அகிலா கண்ணன்

 


#எழுத்தாளர்அறிமுகப்படலம்

ஹாய் பிரண்ட்ஸ்.

இன்று நான் உங்களிடம் அறிமுகப் படுத்தப் போகும் நபர் எழுத்தாளர் அகிலா கண்ணன்....

அவரைப் பற்றிய விபரங்கள் :

பெயர் : அகிலா கண்ணன்

சொந்த ஊர் : திருநெல்வேலி ,
சென்னை. தற்பொழுது : அமெரிக்கா

படிப்பு : B.E   M.B.A

பணி : மென்பொருள் பொறியாளர்

தளம் : SM site

அமேசான் பெயர்: அகிலா கண்ணன்

************
1. உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
(( கல்லூரி காலத்தில் எழுதுவதில் ஆர்வம்  ஏற்பட்டு கவிதைகள், சிறுகதைகள் என்று எழுத ஆரம்பித்த நான் தற்பொழுது சமுதாய சிந்தனைகளைத் தொட்டு செல்லும் குடும்ப நாவல்களை எழுதி வருகிறேன்.

***************
2. உங்களது விருப்பமான எழுத்தாளர்:
(( கல்கி

*****************
3. உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
(( "I am so happy."

****************

4. நீங்கள் எழுதிய முதல் நாவல்:
((தாகம்

******************
5. உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
  ((  கட்டங்கள்
....

ஏங்க ரைட்டரு இந்த பெயர் எல்லாம் நான் கேள்வி பட்டதே இல்லையே
🤔🤔🤔🤔  எனக்குத் தெரியாமல் நிறைய எழுதியிருக்கிறீர்களா

***************

6. நீங்கள் எழுதிய மொத்த நாவல்:
(( 14 

***************
7. எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
((  3 years

***************
8. நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:     
     ((  பிருந்தாவனம்
***************
9. உங்கள் நாவல்களின் பெயர் :
தாகம்
கட்டங்கள்
OMR
50 : 50
இரண்டல்ல ஒன்று
லவ்லி லவி
கண்ணாடி மாளிகை
வா...அருகே வா
மோக வலை
குறும்பு பார்வையிலே
விழியோரத்தில் க்ளிக்
அந்த மாலை பொழுதில்
இதயம் நனைகிறதே
பிருந்தாவனம் 
..

மொத்தம் 4 படிச்சிருக்கேன்

**************

10. நாவல் எழுதுவது ஈஸியா அல்லது தொடர்கதை எழுதுவது ஈஸியா :

(( எதுவும் ஈஸி இல்லைங்க

*****************

11. நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?

(( எந்த கதை அப்பொழுது எழுதுகிறேனோ அந்த கதை எனக்கு பிடிக்கும். எந்த கதா பாத்திரத்தோடு பயணித்து கொண்டிருக்கிறேனோ அந்த கதாபாத்திரங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உண்மையை சொல்லணுமுன்னா, நான் அவங்களை அப்புறம் மறக்க தான் முயற்சி செய்வேன்.

****************

12 . உங்களது கதைகள் காதல் கலந்த குடும்ப படைப்பாக இருக்குமா அல்லது சமூக அக்கறை கலந்த படைப்பாக இருக்குமா:

(( காதலும், அன்பும் கலந்த சமுதாய சிந்தனைகளை தொட்டு செல்லும் குடும்ப கதைகளாக இருக்கும்.

..

அருமை ... ஏதோ ஒண்ணு சரியாக சொல்லிட்டாங்க

****************

13. உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:

பலர் இருக்காங்க. (( யாரைன்னு தனிப்பட்டு சொல்றது. லிஸ்ட் பெருசா போகுமே.

****************

14. நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:

((  மனநிலைக்கு ஏற்ப மாறுபடும். மனதை வருடும் குடும்ப நாவல், சரித்திர நாவல்கள், சில சமயம் மிக சோகமான கதைகளையும் விரும்பி படிப்பேன். படிக்க வேண்டும் என்று தோன்றினால் பெரியார், அண்ணா நூல்களையும் படிப்பேன். பெரியபுராணம், கம்பராமாயணமும் படிப்பேன். பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

...

ரொம்ப சந்தோசம்

****************
15. உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?

(( "நன்றி... நன்றி... நன்றி..." எத்தனை முறை சொன்னாலும் வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாது. "என்றும் அவர்களுடனான பயணத்தை விரும்பும் நான்..." என்றும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

****************
16. பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டு? நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:

(( தளத்தில் நடந்த "தேன்மழை - சரித்திர கதை" எழுதும் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். தேன்மழை ஓர் சரித்திர குறுநாவல். அந்த சரித்திர கதை எழுதும் பொழுது ஒரு முழு சரித்திர நாவலை எழுதும் ஆவல் என்னிடம் எழுந்தது. ஆனால், சரித்திர கதை எழுதுவது அத்தனை  எளிதல்ல என்று நான் எண்ணுகிறேன். அதற்கு, நான் இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும். எனக்கு இன்னும் நிறைய அனுபவம் வேண்டும் என்பது என் கருத்து.

***************
17. உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:

(( நான் எழுத ஆரம்பித்ததிற்கு தூண்டுகோல் "என் வாசிப்பு..." என்று சந்தோஷமாக சொல்லுவேன். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது, பல கதைகளை புத்தகத்தில் வாசிப்பேன். வாசிக்கும் பொழுது தோன்றிய எண்ணங்களே, என்னை எழுத தூண்டியது.

******************

18. அன்றைய எழுத்தாளர்களின் எழுத்திற்கும் இப்போது உள்ளதிற்கும் உள்ள வித்தியாசமாக என்ன நினைக்கிறீங்க:

பாட்டி, தாத்தா போல் அம்மா அப்பா இல்லை. அம்மா அப்பா போல நாம் இல்லை. நம்மை போல் நம் பிள்ளைகள் இருபத்தில்லை. காலத்திற்கு ஏற்ப நாம் மாறுவது போல, எழுத்தும் மாறி கொண்டே இருக்கிறது.

..

ஆகா ஏக பொருத்தம் டா

****************

19. pdf திருட்டு பற்றிய கருத்து:

(( பல இடங்களில் அறியாமையால் நடக்கிறது.

****************

20. உங்களது  படைப்புகளில் காதல் நகைச்சுவை  சமூகம் குடும்பம் இதில் எது மிகுதியாக காணப் பெறும்:

(( குடும்பம்

*****************

21. உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்கு விக்கின்றனர் என்று சொல்ல முடியுமா.

(( என் கணவர்: நான் இன்று எழுதுவதற்கு முழு ஊக்கம் கொடுப்பவர். நான் சோர்வடையும் பொழுதும், சோம்பேறித்தனமாக இருக்கும் பொழுதும் என்னை ஊக்குவிப்பது என் கணவர். I shall say "My husband is my backbone for my writing."

(( அம்மா : நான் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது என்னை எப்படி கைபிடித்து சென்றார்களோ, அது போல் நான் கதை எழுதும் பொழுது  இன்றும் என்னை வழிநடத்துவது என் அம்மா தான். நான் துவண்டு போகும் பொழுது, என்னை வழி நடத்துவதும் என் அம்மா தான்.

(( அப்பா: Writing is your passion. அதை என்னைக்கும் விட கூடாதுன்னு அப்பா சொன்ன வார்த்தைகளே நான் நாவல்கள் எழுத ஆரம்பித்ததற்கு காரணம்.
(( என் மாமனார்: "கதை எப்படி மா போகுது. என்ன எழுதிட்டு இருக்க? என்ன கதை? என்ன பெயர்?" அப்படின்னு கேட்கும் பொழுது, வரும் உத்வேகம் தனி தான்.

(( தங்கை: என்ன எழுதற, என்ன கதை, ஏன் அப்படி? ஏன் இப்படின்னு நிறையே கேள்வி கேட்பா.
என் பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி என்னை தொடர்ந்து எழுத சொல்லுவாங்க. நிறைய பாராட்டுவாங்க
அம்மா, அப்பா, அத்தை, பெரியம்மா, சித்தி, பாட்டி, தாத்தா, அக்கான்னு குடும்பத்தினர்  எல்லாரும் கதை படித்து அவங்க கருத்துக்களை என்கிட்டே சொல்லுவாங்க. உறவினர்கள் பலர் கதை படித்து என்னை ஊக்குவிப்பது எனக்கு மிக பெரிய பலம்.

ஒரு பெண்ணின் வளர்ச்சிக்கு, அவளை விட அவள் குடும்பத்தினருக்கு அதிகம் பங்கு உண்டு என்று நம்புபவள் நான். அத்தகைய குடும்பத்தினரையும், உறவுகளையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

..

உங்க குடும்பமே உள்ளே வந்திடுச்சு சிஸ்டர்  "நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" வாழ்க வளமுடன்

****************
22. உங்களது தொடர்கதைகளில் கவிதை எழுதிய அனுபவம் உண்டுமா:

(( கவிதைன்னு நான் சொல்ல மாட்டேன். எப்பொழுதாவது, அடுக்கடுக்கான வரிகளை எழுதுவது உண்டு.

...

😂😂😂🤣 படிச்சிருக்கேன் சிஸ்டர்

*************

23. போட்டி கதைகளுக்கும் சாதாரணமாக எழுதும் நாவலிற்கும் உள்ள வித்தியாசம் எது நம்முடைய யோசிப்பு திறனை மேம்பட செய்வதாக நினைக்கிறீங்க:

(( இரண்டும் தான். எதை எழுதினாலும் எல்லாரையும் கவர்வது போல் எழுதணும். கண்டிப்பா யோசிச்சி தான் எழுத முடியும்.

***************

24. செய்தி தாளில் வந்த உங்களது தொடர்கதை  பற்றிய விபரத்தை விளக்கமாக சொல்ல முடியுமா:

((   அது பன்னாட்டு மாத மின்னிதழ். "மது... மதி!" இன்றைய சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனையை பற்றி பேசும் கதை. சற்று அழுத்தமான கதை கரு. கதை இன்னும் வெளிவராததால், மைய கருவை என்னால் இப்பொழுது சொல்ல இயலவில்லை.  

**************

25. குறும்பு பார்வையிலே ஆகாஷ் ஸ்ருதி அருமையான காதலர்கள் அவர்களின் குறும்பா டாலி அழைப்பு யாராலும் மறக்க முடியாது என்று நினைக்கிறேன் . Pre Wedding photo shoot -> முக்கிய நிகழ்வாக வச்சு கதை எழுத எப்படி தோன்றியது:

(( திருமணத்திற்கு சென்று வந்தவர்கள் அவர்கள் பார்த்த புகைப்படத்தை பற்றி சிலாகிக்கும் பொழுது தோன்றிய வித்தே கதையின் கரு. அதன்பின், தேடி தேடி பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
...

சும்மா சொல்லக் கூடாது அருமையான சுவராஸ்யம் கலந்த தொடர்கதை தான் அது....

"குறும்பு பேச்சு எப்போதுமே
ரசிக்காது
குறும்பு பேசாத வாழ்வே
ருசிக்காது!"

👏👏👏👏 அழகான வரிகள்

**************

26. அந்த மாலைப் பொழுதில் நாயகன் பசுபதி யின் அழுத்தமான பேச்சும் கம்பீரமும் கதை படித்தவரின் கண்ணை விட்டு மறைய வில்லை. பசுபதி கதாபத்திரம் உருவான விதம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:

(( நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களில் ஒருவன் தான் பசுபதி. பலரின் கோபம் நம் கண்ணுக்கு தெரியும். அவர்களுக்குள் இருக்கும் பாசத்தை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம்.
  அபிநயா, அவனை கண்டுகொண்டவள். அருகே இருந்து அவனை கஷ்டப்படுத்தி விட கூடாது என்று விலகுபவள். பசுபதியும் அப்படி தான், அவன் விட்டுக்கொடுத்தலிலும், விலகளிலும் அன்பு தான் இருக்கும். அதையும் கம்பீரமாக செய்வான்.
நம்மை சுற்றி பசுபதியை போல் பல நல்லவர்கள் உண்டு. நம்மை கஷ்டப்படுத்த கூடாதென்று விலகி நிற்பார்கள் கம்பீரமாக. அவர்கள் தான் இந்த "பசுபதி"

...

அருமை மிகவும் அருமை

மிக்க நன்றி சிஸ்டர்

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

***********
ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய எழுத்தாளரின் கதைகளில் நான் நான்கு படித்து மூன்றிற்கு விமர்சனம் கொடுத்திருக்கிறேன். மிகவும் அருமையான காதல் கலந்த குடும்ப படைப்பு, நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்...

இவரது படைப்புகளை வாசித்தவர்கள் அதைப் பற்றி தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்துக்கள்.

நன்றி



🙏🙏🙏🙏

Comments