ஜனனி நவீன்

 


#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#இதுநம்மஏரியா

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்று நான் உங்களுக்கு அறிமுகப் படுத்தப் போகும் நபர் எழுத்தாளர் ஜனனி நவீன்.

அவர்களைப் பற்றிய தகவல்கள்:

(I always speak my heart. அதனால் பதில்கள் கொஞ்சம் blunt ஆ இருக்கும்.)
பெயர் :  ஜனனி நவீன்

சொந்த ஊர் : திருச்சி

படிப்பு : எம்பி எம்பி A படிச்சேன் அதாங்க MBA human resources / Advertisement and Media planning

பணி : Home Minister

தளம் : www.narumugai.ink

அமேசான் பெயர்: janani naveen & ஜனனி நவீன்

*********

உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:

நான் நானே தான்.  பழகி பாருங்க உங்களுக்கு என்னை பத்தி தெரியும். நான் என்னத்த பெருசா என்னை பத்தி சொல்லிட போறேன்?!!

********

உங்களது விருப்பமான எழுத்தாளர்:

பதிமூன்று வயதில் படிக்க ஆரம்பித்தேன். நிறைய பேர் பிடித்த வரிசையில் வருவாங்க.

*********

உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:

ஒவ்வொரு கதையும் புது அனுபவம். புது புது விஷயங்கள் கத்து குடுக்குது. தமிழ் ஒரு அளவுக்கு எழுத கற்றுக்கொண்டேன். நிறைய நல்ல உள்ளங்கள் நட்பு கிடைத்தது. ஒரு கதையை விட அடுத்த கதை சிறப்பா கொடுக்க உத்வேகம் வந்து இருக்கு.

**********

நீங்கள் எழுதிய முதல் நாவல்:

ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ

**********

உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:

விழி வழி மனம் கொய்தாய்

*********

நீங்கள் எழுதிய மொத்த நாவல் :

10 முழு நீள novel
3 குறு novel
2 சிறு கதை

**********

எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:

மூன்று

*********

நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:

காதலடி கண்மணி இப்போ தான் முடிச்சேன். தற்சமயம் free free free

*********

உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர் :

நின்னயே சகி என்று சரணம் எய்தினேன்
விழி வழி மனம் கொய்தாய்
தெவிட்டா தீஞ்சுவை நீ
மாயவனின் மங்கையிவள்
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
காதலடி கண்மணி
(சில கதைகள் தான். மற்றது எங்க group la list இருக்கு)

...

நான் 4 கதை படிச்சிருக்கேன்

********

நிஜக்கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :

மந்திரம் சொன்னேன் வந்துவிடு & மாயவனின் மங்கையிவள் ரெண்டும் கொஞ்சம் நிஜ கதை தழுவிய கதைகள் தான்.

********

போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவத்தை பற்றி சொல்ல முடியுமா:

கலந்து கிட்டேன்,  வெற்றி பெற்று முதல் பரிசு வாங்கினேன். எழுத்தாளர் யார் என்று தெரியாமல் வாசகர்கள் கொடுத்த வரவேற்பு மற்றும் அவங்க அன்பு மட்டுமே இப்போ வரை மனசுல நிக்குது. அதை தவிர பெருசா சொல்லிக்க ஒண்ணும் இல்லை.

********

எழுத்தாளர் மற்றும் வாசகருடனான தொடர்பு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க :

நல்ல நட்போட இருக்கனும்.
நல்ல நட்புன்னு நான் சொல்றது நல்ல கதைகள் கொடுத்தா ஊக்குவிக்கனும் அதே மாதிரி கதை நல்லா இல்லை என்றால் குறைகளை சுட்டி காட்டணும். நட்புக்காக நல்லா இருக்கு நல்லா இருக்கு என்று சொல்வது அவங்க தப்பை திருத்திக் கொண்டு வளர விடாமல் செய்துடும்.

*************

நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:

ஒவ்வொரு கதையும் எனக்கு என் குழந்தை போல தான். But ரொம்ப பிடிச்சது மாயவனின் மங்கையிவள் and மந்திரம் சொன்னேன் வந்துவிடு.

பிடித்த characters
கெடா மீசை
உதி மாமு
ஜோனத்தன் தாமஸ் குரியன்
ஆத்ரேயன்
விஸ்வநாதன்
சஹானா
ஜான்வி

..

உதி செம அதிரடி ஹீரோ, ஜோனத்தன் மென்மையாக காதலை வெளிப்படுத்துவதில் மன்னன், ஆத்ரேயன் அதிரடி, ஜான்வி சோ கியூட்

**********

உங்கள் நாவல் or தொடர்கதை எது  வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது :

நிலவில் உன் முகம் கண்டேனடி
விழி வழி மனம் கொய்தாய்
தெவிட்டா தீஞ்சுவை நீ
மந்திரம் சொன்னேன் வந்துவிடு

*********

உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:

ஒருத்தரை சொல்லி மற்றவரை விட்டு அவங்க வந்து என் கூட சண்டை போடணுமா?. உங்க trap ல சிக்க மாட்டேன் தோழி 😉😉

...

ஏன்மா யாருமே மாட்ட மாட்டேங்குறிங்க. ஒரு சின்ன லிஸ்ட் தரலாம் இல்லை இப்படியே எல்லோரும் பயந்து ஓடுறேளே இது நோக்கே நன்னாருக்கா😂😂😂😂

********

நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:

தேவாரம், திருவாசகம், கீதை, குரான், பைபிள் என்று சொல்ல தான் ஆசை. ஆனா நான் அவ்ளோ நல்ல பய புள்ளை இல்லையே🤔

...

ஒரு நிமிசத்தில் ஜெர்க் ஆகிட்டேன்😂😂😂ஏமாத்திட்டிங்க

*********

உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

I love you all. உங்களோட ஊக்கம் இல்லைன்னா இவ்ளோ தூரம் என்னால ஆர்வத்தோடு எழுதி இருக்க முடியாது.

**********

விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டுமா. நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:

உண்டு. அழகிய சங்கமம் போட்டியில் விழி வழி மனம் கொய்தாய் நாவலுக்கு முதல் பரிசு வாங்கி இருக்கேன்.

************

உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:

நிறைய படிப்பேன். அடுத்தவங்க எழுதறது மட்டுமே படிச்சுட்டு இருக்கியே நீ எழுத முயற்சி பண்ணினால் என்ன என்று கேட்டது எனக்கு வாக்கப்பட்டவர். சரி ஒரே ஒரு கதை எழுதுவோம் என்று எழுத வந்தேன். எழுதிட்டே இருக்கேன். எவ்ளோ தூரம் தெரியலை. எனக்கு சலிப்புத் தட்டும் வரை எழுதுவேன்.

***********

நீங்கள் எழுதிய நாவலிலே உங்களுக்கு பிடித்த நாவல் எது? அந்த கதாபாத்திரத்தை பற்றி சற்று விளக்க முடியுமா:

எனக்கு நான் எழுதின எல்லாமே பிடிச்சு தான் எழுதினேன். However as I always say எழுதி முடிச்சதும் இன்னும் better ஆ எழுதி இருக்கலாம் என்று தான் தோணும். May be that’s what  helping  me to improvise.

குறிப்பா சொல்லணும் என்றால்
நின்னையே சகி என்று சரணம் எய்தினேன்
நிலவில் உன் முகம் கண்டேனடி
மாயவனின் மங்கையிவள்
தெவிட்டா தீஞ்சுவை நீ
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
காதலடி கண்மணி

பிடிச்ச character எப்பவுமே ஜோ தான். ஒரு காதலனா, கணவனா ஜோ வை எல்லாருக்கும் பிடிக்கலாம். But ஒரு அப்பாவா எனக்கு அந்த character ரொம்ப பிடிக்கும். அந்த character அப்படியே என்னோட அப்பா தான். அதனால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

...

அருமையான பதில்

*********

நின்னையே சகியென்று சரணமெய்தினேன் நாவலில் வருகின்ற நாயகன் நாயகி பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :

துருவன் விஸ்வஜித் ககாதலி யோட அப்பா and அண்ணன் ரெண்டு பெரும் செய்த கேடு கெட்ட காரியத்தால் காதலுக்கும் வஞ்சத்துக்கும் இடையே மாட்டிட்டு தவிக்கும் கதா பாத்திரம்.

மதுர யாழினி – எதுக்காக பழி வாங்கப் பட்டோம் என்று தெரியாமல் தண்டனை அனுபவித்து அதுக்கான காரணம் தெரிய வரும் போது துடித்து அழும் சேற்றில் முளைத்த தாமரை.

**********

அதென்ன எப்போதும் ஒரே அழுத்தமான படைப்புகளை கொடுத்து கலங்கடிக்கிறிங்க கொஞ்சம் நகைச்சுவை உணர்வு கலந்து கொடுங்கனு சொன்னதற்கு கூலாக ஐஸ்கிரீம் ஸ்டோரி கொடுக்கிறேன் சொன்னிங்க அந்த கதைய நான் இன்னும் காணல மைலார்ட் :

அவ்ளோ அழுத்தமா அழுகாச்சியாவா இருக்கு என் கதைகள் எல்லாம்?

எனக்கு காமெடி வராதோ என்று ஒரு குட்டி பயம்.

கோவம் வர மாதிரி காமெடி பண்ணிட கூடாது என்ற எச்சரிக்கை and moreover என்னோட design அப்படி. Manufacturing defect.

ஆனால் வாசகர்கள்  நான் ஜாலி comedy கதை எழுதனும் என்று விருப்பப்பட்டால் கட்டாயம் எழுதுவேன். அப்படி ஒரு கதை கைவசம் இருக்கு. எழுதிடுவோம்.

...

நன்றி

**********

ஜோனர்தன் & ஆத்ரேயன் வாரிசுகளின் கதை அட்டகாசமான நகர்வு  எப்படி இவர்களை வைத்து ஒரு தொடர் கதை எழுத முடிவு பண்ணியிருந்திங்க அதை பற்றி சொல்ல முடியுமா :

சொந்த அம்மாவை சித்தி என்று நினைத்து தள்ளி வைக்கும்  நாயகன்.
தன்னை உயிரா பார்த்துக்கொள்ளும் அப்பாவுக்கு தான் பிறக்கலை என்று தெரிந்த பின் கூட அப்பா மேல பாசம் மாறாத நாயகி. சேர்ந்தால் எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்ன யோசனை தான் series கதைகளாக உரு மாறி இருக்கு.
Thanks to manolakshmi my sister who gave this idea.

...

நிஜமாகவே அருமையாக இருந்தது. ஜோவின் உண்மையான தந்தை பாசம் ருத்ரனிடமான முறைப்பு,
ஆத்ரேயனின் கோபம், இயலாமை, பாசம்,
ருத்ரனின் கம்பீரம், கர்வம், தன்னவள் மீதான அன்பு
யசோவின் ஏக்கம், அன்பு, அழுகை
ஜான்வியின் குறும்புத்தனம், மோர்மிளகா மீதான காதல்
அஷ்வினின் உண்மையான நட்பு

🙂🙂🙂🙂

**********

ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா :

கதை எங்க ஆரம்பிக்கனும் எங்க முடியும் என்று மொத்த கதையும் முடிவு பண்ணிட்டு தான் எழுத ஆரம்பிப்பேன். அத்தியாயங்கள் எவ்ளோ என்று தோராயமாக முடிவு செய்து இருப்பேன். ஒன்னு ரெண்டு அத்தியாயங்கள் கூடும் குறையும்.

வார்த்தைகள் முடிவு பண்ணி தொடங்க முடியாது காட்சிகளுக்கு ஏற்ப தான் அது அமையும்.

*********

உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :

இந்த மூன்று வருஷத்தில் துரோகம், பப்ளிசிட்டிபைத்தியம், போட்டிகள் பொறாமைகள் என்று பல வற்றை கடந்து வந்து இருந்தாலும் தெளிவாக புரிந்து கொண்ட ரெண்டு விஷயங்கள்
ஒன்று நல்ல எழுத்துக்கு என்றுமே மதிப்பு இருக்கும்.

அடுத்தது நம்ம கம்முன்னு இருந்தா ஜம்முன்னு இருக்கலாம்.

**********

நட்பு என்ற தலைப்பை உங்களுக்கு கேள்வியாக தரேன் அதைப் பற்றி சில வரிகள் சொல்ல முடியுமா :

நட்பு என்றால் நம்பிக்கை.

*******

எழுத்தாளர், வாசகர் , விமர்சகர் இவர்களது தொடர்பு , எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க :

வாசகர்களின் பின்னூட்டங்கள் தான் என்னை மாதிரி வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஊட்ட மருந்து. அத்தியாயங்கள் படிச்சுட்டு உண்மையா என்ன தோணுதோ அதை சொல்லணும் என்று தான் எதிர் பார்ப்பேன். நியாயமான குறைகள் சொன்னால் கட்டாயம் மாத்திட்டு இருக்கேன் அது என்னோட நிறைய வாசகர்களுக்கு தெரியும்.
(குறை கூறவே படிக்கும் ஆட்களை பற்றி நான் பேச விரும்பலை.)

அதே மாதிரி மனசுக்கு பிடிச்சு இந்த கதை மத்தவங்க miss பண்ண கூடாது என்று நினைத்தால் தான் நான் விமர்சனம் எழுதுவேன். விமர்சனம் என்பது கல்யாணம் காதுகுத்துக்கு  வைக்கும் மொய் இல்லை. “ஹான் நான் உங்களுக்கு வெச்சுட்டேன் எனக்கு மறக்காமல் நீங்க வச்சுடுங்க” என்று சொல்ல.

இது திமிர் இல்லை. நம்ம ஒரு கதை பரிந்துரை செய்தால் “இவங்க சொல்லி இருக்காங்க எப்படி இருக்கு பார்க்கலாம்” என்று படிக்கும் வாசகர்கள்
“ஆமாம் பா நல்ல கதை தான் பரிந்துரை செய்து இருக்காங்க” என்று தான் சொல்லணும். “இதை போய் பிடிச்சு இருக்கு சொல்றாங்களே!” என்ற எண்ணம் வர கூடாது. இது எழுத்தாளர் to  எழுத்தாளர் விமர்சனம்.

Now வாசகர்கள் to எழுத்தாளர் விமர்சனம்.
உங்களுக்கு  அபிமான எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கலாம். எழுத்தாளரை நேசிக்கறதை விட  அவங்க எழுதின எழுத்துக்களை நேசிங்க. அப்போ தான் அதோட குறை நிறைகளை கூற முடியும். ஒரு எழுத்தாளரை உங்களுக்கு பிடிச்சு இருந்தால் குறைகளையும் எடுத்து சொல்லுங்க. அது அந்த குறைகளை சரி செய்து இன்னும் நல்ல படைப்புகளை தர உதவும். (இது நடுநிலை வாசகர்களுக்கு தான். வேணும் என்று ஒரண்டை இழுப்பவர்களுக்கு பொருந்தாது).

Negatives சொல்லுவதை கொஞ்சம் பதமா சொல்லுங்க. தளிர் நடை போடும் குழந்தையின் நம்பிக்கையை அது உடைச்சுட கூடாது.
என்னோட கருத்துக்கள் பற்றி என் வாசகர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றிகள் பல.

...

அருமையான கருத்து நானும் அப்படித்தான் என்னுடைய முதல் கதையிலே சொல்லியிருந்தேன். பல தோழமைகள் என்னிடம் நிறை குறைகளை என் மனம் வருந்தாதது போல சொன்னார்கள் நானும் அதை ஏற்று என்னை நிறைய மாற்றிக் கொண்டேன்.

நிறையை கதைக்கு ஏற்றபடியும் குறையை எழுத்தாளரின் மனம் தளராதபடியும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியும் சொல்லுங்க.

ஒரு விமர்சனம்  எழுத்தாளரை ஊக்குவிக்கும்படியாக இருக்க வேண்டுமே அன்றி ஒடுங்கி போய் மூலையில் இருப்பது போல் ஆக்கி விடக்கூடாது, அது போல குரூப்பில் விமர்சனம் போட்டு விட்டு தனிப்பட்ட முறையில் அந்த கதை, எழுத்தாளரைப் பற்றி தாக்கி பேசுதல் கூடாது அது யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கிறேன்...

**********

மிக்க நன்றி ஜானு
உங்களது அதிரடியான பதில் சூப்பர்

மேலும் பல படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐..

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய எழுத்தாளர்  கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை முன் வைக்கலாம். ஏதாவது  கேள்விகளை கேட்க நினைப்பவர்கள் தராளமாக  கேட்கலாம்..... மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்

மிக்க நன்றி
🙏




Comments

  1. One of my favorite writer. Because in her every story back round should be pain of women and expect the remedy from her loved once.some social rectification filed. All the best mam

    ReplyDelete
  2. தந்தையின் பாசத்தை ஸ்பரிசத்தை அனுபவித்ததில்லை.ஜோ போல் ஒரு தந்தை ஆண் தேவதை தான்.அரங்கன் உங்களுக்கு நல்லருள் புரிவான்

    ReplyDelete
  3. My ever time favourite ஜோ.....
    அப்பா... அப்பப்பா...... அவ்ளோ அருமை... எண்ட மோளே....சக்கர..... 💕💕💕
    நண்பனாக அஸ்வின் சூப்பர் .....
    எனக்கு எல்லா கதைகளும் பிடிக்கும்.....( தங்களையும்)🤩🤩🤩💕💕💐💐💐💐

    ReplyDelete

Post a Comment