தமிழ் மதுரா

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளராக உங்களுக்கு அறிமுகப்படுத்த போகும் எழுத்தாளர் தமிழ் மதுரா..


அவர்களைப் பற்றிய நேர்காணல் :



பெயர் :  தமிழ் மதுரா


சொந்த ஊர் : மதுரை


படிப்பு : M.E


பணி : கணினிதுறை


தளம் : www.tamilmadhura.com


அமேசான் பெயர்:Tamil Madhura


******


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா: 


குடும்பத்தலைவி, கணினித் துறையில் வேலை பார்க்கிறேன். இயற்கை, புத்தகம், பயணம் என்று அனைத்திலும் நாட்டம் இருக்கும்  சராசரி பெண். நான் ரசித்தவற்றை எனக்குத் தெரிந்த எளிமையான தமிழின் மூலம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் கதை சொல்லி. 


******


உங்களது விருப்பமான எழுத்தாளர்: 


இதுதான் இருப்பதிலேயே கடினமான கேள்வி. தங்கம் வைரம் வைடூரியம் இவற்றில் ஒன்றை மட்டும் சொல் என்று கேட்டால் எப்படி?அனைவரின் எழுத்துநடையும் ரசிப்பேன். 


******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா: 


2010 இல் ஆன்லைனில்  எழுத ஆரம்பித்தேன். பல்வேறு பத்திரிக்கை  மற்றும் தளங்களில் நாவல், சிறுகதைகள் , கட்டுரைகள் , சிறுவர்கதை என்று தொடர்ந்து வருகிறது. 


*******


நீங்கள் எழுதிய முதல் நாவல்: 


மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்


*******


உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்: 


நான் எழுதத் தொடங்கியபோது என்னுடன் பலர் எழுதி வந்தார்கள். அனைவரும் இப்போது தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றி நடை போட்டு வருகிறார்கள். அவர்களுடன் நட்பு இன்னும் தொடர்கிறது. 



நல்லது


******


நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:  


வட்டார மொழி வழக்கில் எழுதப்பட்ட நூல்கள் பிடிக்கும். அது தவிர அனைத்து ஜானர் நூல்களும் படிப்பேன். 


*******


உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க: 


மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் நாவல் என்னை வெளி உலகிற்கு அறிமுகப் படுத்தியது. இருந்தாலும் சித்ராங்கதா பலரிடம் கொண்டு சேர்த்தது. 


*******


நீங்கள் எழுதிய மொத்த நாவல் :  


வெளிவந்த மொத்த நாவல்கள் 18. 


******


எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது: 


11 வருடங்கள் முடிந்துவிட்டது. 


*******


நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்: 


அம்மாச்சி கதைகள் - பாகம் 2 மற்றும் ஒரு நாவல். 


******


உங்கள் நாவல்களின் பெயர் :


 (1) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்

 (2) கண்ணாமூச்சி

 (3) இதயம் ஒரு கல் ஒரு கண்ணாடி 

(4) என்னைக் கொண்டாடப் பிறந்தவளே

 (5) அத்தை மகனே என் அத்தானே (6) சித்ராங்கதா

 (7) உன்னிடம் மயங்குகிறேன்

 (8) வார்த்தை தவறிவிட்டாய் 

(9) கடவுள் அமைத்த மேடை 

(10) நிலவு ஒரு பெண்ணாகி

 (11) காதல் வரம்

 (12) ஒகே என் கள்வனின் மடியில் (13) உள்ளம் குழையுதடி கிளியே (14) யாரோ இவன் என் காதலன் (15) இனி எந்தன் உயிரும் உனதே (16) உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

 (17) பூவெல்லாம் உன் வாசம் 

(18) கோடை காலக்  காற்றே. 

இவை எல்லாம் வெளிவந்த நாவல்கள் மட்டுமே.  

 

….


வாவ்!! அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு


*******


உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா: 


இரண்டையும் எழுதி இருக்கிறேன். 


******

 

நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நாவல்கள்: 


மர்மம், திகில், துப்பறியும் வகை நாவல்களை  வாசிக்க விரும்புகிறேன். 

 

******


நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:


நான் எழுதிய அனைத்து கதைகளையும், கதாபாத்திரங்களையும் பிடித்தே எழுதினேன். வில்லன் வில்லி கதாபாத்திரங்களைக் கூட நான் ரசித்தால்தான் உங்களுக்குப்  பிடிக்கும்படி எழுத முடியும். 


*****


உங்கள் நாவல் or தொடர்கதை எது  வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :


சித்ராங்கதா நாவல் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. அந்த சமயத்தில் வந்த கதைகளில் சற்று மாறுபட்டு இருந்த கதாபாத்திரங்களின்  வடிவமைப்பு  வாசகர்களுக்குப் பிடித்திருக்கலாம். வாசகர்களே உங்களுக்கு எதனால் சித்ராங்கதா பிடிக்கும் என்று பகிர்ந்து கொள்ளலாமே. 



சரியான கேள்வி தான். சொல்லுங்கப்பா எதனால் உங்களுக்கு பிடித்தது என்று...


*******


உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா : 

 

நீங்கள் காண்பிக்கும் ஆதரவுக்கும், அன்புக்கும் ஆயிரம் கோடி நன்றிகள்.  பிரதிபலனாக உங்களுக்குப்  பிடிக்கும் வண்ணம் கதை சொல்ல முயல்கிறேன். 


*****


போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா:


 இல்லை. 

 

******


உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:

 

நாவல்கள் படித்துக் கொண்டிருந்த நான் எனது கணவரின் தூண்டுதலாலேயே  ஆன்லைனில் நாவல் எழுத ஆரம்பித்தேன். கதைகள்  வரவேற்பினைப் பெற்றதும், வாசகர்களின் அன்பும், நண்பர்களின் ஊக்குவிப்பும் இன்றளவும் அதனைத் தொடர வைக்கிறது. 


******


நாளிதள்களில் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :

 

வார இதழ்களில் தொடர், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.  


******


ஒரு எழுத்தாளன் எப்பொழுது வெற்றி பெறுகிறானு நினைக்கிறீங்க:


எப்போது வாசகர்கள் முழுமையாக எழுத்தாளரின் கதையைப் படித்து முடிக்கிறார்களோ அப்போதே வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.  


….


👌👌👌👌👌


******


ஒரு நாவலைப் பார்த்தவுடன் மனதில் என்ன தோன்ற  வேண்டும் :


பார்த்தவுடன் என்பதை விட படித்து முடித்தவுடன் பாசிட்டிவ் சிந்தனைகள் மனதில் தோன்ற வேண்டும்.  


******


உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்குவிக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :


நாவல் எழுதுவது என்று தீர்மானித்தவுடன் கதையின் கருவை  முதலில் சொல்வது எனது குடும்பத்தினரிடம் தான்.  அவர்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்வார்கள். 

 

*****


நீங்கள் நாவல் எழுத ஆரம்பிக்கும் முன்பு இத்தனை வார்த்தையில் முடிக்கணும், வருணனை,  கவிதை போன்றவற்றை சேர்க்கணும் என்று யாரிடமாவது கலந்து ஆலோசிப்பது உண்டா:


இல்லை. எனக்குத் தோன்றுவதை மட்டுமே எழுதுவேன். சில கவிதைகள் வாசிக்கும் பொழுது எனது கதையில் சில இடங்களில் பொருத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் கவிதை எழுதியவர்களைத் தொடர்பு கொள்வேன்.  

 

******


நீங்கள் எழுதிய நாவல்களில் ஏதாவது ஒன்று பற்றி விவரிக்க  முடியுமா:


வார்த்தை தவறிவிட்டாய்  நாவலைப் பற்றி சொல்கிறேன். அது என் பள்ளித் தோழியின்  அம்மாவின் வாழ்க்கையின் தாக்கத்திலேயே எழுதினேன். ஆன்ட்டி மட்டும்  பானு மாதிரி கொஞ்சம் தைரியமா இருந்திருந்தா? அங்கிள் பிரகாஷ் மாதிரி திருந்தி அவங்க வீட்டுக்கு வந்திருந்தா? என் தோழியும்  அவரது சகோதரியும் சந்தோஷமா இருந்திருப்பாங்களோ? 



🙂🙂


******


ஆன்டி ஹீரோ கதை எப்படி இருக்கனும்னு நினைக்கிறீங்க:


கதாபாத்திரத்தின் வடிவமைப்பு தனி ஒருவன் சித்தார்த் அபிமன்யு மாதிரி, விக்ரம் வேதா மாதவன்-விஜய் சேதுபதி மாதிரி  விறுவிறுப்பா  இருக்கணும்.  

 

 ….


சபாஷ் சிஸ்டர். கட்டாயம் நான் முயற்சி செய்கிறேன்.


******


 தனிக் குடித்தனம் மற்றும் கூட்டு குடும்பம் கதையில் உள்ள சிறப்பம்சம் என்ன :


கதாபாத்திரங்கள்தான். தனி குடித்தனம் இரண்டு கதாபாத்திரங்கள்  கூடவே பயணிக்க வைக்கும். கூட்டுக் குடும்பம் மனிதர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள். அவை ஏற்படுத்தும் தாக்கங்களை அலசும்.   

 

******


நாவல் or தொடர்கதை எழுதுவதில் அது மிகவும் சுலபமாக நினைக்கிறீங்க:


இரண்டுமே சவாலான விஷயம் தான்.   தொடர்கதையில் ஒவ்வொரு அத்தியாயமும் வாசகர்களுக்கு அடுத்த பகுதியைப்  படிக்கத் தூண்டும் வண்ணம் இருக்க வேண்டும். 


******


நீங்கள் கதை தேர்ந்தெடுக்கும் முறை :


நான் பார்த்தது, கேட்டது, படித்தது இவற்றில் இருந்து கதைக் கருவை தேர்ந்தெடுக்கிறேன் 


******


உங்களது நாவல்கள் எந்த பிரிவை சார்ந்தது வரலாறு / ஆன்மீகம் / அரசியல் / குடும்ப நாவல் / சமூகம் :


குடும்ப நாவல், சமூகம், ஆன்மிகம், நகைச்சுவை, திகில் என்று சொல்லலாம். வரலாறு நிலவு ஒரு பெண்ணாகி பிளாஷ் பேக்கில் முயற்சித்து இருக்கிறேன்.  


******


இன்றைய எழுத்துக்களைப் பற்றி சொல்ல முடியுமா ?


அருமையாக இருக்கிறது. பல ஜானர்களில் எழுதுகிறார்கள். நான் அதை மனமார வரவேற்கிறேன். 

 

******


கிராமிய மணம் கமழ் பாஷை இடம் பெறும் நாவலிற்கும் பட்டண ஆங்கில உச்சரிப்பு மிடுக்கான நடையுடன் கூடிய நாவலிற்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


 கதைக் கருவை சொல்லலாம். பிசினஸ், கோர்ட் டிராமா, டிடெக்டிவ் ஸ்டோரீஸ் - இந்த வகை கதைகளில்  தேவையான இடத்தில் வரும் ஆங்கில வார்த்தைகள் சுலபமாக கதையில் ஈடுபாடு ஏற்பட  உதவும் என்பது எனது கருத்து. 


******


நீங்க யூடியூப் , ஆடியோ சேனல் ஏதாவது வச்சிருக்கங்களா:


 youtube - Tamil Madhura - YouTube 

spotify  audio channel - https://open.spotify.com/show/5BOMBdga9C6VE7uNhCKeLW


Anchor channel - https://anchor.fm/tamilmadhura


*******


அன்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா

 

சுருக்கமாக அன்று - காதல்தான் வாழ்க்கை. இன்று - காதல் வாழ்க்கையின் ஒரு அழகான  பகுதி.  


******


தனிப்பட்ட முறையில் நீங்கள் ஏதாவது சொல்ல நினைத்தால் தாராளமாக சொல்லலாம் :


இந்த கேள்வி பதில் பகுதியின் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்த சகோதரி ஆனந்த ஜோதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.  


வாசகர் கருத்து மற்றும் கேள்விகள்:


Tamil madura saga kku romba thanks sollanum avanga kaikku mutha kudukanum chithrangatha ......jishnu n sarayu ......namma anu gundu ram ....Abimanyu tharagotta ....Rajiv pppppah marakkave mudiyatha life nanri 😍😍😍😍


தாங்க்ஸ் பங்காரம் 😍😍😍

  

*****


தமிழ் மதுரா அக்காவின் உன்னிடம் மயங்குகிறேன் smoothana stry manasuku ithama irkum. வார்த்தை தவறிவிட்டாய் சமூகத்தில் நடக்கிற அவலத்தையும் அதுல இருந்து எப்படி மீண்டு வரத பத்தி தெளிவா சொல்லிருப்பாங்க (தமிழ் மதுரா அக்கா பேரு இப்போதான் பார்த்தேன்)


மிக்க நன்றிம்மா  🌹🌹🌹


*****


தமிழ் மதுரா ஒரு பழைய கதையை பாதியில் விட்டுட்டாங்க,எப்போ முடிப்பாங்கன்னு கேளுங்க:


அதை வேற நினைவு படுத்திட்டீங்களே.நன்றிம்மா. காக்க வைத்ததற்கு மன்னிச்சுக்கோங்க. இப்போது இருக்கும் கமிட்மெண்ட்ஸ் முடிந்ததும் கண்டிப்பாக அதை கையில் எடுக்கிறேன்.  


….


எழுத்தாளர் அறிமுகப்படலம் நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சிஸ்டர்.


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐



ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துக்களை தெரிவியுங்கள். மற்றவர்கள் வாழ்த்துங்கள்


Comments

  1. தமிழ் மதுரா உங்களின் கதைகள் ஒன்றிரண்டு தவிர மற்ற எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். சித்தரங்கதாவின் வெற்றி ஜிஷ்ணுவைப் போல மிகவும் பார்த்துக் கொள்ளும் கணவனைத்தான் பெரும்பாலான பெண்களின் விருப்பம். அதுவே அதிக வாசகர்களின் விருப்பத்திற்கான காரணம்

    ReplyDelete

Post a Comment