சுதா ஹரி

 

#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#சீசன்இரண்டு


5.

ஹாய் பிரண்ட்ஸ் ,

இன்றைய எழுத்தாளர் அறிமுகப்படலத்தில் கலந்து கொள்ளப்போகும் நபர் சுதா ஹரி...

அவர்களைப் பற்றிய தகவல்கள்:

பெயர் : சுதா

சொந்த ஊர் : அறந்தாங்கி

படிப்பு : M.phil

பணி : முழு நேரம் பிஸியா இருக்கேன்

தளம் : அக்ஷரம் மற்றும் பிரதிலிபி

அமேசான் பெயர்: sudha hari

******

உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:

பெரிதாக சொல்ல ஒன்னுமில்ல சுதா ஹரி அது தான் இங்குள்ளவர்களுக்கு என் அடையாளம். ஹரி என் பெட்டர் ஹால்ப் பெயர் ...

பட் சுதானா கொஞ்சம் ஜாலி பெர்சன். ஒரு பையன் அவன் கூட தான் என் பொழுதுகள். அப்புறம் அண்ணா பசங்க கூட விளையாட இப்படி தான் போகும் என்னுடைய நாள்

பெருசா முக நூலில் செயல்படும் ஆள் இல்லை நான். வேற என்ன சொல்ல... நண்பர்களுடன் பேச பிடிக்கும். ஆனா அவ்வளவு எளிதாக பழக மாட்டேன். இங்க fb வந்த நாலு வருஷத்தில் எனக்கு நன்பர்களே 4 பேர் தாங்க.

ட்ராவல் பண்ண பிடிக்கும். ..கதைகள் படிக்க பிடிக்கும்.

...

அருமை சிஸ்டர்

******

உங்களது விருப்பமான எழுத்தாளர்:

கல்கி, சாண்டிலியன், மல்லிகா மேம் 

******

உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:

முதல் அத்தியாயம்  பிரதிலிபில  போட்டுட்டு கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். எனக்கு வந்த முதல் கமெண்ட்ஸ் கலைவாணின்னு ஒருத்தவங்க அனுப்பினாங்க. keep writing ... அவங்க சொன்னது தான்னு நினைக்கிறேன். அடுத்து அடுத்து எழுதணும்ன்னு தோணிச்சு.. அது ஒரு ஹாப்பி மொமெண்ட்ங்க... 

...

🙂🙂

******

நீங்கள் எழுதிய முதல் நாவல்:

இதயம் இமைத்த நொடி

******

உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:

ஜானு நவீன் அண்ட் ருதி வெங்கட்

******

நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:

கொஞ்சம் மெல்லிய காதல் கதைகள்... அடுத்து சரித்திர நாவல்கள்.

******

உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க: 

என்னோட 2 மற்றும் 3 நாவல்ன்னு நினைக்கிறேன்.

******

நீங்கள் எழுதிய மொத்த நாவல் :

******

எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:

இந்த செப்டம்பர் வந்தா மூணு வருஷம் முடிஞ்சிடும்.

******

நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:

பொன் அந்தி சாரலே

******

உங்கள் நாவல்களின் பெயர் :

1. இதயம் இமைத்த நொடி

2. விழியில் விழுந்த நாள் முதலே

3. ஜில்லுனு ஒரு காதல்

4.அதிகாரனே அதிரூபனே

5.பொன் அந்திச் சாரலே (ongoing)

...

அருமை சிஸ்டர்

******

உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:

காதல் மற்றும் நகைச்சுவை.

....

வாவ்!!, சூப்பர்

******

நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நாவல்கள்:

ஒரு நாவல் எனக்கு பிடிச்சதுனா புக்கா வாங்கிடுவேன், அப்படி நான் வாங்கினது

கல்கியோட முடிந்த வரை இருக்கு.

சாண்டிலியன் கடல் புறா,யவன ராணி,

மல்லி மேம் சத்தமின்றி முத்தமிடு, வா நிஷா இள மனசை தூண்டிவிட்டு போறவரே... அப்புறம் பெரும்பாலும் ஜானு அண்ட் ருதி நாவல்ஸ் எல்லாமே என்கிட்ட இருக்கு.

ஒரு கதை படிச்சா அப்படியே நம்ம அவங்க கூட பயணிக்கிற மாதிரி இருக்கணும். அப்படிபட்ட நாவல்கள் புக்கா என்கூடவே இருக்கும். இப்பவும் இருக்கு😍😍😍..

...

ரொம்ப நல்ல பழக்கம்🙂🙂🙂

*****

நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:

என்னோட முதல் ஹீரோ அரவிந்த். அந்த கதை கொஞ்சம் உண்மை கலந்த கதை.

அப்புறம் விஷ்ணு என்னோட இரண்டாவது கதையில வர நண்பன் கதாபாத்திரம்.

இப்போ எழுதுற கதையில வர வாசுதேவ். கொஞ்சம் ஸ்வீட் பாய்.

******

உங்கள் நாவல் or தொடர்கதை எது  வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :

இதுக்கு பதில் என் கதையை தொடர்ந்து படிக்கிறவங்க தான் சொல்ல முடியும் நினைக்கிறேன்.

******

உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா:

நன்றிகள் பல..... எப்படி சொல்றது தெரியல. சில நேரம் நானே மறந்து என் வேலையில பிஸியா இருந்தா கூட உரிமையா திட்டும் அளவுக்கு இருக்காங்க😍😍😍... இப்படியே என்னை motivate பண்ணுங்க மக்கா...

*****

போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா: 

இல்லை

*******

உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:

இங்கு இருக்கும் பல பேருக்கு புத்தகங்கள் அவங்க அம்மா மூலமா தான் அறிமுகம் ஆயிருக்கும். எனக்கும் அப்படி தான். என் அம்மா தான் காரணம். அவங்க புத்தக வாசிப்பு தான் எனக்குள்ளயும் இருக்குன்னு நினைக்கிறேன். நான் ஒரு கதை பிடிக்கலைனா கூட கடைசி பேஜ் வரைக்கும் படிக்கும் ஆளுங்க.

...

ரொம்ப நல்ல பழக்கம் சிஸ்டர். ஆனா.. நம்மளால அடுத்த பக்கம் கூட நகர்த்த முடியாது😂😂😂 அனுபவம் பேசுது.

******

நாளிதள்களில் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா : இல்லை

******

ஒரு எழுத்தாளன் எப்பொழுது வெற்றி பெறுகிறானு நினைக்கிறீங்க:

அவங்க எழுதின கதை அவங்களுக்கு பிடிச்சிட்டாலே ஒரு எழுத்தாளரா அவங்க வெற்றி பெற்றவர்கள்ன்னு தான் நினைக்கிறேன். நான் அப்படி தாங்க...

...

ஆமாம் அது சரிதான். நாம் எழுதுகிற நாவல் நமக்கு திருப்தி தருவது போல அமைந்தால் கட்டாயம் பிறருக்கும் பிடித்துப்போகிறது. ஆனால் அதை கொடுக்கவும் எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.

******

ஒரு நாவலைப் பார்த்தவுடன் மனதில் என்ன தோன்ற  வேண்டும் :

படிக்க தான் தோன்ற வேண்டும்...🤣🤣🤣🤣..jokes apart.... அதன் தலைப்பை வைத்தே கதையின் போக்கை புரிந்த மாதிரி இருக்கணும் நினைக்கிறன்.. நான் அப்படி வைக்கிறனா தெரியாது. என்னோட சாய்ஸ் அப்படி தான்.

...

கட்டாயம். நானும் கூட, கதைக்கரு தேர்ந்தெடுப்பதை விட அதற்கு பெயர் தேர்ந்தெடுப்பது தான் சில சமயம் கஷ்டமாக போய்விடுகிறது யோசித்து யோசித்து..

******

உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்கு விக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :

முதல்ல நான் எழுதுறேன்னு தெரிஞ்சுது என் அண்ணிக்கு தான்...அப்படியே என் உடன்பிறப்புகளுக்கு தெரிஞ்சு என்னை வச்சு செஞ்சது எல்லாம் பெரிய கதை😥😥😥....

என்ற மனுஷன்கு புக்ஸ் படிக்கிற அளவுக்கு பொறுமை இல்லை. இருந்தும் ஒரு நாள் புடிச்சு படிக்க வச்சா ஒரு பக்கம் படிச்சிட்டு ஓவர் ஸ்பெல்லிங் மிஸ்டகேக் இருக்குன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.

😢😢😢

....

செம சிஸ்டர், இதுக்கு தான் நான் கேட்பதே இல்லை😂😂😂

******

நீங்கள் நாவல் எழுத ஆரம்பிக்கும் முன்பு இத்தனை வார்த்தையில் முடிக்கணும், வருணனை,  கவிதை போன்றவற்றை சேர்க்கணும் என்று யாரிடமாவது கலந்து ஆலோசிப்பது உண்டா:

நான் கொஞ்சம் வேற மாதிரி எழுத்தாளர்னு நினைக்கிறன். பெரும்பாலும் கதையின் ஒரு line மட்டும் தான் யோசிப்பேன். என் நெருங்கிய நட்பில் இருக்கவங்க கிட்ட சொல்லுவேன். நல்லா இருக்கு சொன்னா அடுத்து எழுத ஸ்டார்ட் பண்ணுவேன்.

கவிதை என்னோட முதல் கதையில ட்ரை பண்ணினேன் தான். அப்புறம் கவிதை உலகம் பிழைச்சு போகட்டும் விட்டுட்டேன். ஆனால் அதையும் நல்லா இருக்குன்னு சொன்ன zeenath sis... lubb u 😍😍...

Words limitations...அது எனக்கு இல்லைங்க... நான் வார்த்தைகளை குறைக்கனும் நினைச்சா எனக்கு அதில் திருப்தி இல்லாமல் போய்டுது.

******

நீங்கள் எழுதிய நாவல்களில் ஏதாவது ஒன்று பற்றி விவரிக்க  முடியுமா:

எந்த நாவல் சொன்னா விவரிக்கலாம்... இல்லை என் கதையை படிச்சவங்க யாரவது கீழே comment பண்ணுங்க... பேசலாம்..

....

தப்பிச்சுட்டீங்க

*******

ஆன்டி ஹீரோ கதை எப்படி இருக்கனும்னு நினைக்கிறீங்க.

பெரும்பாலும் அப்படிப்பட்ட கதைகள் படிக்க மாட்டேன். எனக்கு அதில் உடன்பாடில்லை..

நான் படிச்சு பிடிச்ச  ஆன்டி ஹீரோ கதைனா அது ரமணி அம்மாவின் மயங்கிறாள் ஒரு மாதுல வர சுதாகர் தான்.

அடுத்து

ஜானுவோட விழி வழி மனம் கொய்தாய் உதய்...

*******

தனிக் குடித்தனம் மற்றும் கூட்டு குடும்பம் கதையில் உள்ள சிறப்பு என்ன :

அது எழுதும் எழுத்தாளரின் கதைக்களம் பற்றியது. 

******

நாவல் or தொடர்கதை எழுதுவதில் அது மிகவும் சுலபமாக நினைக்கிறீங்க.

தொடர்கதை தான்.

******

நீங்கள் கதை தேர்ந்தெடுக்கும் முறை :

கொஞ்சம் மென்மையான கதைக்களம் தான் என்னோட சாய்ஸ். எப்போவும் அப்படி தான் எடுக்குறேன்... நானே கொஞ்சம் டெரர் பீஸ் எடுக்கலாம்னா அது என்னவோ என் ஹீரோ எல்லாம் சாப்ட்வே இருக்கானுங்க..

******

உங்களது நாவல்கள் எந்த பிரிவை சார்ந்தது வரலாறு / ஆன்மீகம் / அரசியல் / குடும்ப நாவல் / சமூகம் :

குடும்ப நாவல்

******

இன்றைய எழுத்துக்களை பற்றி சொல்ல முடியுமா ?

எந்த வகையான எழுத்துக்களைனு சொல்லவே இல்லை நீங்க...😉😉😉

******

ஒரு கதை எழுதும் முன்பு நீங்கள் செய்வது என்ன?

அந்த கதையை கொஞ்சம் சீக்கிரம் கொடுக்கணும் யோசிப்பேன்.

******

நீங்கள் கதை எழுதுவது லாப்டப் or மொபைல் :
இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் :

நான் போன் தான் யூஸ் பண்றேன். அது தான் எனக்கு ஈசியா இருக்கு.

******

குடும்பம் எனும் தலைப்பை தருகிறேன் அது பற்றி சொல்ல முடியுமா :

 என் உலகம் அது சுற்றி தான் இயங்கிறது.

*******

மிக்க நன்றி🙏🙏🙏

உங்களது பதில்கள் மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தன. ஒரு சிலவற்றிற்கு சரியா சொல்லாம விட்டுட்டீங்க போகட்டும்...

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அதைப்பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்

நன்றி
🙏🙏

Comments

  1. வாழ்த்துகள் 💐💐

    ReplyDelete
  2. Super sis!!!
    Really loved your answers, some answers impressed because your taste of reading 📖like me!!! I mean just like readers, because good readers are the best writers!!!
    Your" pon anthi saaral" Story super sis!!! I love the cute hero VD ALIAS CK ALIAS VASU DEV!!! semmaa romantic boy, his way of saying rowdy, lovely!!!! Love u sis!!! Congrats to your future too!!!

    ReplyDelete

Post a Comment