#எழுத்தாளர்அறிமுகப்படலம்
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்று நான் உங்களிடம் அறிமுகப்படுத்தப் போகும் எழுத்தாளர் இன்பா அலோசியஸ்
அவரைப் பற்றிய விபரங்கள் கீழ் வருமாறு
1. பெயர் : இயற்பெயர் : சோபியா இன்பென்டா L(Sophia Infanta) கதைக்காக என் பெயரின் பின் பாதியும், கணவரின் பின்பாதி பெயரையும் சேர்த்து இன்பா அலோசியஸ்.
2. சொந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமம்.
3. படிப்பு : B.Sc., B.Ed.,
4. பணி : ஆசிரியை
5. தளம் : https://infaalocious.wordpress.com/
6. அமேசான் பெயர் : Infaa Alocious
7. ஒரு எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:
ஒரு எழுத்தாளர் இப்படித்தான் இருக்கணும்னு நாம நினைக்கவே முடியாதே. அவங்க அவங்க தனித்துவத்தை பொறுத்தது அது.
8. நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
ஆன்லைனில் “காவலன் நானே” கதையை இப்பொழுது தொடர்கதையாக பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
9. உங்கள் நாவல் சிலவற்றின் பெயர் :
இது காதலென்றால், நினைவலையில், தேடல் சுகமானது, மௌனயுத்தம், மின்மினியாய் நான். தண்ணீரில் தாகம் –
1. 2. இதயக்கதவு. எல்லாம் உன்னாலே. உயிரே உனக்காக. முகத்திரை. மனதைத்திறக்குமோ மௌனங்கள். காத்திருந்தேன் சகியே இப்படி சில.
10. ஒரு வாசகனுக்கு நாவலை கையில் எடுத்த போதும் சரி முடிக்கும் போதும் சரி என்ன மாதிரி உணர்வு வர வேண்டும் என்று நினைக்கிறீங்க:
ஒரு நாவலை படிக்கத் துவங்கும் பொழுது அது நம்மளை படிக்கத் தூண்டணும். அடுத்த அடுத்த அத்தியாயங்களுக்கு நம்மளை இழுத்துட்டுப் போகணும். அதேபோல் முடிக்கும் பொழுது ஒரு நிறைவைத் தரணும்னு நினைக்கறேன்.
11 .உங்கள் கதைகளில் கவிதை வரிகளின் தாக்கம் இருக்குமா:
நான் துவக்கத்தில் எழுதிய கதைகளில் கவிதைன்னு எதையோ கிறுக்கிட்டு இருந்தேன். இப்போ அதை விட்டுவிட்டேன்.
இந்த கேள்விக்கு மற்றவர்களின் கவிதைகளை படித்ததன் தாக்கத்தைப் பற்றி கேக்கறீங்கன்னா அப்படி எதுவும் இருப்பதில்லை.
12. நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
எனக்கு ரொம்ப பிடிச்ச கதைன்னா... முகத்திரை, நீயின்றிபோனால் நான் வீழ்ந்து போவேன், காதல் பிரம்மா, என்னை என்ன செய்தாயடா, அழகான தவறு நீ இப்படி சொல்லிட்டே போகலாம்.
என்னைக் கவர்ந்த கதாப்பாத்திரம் : “பிரம்மா” எனக்கே அந்த படிப்பின்மேல் ஒரு பிரமிப்பு இருக்கு. இப்போ ரீசண்டா “பவித்ரன்” “உன் நிழலில் நான்” கதையின் நாயகன்... ரொம்ப கவர்ந்திருக்கிறான்.
13. காதல் பற்றி சில வரிகளில் சொல்வதாக இருந்தால் :
பெரும் நம்பிக்கையும், அடிப்படை புரிதலும், விட்டுக் கொடுத்தாலும், ஒருவரை ஒருவர் சமமாக மதிப்பதுமே காதல்ன்னு நினைக்கறேன். அதுக்கு மேலே என்ன சொல்லன்னு தெரியலை.
14. உங்களது கதை அழுத்தமான படைப்பாக இருக்குமா அல்லது ரசனை சுவராஸ்யம் விருவிருப்பு கலந்த படைப்பாக இருக்குமா:
என் கதைகள் எல்லாமே அழுத்தமான கதைகள்தான். ஆனால் முடிவு எப்பொழுதுமே ஒரு ஃபீல் குட் உணர்வை, நிறைவைக் கொடுக்கும். அதில் எப்பொழுதுமே ரொம்ப கவனமா இருக்கறேன்.
15. உங்கள் நாவலில் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு ஆரம்பம் முதல் முடிவு வரை
மிகவும் எதிர்பார்பாக சென்ற நாவலாக நினைக்கிறிங்க :
“காதல் பிரம்மா” இந்த கதையை துவங்கியது முதல், முடிவு வரைக்கும் ஒவ்வொரு பதிவையும் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்து, விறுவிறுப்பாக போனது.
கூடவே நீயின்றிபோனால் நான் வீழ்ந்து போவேன்” நாவலும் இதற்கு குறையாத வரவேற்பை பெற்றது.
16. உங்களது படைப்புகள் குடும்ப நாவலாக தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்குமா அல்லது சமூக அக்கறை நிறைந்த நாவலாக இருக்குமா:
குடும்பம், காதல் கதைகளையே நான் எழுதுகிறேன். சில கதைகளில் சமூக அக்கறை சார்ந்த விஷயங்கள் இருக்கும்.
17. உங்களை கவர்ந்த எழுத்தாளர்: சாண்டில்யன்
18. நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
எழுத வந்த பிறகு படிக்கும் நேரம் மிகவும் குறைந்து விட்டது. முன்னர் ரமணிச்சந்திரன், சாண்டில்யன், கல்கி இவர்களது நாவல்களை விரும்பி படித்திருக்கிறேன்.
இப்பொழுது ஆன்லைனில் எழுதும் என் சக எழுத்தாளர்களில் தேர்ந்த சிலரது எழுத்துக்களை மிஸ் பண்ணாமல் படித்து விடுவேன். அவங்களை இங்கே குறிப்பிட்டால் மற்றவர்கள் மனம் வருந்துவார்கள் என்பதால் அவர்களது பெயர்கள் வேண்டாமே...
....
நல்லது.
19. உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
என் வாசகர்கள் அனைவருக்கும் என் பேரன்புகள். விளையாட்டா துவங்கிய என் பயணத்தை நீண்ட நெடும் பயணமாக உரு மாற்றியது அவங்கதான். என் கதைகளை நேசிக்கும், வாசிக்கும் என் அன்பு உள்ளங்களுக்கு என் அன்பையும், நன்றியையும் தவிர என்ன சொல்ல?
20 . உங்களைப் பற்றிய ஏதாவது special news இருந்தால் சொல்லவும்:
அப்படி எதுவும் இப்போதைக்கு இல்லையே...
21. உங்களது குறிக்கோள்:
நான் பிறந்த ஊரில், நான் சிறு வயது முதலே கண்டு வந்த விஷயங்களை ஒரு நாவலாக எழுத வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் எப்போ எழுதுவேன்னுதான் தெரியலை.
22. விருது வாங்கிய அனுபவம் உண்டுமா, நாவலின் பெயர் :
நாவலுக்காக விருது வாங்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. இந்த மகளிர் தினத்தன்று, குவிகம் அமைப்பும், லேடிஸ் ஸ்பெஷல் கிரிஜா ராகவன் அவர்களும் இணைந்து நடத்திய விழாவில், என்னையும் ஒரு எழுத்தாளராக அங்கீகரித்ததே மிகப்பெரிய விருது.
23. உங்கள் தளத்தில் வேறு யாரும் நாவல் எழுதுறாங்களா?
என் தளத்தில் நான் மட்டுமே கதை எழுதுகிறேன்.
24. pdf திருட்டு பற்றிய உங்களுடைய கருத்து :
Pdf திருட்டு பற்றி... உங்கள் செயல் அடுத்தவரை பாதிக்கும் என்றால்... அதை அவர்கள் திருத்திக் கொள்வது நலம். ஒருவரின் மன வலியில் இன்பம் காண்பது மனித குணம் இல்லை. அவரவர் செயலுக்கு கடவுளிடம் கணக்கு கொடுக்க வேண்டியது அவர்களே.
25. காதல் படைப்பிற்கும் குடும்ப படைப்பிற்கும் உள்ள வித்தியாசம்:
காதல் படைப்புக்களில், காதலும், அதைச் சார்ந்த பிரச்சனைகளையும், காதலால் விளையும் சில பக்க விளைவுகளையும் மட்டுமே முன்வைத்து எழுதுவோம். குடும்ப கதைகளில், உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள், உணர்வு போராட்டங்கள், உரிமை மீறல்கள், உரிமைப் போராட்டங்கள் என அதைச் சுற்றி கதை பின்னப்படும்.
26. உங்களது எழுத்து அனுபவம் பற்றி சில வரிகளில் சொல்வதாக இருந்தால் :
என் எழுத்து அனுபவம் பற்றி நமக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு விஷயத்துக்கு உணர்வுகளும், உயிர்ப்பும் கொடுத்து உலவ விடுவதில் ஒரு அலாதி திருப்தி இருக்கு. அதை மற்றவர்களும் ரசிக்கும்படி கொடுக்க வேண்டும் என்ற மெனக்கெடல் இன்னும் அதிகமாவே இருக்குன்னு சொல்லலாம்.
27. நாவல்கள் எழுதும் போது இடம் பெறும் காதல் காட்சிகளை உணர்வு பூர்வமாக கையாள்வீர்களா அல்லது காட்சிக் கேற்ற நகர்வு வருமா:
என் கதைகளில் காதல் காட்சிகளை அதற்கேற்ற நகர்வுகளோடு, உணர்வு பூர்வமாக கொடுக்க முயற்சி செய்வேன். அது மற்றவர்கள் ரசிக்கும்படி இருக்கவேண்டும் எனவும், முகம் சுழிக்காத அளவுக்கும் இருக்க வேண்டும் என கொஞ்சம் அதிகமாகவே கவனமெடுப்பேன்.
👏👏👏 சபாஷ் அருமையான பதில்கள்
உங்களது நாவல் எழுத்தாளர் அறிமுக நிகழ்வில் என்னையும் இணைத்ததில் ரொம்ப சந்தோசம். நன்றி, வணக்கம்
ஹாய் பிரண்ட்ஸ்,
எழுத்தாளர் இன்பா அலோசியஸ் எழுத்துலகிற்கு வந்து 11 வருடங்கள் ஆன நிலையில் " 45 (35 நெடுந்தொடர் நாவல்கள், 10 குறுநாவல்கள்) எழுதியிருக்கிறார்கள்.
அவர்கள் எழுதிய முதல் நாவல் "இது காதலென்றால் " என்றாலும்
தனது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக "
தண்ணீரில் தாகம்... எனக்கு ஏகப்பட்ட வாசகர்களையும், நல் உள்ளங்களையும் கொடுத்த நாவல். " என்று சொல்லியிருக்காங்க.
உங்களது விருப்பமான எழுத்தாளர் யாரெல்லாம் கேட்டதற்கு "
நிறைய பேர் இருக்காங்க. முக்கியமா ரமணிச்சந்திரன் மேம், சாண்டில்யன், கோட்டயம் புஷ்பநாத், மணிமாலா, சுமதி, வித்யா சுப்பிரமணியம் இப்படி சொல்லிட்டே போகலாம்..." என்றிருக்கிறார்கள்.
நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எழுத்தாளர் அறிமுகப் படல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததற்கு நன்றிகள்.
மேலும் பல அட்டகாசமான படைப்புகள் வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும், சிறந்த எழுத்தாளர் என்ற பெயரை பெற்றிடவும் வாழ்த்துக்கள்💐💐💐
இன்றைய எழுத்தாளரிடம் கேள்விகளை தொடுப்பவர் தாராளமாக முன்வைக்கலாம். அவரது படைப்புகளை படித்தவர்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்
நன்றி
Congrats ji 💐💐💐💐
ReplyDelete