#எழுத்தாளர் அறிமுகப்படலம்
#சீசன் இரண்டு - 6
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் ரேவதி அசோக்.. அவர்களைப் பற்றி விபரங்கள்:
பெயர் : ரேவதி அஷோக்
சொந்த ஊர் : பாண்டிச்சேரி
படிப்பு : இளங்கலை ஆங்கில இலக்கியம்
பணி : ஹவுஸ் ஒய்ப்
தளம் : ரேவதிஅஷோக்நாவல்ஸ் (Revathyashoknovels.com)
அமேசான் பெயர்: ரேவதிஅஷோக்
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா :
பிரான்சில் வசிக்கும் ஓர் குடும்ப தலைவி, மூன்று குழந்தைகளுக்கு அம்மா. பிடித்த பொழுது போக்கு சமைப்பது, பாடல்கள் கேட்பது. தமிழில் இளையராஜா-எஸ்.பி.பி காம்பினேஷன், ஹிந்தியில் குமார் சானு, அர்மான் மாலிக்.
…
அருமை சிஸ்டர்
*****
உங்களது விருப்பமான எழுத்தாளர் :
கல்கி
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :
சிறு வயதிலிருந்தே கதை, கவிதைகள் படிப்பதென்றால் மிகவும் ஆர்வம். நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். கதைகள் எழுத ஆசையும் உண்டு . ஆனால் எப்படி எழுதணும்னு தெரியாததால் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். அதன் பிறகு திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு தான் என் மனதில் இருந்த ஒரு உண்மை நிகழ்வை எழுதினேன். அது வாசகர்கள் மத்தியில் என்னை பிரபலமாக்கியது.
*****
நீங்கள் எழுதிய முதல் நாவல் :
விழியே கதை எழுது (இது உன்னோடு நானும் என்னோடு நீயும் என்ற பெயரில் வெளியாகியது )
*****
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க :
பூவே உன்னை நேசித்தேன்
*****
நீங்கள் எழுதி இருக்கும் மொத்த நாவல் :
35
****
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது :
15
******
தொடர்கதையாக எழுதுவது ஈஸியா நாவல் வடிவில் எழுதுவது ஈஸியா :
இரண்டுக்கும் பெரிதாக எவ்வித வித்தியாசமும் இல்லை என்பது என் கருத்து.
*****
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல் :
கலையாத மௌனங்கள் மூன்றாம் பாகம் , விழி மூடுகிறேன் உன் இதழோடு பேச.
*****
உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் :
விழிகள் தீண்டிய கனவு,
உன் அன்பன்றி வேறேதேடி, மயங்கினேன் தயங்கினேன், ஈரேழு ஜென்மமும் உன்னோடு, எங்கே என் தேவதை,
எங்கே எனது கவிதை,
சொல்ல துடிக்குது மனசு,
காதல் வாசம் தந்தவளே,
என் இதயத்தை தொட்ட வானவில்லே,
என்னுள்ளே பூங்காற்றாய் , உயிரோடு உணர்வாக வந்தாயே,
சிறகில்லாத தேவதை ,
உன்னை நினைத்து உயிர் கரையுதே ,
உயிரில் விதைத்தேனடி உன்னை மற்றும் பல .
…
மிகவும் அருமையான பெயர் தேர்ந்தெடுப்பு
*****
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :
அமேசானில் இரண்டு வருடமாக போட்டிக்கு கதைகளை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.
*****
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
குறிப்பிட்டு சொல்ல முடியாது, பொதுவாகவே என் கதைகள் எல்லாமே என் குழந்தைகள் தான், அதில் எதை பிடிக்கும் என்று கேட்டால் சொல்வது மிக மிக சிரமம். நீங்கள் ஒன்று என்று கேட்டிருப்பதால் இரண்டை சொல்கிறேன்.
உயிரில் விதைத்தேனடி உன்னை. அதில் வரும் ஹர்ஷித் மாதவ்.
கலையாத மௌனங்கள் , அதில் வரும் சித்தார்த் வேணுகோபால்
*****
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது :
ஒரு சில கதைகள் தவிர எல்லாமே பிரபலமாக பேசப்பட்டது. அதில் பூவே உன்னை நேசித்தேன் ,கலையாத மௌனங்கள் ஆகிய இரண்டும் அடக்கம்.
*****
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
நிறைய பேர் இருக்கிறார்கள். சில பேரை சொல்கிறேன், லதா பைஜூ , இன்பா அலோஷியஸ், சவீதா முருகேசன் , ஆர்த்தி ரவி, சொர்ணா சந்தானகுமார், திருமதி லாவண்யா, மாலா கஸ்தூரிரங்கன் மற்றும் பலர்.
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
கல்கியின் நாவல்கள். முக்கியமாக சரித்திர நாவல்கள்.
*****
உங்கள் கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
என் மனமார்ந்த நன்றிகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
******
விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டுமா? இருந்தால் நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:
இதுவரை இல்லை. காரணம் நான் எதிலும் கலந்துக்கொள்ள விரும்பவில்லை. அதற்குண்டான நேரமும் எனக்கில்லை.
*****
தொடர் கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்க வேண்டும்:
சினிமாத்தனமாக இல்லாமல் நிதர்சனமாக இருக்கவேண்டும்.
*****
ஒரு நாவல் or தொடர் கதையை கையில் எடுத்து வாசித்தவுடன் எதனால் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகின்றனர்.?, ஏன் சலிப்பாக இருப்பதாக நினைத்து மாற்றி விடுகிறார்கள் :
படிக்க சுவாரசியமாக மிகவும் எளிய நடையில் எழுத்துக்கள் இருக்க வேண்டும், வர்ணனை என்ற பெயரில் மிகவும் போரடிக்க கூடாது. அதிக தத்துவங்களையும் அறிவுரைகளையும் சொல்லி எரிச்சலை கிளப்ப கூடாது.
…
🙂🙂🙂 அருமை சிஸ்டர்
*****
நாவல் எழுதும் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று ஏதாவது உண்டுமா:
நிறைய உண்டு, அதில் நான் கடைபிடிக்கும் சில விதி முறைகளை சொல்கிறேன். உரைநடைகள் பேச்சு வழக்கில் இருக்கவேண்டும் , கதைகளை இளம்பெண்களும் படிப்பதால் ரொமான்ஸ் சீன்ஸ் ஒரு எல்லைக்குள் உட்பட்டதாக இருக்க வேண்டும். அதிக வன்முறைகள் இருக்க கூடாது. குடி, சிகரெட், கஞ்சா போன்றவைகள் ஹீரோக்கள் பயன்படுத்துவதாக இருக்க கூடாது. முக்கியமாக ஹீரோக்கள் ஹீரோயின்களை கொடுமைப்படுத்தி அதில் இன்பம் காணுவதாக இருக்கவே கூடாது. பெண்களை அடிமைப்படுத்துவதாகவும் இருக்க கூடாது.
…
👌👌👌
*****
ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதுவதற்கு முன்பு இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா?
வார்த்தைகள் கணக்கில் கொள்ள மாட்டேன், ஆனால் அத்தியாயங்கள் முப்பது, அல்லது முப்பத்தியைந்து இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
******
உங்கள் கதைகளில் கவிதை, வருணனை எழுதிய அனுபவம் இருக்கிறதா?
நிறைய இருக்கிறது.
******
ஒரு நாவலில் வரக்கூடிய எந்த மாதிரியான காட்சிகள் நம்முடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்குறீங்க:
ஹீரோயின் தனியாக நின்று சாதிப்பது, கொடுமைக்கார ஹீரோவை எதிர்த்து போராடுவது.
*****
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்கள் :
கல்கி, சுஜாதா, ராஜேஷ்குமார் மற்றும் .
*****
தற்சமயம் வாசித்த நாவல்களின் பெயர்:
பார்த்திபன் கனவு , யவன ராணி
*****
ஒரு குடும்பக் கதையில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:
நெஞ்சை தொடும் பாசம், மயக்கும் காதல், எல்லா காலத்திற்கேற்றவாறு ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துக்கள், மற்றும் படிப்பவர்களுக்கு உதவும் வகையில் சில தகவல்கள்.
*****
உங்கள் கதைகள் காதல் | குடும்பம் | சமூகம் | வரலாறு இதில் எதைப் பொருத்து இருக்கும்:
குடும்பம்.
*****
நீங்கள் எழுதிய கதைகளில் எதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
நிச்சயமாக. விழிகள் தீண்டிய கனவு என்ற கதை எனக்கு என் பிள்ளைகளால் எனக்கு விடப்பட்ட சவால். எப்பொழுதுமே சினிமாவிலும் சரி, சீரியல்களிலும் சரி ஹீரோ ஆறடி, கோதுமை நிறம், பணக்காரனாக தான் இருக்க வேண்டுமா? ஒரு அநாதை விடுதியில் வளர்கிறவன், மிகவும் கருப்பாக இருக்கிற ஹீரோ வைத்து உன்னால் ஒரு கதையை எழுத முடியுமா? அதை சுவாரசியமாக எழுத முடியுமா என்று என் மூன்று பிள்ளைகளும் என்னிடம் சவால் விட்டார்கள். அதை ஏற்று அந்த கதையை எழுதினேன்.
ஹீரோ அனாதை இல்லத்தில் வளர்கிறவன் , பார்ப்பதற்க்கு கண்ணனின் கருவண்ணம் போயிருப்பான். நாயகியோ செய்து வைத்த சிலை மாதிரி அழகாக இருப்பாள். கோடிஸ்வரியும் கூட. இருவருக்கும் இடையில் எப்படி காதல் மலர்கின்றது, அதனால் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார்கள், இருவரும் ஒன்று சேர்கிறார்களா இல்லையா என்பது தான் அந்த கதை.
…
கதைச்சுருக்கமே அருமையாக இருக்கிறது. அப்போது கதையும் கட்டாயம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். மூன்று பிள்ளைகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள்
*****
நாவலாக படிப்பதற்கும் ஆடியோ வடிவில் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம்:
நாவலாக படிக்கும் பொழுது எழுத்தாளர் சொல்லும் வர்ணனைகளை நம்மால் கற்பனை செய்து அவர்கள் உலகத்தில் புக முடியும், ஆனால் ஆடியோ வடிவில் அது சற்று சிரமமே.
*****
போட்டி நிறைந்த உலகில் எழுத்தாளர்கள் பலர் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து தங்களுடைய திறமைகளை நிருபிக்க போராடிக் கொண்டிருக்கின்றனர் அதை பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
நல்ல விஷயம் , ஆனால் ரொமான்ஸ் என்ற பெயரில் அடல்ட்ஸ் ஒன்லி கதைகளை கொடுத்து அதன் மூலம் புகழ் தேடக்கூடாது.
*****
புத்தகங்களை தேடி அலைந்து படிப்பதற்கும், ஆன்லைனில் உடனடியாக படிப்பதற்கும் உள்ள வித்தியாசமாக என்ன நினைக்கிறிங்க :
இந்தியாவில் உள்ளவர்களுக்கு புத்தகங்களை தேடி படிக்க வசதி உண்டு, ஆனால் வெளிநாட்டில் வாழும் என்னை போன்றவர்களுக்கு அது மிகவும் கஷ்டம். புத்தகமாக படிக்கும் பொழுது வரும் சுகமே அலாதி. ஆன்லைனில் படிக்கும் பொழுது சில இடைஞ்சல்கள் வர வாய்ப்புண்டு.
….
அழகான கருத்து மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏
"எங்கே எனது கவிதை" எனும் தலைப்பில் ஒரு குடும்ப நாவல் எழுதுவதற்காக டைட்டில் ரிசர்வ் பண்ணி இருந்தேன். அப்போது தான் அது உங்கள் நாவலின் பெயர் என்பதை ஒரு சிலரின் மூலம் தெரிந்து கொண்டேன்.
ஏனோ நாவல் எழுத தோன்றாமல் விட்டு விட்டேன். சொல்லப்போனால் இது ரமணி மேமின் கதையின் பெயரும் கூட ...என்றாலும் விவாவதத்திற்கு உள்ளாக விரும்பவில்லை.
அன்றே உங்களது அறிமுகத்திற்கு ஆசைப்பட்டு எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தேன். ஆனால் உங்களை கண்டுபிடிப்பதற்கு பதில் வேறு பெண்ணிடம் தான் கேட்டு விட்டேன்போல தெரிகிறது🙂🙂🙂. எப்படியோ கடவுளின் அருளால் உங்களது அறிமுகம் கிடைத்து விட்டது
நன்றி
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் நாவல்களை வாசித்தவர்கள் அதைப் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம். மற்றவர்கள் வாழ்த்தலாம்
நன்றி
🙏🙏🙏
Hi jothi, thanks ma. Ennudaya pathilkalukku unkaludaya karuththukalaiyum solli ennai santhoshapada vaithuvitteerkal. Thanks again.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துகள் சிஸ்டர்💐💐
Delete