#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#இதுநம்மஏரியா
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் சரண்யா லட்சுமணன்....
அவர்களைப் பற்றிய விபரங்கள் :
பெயர்: L.சரண்யா லக்ஷ்மணன்
சொந்த ஊர் : காஞ்சிபுரம்
படிப்பு : B.A.,B.L., D.L.L (Dipolma in Labour Law )
பணி :வழக்கறிஞர்
தளம் : சகாப்தம்.
அமேசான் பெயர்: சரண்யா வெங்கட்
***
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
வழக்கறிஞர் தொழில் செய்தாலும் வாசிப்பை மட்டும் உயிர் மூச்சாக கருதும் ஒருவள்
*****
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
ராஜேஷ் குமார் சார், சண்டிலியன், நித்யா கார்த்திகன், இந்திரா செல்வம், மேகலா அப்பாதுரை, வனிஷா, அழகி அன்பு, கவி அன்பு, கௌரி முத்துகிருஷ்ணன், மல்லிகா மணிவண்ணன், ஜனனி நவீன், சசி முரளி, ஆதி பிரபா, ஸ்ரீ கலா, இன்னும் என் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துகளும் வாசிக்க பிடிக்கும், சும்மாவா சொன்னாங்க வாசிப்பு ஒரு போதைன்னு, படிக்க ஆரம்பித்தால் சாப்பாடு, தூக்கம் கூட எனக்கு வேண்டாம்.
...
நிச்சயமா/ நீங்கள் மேலே கூறியிருக்கும் எழுத்தாளர்களில் ஒரு சிலரை தவிர்த்து அனைவருடையதும் வாசித்திருக்கிறேன் . கவி அன்பு சிஸ்டர் என்னுடைய நெருங்கிய தோழி
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
இது வரை 4 சிறு கதை எழுதி இருக்கேன், அதில் மூன்று சிறு கதை நிஜத்தில் என்னை பாதித்த நிகழ்வுகளின் தாக்கத்தால் எழுதியது, 6 நாவல், 7 சிறுகதை எழுதி கொண்டு இருக்கேன், நடுவில் உடல் நிலை சரி இல்லாதல் ஒரு வருடம் எழுதாமல் இருந்தேன்.
*****
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
தீ பிறை
*****
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
கண்டிப்பாக என்னோட முதல் நாவல் தான், முதல் கதைக்கு நேர்மறை கருத்துகளை விட எதிர் மறை கருத்துகள் தான் நிறைய கிடைத்தது, அது எப்படி ஒரு வழக்கறிஞர் இப்படி எழுதலாம், நீங்களே எப்படி சட்டத்திற்கு புறம்பாக தண்டனை தருவிங்க இப்படி பல...கருத்துகள்
*****
போஸ்ட் பார்த்த நியாபகம் இருக்கிறது
****
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
நான்கு சிறு கதை எழுதி முடித்து இருக்கேன், 6 நாவல், 7 சிறு கதை எழுதிட்டு இருக்கேன்.
1. நயன தாரகை நீயடி,
2. புதுமை பூ,
3. மாயா யட்சிணி,
4. உயிர் உறையும் உறவே,
5. யுத்த களம்,
6. சதுரன்
சிறு கதைகள்:
1. தீ பிறை,
2. நிழலுரூ,
3. கானல் நீர் காதல்
4. Confession
5. எக்கு குண்டுகள்
4. குருதி வேட்டை
5. உயிர் உருகுதடி சகி
6. உத்திரத்தில் உதித்த நேசமலர்
7. ஊழித்தியில் உதித்த காரிகை,
...
அருமையான மற்றும் அதிரடியான பெயர்கள்
*****
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
: 3 வருடம்
*****
தொடர்கதை எழுதுவது ஈஸியா நாவல் எழுதுவது ஈஸியா :
நாவல் எழுதுவது எளிது என்று நினைக்கிறேன், நாம் சொல்ல வரும் கருத்துகளை எளிமையாக புரியும் படி சொல்ல வேண்டும்
*****
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
சகாப்தம் வண்ணங்கள் போட்டி. கதை சதுரன்
....
வெற்றி பெற வாழ்த்துகள்
*****
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :
உண்டு, என்னோட முதல் கதையே சகாப்தம் வண்ணங்கள் போட்டிக்காக எழுதியது தான்
****
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
என்னோட முதல் கதையின் நாயகி ருத்ரா ஸ்ரீ, தவறு நடைபெறும் இடங்களில் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் கடந்து போகும் பொழுது என் கோபத்தை வெளிப்படுத்த நான் உருவாக்கிய கதாபாத்திரம் தான் ருத்ரா ஸ்ரீ
....
சூப்பர்
*****
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது :
தீ பிறை, சதுரன்
*****
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
பாதிக்கு பாதி பெயர் எழுத்தாளர்கள் தான் முக்கியமாக சொல்லணும் என்றால் ராஜேஷ் குமார் சார், நித்யா கார்த்திகன், முத்துலட்சுமி அம்மா
*****
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
ராஜேஷ் குமார் சாரின் புத்தகங்கள், நான் 10 வது படிக்கும் போகுது என்னோட அப்பா ராஜேஷ் குமார் சாரின் பாக்கெட் நாவல்களை அறிமுகம் செய்து வைத்தார், அன்றில் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட 13 வருடம் அவரின் புத்தகம் இல்லாமல் எனக்கு எந்த நாளும் சென்றது இல்லை, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் வழக்கறிஞர் துறையை தேர்வு செய்ய அவரின் கதைகளும் ஒரு காரணம் என்று சொல்லாம்.
****
உங்கள் கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
எழுத்துகளால் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது உண்மை, நானே அதற்கு உதாரணம், என்னோட பள்ளி தலைமை ஆசிரியர் அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவாங்க, உங்கள் கண்களில் ஏதெனும் துண்டு சீட்டு தென்பட்டால் கூட அதை வாசித்து பழகிகொள்ளுங்கள், அதில் உள்ள நல்ல கருத்துகளை உங்கள் மூளைக்கு அனுப்புங்க, கெட்ட விஷயங்கள் இருந்தால் அதனை உடனே மறந்துவிடுங்கள் என்று, அவர்கள் சொன்னது நூற்று நூறு உண்மை, யாரோ ஒருவரின் எழுத்துகள், கண்ணுக்கு தெரியாத யாரோ ஒருவரின் வலிகளும் மருந்தாக அமையும், வாழ்க்கை மாற்றும்.
....
நிஜம் தான். ரொம்ப சரியாகத்தான் சொல்லியிருக்காங்க.
***
விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டுமா. நாவலின் பெயர்களை சொல்லுங்கள்
இல்லை, வண்ணங்கள் போட்டுக்கு எழுதிய என் முதல் கதை இரண்டாவது சுற்று வரை சென்றது.
******
ஒரு வழக்கறிஞராக இருக்கும் உங்களால் எப்படி நேரம் ஒதுக்கி நாவல் எழுத முடிகிறது :
இரவு நேரத்தில் தான் நான் பெரும்பாலும் நான் கதைகளை எழுதுவது, பகல் நேரங்களில் கதைக்கு உரிய காட்சி அமைப்புகளை வரிசைபடுத்தி கொண்டு, இரவு நேரங்களில் யாரின் இடையூறும் இல்லாமல் எழுத துவங்கிவிடுவேன்.
....
ஆமாம். இரவு தான் எழுதுவதற்கு உகந்த நேரம்.
*****
இன்றைய சமுதாயத்தில் பெண்களின் நிலையை பற்றி சொல்ல முடியுமா :
முன்பு போல எந்த பெண்களும் வீட்டில் அடைபட்டு கிடப்பது இல்லை, தங்களுக்கு உரிய சுயமரியாதையை உரிமையை இப்போது எல்லாம் கேட்டு பெறுகிறார்கள், சில இடங்களில் பெண்கள் துன்புறுத்தபட்டு கொண்டு தான் இருக்கிறார்கள், ஒரு பெண் என்று தன் இலட்சியங்கள், கனவுகளை, பேச்சு சுதந்திரத்தை கட்டுப்பாடு இன்றி பெறுகிறாளோ அன்று தான் உண்மையான மகளிர் தினம்
...
👏👏👏👏
******
கொரானா வைப் பற்றி கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இல்லை
*****
நிஜ சம்பவத்தை கதையாக எழுதிய அனுபவம் இருந்தால் அதைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
கண்டிப்பாக, 2019ல் காஞ்சிபுரம் குற்றவியல் நிதிமன்றத்திற்கு ஒரு வழக்கு வந்தது, 16 வயசு புத்தி சுவாதீனம் இல்லாத ஒரு சிறு குருத்தை 4 கயவர்கள் பாலியல் வன்முறை செய்த வழக்கு, அந்த சிறு பெண்ணிற்கு தனக்கு என்ன நிகழ்த்தது என்பதை கூட தெளிவாக நிதிபதியிடம் சொல்ல தெரியவில்லை, அவளிடம் போய் அந்த நாலு மனித மிருகங்களும் தவறாக நடந்து கொண்டு இருக்கிறார்கள், வழக்கு விசாரணை நடைபெற்று அந்த நான்கு பேரும் 6 மாத சிறைக்கு பிறகு பெயிலில் வெளியில் வந்து சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள், ஆனால் அந்த சிறு பெண் எந்த ஆணிடமும், ஏன் தன் தந்தையிடம் கூட பழக பயப்படுகிறாள், இந்த உண்மை சம்பவம் என்னில் ஏற்படுத்திய கோவம் தான் தீ பிறை கதை எழுத தூண்டியது, இன்னும் இந்த வழக்கு நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
.....
நிஜமாகவே வருந்த வேண்டிய செயல். நிஜமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் கதைகளை வாசிப்பவர்களின் மனம் பதற தான் செய்யும், அதற்காக எதற்கு இந்த எதிர்ப்பு...??
*****
சமூக கதைகள் எழுதுவதற்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்:
ஏதோ ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு உங்களில் மாற்றத்தை விளைவித்து இருந்தால் அதுவே போதும்.
****
நீங்கள் ஒரு நாவல் எழுதுவதற்கு முன்பு கடைபிடிப்பது என்ன:
கதைக்கு தேவையான அடிப்படை தரவுகளை முன்கூட்டியே சேகரித்து வைத்துக்கொள்வேன், கதைக்கு உரிய காட்சி, மாந்தர்களை முன்கூட்டியே வடிவமைத்துவிடுவேன்
****
நாளிதழில் கதை or சமுக கருத்துக்களை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
உண்டு, சாரல் மேகம், மழை நிலா மின்னிதழ், நிகழ்காலம் ஆகிய நூல்களில் சட்ட கட்டுரை எழுதி இருக்கிறேன்.
*****
ஒரு வழக்கறிஞரைப் பற்றிய கதை எழுத என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் :
வழக்கறிஞர் தொழிலின் அடிப்படை சாராம்சம் தெரிய வேண்டும், அவர்கள் கையாலும் வழக்குகளின் சாதகம் பாதகம், அவர் தொழில் அவருக்கும் ஏற்படும் இடையூறுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
.....
மிக்க மகிழ்ச்சி சிஸ்டர். உங்களது பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும், உங்களது வழக்கறிஞர் பணியில் சிறந்திடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளர் கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை தாராளமாக முன் வைக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்
மிக்க நன்றி
🙏🙏🙏🙏

Comments
Post a Comment