதை சொல்லியாக ஏற்றுக் கொண்டமைக்கு இந்த அன்பும் பொறுமையும் மட்டுமே காரணம் என்பதை அறிவேன்.. தொட்டுத் தொடரும் இந்த அன்பிற்கு, என்றும் பதிலாய் இருக்க விழைவேன்.
*******
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :
ஒரே ஒரு முறை. எஸ் எம் எஸ் அழகிய சங்கமம் 1 போட்டியில் கலந்து கொண்டேன். ஆறுதல் பரிசு கிடைத்தது.
*******
உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:
படிப்பதில் தான் ஆர்வம் அதிகம், அதற்காக எல்லாவற்றையும் படிக்க இயலாது ,என் ரசனைக்கு உட்பட்டவை படித்தேன்.. ஒரு கட்டத்தில் , பொதுவெளியில் என் மீதான மதிப்பை உயர்த்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டது.. அப்போதுதான் எழுத ஆரம்பித்தேன். தூண்டுதல் நிச்சயமாக வம்பு வளர்த்து எழுதத் தூண்டிய இனியவர் மட்டுமே..
*******
நாளிதழ்களில் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இல்லை.
********
நீங்கள் எழுதிய நாவலிலே உங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தை பற்றி விளக்க முடியுமா:
எல்லாமே தான். எனக்கு பெண்களை முன்நிறுத்துவது பிடிக்கும். எனது கதைகளில் பெண்கள் தனி ஆளுமையுடன் இருப்பார்கள். அந்த விதத்தில் இராணி சந்திர வதனாம்பிகை (உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்), கதிரொளி (மஞ்சள் வானில் மயங்கும் கதிரே) இருவரையும் பிடிக்கும்.
லேட்டஸ்ட் லவ்வர் க்ரியேஷன், இப்போது எழுதிக் கொண்டிருக்கும் மது வர்ஷினி (கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே)
******
ஒரு எழுத்தாளன் எப்பொழுது வெற்றி பெறுகிறானு நினைக்கிறீங்க:
தனி மனித மனத்தில் ஒலிக்கும் கருத்துக்கள்.. பெருவாரியான வாசிப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் போது.. அவன் வெல்கிறான்..
*****
ஒரு நாவலைப் பார்த்தவுடன் மனதில் என்ன தோன்ற வேண்டும் :
'சான்ஸே இல்லை.. இது போல ஒன்று இனி வர சான்ஸே இல்லை.. 'எனும் உணர்வு.
எங்கோ உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த உயிர் திடீரென்று உதறி எறியப் பட்டு, நிஜ உலகை அடைநதாற் போல்.. தோன்ற வேண்டும்.
ஒரு கதையானது அந்த அளவு, படிப்பவரை, தனக்குள் ஈர்த்துக் கொள்ள வேண்டும்
....
👌👌
*********
உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்கு விக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :
மிக மிக அதிகமாக.. எழுத வேண்டும் தொந்தரவு செய்யாதீர்கள் என்றால், சில மணி நேரங்கள், அந்த அறைக்குள் வருவதையே தவிர்த்து விடுவார்கள். பேச ஆரம்பிக்கும் போது, எழுதிட்டு இருக்கியா, டிஸ்டர்ப் பண்றனா என்று கேட்டுத் தான் பேச ஆரம்பிப்பார்கள். இது போல குடும்பம் அமைவது வரம் தான்
....
நிஜமாக
*****
சமூக நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா :
நான் எழுதிய, எழுதுவது அனைத்தும் சமூக நாவல் என்று தான் நினைக்கிறேன்.
*******
உங்கள் கதைகளில் கவிதை , வருணைகள் கலந்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறதா :
உண்டு.. முதல் கதையில் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் கவிதை நடையில் வரிகள் கொடுத்திருந்தேன். இடம் பற்றிய வர்ணனைகள் எழுத பிடிக்கும். படிப்பவர்களை என கற்பனையில் தெரியும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஆர்வத்தில் எழுதுவேன்.
******
நார்மலாக ஆன்லைனில் எழுதும் கதைக்கும், போட்டி கதைக்கும் உள்ள வித்தியாசம் :
போட்டிக் கதைகள் பொறுப்பு மிகவும் அதிகரிப்பதாகவும் , அழுத்தம் கூடுவதாக தோன்றியது. ஆன்லைன் கதைகளுக்கு வாசக வட்டம் இருக்கும் அவர்களின் ஊக்கமும் இருக்கும், போட்டியில் ஓடும் போது அதிக கதைகள் அதே நேரம் வந்து கொண்டிருப்பதன் காரணமாக, அந்த ஊக்கம் குறைவாகவே கிடைக்கும்..
******
சமூக நாவல் என்றால் என்ன :
எனது அறிவுக்கு எட்டியபடி, நாம் தான் சமூகம், இங்கே நடப்பதைப் பற்றி எழுதுவது சமூக நாவல். குடும்பம், உறவுகள், காதல், என்று வரும்.
******
காதலைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்ல முடியுமா :
காதல் அன்பின் அதிகபட்ச நிலை.. இதன் வெளிப்பாடு வயதுக்கு தகுந்தாற் போல் மாறும்.
******
கூட்டுக் குடும்பத்திற்கும் தனிக்குடித்தனத்திற்கும் உள்ள வித்தியாசம் :
இப்போதைய சூழலில் இது போல அமைப்புகளே சிதைந்து விட்ட நிலை. குடும்பம் என்பதே ந்யூக்ளியர், சிங்கள் பேரண்ட் என்று போய்க் கொண்டிருக்கிற சமூக கோட் பாடுகள் மாறும் காலகட்டத்தில் இருக்கிறோம்.
******
உங்களது படைப்புகள் பொதுவாக எதைச் சார்ந்து இருக்கும் :
அன்பு, மனதின் உணர்வுகள் மையப்படுத்தியதாய் இருக்கும்.
******
ஒரு தொடர்கதை அல்லது நாவல் எழுதும் முன்பு கவனிக்க வேண்டியது என்ன :
மனதுக்கு பிடித்ததை கருவாக எடுக்க வேண்டும். இப்போதைய ட்ரண்ட் , வாசகர்கள் விருப்பம் என்று இலக்கு வைத்தும் செய்யலாம்.
******
ஒரு கதை எழுதுவதற்கு முன்பு மொத்த கதையும் டைரியில் எழுதி விடுவீர்களா அல்லது கருவை மட்டும் மனதில் கொண்டு எழுத்தோட்டத்தில் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பீர்களா :
நான் கருவை மட்டும்தான் மனதில் வைத்து எழுத ஆரம்பிப்பேன். ஒரு கதை நகர ஆரம்பிக்கும் போது மிக சிரமமாக இருக்கும்...
ஐந்து பதிவுகள் வந்ததும் ஒரு தெளிவு கிடைக்கும். கதை மாந்தர்கள் குணஇயல்புகள் வசப்படும்.
அதன் பின் நகர்வது/ நகர்த்துவது சற்று எளிதாக இருக்கும்.
பத்து யூடிக்கள் தாண்டியதும், அடைய வேண்டிய இலக்கு மற்றும் பாதை தெளிவு எனக்கு வந்துவிடும்.
.....
நிஜம் தான் சிஸ்டர்
*******
உங்களுடைய கதையின் மொத்த வார்த்தைகள் இத்தனை இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதுவது உண்டா:
இல்லை.. கதைக்கு அப்படி எண்ணியதே இல்லை. பதிவுகளுக்கு குறைந்தது 1500 வார்த்தைகள் இருக்க ஹேண்டும் என்று கேள்விப் பட்டதால், அதை மெயிண்டைண் செய்கிறேன்..
......
மிக்க மகிழ்ச்சி சிஸ்டர். உங்களது கருத்துகள் மிகவும் அருமையாக இருந்தது.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐 மற்றும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளர் கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை தாராளமாக முன் வைக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்
மிக்க நன்றி
🙏🙏🙏🙏
நன்றி ஜோதி மா..
ReplyDeleteநன்றி மா.. மிக்க மகிழ்ச்சி.
ReplyDelete