தீபாஸ் நாவல்ஸ்

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு - 9



ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளராக நான் உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவது தீபாஸ் நாவல்ஸ்..


அவர்களைப் பற்றிய தகவல்கள்:


பெயர் : என்னுடைய புனைப் பெயர் 'தீபாஸ்'


சொந்த ஊர் :


பிறந்தது : ஸ்ரீவில்லிபுத்தூர்


புகுந்தகம்: ராஜபாளையம்


படிப்பு : B.COM, D.CO.OP


பணி : ஹோம் மேக்கர்


தளம் : https://deebasnovel.blogspot.com


அமேசான் பெயர்: Deebas novels


******


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


 என்னை பற்றி சொல்வதற்கு  பெரிதாக எதுவும் இல்லை. ஒரு காலத்தில் நாவல்கள் மேல் பைத்தியமாக இருந்தேன். புத்தகம், வீடு இரண்டையும் தவிர வெளி உலகம் அதிகம் பார்க்காத ஆள் நான்.


வீட்டில் பொழுதுபோக பங்குச்சந்தைப் பற்றி சிறிது டியூசன் எடுத்து ஆன்லைன் டிரேடிங் செய்வதற்காக கொஞ்சம் பணமும், சிஸ்டம் வாங்கிக்கொடுத்தார் என் கணவர். 


இன்ட்றா டிரேடிங் செய்தேன். லாபம் நட்டம் இரண்டும் சேர்த்து ஒருவருடம் முடிந்து கணக்கு பார்த்தபோது வங்கி கொடுக்கும் வட்டியைவிட குறைவாகவே லாபம் என்னால் பார்க்க முடிந்தது. மேலும் அதுவே கிறுக்காக இருந்தது. எனவே ச்சே..ச்சே இந்த பழம் புளிக்கும் என இன்ட்றா டிரேடிங்கை நிறுத்திவிட்டு அந்த சிஸ்டத்தை ஆன்லைனில் கதை படிக்க, எழுத உபயோகபடுத்த ஆரம்பிச்சுட்டேன்.



🙂🙂🙂


******


 உங்களது விருப்பமான எழுத்தாளர்:


 சாண்டில்யன், முத்துலட்சுமி ராகவன்


******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:  


எழுத்து அனுபவம் எனச் சொன்னால் எழுத ஆரம்பித்தப்பிறகு எழுதுவதற்கு தேவையான  விஷயங்கள் தேட நிறைய  வாசிக்க தூண்டியது. முன்பு புதினங்களில் மட்டுமே கவனம் சென்ற நிலை மாறி நிறைய விஷயங்கள் கிரகிக்க கதைக்கு தொடர்புடைய ஆர்டிகில் அது சம்பந்தமான புத்தகங்கள் வாசிக்க என என் கவனம் திரும்பியது. எழுத்துக்கு வந்த பிறகு என் தமிழில் உள்ள குறைபாடுகள் புரிய ஆரம்பித்தது. மின் புத்தகம் மற்றும் பேப்பர் புத்தகம் போட  எடிட்டிங் நானே செய்வதால் என் தமிழில் குறைகளும் சற்று சரிசெய்ய முடிந்திருக்கிறது . சொல்லப்போனால் என் வாசிப்பும் எழுத்தும் முன்னேற்ற பாதையில் செல்ல எழுத்து அனுபவம் உதவியுள்ளது.


….


அருமையான அனுபவம் சிஸ்டர்


*****


உங்களது நாவல்களின் பெயர் :


. விழியோரத் தேடல் நீ


. பனி இரவில் தணலாவாய்


. பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா


. பூகம்பத்தை பூட்டிய பூவை (2 பாகங்கள்)


. விடைதேடும் விட்டில் பூச்சிகள் (தீபாஸ்&ரபி)


. பிரிவும் உறவும் அவளாலே


. 4 கதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு (தீபாஸ்&ரபி)


. இப்பொழுது மூன்று நாவல்கள் எழுதிகொண்டிருக்கிறேன்.

   1)சகாப்தத்தின் வண்ணங்கள் நெடுந்தொடர் கதை தலைப்பு: “விடாது      அரசியல்...! களமாடவா...!”


   2)“விழியிலே மலர்ந்தது!! உயிரிலே கலந்தது!!”


  3)“அமுதை கொள்ளைகொள்ளும் தேன்சிட்டு”


ஆகிய நாவல்களை முடிக்க முடியாமல் பெண்டிங் வச்சிருக்கிறேன். லாக்டவுன் சூழல் எனக்கு எழுத சாதமாக இல்லாததால் எழுதுவதில் சற்று தேக்கம் வந்திருக்கு மீண்டும் எழுத்தை முன் எடுத்துடுவேன்.


….


அழகான பெயர்கள் சிஸ்டர். போட்டியில் பெயர் கொடுத்தால் கட்டாயம் முடித்துக் கொடுக்க வேண்டும் சிஸ்டர். வேகமாக முடிச்சுருங்க...


*****


எழுத வந்த இத்தனை வருடத்தில் நீங்கள் எதையாவது சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா :


எழுத ஆரம்பித்தப்பிறகு எனக்கென்று ஒரு அடையாளத்தை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற எண்ணம் நம்பிக்கை பிறந்துள்ளது.


உண்மையாகச் சொன்னால் அமேசான் kindle வருமானம் நிச்சயம் எனக்கு ஒரு பூஸ்ட் தான்..


******


நாவல் எழுதும் ஆவல் உங்களுக்கு எப்படி தோன்றியது :


 நான் எழுதுவதற்கு தூண்டுகோலாய் அமைந்தது MR மேம் அவர்களின் கதைகள்தான். (எனக்கு மேமைத் தெரியும் ஆனால் மேம்க்கு என்னைத் தெரியாது ஹி..ஹி..ஹி..)i miss you mam..


நான் முன்பெல்லாம் நூலகத்தில் இருந்து நாவல்கள் எடுத்து வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன். ஆன்லைனில் தொடர்கதை படிக்க ஆரம்பித்த காலத்தில் MRமேம் அவர்களின் தளத்தினை எழுத்தாளர் பத்மா கிரகதுரை மேடம்தான் வழிநடத்திக்கொண்டிருந்தார்கள்.


லைப்ரேரியில் புத்தகம் எடுத்து படித்த என்னால் MR மேம் தளத்தில் பதிவேற்றப்படும் தொடர்களை ஒவ்வொரு பகுதியாக காத்திருந்து வாசிக்கும் பொறுமையில்லாது போய்விட்டது. பொதுவாக நான் ஒரு புத்தகத்தை எடுத்துவிட்டால் அதை ஒரே மூச்சாக படித்து முடித்தால் மட்டுமே என்னால் மற்றதில் கவனம் செலுத்த ஆர்வம் வரும்.


எண்ணியிருந்தது ஈடேற நாவல்ன்னு நினைக்கிறன். அதை ரொம்ப ஆவலாக வாசித்துக்கொண்டிருந்தேன். தளத்தில் தொடர் update இல்லை.என்னால் அதை முடிக்காமல் வேறு நாவல் எடுத்து வாசிக்கக்கூட எண்ணம் போகவில்லை.


அப்பொழுதுதான் நாமே ஒரு கதை எழுதுவோமே என நினைத்து பெண்ணே என் மேல் பிழை என்ற நாவலை எழுதி MRமேம் தளத்தில் உள்ள மெயிலில் ஐ,டியில்  தொடர்பு கொண்டேன்.


அப்பொழுதுதான் பத்மா கிரகதுரை மேம் அவர்களின் மொபைல் நம்பரை  மெயிலில் பகிர்ந்து தொடர்புகொள்ளுமாறு சொன்னார்கள்.


அப்பொழுது என் எழுத்தில் வேகம் இருந்தது. நான் எழுதிய பகுதிகளை அவர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கச்சொன்னார்கள்.


அதன்பின் என் கதை நல்லா இருப்பதாக சொன்னவர்கள் ஒரு சிறுகதையோடு என்னை தளத்தில் அறிமுகபடுத்துவதாகச் சொல்லி எழுதி அனுப்பச்சொன்னார்கள்.


நானும் எழுதினேன் ஆனால் எனக்கு நான் முதலில் எழுதிய பெண்ணே என் மேல் பிழை நாவலின் மூலமே நான் அறிமுகமாக வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் வந்துவிட்டது.


அப்பொழுது chillzeeயிலும் நான் தொடர்களை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். நான் அப்செட்டாக இருப்பதைப் பார்த்த என் கணவர் இன்னொரு சைட்டில் படிக்கிறேன்னு சொன்னேல்ல அதில் அனுப்பு இதோட அங்க நிறைய பேர் எழுதுறாங்க அப்படின்னு ஏதேதோ பேசி என்னை கன்வீனியன்ஸ் செய்து நான் அப்செட்டாக இருப்பதை மாற்றப் பேசினார்.


எனவே chilllzeeயின் என் முதல் நாவலின் முதல் பகுதியை அனுப்பி தளத்தில் எழுத விருப்பம் உள்ளதாக சொன்னேன். அவர்களும் எனக்கு தளத்தில் எழுத அனுமதி வழங்கினர்.


நவம்பர் 05 2016ல எனது கதையின் முதல் பகுதி chillzeeயில் வெளிவந்தது. அதைதொடர்ந்து எனது இரண்டாம் தொடர்கதை “ஒளி தருமோ என் நிலவு”  தொடரினையும் அதில்தான் எழுதி முடித்தேன்.


மூன்றாவது நாவல் பூகம்பத்தைப் பூட்டிய பூவை நாவலை நான் படித்த பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நாவலின் தாக்கத்தில் அதில் இருந்த விஷயங்களைகொண்டு காதல்கலந்த புனை நாவலாக எழுதத் துவங்கினேன்.


அப்பொழுதுதான் அமேசானில் கதைகள் பதிவிடுவதை பற்றி தெரிந்துகொண்டு அதில் நான் எழுதி முடித்த நாவல்களை பதிவிட விரும்பினேன்.


அமேசானில் நாவல்களை பதிவிடவேண்டும் என்றால் அக்கதை வேறு தளத்தில் இருக்கக்கூடாது என அறிந்ததால் chillzeeயில் உள்ள எனது கதைகளை நீக்கச்சொல்லி பலமுறை மெயில் அனுப்பினேன்.


ஆனால் அவர்கள் ஏனோ என் மெயிலை கண்டுகொள்ளவே இல்லை. அப்பொழுதுதான் இனி வேறு யாருடைய தளத்திலும் எழுதக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.


கூகுள் பிளாக்கரில் என் கதைகளை வெளியிட தளம் உருவாக்கி அதில் மட்டுமே எனது நாவல்களை பதிவிட முடிவு செய்தேன்.


எனவே எனது மூன்றாவது நாவல் பூகம்பத்தை பூட்டிய நாவலில் இருந்து  என் தளத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்..



உங்கள் ஆர்வத்தையும் பதிலையும் படித்த போது அன்றைய உங்களது உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.


******


நீங்கள் எழுதிய முதல் நாவல்: 


பெண்ணே என் மேல் பிழை என்னுடைய முதல் நாவல் என்றாலும் அதை பேப்பர் புத்தகமாக வெளியிட fb பக்கத்தில் யாராவது உதவ முடியுமா என்று கேட்டேன்.


அப்பொழுது பிரியங்கா முத்துகுமார் அவர்கள் messangerரில் எனக்கு அட்வைஸ் கொடுத்தார்கள். பதிப்பகம் வைத்திருபவர்கள் அவர்களின் தளத்தில் எழுதுபவர்களுக்கே புத்தகம் போட முன்னுரிமை கொடுப்பார்கள் நீங்கள் விஜய ஸ்ரீ பத்மநாபன் அவர்களை தொடர்பு கொண்டு கேளுங்கள் என்றார்கள்.


fbயில் VPஅவர்களின் messangerரில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் என் நாவலை வாசித்துபார்த்துவிட்டு நல்லாயிருக்கு என்றார்கள்.


நான் அவர்களிடம் chillzeeயில் அக்கதை உள்ளது அதை நீக்க முடியவில்லை எனச்சொன்னதுக்கு பெயர் மாற்றி கதையில் சில மாற்றங்கள் செய்து பிழைகள் எல்லாம் நீக்கிக் கொடுங்கள் புத்தகம் போடலாம் எனச்சொன்னதால் “ விழியோரத் தேடல் நீ “ என்ற பெயரில் அவர்களின் பதிப்பகத்தில் புத்தகமாகவும் அமேசான் kindleலிலும்  இ புத்தகமாகவும் என் நாவல் வெளிவந்தது.


******


நாவல் எழுதி முடித்த பின் நீங்கள் உணருவது என்ன:  


அதுபோல ஒரு ஆத்மார்த்தமான சந்தோசம் வேறெதுவும் இல்லை. ஆனாலும் அதில் உள்ள குறைகள் அடுத்த கதைகளில் இருக்க கூடாது இதைவிட பெஸ்ட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஒவ்வொரு கதை எழுதி முடிக்கும் போதும் உருவாகும்.


******


ஒரு நாவல் எழுத நீங்கள் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் எவ்வளவு :


 முன்பு ஒரு நாவல் முடிக்க நான்கு ஐந்து மாதங்கள் எடுத்துகொள்வேன். பொதுவாக கொஞ்சம் பெரியதாகவே நான் எழுதும் நாவல்கள் அமைந்துவிடும்.


******


ஒரு அத்தியாயம் எழுத எத்தனை மணி நேரம் தேவைப்படும். அப்படி எழுதப்படும் அத்தியாயம் திருப்தியை கொடுக்கும் விதமாக அமையுமா:


ஒரு Epiயை மூன்று நான்கு மணி நேரம் எடுத்து எழுதி முடிப்பேன். மறுநாள் எழுதியதை சரி பார்த்து தேவையானதை ஒட்டி தேவை இல்லாதை வெட்டி எடுப்பேன். ஆக இரண்டு நாட்களில் எழுதி முடிப்பேன்.


ஆனால் கடந்த இரண்டு வருடமாக அவ்வாறாக அமர்ந்து எழுதும் சூழல் இல்லாமல் போய்விட்டது. ரொட்டீன் லைப் ஆரம்பமாவதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். பொதுவாக முதலில் எழுதுவதே எனக்கு திருப்தியாக அமைந்துவிடும்.


******


எழுத்து உலகில் உங்களுக்கு கிடைத்த நட்புகளை பற்றி சொல்ல முடியுமா: 


இது கொஞ்சம் யோசித்துச்சொல்ல வேண்டிய பதில். நிறைய மக்களுடன் நான் கலந்து பழகவில்லை. பொதுவாக தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் ஒரு குரூப்பாக இங்கு இருக்கிறார்கள். நான் தனியாக பயணிப்பதால் நிறைய பேருடன் கலந்து பழகும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.


ஒரு தடவை தமிழ் நாவல்ஸ் link குரூப்பில் ரிலே கதை எழுத அழைப்பு விடுத்தார்கள். அதில் நானும் ஆசையாக இணைந்தேன். ஆனால் ஒரு சிறு மனவருத்தத்தில் அங்கிருந்து வெளிவந்துவிட்டேன்.


அந்த ரிலே கதையில் அறிமுகமான ரதி பிரியன், தீபா செண்பகம் அவர்களின் நட்பு கிட்டியது.  ரதி பிரியன்  அவர்களுடன்  “விடைதேடும் விட்டில் பூச்சிகள்” கதைக்களத்தில் சேர்ந்து பயணிக்கும் அனுபவம் கிட்டியது.



இதனால் தான் ரிலே கதை எழுத நான் சேர்வதே கிடையாது🤣🤣🤣


******


 நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள்: 


சாண்டில்யனின் கடல் புறா, யவன ராணி, சேரனின் செல்வி ,ராஜ பேரிகை இது மட்டுமல்ல அவரின் அனைத்து நாவல்களும்.


அதே போல MR மேமின் எண்ணியிருந்தது ஈடேற நாவல் வரை எழுதிய அனைத்து நாவல்களும் விரும்பி வாசித்திருக்கிறேன்.


விஜயமலர் அவர்களின் தகிக்கும் தீயே குளிர்காயவா. வாநிஷா அவர்களின் இள மனசை தொட்டுப்போறவரே


அதே போல சரயு மேம் நாவல்கள் இன்னும் நிறைய இருக்கு ஆனால் எல்லாம் நினைவில் கொண்டுவந்து சொல்ல இயலவில்லை


ரசனைகளும் மாறும் அல்லவா தற்போது எஸ்.ராவின் இடக்கை, பெருமாள் முருகனின் பூனாச்சி (அ)ஒரு வெள்ளாட்டின் கதை. சு வெங்கடேசன் வேள்பாரி, அல்லி பாத்திமாவின் பாண்டிச்சி தற்பொழுது ஜெயமோகனின் வெண் முரசு நாவல் வாசிக்க எடுத்து வச்சிருக்கேன். இன்னும்...


******


பொன்னியின் செல்வன் வாசித்திருக்கிறீர்களா.. அது திரைப்படமாக வரப்போவது பற்றிய உங்களுடைய கருத்து :


 என் பள்ளி கால இறுதியில் வாசித்திருக்கிறேன். அப்பொழுது .ஊன்றி படிக்கவில்லை. இருந்தாலும் கதை மாந்தர்களும் கதையும் ஓரளவு நினைவில் நிற்கிறது. பொழுது வாய்க்கும் போது திரும்ப வாசிக்க நினைத்துள்ளேன்.


திரைப்படம் எடுப்பது பற்றி பேச்சு அடிபடுவதை சோசியல் மீடியாக்கள் மூலம் அறிந்துகொண்டேன். என்னை பொறுத்தவரை புதினங்கள் வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனால் திரைப்படம் என்பது தயாரிப்பாளரின் பார்வையில் வர்ணம் தீட்டப்பட்டு அசையும் கதையோட்டமாகும். புதினம் வாசித்தவர்களின் விரிந்த எண்ணங்களை பிரதிபலிக்காமல் போனால் ஏமாற்றங்கள் உருவாகும்.


இருந்தாலும் படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையும் திரையில் பார்க்கும் ஆர்வமும் உருவாகியிருக்கு.


 ….


நிஜம் தான் திரையில் வரட்டும் கட்டாயம் பார்த்து விடலாம். தமிழரின் பெருமையை பறைசாற்ற தமிழரால் எடுக்கப் போகின்ற கதை எனும் விதத்தில், ஒரு தமிழராக பெருமிதம் கொள்வோம்.


*******


நேரடியாக நடந்த நிஜ சம்பவத்தை நாவலாக எழுதிய அனுபவம் இருக்கிறதா : 


நம்மைச் சுற்றி உள்ள நிகழ்வுகளின் தாக்கம் சற்றேனும் எழுத்தில் வந்து அமர்ந்துவிடும். கதை கருவோடு நிகழ்வுகள் புனையும் போது அதற்கு பொருத்தமான நிகழ்வுகள் சில பார்த்தது கேட்டது உருவகமாக அமைந்துவிடுவதுண்டு.


******


உங்களுடைய பிளாக்கில் மட்டும் கதை எழுதுவதாக சொன்னீங்க. அப்போ புத்தகம் போடுவது எப்படி : 


 என் முதல் கதைப்புத்தகம் எவ்வாறு வெளிவந்தது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதே போல எனது இரண்டாவது பேப்பர் புத்தகம் “பூகம்பத்தை பூட்டிய பூவை” பல குழப்பங்களுக்கு இடையில் அதே VP மேம் பதிப்பகமான ATMன் மூலமே வெளிவந்தது. இருந்தாலும் கருத்து மோதல்கள் காரணமாக அவர்களுடன் என்னால் புத்தக பதிப்பித்தலுக்காக பயணிக்க இயலவில்லை. இருந்தாலும் என் புத்தகக் கனவை பூர்த்தி செய்த அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.என் மூன்றாவது பேப்பர் புத்தகம் “பிரிவும் உறவும் அவளாலே” புத்தம் Ajudhya Kanthan  அவர்களின் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. fb யில் கதைகளை பதிவேற்றி நட்பூக்களுடன் பயணிப்பதால் புத்தம் போட விருப்பம் என்ற என்னுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்கும் நல்உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


******


காதல் கலந்த குடும்ப நாவல் உங்களுடைய விருப்பம் என்றீர்கள் ஒரு குடும்ப நாவல் என்றால் எப்படி இருக்க வேண்டும். அதில் காதலை ஆசிரியர் எங்கனம் புகுத்தி இருக்க வேண்டும் :  


ஒரு கதை உருவாகும் போது கதை மாந்தர்களின் குடும்பப் பின்னணியோடு கேரக்டர்களை உருவாக்கி ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் ஒவ்வொரு தன்மை (அது நாம் பார்த்து பழகிய மக்களின் தன்மையோடு உருவகம் செய்து) முடிவு செய்து வாழ்க்கைச் சூழலுக்கு பொருத்தமாக அதிக மிகை இல்லாது முடிந்த அளவில் நிதர்சனத்தை ஒத்து எழுதுவ என் பழக்கம். ஒரு கதை என்றால் அதில் சந்தோசம், துக்கம், காதல், துரோகம், வெற்றி என்று எல்லாம் கலந்து இருந்தால் தான் இயல்பாக இருக்கும். காதல் இல்லாமல் இருந்தாலும் அலுப்புத்தட்டும் மிகையாக இருந்தாலும் திகட்டிவிடும். எது..எது எங்கெங்கு எந்த அளவில் தேவையோ அந்த அளவில் முகம் சுளிக்காத வகையில் கதையோட்டத்தோடு எழுதுதல் வேண்டும். திணித்தது போல எதுவும் இருக்க கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து.



நிஜம் தான் சிஸ்டர். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.


******


வரலாற்று நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா, அல்லது இனி எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா :  


இதுவரை எழுதியதில்லை. ஆனால் எழுதும் ஆசை இருக்கு. ஆனால் அதற்கு வரலாறு நிறைய தெரிந்து இருக்க வேண்டுமே. ம்...பாப்போம் என் அறிவுச் செறிவை அதிகரிக்க முடியுமா என்று.


******


ஒரு தொடர்கதை அல்லது நாவல் எழுத ஒரு எழுத்தாளருக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் : 


 நிறைய கதை வாசித்து ஒரு கட்டத்தில் எழுத முயன்றுதான் பார்ப்போமே என்று எழுத ஆரம்பித்தேன். அவ்வாறு ஆரம்பித்த  எழுத்து எனக்கு விருப்பமான ஒன்றாக என்னுடன் ஒட்டிக்கொண்டது. ஆனால் எழுத ஆரம்பித்தப்பிறகு நிறைய என் எண்ணத்தில் என் தமிழில் மாற்றம் வந்துள்ளது. வாசிப்பில் தீவிரமும், ஆர்வமும் உள்ளவர்களுக்கு எழுத்தில் ஆர்வம் வருவது சகஜம் தான். அதை செயல்படுத்த திறன் இருந்தால் எழுதத்துவங்கலாம். எழுத எழுத அவர்களில் மொழிப்புலமையும் அறிவும் தானாகவே செம்மையாக மாறிவிடும் என்று நினைக்கிறேன். அட்வைஸ் தரும் அளவு எல்லாம் நான் இன்னும் வளரவில்லைப்பா.


******


ஒரு நாவலில் வருணனை மற்றும் கவிதைகளின் பங்கு எங்கனம் இருக்க வேண்டும் : 


 வருணனை என்றதும் லா.ச.ரா வின் அபிதா புத்தகம்தான் நினைவுக்கு வருது“உடல் ஒரு கூடு எனில் இதயம் அதனில் குருவி. திடீர் திடீர் திகில் திகில் தொண்டைவரை பறந்து பறந்து மார்த்தட்டில் விழுந்து விழுந்து எழுகையில் அடிவயிறு  பகீர் பகீர்- அதன் சிறகுகளின் படபடப்பு என் நெஞ்சின் துடிப்பு. குருவி கொத்து கொத்தெனக் கொத்திக் கொத்தியே மார்ச்சுவர்கள் பிளந்துவிடும்போல் வலி. விண் விண் விண்- ஒரு கையால் மார்பை அழுத்திக் கொண்டே வண்டியை விட்டிறங்குகிறேன்.”


“நான் குடித்ததில்லை. ஆனால் அரைபோதையில் இருக்கிறேன். நெஞ்சிற்குள் பூக்கள் கொத்துக் கொத்தாய்க் குலுங்க. ஒரு கிளை அசைகிறது. உள்ளெலாம் சுகம்-


கதை முழுங்க இப்படித்தான் கவிதை நயமும் வருணனைகளும் கொட்டி இருந்தது. கதையின் கான்சப்ட் கொஞ்சம் நெருடளால இருந்தாலும் ஒரு பிரமிப்பு இப்படி எல்லாம் கூட ஒருவரால் எழுத முடியுமா. என்ற வியப்பு. ஆனால் வாசிப்பில் தீவிரம் உள்ளவர்களாலேயே இது போன்ற மிகைப்பட்ட வருணனைகளும் கவிலயமும் ஈர்க்கும். நம் கதையின் தன்மை பொறுத்து தகுந்த இடத்தில் தேவையான வருணனைகள் கவிதைகள் கொடுக்க தெரிந்திருந்தால் தாராளமாக கொடுக்கலாம். 



உங்களது வருணனையை வாசிக்கும் போதே கட்டாயம் அடுத்த கதையை வாசிக்கும் ஆவல் தூண்டுகிறது. முயற்சி செய்கிறேன் சிஸ்டர்.


******


உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா : 


முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடந்த இரு வருடமாக என்னால் நான் ஆரம்பித்த கதைகளின் அத்தியாயங்களை தொடர்ந்து பதிவிட முடியாது போய்விட்டதால் திரும்பத்திரும்ப கேட்டும் (குறிப்பாக Jeya Rajan சகோதரி) கொடுக்க முடியாது போய்விட்டது. ஒரு கதையை முடிக்காமல் கிடப்பில் போட்டுவைப்பது எம்புட்டுப்பெரிய அபத்தம் எனப் புரிகிறது. இனிமேல் ஒரு நாவலை முழுவதுமாக எழுதி முடித்தப் பிறகுதான் பதிவேற்ற வேண்டும் என எண்ணி யுள்ளேன்.


நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே என் கதைக்கு சப்போர்ட்டும் ஊக்கமும் வாசகர்களிடம் இருந்து கிடைத்தது. நன்றி நட்பூக்களே.


*******


நீங்கள் எழுதிய கதைகளில் மனதை கவர்ந்த ஒரு காட்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:


“இமாமி நாளைக்கு யாழிசையை என் கஷ்டடிக்கு கொண்டு வந்துடுவேன். உலகத்தின் பார்வையில் அவள் என் காதலியாக அடையாளம் காட்டப்படுவாள். பிராங்கின் அக்கவுன்ட் பணத்தை யாழிசை என்ற பெயர் உள்ள இந்தியப்பெண் கையாடல் செய்திருகிறாள் என்று தெரியவரும்.


மேலும் நாளை ஸ்டாக் மார்கெட்டில் ஓர் பெரும் தொகை அவளின் பேரில் இன்வெஸ்ட் செய்யபட்டு அதன் மூலம் முக்கிய பங்குகள் பெரும் ஏற்றத்தை அடையப்போவதையும்,  அதன் காரணமாக அவள் தேடப்பட்டுவதும்  அவளின் பெயர் ஸ்டாக் மார்கெட்டில் கேள்வியாக உச்சரிக்கபடுவதை அவள் அறிய வாய்ப்பில்லை. இதெல்லாம் அவள் எதிர்கொள்ளும்போது அவள் நிலை..........?.


“யாழினி உன் அக்கவுண்டில் வெறும் ஆயிரங்கள் மட்டும்தான் இருக்குதா? அதில் குரோர் கணக்கில் பணம் இருக்குதுன்னு நான் சொல்கிறேன்”


“யார் சொல்றது சரின்னு பார்ப்போமா..? என்றவன் அவளது போனை எடுத்து அதிலிருந்து தான் எடுத்த சிம்மை திரும்பவும் அதில் போட்டு ஆக்டிவேட் செய்தவன் இயல்பாக அவளின்  அக்கவுன்ட் இருக்கும் பேங்கின் பேலன்சை மொபைல் அக்கவுண்டில் பாஸ்வேர்ட் போட்டு எடுத்து காண்பித்தான்


அவள் அக்கவுண்டில் பலகோடி ரூபாய் பேலன்ஸ் இருப்பதைப் பார்த்ததும் அவளுக்கு தலையே சுற்றியது. இது எப்படி சாத்தியம் என்றவள், இதை நான் நம்ப மாட்டேன். நீங்கள் என்னை ஏமாற்றுவதற்கு ஏதோ செய்து இருக்கிறீர்கள்  என்று கூறினாள்.


இது என் கதை பூகம்பத்தை பூட்டிய பூவை என்ற நாவலில் வந்த பகுதிகள். நான் எழுதியதிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த நாவல்


…..


வாவ்!! அருமையான காட்சி சிஸ்


********


எழுத்தாளர்கள் பலர் புதுசு புதுசாக அறிமுகமாகி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


நிறைய வாசிக்கச் சொல்வேன். அதனால் மொழியில் செம்மையும்  அறிவில் விசாலமும் கிடைக்கும் எனவே அத்தன்மை அவர்களின் எழுத்தில் பிரதிபலிக்கும் .


*******



ஒரு நெகடிவ் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் வரவில்லை. பாஸிடிவ்வை எதிர்கொள்பவர்கள் ஏன் நெகடிவ்வை ஏற்க மறுக்கிறார்கள் என்று சொல்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க:


*****


என் கதையின் கரு, எழுத்து நடைக்கு யாரும் இதுவரை நெகடிவ் கருத்துச் சொன்னதில்லை. பெரும்பாலும் பாசிடிவ் கமெண்ட் மட்டுமே வந்திருக்கு என்றாலும் என் தமிழில் குறை உள்ளதை சுட்டிக்காண்பித்திருக்கிறார்கள். எனவே அக்குறை நீக்க நானும் நிறைய வாசிப்பை முன்னெடுத்து ஓரளவு சரி செய்துள்ளேன்.


நெகடிவ் கமென்ட் வருகிறது என்றால் அதில் நியாயம் இருக்கும் பட்சத்தில் அடுத்த கதைகளில் அது போல வராமல் பார்த்துக் கொள்ளலாம். இல்லை வம்புக்கு குறை சொல்கிறார்கள் எனப்புரிந்தால் கண்டு கொள்ளாது சண்டை போடாது சிரிப்புடன் கடந்து விடலாம் என்பது என் எண்ணம்.



நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஒரு கதை என்றால் விட்டு விடலாம் கொடுக்கின்ற கதைக்கு எல்லாமே நீதிதேவனின் தீர்ப்பு இது தான் என்பது போல எழுதினால் பதில் கொடுப்பதில் தவறில்லை. அப்போது தான் கொஞ்சமாவது அவர்களுக்கும் உரைக்கும், எழுதியவரும் அடுத்த கதையில் இதே பிழையை செய்ய மாட்டார்கள்.


*******


 இன்றைய எழுத்தாளர்களின் எழுத்து, படைப்புகளை பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா:


நிறைய மக்கள் இப்பொழுது வாசிக்கவும் எழுதவும் வந்துள்ளது ஆரோக்கியமான ஒன்றாகவே நான் பார்க்கறேன். சிலரின் முதல் கதையே பெரிய எழுத்தாளர்களை போல சிறந்ததாக இருப்பதைப் பார்த்து வியந்துள்ளேன்.


******


சமூக கட்டுப்பாடு என்றால் என்ன : 

அன்றைய பெண்களின் வாழ்க்கை நிலையும் இப்போதைய நிலையினையும் பற்றி சொல்லுங்க:


ஒரு சமூகம் மனித நேயத்தையும் அன்பையும் போற்றி வளர்க்குமாறு அவர்களின் நெறிகள், விதிகள், சட்டங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் அவ்வாறு இருத்தலே நல்ல சமூகத்தின் சமூக கட்டமைப்பு என நான் நினைக்கிறேன். 


அன்றைய பெண்களுக்கு அவர்களின் எண்ணங்களை விரிவு படுத்தவும் அதனை செயல்படுத்தவும் வாய்ப்பு குறைவாக இருந்தது.


இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியா பெண்களுக்கான எண்ணக் கனவுகளையும் லட்சியங்களையும் விசிறி விடும் தன்மை உள்ளதாகவும் அவர்களின் முன்னேற்ற பாதையை உணர முடிவதாகவும் உள்ளது. அதேபோல சோசியல் மீடியாக்கள் பெண்களை கொஞ்சம் மிரட்டவும் செய்கிறது.


******


கிராமத்து கதைக்கும், நகரத்து கதைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எதனால் நகரத்தை விட கிராமமே முதலிடத்தை பெறுகிறது :  


கிராமத்து கதை என்றால் வயல், வரப்பு, வெள்ளந்தி மனிதர்கள். சமூகமாக கூடி வாழ்தல் போன்ற தன்மை உடையதாக உள்ளது. ஆனால் இன்றைய கிராமங்கள் அவ்வாறு இல்லை என நினைக்கிறேன்.


அதே போல மரத்தடி பஞ்சாயத்து , மாமன் மச்சான் உறவு, கூள் கஞ்சி, இயற்கையான காற்று போன்று தப்பொழுது தேடி ஓடும் மோகம் இது போன்றவைகளின் தேவை. இல்லாததைத் தானே மனித மனம் தேடும். அதனாலேயே கதைகளில் நகரத்தை விட கிராமமே முதலிடத்தை பெறுகிறது என நினைக்கிறேன்..


….


கட்டாயம் சிஸ்டர்


******


கொரானா / புயல்/ வெள்ளப்பெருக்கு/ சுனாமி இதைப் பற்றி ஏதாவது நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா :


ம்ஹூம்... இன்னும் இயற்க்கை இடர்களைப் பற்றிய விஷயங்கள் என் கதைகளில் வந்ததில்லை .  நன்றிகள்  என்றும் நட்புடன் கதைகளுடன் பயணிப்போம்.


தீபாஸ்


*******


இனி வாசகர்களுக்கான கேள்வியும் எழுத்தாளரின் பதிலும் :


காப்பி கதைகள் என்றால் என்ன ?


காப்பி கதைகளா.? அதாவது காப்பி என்பதன் தமிழ் வார்த்தை குளம்பி, கொட்டை வடி நீர் இப்படித்தான் எனக்குப் பொருள் தெரியும். 

ஒரு வேளை மத்தவங்க கதையை copy செய்து தனது பெயரில் போடுவதை கேட்கிறீர்களா..?? என்ற குழப்பம் வந்துருச்சு எனக்கு. சேச்சே அது அபத்தம். 

நல்லபடி சிந்தித்தால் காப்பி பருகும் வேளையில் படிப்பது போன்ற ஒரு பக்க கதைகள் பற்றி கேட்கிறீர்களோ...??

என் சிந்தைக்கு எட்டிய பதில்கள் இதுதான்.


……


🤣🤣🤣🤣


******


பாடல் வரிகளை வைத்தே ஒரு எழுத்தாளர் தன்னுடைய கதைகளை ஒப்பேற்றுவது ஏன்:


என்னப்பா இப்படி கேட்டுட்டீங்க. நான் ஆரம்பத்தில் எழுதிய நாவல்களில் சிட்டிவேசன் சாங் சேர்த்திருக்கேன் இருங்க ஒரு சாம்பில் பாட்டை ச்சே கதை பகுதியை எடுத்து விடுறேன்.

அவன் பேச்சில் ஆத்திரம் கொண்டவள் ,  உங்களை... என்று பல்லைக் கடித்தபடி ஒன்றும் செய்யமுடியாத இயலாமையுடன் போய் சோபாவில் அமர்ந்தவள் விரல் நகத்தை கடித்தவாறு அவனை முறைத்துப் பார்த்தாள் .

        

 மஹிந்தன் தன்னுடைய ரீடிங்டேபிளின் முன் உட்கார்ந்து அவளின் கோபத்தை ரசித்தபடி நிழல்நிஜமாகிறது என்ற படத்தில், எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடிய பாடலை ஐ பேடில் பிளே செய்தான் .

        

“கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஓர் மலர் என்றானே,

 கற்பனை செய்தானே... கம்பன் ஏமார்ந்தான் .

 

(அத்துடன் பாடிக்கொண்டே அவள் அருகில் சென்று உட்காரப் போனவன், அவளின் கோபத்தை  பார்த்து, பயந்தது போல் பாவனை  செய்தவன் ).

 

அம்புவிழி என்று ஏன் சொன்னான்.. அது பாய்ந்ததினால் தானோ...

(என்று அவன் பாடவும் கொதிப்படைந்தாள் கவிழையா)

     

அருஞ்சுவை பாலென்று ஏன் சொன்னான் அது கொதிப்பதினால் தானோ... .

 (என்று சிரித்தபடி பாடலுடன் சேர்ந்து பாடினான்)

 

உட்கார்ந்து இருந்தவள் அவனிடம் முகத்தை திருப்பியபடி எழுந்து அங்கு இருந்த புக் செல்பில் இருந்த ஓர் புக்கை எடுத்து  அதை வாசிப்பது போல் பாவனை செய்தாள் .ஆனால் அடுத்து வந்த பாடல் வரிகளும் அவளின் செயலுக்குப் பொருத்தமானதாக சோதித்தது ழையாவை

    

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ-அந்த

(ஒளியில் அவளின் உருவம் மயக்க)

    

தீபத்தினால் ஓர் நெஞ்சைஎரித்தால்

(ஓர் பெரும்மூச்சை விட்டபடி)

தீபமும் பாவமன்றோ.

 

கவிழையா கடவுளிடம்  அவனுக்கு இந்த ரசிப்புத்தன்மையை ஏன் கொடுத்தாய் என்று முறையிட்டு, இவனிடம் நான் இன்னும் தோற்றுவிடுவேனோ? என்று நடுக்கமாக கேள்வியை மனதினுள் கேட்டாள்  .

   

வள்ளுவன் இளங்கோ, பாரதி என்றொரு

வரிசையை நான் கண்டேன் –அந்த

வரிசையில் உள்ளவர் மாட்டும்மல்ல அட

நானும் ஏமார்ந்தேன்

 

அவன் திரும்பவும் கூட சேர்ந்து பாடியதில் அடங்கமாட்டான் என்று கோபத்துடன் கையில் வைத்திருந்த புத்தகத்தைத் தூக்கிப் போட கை  ஓங்கினாள் .

வேகமாக அவளின் அருகில் வந்தவன் அவள் கையை எறியவிடாமல் இறுக்கமாக பிடித்தவாறு 

   

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்

அடுப்படிவரைதானே ஓர்

(அவனின் பனியனில் இல்லாத காலரை தூக்கிக்காண்பித்தபடி)

   

ஆதிக்க நாயகன் சாதிக்கவந்தால்

அடங்குதல் முறைதானே .

என்று பாடியபடி புத்தகத்தை கைப்பற்றி அவளையும் ஓர் கையில் பிடித்தபடி புத்தகத்தை அதற்குரிய இடத்தில் வைத்தவன் அவளை இழுத்துக்கொண்டு படுக்கையில் விழுந்தான் .

    

அவனின் பிடியில் இருந்து விடுபட ழையா முயன்றாள் உடனே மஹிந்தன் கூறினான் “என் பிடியில் இருந்து  நீ எவ்வளவு முயன்றாலும்  உன்னால் விலகிப்போக சான்சே இல்லை.

 

பிறகு ஏன் வீணா உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ற பேபி பேசாமல் தூங்கு” என்று கூறியவன் அவளை தன் கையணைப்பிலேயே வைத்துக்கொண்டு கண்மூடினான்


இது என் முதல் கதையில் உள்ள ஒரு சாம்பில் ஏனோ தற்போது எழுதும் கதைகளில் இவ்வாறு எல்லாம் எழுத வரமாட்டேங்குது ஒரு வேளை என் ரசிப்புத்தன்மை கம்மியாகிடுச்சு போல.  இதுபோல எழுதும் மனநிலை MR மேம் அவர்களின் கதைகளின் வழி அப்பொழுது எனக்குள் ஊடுருவி இருக்கலாம்.



நானும் முதல் கதைக்கு அதிகமாகவும் இரண்டாவது கதைக்கு சிலதும் பயன் படுத்தினேன். ஆனால் சினிமாத்தனம் (பாடல்) இல்லாமல் நாவல் எழுதுவது சிறப்பு என்று அஜுத்யா சிஸ் சொன்னதால் மாத்திவிட்டேன். முன்பு எழுதிய கதைகளில் உள்ள பாடல் வரிகளை எல்லாம் நீக்கி விடப் போகிறேன்.


******


ஒரே பிரசவத்தில் மூணு குழந்தைகள் பிறப்பதாக எழுதப்படும் கதைகளை பற்றி என்ன சொல்ல நினைக்கிறீங்க :


ஹா..ஹா..ஹா...இரண்டாம் புலிகேசி டைலாக் ஞாபகம் வருது. 

“காவல்காரன்: மன்னா நான் பிள்ளை குட்டிக்காரன் 


மன்னன்: என் கேள்விக்கு இது பதில் கிடையாதே.


அமைச்சர்:  மன்னா அவன் ஆண்மையை பற்றி புகழ்ந்து பேசுகிறான்.


….


🤣🤣🤣



மிக்க நன்றி சிஸ்டர்


உங்களது அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களது பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தது.


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்.


ஹாய் பிரண்ட்ஸ், 


இன்றைய கேள்வி பதில் அதிகமாக போய் விட்டதால் அடுத்த வாரத்தில் இருந்து மாற்றப்படும்.


இந்த எழுத்தாளரின் கதையை வாசித்தவர்கள்  அதை பற்றிய கருத்துக்களை வெளியிடலாம். மற்றவர்கள் வாழ்த்தலாம்...


நன்றி

Comments

  1. நன்றி ஆனந்த ஜோதி சிஸ் என் எழுத்தின் வேகம் மட்டுப்பட்டுவிட்டதால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைத்திருந்த வேளையில் எழுத்தாளர் அறிமுகப்பகுதியில் என்னை இணைத்தில் மிக்க மகிழ்ச்சியாகவும் எனக்கு ஊக்கம் தருவதாகவும் இருந்தது. ம்...இன்னும் நான்கு நாட்களில் என் போட்டி தொடர்கதையை எழுதி முடித்து மொத்தமாக தளத்தில் தந்துவிடுவேன். ❤️☺️என்னைப்போன்ற எழுத்தளர்களுக்கு கிடைக்கும் ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது உங்களின் இச்சேவையால் மிக்க நன்றி சிஸ்.

    ReplyDelete

Post a Comment