#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#இதுநம்மஏரியா
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்று நான் உங்களிடம் அறிமுகப்படுத்தப்போகும் நபர் கதாசிரியர் சாய் லஷ்மி
அவரைப் பற்றிய விபரங்கள் :
பெயர் : E. P. தனலெட்சுமி.
புனைபெயர் : சாய்லஷ்மி.
சொந்த ஊர் : சிவகாசி.
படிப்பு : B. A ஆங்கிலம்.
பணி : எழுத்துப்பணி
தளம் : சங்கமம்
அமேசான் பெயர்: சாய் லஷ்மி
*********
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
என்னை பற்றி சொல்ல, ம்ம்ம்... எனக்கு கதை, கவிதை, நாவல் ரொம்பப் பிடிக்கும். ஓவியங்கள், அழகான போட்டோஸ் இதலாம் ரொம்ப லைக் பண்ணுவேன். கொஞ்சம் வரைய தெரியும். கொஞ்சம் எட்டிட் பண்ண தெரியும். ம்யூசிக் ரொம்ப பிடிக்கும். குட்டி குழந்தைங்க ரொம்ப... ரொம்ப பிடிக்கும். என் மம்மியை பிடிக்கும். என் சிஸ்டர் பொண்ணு அம்மு குட்டியை ரொம்ப... ரொம்ப பிடிக்கும்.
என் எழுத்தை ரொம்ப பிடிக்கும்.
ரொம்ப தூரம் ட்ராவல் பண்ண பிடிக்கும். அது ட்ரெயின் ஆர் பஸ் ஓகே. அதுவும் மார்னிங் ட்ராவல் ஓகே. பழைமையான கோவில்கள் இங்கலாம் கண்டிப்பா போயிட்டு வந்திடணும்ன்னு ஆசை.
இப்போ சேரீ கலெக்ஷன் பிடிச்சிருக்கு 🙈🙈🙈. ஆன்லைன் சேரீ பிஸ்னஸ் கூட பண்ணலான்னு தோனுது 😅😅😅. அடுத்து, கடல், அருவி பிடிக்கும். பட் குளிக்க பயமா இருக்கும். போதும்ன்னு நினைக்கறேன்.
******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
ரமணிசந்திரன், MR , உமா பாலகுமார், ஜெய்சக்தி அவர்கள்... மற்றம் சிலர் உள்ளனர். இங்கு குறிப்பிடவில்லை.
*********
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
2014 காலேஜ் படிக்கும் போது நாவல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஆறு மாதத்தில் எழுதவும் ஆரம்பிச்சிட்டேன். எழுதி முடிச்சதும் ப்ரெண்ட்ஸ், அப்புறம் எனக்கு பாடம் எடுக்கிற மேம், இரண்டு பேரு. அதில் ஒருத்தவங்க ரமணி அம்மா விசிறி. அவங்க படிச்சிட்டு நல்லாயிருக்குன்னு சொன்னாங்க.
அடுத்த கதையை எழுத ஆரம்பிச்ச போது, கொஞ்சம் கொஞ்சமா படிச்சுட்டு கமென்ட் கொடுத்தாங்க. இன்னொரு மேம் பிழைத்திருத்தி கொடுத்தாங்க. அவங்க இரண்டு பேரும் கொடுத்த பாராட்டு, ரிவ்யூ தான் என்னை அடுத்து எழுத தூண்டியது. படிப்பு முடிந்ததும் எழுதுவதை நிறுத்திட்டேன்.
மறுபடியும் இங்க fb ல் 2019 ஏப்ரல் மாதத்தில் தான் டைரியில் எழுதிய ரகசியமானது காதல் கதையை போட்டிக்காக டைப் பண்ணி போஸ்ட் பண்ணினேன். அதன் பிறகு இடையில் ஒரு எட்டு மாசம் உடம்பு சரியில்லாமல் போனதால் எழுதவில்லை. தற்போது எழுதி கொண்டிருக்கிறேன்.
*********
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
ரகசியமானது காதல்...
**********
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
எழுத்தாளர் மட்டுமல்ல வாசகர்களும் நட்பு வட்டாரத்தில் உள்ளனர். எல்லாரும் டைப் பண்ண முடியல சாரீ...
********
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
திரும்ப திரும்ப படிக்கிற கதைன்னா, தொடுகோடுகள், மயங்குகிறாள் ஒரு மாது, என்னவென்று நான் சொல்ல, நெஞ்சே நீ வாழ்க, இமையோரம் உன் நினைவு, தீண்டிச் சென்ற தென்றல், மித்ரசகி, சப்தமில்லா நடுநிசி இரவுகள், பொன்மான்கரடு,
கட்டியலைறோடு முடிவதல்ல காதல் கதை. இன்னும் இருக்கு. இப்போ நியாபகம் இல்ல.
********
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
முதல் கதை தான் நம்முள் இருக்கிற திறமையை நமக்கு புரிய வைக்கும். அதனால் என்னுயை முதல் கதையான ரகசியமானது காதல் கதை தான் கூறுகிறேன்.
********
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
12 - நாவல்
2- குறுநாவல்
3- சிறுகதை
*******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது :
மொத்தம் ஏழு வருஷம். இடையில் நாலு வருஷம் வேலை, உடல் நலம் காரணமாக எழுத வில்லை.
********
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
தேகம் வேறாகலாம் உயிர் நீயே!
பாதம் பார்த்து வேதம் சொல்ல வா!
பேசா ஓவியம்!
என் தெய்வம் தந்த பூவே!
நாலும் ஆப்லைன்ல எழுதிட்டு வர்றேன்.
ஆன்லைனில்,
என் பகல் நிலா தேய்வதேனோ? ரகசியமானது காதல் போஸ்ட் பண்ணிட்டு வர்றேன்.
********
உங்கள் நாவல்களின் பெயர் :
1. ரகசியமானது காதல்
2. உயிரின் உயிரே காத்திருக்கிறேன்
3. உன் வாசம் புது சுவாசம். (குறுநாவல்)
4. நீயில்லாத வாழ்க்கை ஏனோ?
5. தீயைத் தீண்டிய தென்றல்.
6. கட்டிலறையோடு முடிவதல்ல காதல்.
7. ஒரே முறை உன் தரிசனம்.
8. நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
9. தலைவிக்கு நானழகு!
10. என்னுயிர் நீயன்றோ கண்ணம்மா!
11. ஒன்றா? இரண்டா? ஆசைகள்!
12. என்னை ஆளும் அழகே!
13. உள்ளதுல நீ தானே! (குறுநாவல்)
14. பூ மாலை தோள் சேர்ந்தது!
குட்டிக்கதைகள்:
சிறு கதைகள்
லவ் பேர்ட்ஸ்
எனக்காக பொறந்த எனதழகே!
மற்றும் ஒரு பக்க கதைகள். கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.
.....
அருமையான பெயர்கள். 1 கதை மட்டும் படிச்சிருக்கேன்.
*******
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
இரண்டும் கலந்து இருக்கும், நகைச்சுவை அவ்வளவா இருக்காது.
*********
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?
இது கொஞ்சம் கஷ்டமான கேள்வியா இருக்கு. 😁எல்லா கதையும் ரொம்ப பிடிக்கும். அனுக்ரஹா கதாபாத்திரம் கொஞ்சம் கூடுதலாக என் மனதில் இடம் பிடித்திருக்கிறதுன்னு நினைக்கறேன்.
***********
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :
தீயைத் தீண்டிய தென்றல் - தனிகைவேல் பாண்டியன்... கதாபாத்திரம் அதிரடியாக இருந்ததுன்னு கருத்து சொன்னாங்க.
கட்டிலறையோடு முடிவதல்ல காதல் கதை - அனுக்ரஹா போல யாரும் வரமாட்டாங்க. மனதிற்கு இனிமையான நாவல்ன்னு கமெண்ட் கொடுத்தாங்க. அந்த கதையிலிருந்து நிறைய நல்ல நட்புகள் எனக்கு கிடைத்தது. நாறு தடவை கூட படிச்சிட்டேன்னு சொன்ன வாசகி உண்டு 🙈🙈🙈
நீயில்லாத வாழ்க்கை ஏனோ- யுதிஸ்டிரன் கோவமும்- சைரந்திரி காதலும் பிடிச்சிருக்குன்னு கமெண்ட் கொடுத்தாங்க.
என்னுயிர் நீயன்றோ கண்ணம்மா -
இஷாந்த் கதாபாத்திரம் அருமைன்னு சொன்னாங்க.
என் தெய்வம் தந்த பூவே!
ஸ்வரா பற்றிய சின்ன அறிமுகம் - கொஞ்சம் வாசகரை ரிச் பண்ணிருக்கிறது.
***********
உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?
கண்டிப்பா சொல்லணும்ன்னு நினைச்சேன். நான் சீக்கிரமா கதை கொடுக்கணும்ன்னு நினைக்கறேன். முன்பு மாதிரி இப்போது முடியவில்லை. கொஞ்சம் எனக்காக வெயிட் பண்ணுங்க. என்னுடைய கதைக்கு கருத்துகள் தெரிவித்த அத்தனை பேருக்கும், என் மனமார்ந்த நன்றிகள். காத்திருக்கும் நட்புகளுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். எல்லா கதைக்கும் கண்டிப்பா கமெண்ட் கொடுங்க. அது நிறை, குறையாக இருந்தாலும் சரி... நான் ஏற்றுக் கொள்கிறேன்.
********
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா:
ஆன்லைன் வந்த போது போட்டியில் தான், எனக்கு எழுத தெரியும்ன்னு அறிமுகம் ஆகினேன். மூன்று தடவை போட்டியில் கலந்துகிட்டேன். ஆறுதல் பரிசு வாங்கியிருக்கேன். சீக்கரம் ப்ரைஸ் வாங்கிடுவேன்னு நம்பிக்கையோடு அடுத்து எழுத போயிடுவேன்🙈🙈🙈. ஏன்னா, ஸ்கூல் லைப்ல கலந்துகிட்ட அனைத்திலும் ப்ரைஸ் வாங்கிட்டேன். அதனால இன்னும் கொஞ்சம் திறமையை வளர்த்துக்கிட்டு இதலாம் எதிர்பார்க்கனும்ன்னு நினைக்கறேன்.
*********
சிறு வயது அதாவது பள்ளியில் பயிலும் போது வரும் அறியா காதல், கல்லூரியில் பயிலும் போது வரும் டீன் ஏஜ் காதல் , வேலைக்கு செல்லும் போது வரும் காதல் இதற்கான வித்யாசம் ..
காதலுக்கு வித்தியாசம் கிடையாதுங்கிறது என் கருத்து. ஸ்கூல் லைப்ல இருந்து வேலைக்கு போய் சம்பாதிக்கற வரை லவ் பண்ணி, பேரன்ட்ஸ் சம்மத்தோட மேரேஜ் பண்ணிக்கிட்டவங்களை பார்த்திருக்கிறேன். இடையில் மேரேஜ் பண்ணி பிரிந்தவர்கள், மேரேஜ் பண்ணாமலே பிரிந்தவர்கள். மேரேஜ் பண்ணி வருந்துபவர்கள் என்று இருக்காங்க.
காதல் என்பது புரிந்து கொள்ளுதல், நம்பிக்கை, விட்டுக் கொடுத்தல், சுயநல மில்லாத அன்பு செலுத்துதல் தியாகம் செய்தல்ன்னு பல குணங்கள் இருக்கு. நான் சொன்ன அனைத்திலும் மூன்று பருவ காதலருக்கும் இருக்க வேண்டும். ஒன்று குறைந்தாலும் மற்றொறு குணம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் காதல் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஜெயிக்கலாம்.
மேலும் நான் குறிப்பிட்டவை காதல்ங்கிற பெயரில் சித்து வேலை காட்டும் ஆண், பெண்ணுக்கு பொருந்தாது. அப்படிபட்டவர்களிடம் சிக்காமல் இருக்க மேற்கூறிப்பிட்ட குணங்கள் இருக்குதான்னு பார்த்து காதலிங்கன்னு அறிவுரை சொல்லுவேன். அது எந்த பருவ பிரிவினராக இருந்தாலும் சரி.
காதல்ங்கிற வார்த்தைக்கு அன்பு என்ற ஆர்த்தம் உண்டு. அதனால காதல் தவறான விஷயம் கிடையாது. யாரை, எவரை, எதற்கு இப்படி புரிஞ்சு.... காதல் செய்யலாம்.
....
அருமையான கருத்து
*******
மூவகை காதலில் அதிக ஆயுட் நாட்கள் உள்ள காதல் எது என்று சொல்ல முடியுமா:
எல்லா காதலுக்கும் ஆயுட் காலம் கிடையாது. காதலர்கள் தான் இறந்து போவாங்களே தவிர காதல் சாகாது. அது தொன்று தொட்டு தொடரும் ஒரு வைரஸ் போல் உலகத்தில் பரவி கிடக்கிறது.
காதல் இருமணங்களை பொறுத்தது தவிர மூன்று வகை மனிதர்கள் அல்லது பருவ பிரிவினரை பொறுத்தது அல்ல. எல்லாவற்றிற்கு மேலே குறிப்பிட்ட குணங்கள் தான் வேணும். நல்ல எண்ணம், சிந்தனை, செயல், பொறுமை, சகிப்புத்தன்மை இருந்தாலே போதும், எல்லாவற்றிலும் சாகுற வரை நீண்ட ஆயுள் என்பது சுபமாகவே இருக்கும்.
**********
ஒரு சம்பவத்தின் தாக்கம் அதை பார்ப்பவர் அல்லது படிப்பவர் மனதை விட்டு சில நாட்கள் மீளாத வகையில் இருக்க அவர்கள் எப்படி பட்ட கதையம்சத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்:
என்னை பொறுத்த வரையில் எப்படி பட்ட கதைக்கருவாக இருந்தாலும் எழுத்து நடை மூலம் அவர்களை கவரலாம். சதாராண விஷயத்தை கூட ரசனை கூறிய வார்த்தை ஜாலத்தால் கொடுத்தால் வாசகர்களிடம் கண்டிப்பாக ரீச் ஆகும். அவர்களால் மறக்க முடியாத கதையாக நம் கதை மாறிவிடும்.
*********
உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:
திருமதி ரமணிசந்திரன், திருமதி. முத்துலட்சுமிராகவன் அவர்களின் எழுத்தின் தாக்கம், மேலும், என்னுள் உரைந்திருந்த கற்பனை வளம். மற்றும் நான் எழுதி முடித்ததும் பாராட்டிய என் ஆசிரியை. இதனால் தான் என்னால் எழுத முடிந்தது.
**********
நாளிதள்களில் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இல்லை. முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
********
ஒரு எழுத்தாளன் எப்பொழுது வெற்றி பெறுகிறானு நினைக்கிறீங்க!
எழுத ஆரம்பிக்கும் போதே!
கலை ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைத்தவர்கள் தக்க வைப்பதில்லை. அதற்குள் புகழ், தற்பெருமைன்னு காலமோ, சூழ்நிலையோ, நேரமோ நம்மை மாற்றிடுது. இல்லை வீழ்த்திவிடுகிறது. அதனால் வெற்றி பெறுவது எங்கிறது நாம சாகற வரை எழுதுவதை நிறுத்தாமல் இருப்பது, என்பது என் கருத்து அது தான் நிரந்தர வெற்றி.
********
உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்குவிக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :
கணவர் இனி தான் வரணும். நான் சின்ன வயசில் இருந்தே எழுத்து போட்டி, கட்டுரை போட்டியில் கலந்துக்குவேன், அம்மா எப்போதும் போட்டி பத்தி கேட்பாங்க, இல்லன்னா நான் சொல்லிடுவேன். அப்பா பரிசு வாங்கும் போது மட்டும் வருவாங்க.
எங்க வீட்டில் ஐந்து பிள்ளைங்க. யாரும் போட்டி இப்படி சேரமாட்டாங்க. நான் கலந்துக்குவேன். அதனால, நான் நாவல் எழுதுவதை அவர்களை பொறுத்த வரையில், நம்ம பொண்ணுக்கு ஏதோ டேலெண்ட் இருக்குன்னு பேசிப்பாங்க. கெஸ்ட் கிட்ட, வரன் பார்க்கற போது, சின்ன வயசுல இருந்து அவளுக்கு எழுத வரும், இப்போ புக் போட்டிருக்கிறாள்ன்னு சொல்வாங்க.
கமெண்ட்ஸ் இதலாம் அம்மா கிட்ட வாசித்து காட்டுவேன். சந்தோஷபடுவாங்க. பெரியம்மா எழுதுறத விட்டுடாதன்னு சொல்வாங்க. அக்காமார்கள் என் புக் கவரை ஸ்டேட்டஸ் வைப்பாங்க. சிஸ்டர் அவளுடைய ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவாள். இப்படி தான் காமெடியாக போயிட்டு இருக்கும்.
...
🙂🙂🙂🙂
********
சில எழுத்தாளர்கள் நிஜத்தை அப்படியே கண் முன் காட்சி படமாக விரிவது போல எழுதுகிறார்கள். அது எப்படினு சொல்ல முடியுமா:
முதலில் என்ன எழுத போறோமங்கிறதில் நாம தெளிவா இருக்கணும். அது முதல் அத்தியாயத்தோட இருக்க கூடாது. கடைசி வரை இருக்கனும். அப்போது தான் நம்மால் கற்பனையை கூட நிஜமாக்க முடியும். படிச்சிட்டு எழுதிய எழுத்தாளரே நான் தான் எழுதினேனான்னு பீல் பண்ணனும் அப்போது தான் கண் முன் காட்சி விரிந்து எழுதியிருப்பது சரி.
இது என் அனுபவம். எங்கையாவது கொஞ்சம் கற்பனையை நாம குறைச்சு, ஏதோ கை போன வாக்கில் எழுதிட்டா கதை நல்லா வராது. அப்படி ஓரிரு கதையை சொத்திப்பிருக்கிறேன். அடுத்து அந்த கதையை நாம சரிப்படுத்த, நம்ம மனம் ஒத்துழைக்காது. அதனால எழுதும் போது பாஸ்ட்டிவ்வா இருக்கனும்.
அந்த கதாபாத்திரமாகவே மாறிடனும், அப்போ தான் எழுதும் போது அழுகையையோ, வெட்கத்தையையோ, சிரிப்பையையோ, கோபத்தையையோ நம்ம எழுத்தில் நாமே உணர முடியும். அப்படி நீங்க உணர்ந்தால் நாம கரைட்டான wayல போயிட்டு இருக்கோம் என்று அர்த்தம்.
*********
புத்தகங்களை தேடி அலைந்து படிப்பதற்கும், ஆன்லைனில் உடனடியாக படிப்பதற்கும் உள்ள வித்தியாசமாக என்ன நினைக்கிறிங்க :
என்னை பொறுத்த வரையில் இன்றைய காலகட்டத்தில் இரண்டுக்குமே ஆர்வம் தான் காரணம்ன்னு நினைக்கறேன் 😂😂. ஆர்வத்தினால் தான் தேடி தேடி... கதைகளில் நம்மை தொலைக்கிறோம். ஆன்லைனிலும் சில கதைகளை உடனடியாக படிக்க முடியாது கொஞ்சம் வெயிட் பண்ணி படிக்கற மாதிரி சூழ்நிலை வரும். புத்தகங்கள் கூட கடையில் சில நேரம் காத்திருந்து வாங்கிற மாதிரி இருக்கும். பொறுமையும், ஆர்வமும் தான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.
********
போட்டி நிறைந்த உலகில் எழுத்தாளர்கள் பலர் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து திறமைகளை நிருபிக்க போராடிக் கொண்டிருக்கின்றனர் அதை பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா.
எளிதாக கிடைப்பது எப்பவும் நிலைக்காது. கொஞ்சமானும் வாழ்க்கையில் போராட்டம் வேண்டும். ஏன் நாம பிறப்பதற்கு கூட, பிரசவ அறையில் போராடி தான் அன்னை நம்மை பெற்று எடுக்கிறாள். போராட்டம் இல்லையென்றால் வெற்றியோ, தோல்வியோ நாம சந்திக்க முடியாது.
வெற்றி, தோல்வி எது கிடைத்தாலும் நாம செய்த பலன் தானே அது? ஸோ நாம எதுவந்தாலும் ஏத்துக்கணும்.
எந்த சப்ஜெக்ட் அப்படிங்கிறதை விட பலதரப்பட்ட மக்களுக்கும் பிடிச்ச பிரிவில் எழுதுங்க. எப்பவும் சந்தோஷமா மனச வச்சுக்கோங்க. நிறைய அழகாக, எழுதுங்க, நீங்க எழுதுன கதையை நீங்களே முதல் விசிறியா இருந்து படிங்க... விரும்புங்க.
....
அழகாக சொல்லிட்டிங்க
********
கூட்டுக் குடும்ப கதைகள் அண்மையில் குறைந்து காதல் படைப்புகள் பெருகி விட்டதென்று நினைக்கிறீர்களா :
கூட்டுக்குடும்ப கதைகளை எழுதவும், படித்து விமர்சிக்கவும் தான் ஆள் குறைந்த மாதிரி எனக்கு தோன்றுகிறது. அதனால் காதல் படைப்பு பெரிதாக காட்சிபடலாம்.
**********
நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது எந்த மொழி வழக்கு பயன்படுத்தினால் வாசிக்க அழகாக இருக்கும் ..
வாசிப்பு வாசகர்களின் விருப்பத்தை பொருத்தது. வாசகர்களின் விருப்பம் கதை, கதைக்கருவை பொறுத்தது. இப்போ திருநெல்வேலில் கதை நடக்கற மாதிரி எழுதுறீங்கன்னா, அங்குள்ள மக்கள் பேசுற மாதிரி எழுதணும். அப்போது தான் வாசிக்க வாசகர்களுக்கு பிடிக்கும். மதுரையில் சம்பவம் நடக்கிறதுன்னா அங்க உள்ள பேச்சு வழக்கு
எழுதனும்.
இதில் வாசிப்பிற்கென தனி அழகு என்னை பொறுத்த வரை இல்ல. நீங்க சரியா கதைக்கருவிற்கு ஏற்ப பொருத்தமா எழுதினாலே அழகு தான். முக்கியமா வாசகருக்கு உங்க எழுத்து பிடிக்கணும், அதற்கு பிழைகள், சம்பந்தமில்லாதது அங்க இடம் பெற கூடாது. இப்படி சரியா எழுதினாலே உங்க எழுத்தோட அழகு வாசகர் மனதில் நிற்கும்.
*********
ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்து நடையும் ஒரு வகையில் இருக்க பல நேரங்களில் சில திணறல்கள் . எது வாசிப்பை ரசிக்க செய்யும் விதமான எழுத்தென்று நினைக்கிறீங்க:
முதல்ல சொல்ல வருவதை சரியா எழுதிட்டாலே எந்த வித தினறலும் எழுத்தாளருக்கு வராது. எழுதி... எழுதி பழகினா தான் திணறல் இல்லாமல் எழுத முடியும். முக்கியமா எழுத்துப்பிழை, முற்றுபுள்ளி, ஒற்றுப்பிழை இதலாம் சரியா யுஸ் பண்ணனும். நான் கத்துக்கிட்டு இருக்கின்றேன்.
சரியா எழுத... உங்களது விருப்பத்தை, கற்பனை வளத்தை, மற்றும் உழைப்பை முதலில் கொட்டணும். அப்போ தான்... அக்கதையை எழுதிய எழுத்தாளர் வாசிக்கும் போதே ரசிக்க தோன்றும்.
*******
கட்டிலறையோடு முடிவதல்ல கதை நிஜ சம்பவத்தின் தாக்கமா அல்லது எப்படி இந்த மாதிரி எழுதனும்னு நினைச்சிங்க:
சித்தி என்றாலே பல நேரங்களில் கொடுமை படுத்துறவங்க, அவங்க பிள்ளைங்களுக்காக முதல் தார மனைவியின் குழந்தையை ஒதுக்கிறவங்க இப்படி தான் காட்ட படுறாங்க.
நாம கொஞ்சம் வித்தியாசமா எழுதலாம்ன்னு, இக்கதையில் அனுக்ரஹா என்ற பெண்... நாயகனுக்கு இரண்டாவது மனைவியாக., நாயகனின் குழந்தைக்கு.... ஒரு அன்னையாக, தான் பெறாத குழந்தையான இந்திரஜித்தை தான் பெற்ற குழந்தையாக பாவித்து வளர்ப்பது, சித்தி என்ற உணர்வை தாண்டி அன்னையாக கொண்டு வந்துள்ளேன்.
பெரும்பாலான வீடுகளில் குழந்தைங்க பேச்சை கேட்கற பெற்றோர்கள் இருப்பாங்க. அவங்க உணர்விற்கு ரொம்ப மதிப்பு கொடுப்பாங்க. அதே மாதிரி தன் உணர்வு பெரிதில்லை என்று மகனுக்காவும், கணவருக்காவும் அனு வாழ்கிறாள் என எழுதி முடித்தேன்.
********
கதாநாயகன் மற்றும் நாயகியின் அறிமுகக் காட்சி எப்படி இருந்தால் படித்த உடன் மறவாமல் இருக்கும்னு நினைக்கிறீங்க:
ஆர்பாட்டம் இல்லாத, நாலு பக்கத்தை தாண்டாத, எளிமையாக ஏன் நம்மை சுற்றி உள்ள ரியல் ஹீரோக்களை அழகாக விமர்சித்தாலே படித்த உடன் மறவாமல் வாசகருக்கு பிடிக்கும். அந்த ஹீரோ போல வருமா? என்று உணர வைக்கும். அவன் பெயரை உச்சரிக்க வைக்கும்.
நாயகி எப்போதும் துருதுருன்னு, அப்பாவியா, இப்படி திரும்ப திரும்ப எழுதுனாலும், நாம ரசிக்க வைக்கிற அளவில் எளிமையா எழுதினாலே வாசகருக்கு பிடிக்கும்.
***********
அழுத்தம், மென்மை , முரடு, ஆண்டி ஹீரோக்களுக்கான வித்தியாசமாக என்ன சொல்ல நினைக்கிறீங்க:
எல்லா ஹீரோ கிட்டையும் காதல், காமம், கோபம் இருக்கிறது. வித்தியாசம் என்பது ஆன்டி ஹீரோ தான்... பழிவாங்குதல், அடிமைபடுத்துதல் என்ற குணத்தை கொண்டு கதை நகர்கிறது.
முக்கால் வாசி பேர் வாழ்க்கையில் ஆன்டி ஹீரோவிற்கு வாய்ப்பில்லை. அதனால் அந்த கதாபாத்திரம் மீது ஈர்ப்பு வருகிறது.
மென்மை குணம், முரட்டு கோபம் இதலாம் பொதுவாக நம் மக்களிடம் உள்ள குணம் அதனால் ஏதார்த்தை விரும்பும் மக்கள் இவ்வகையை படிக்கிறார்கள்.
.....
👌👌👌👏👏👏👏 சூப்பர்
*******
நன்றி ப்ரெண்ட்ஸ்!
பொறுமை காத்து என் எழுத்துக்களை படித்தவர்களுக்கும், விமர்ச்சித்தவருக்கும், இப்போது படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், இனி மேல் படிக்க போகிறவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், அன்புகளும்...
எப்போதும் சந்தோஷமா இருங்க. நல்லதே நினைங்க. கொஞ்சம் கடவுள் மீது அலாதி அன்பு செலுத்துங்க. கோபத்தையையும், துரோகத்தையும் துறந்திடுங்க. மற்றவர்கள் மீதும் அன்பாய் இருங்கள்.
அன்புடன்
சாய்லஷ்மி❤️
தேங்க்ஸ் டு ஆனந்தஜோதி சிஸ்டர்.
........
உங்களது பதில்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும், தெளிவாகவும் இருந்தது சிஸ்டர்
மிக்க நன்றி,
மேலும் பல படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளர் கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை முன் வைக்கலாம். ஏதாவது கேள்விகளை கேட்க நினைப்பவர்கள் தராளமாக கேட்கலாம்..... மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்
மிக்க நன்றி
🙏
Comments
Post a Comment