மதுமதி பரத்


 


#எழுத்தாளர்அறிமுகப்படலம்

#இதுநம்மஏரியா

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்று நான் உங்களுக்கு அறிமுகப் படுத்தப்போகும் நபர் எழுத்தாளர் மதுமதி பரத் ...

அவர்களை பற்றிய விவரங்கள்:

பெயர்: அப்பா அம்மா ஆசையா வைத்த பெயர் மகாலட்சுமி திருமணத்திற்கு அப்புறம் என்னோட செல்லப் பேர் மதுவோட கணவர் பெயர் மதியும், என்னோட பையன் பேர் பரத்தையும் என்னோட பேரோட இணைத்து மதுமதி பரத் அப்படிங்கற புனைப்பெயர்ல எழுதிக்கிட்டு இருக்கேன்

சொந்த ஊர்: பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஸ்ரீரங்கம் தான். இப்போ உள்ளது குளித்தலையில்.

படிப்பு: B.Com (Applied) திருச்சி எஸ் ஆர் சி காலேஜ்

பணி: கல்யாணத்துக்கு முன்னாடி விஜய் பால் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தேன்

தளம்: www.madhunovels.com

தளம் ஆரம்பித்த வருடம்: 2017 கதை எழுத ஆரம்பிச்சப்பவே எனக்குனு ஒரு தனி தளம் ஆரம்பிச்சிட்டேன்

அமேசான் பெயர்: மதுமதி பரத்

*****
உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:

ஒரு சில மோசமான நாவல்களைப் படித்த பிறகு ஆத்திரத்தில் எழுதத் தொடங்கியது என்னுடைய என்னுடைய முதல் கதை. ரொம்ப விளையாட்டா சின்னப்புள்ளை தனமா ஆரம்பிச்சேன். இப்போ என்னோட மூச்சில் கலந்துடுச்சு. இப்போதைக்கு முழுநேர குடும்ப இஸ்திரி எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் கதைகள் படிக்கிறது. ஆரம்பத்தில் நிறைய படிச்சிட்டு இருந்தேன். இப்ப கொஞ்சம் தள்ளி வச்சிருக்கேன். ஆனா எப்பவுமே முதலில் நான் ஒரு வாசகி அப்புறம்தான் ஒரு எழுத்தாளர்

******

உங்கள் விருப்பமான எழுத்தாளர்:

ரமணிச்சந்திரன் அம்மா, எம்ஆர் அம்மா, காஞ்சனா அம்மா, ஜெய்சக்தி அவர்கள், சமீபத்தில் வேள்பாரி ஆசிரியர் சு. வெங்கடேசன் அவர்கள்

*****

உங்கள் எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:

நல்லதும் கெட்டதும் சம அளவில் கலந்து தானே உலகம் . எழுத்துலகில் எனக்கு இந்த இரண்டு அனுபவமும் உண்டு.  ஆனால் இரண்டிலுமே ஓரளவிற்கு நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் அதனால் கெட்டது குறித்து வருத்தம் இல்லை

******

நீங்கள் எழுதிய முதல் நாவல்: நிலவே உந்தன் நிழல் நானே

******

உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:

என்னுடைய முதல் கதையில் இருந்தே எனக்கான வாசகர்கள் வட்டம் பெரிதாகுவதை  நான் உணர்ந்து இருக்கிறேன்.  அதை ஒவ்வொரு கதையை முடிக்கும் போது  நான் உணர்ந்திருக்கேன். மேலும் மேலும் அதிகரிக்கணும் அப்படிங்கறது தான் என்னோட ஆசை

******

நீங்கள் எழுதிய மொத்த நாவல் :

நிலவே உந்தன் நிழல் நானே ,
காதல் கதகளி,   சிறகில்லா தேவதை, காதலே நீ கானலா, வானவில் சிற்பமே, தீண்டாத தீ நீயே

குறுநாவல்:
மன்னவன் பைங்கிளி, முழுமதியாகுமோ என் வெண்ணிலா, சஹாரா சாரல் பூத்ததோ, உன்மத்தம் கொண்டேனடி உன்னால், வனமும் நீயே   வானமும் நீயே, அரூப மோகினி, ஸ்ரீரங்கத்து ராட்சசி, ஒளியைத் தேடி

....

அருமையான கலெக்சன் சிஸ்டர்

******

எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
ஜனவரி 2017 ல் இருந்து எழுதிக்கிட்டு இருக்கேன்.

******

உங்கள் தளத்தில் எத்தனை எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்:

என்னுடைய தளத்தில் புது எழுத்தாளர்கள் நிறைய பேர் எழுதுகிறார்கள். சாதிக்கத் துடிக்கும் உத்வேகம் நிறைந்த உள்ளங்கள் அத்தனையும்.

******

உங்கள் தளத்தில் எழுதுபவர்களுக்கு புத்தகம் போட்டு கொடுக்கிறீர்களா :

இல்லை. தற்போது எனக்கு அதற்கான பொருளாதார வசதி இல்லை.

*****

பல புது புது தளங்களும், எழுத்தாளர்களும் தோன்றி வருவது பற்றி என்ன நினைக்கிறீங்க :

ரொம்பவும் நல்ல விஷயம். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனக்கென சொந்தமாக தனி தளம் வைத்திருப்பது நல்லது. யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் நான் ஆரம்பத்திலேயே தனி தளம் தொடங்கினேன். அதையே தான் மற்றவர்களுக்கும் சொல்கிறேன்.

என்னுடைய தளத்தில் எழுத்தாளர்கள் கதையை நீக்க சொன்னால் அடுத்த நாளே நீக்கப்பட்டுவிடும் இதுபோல செய்யும் தளங்கள் இப்போது அரிது. எழுத்தாளரை இது ஒரு வகையில் கண்டிப்பாக பாதிக்கும். எனவேதான் தனி தளம் அவசியம் என்று நினைக்கிறேன்

*****

உங்கள் தளத்தில் போட்டிக் கதை எதாவது நடத்தியிருக்கிறீர்களா :

நடத்தி இருக்கிறேன் மா.  குறுநாவல் போட்டிகள், மாதம் ஒரு தலைப்பு கொடுத்து அதை வைத்து சிறந்த கதையை தேர்ந்தெடுத்து பரிசு கொடுத்து இருக்கிறேன்.

******

நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:

எழுதிக் கொண்டிருந்த 4 கதைகளை உடல் நல குறைவால் (கை விரல்களில் நரம்பு பாதித்து இருக்கிறது) நிறுத்தி இருக்கிறேன்.
மின்மினியின் மின்சார காதலன், தணலை எரிக்கும் பனித்துளி,காதல் சதிராட்டம், கந்தகமாய் அவன் காதல்

******

நிஜக்கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :

உன்மத்தம் கொண்டேனடி உன்னால் ஒரு நிஜ சம்பவத்தின் தாக்கத்தில் எழுதியது தான். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளம்வயதுப் பெண்ணை சமாளிக்க முடியாமல் திணறிய ஒரு தந்தையைப் பார்த்து எழுதியது தான் அந்த கதை.

*******

போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா சொல்ல முடியுமா:

கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அதில் சில கசப்பான பகுதிகளும் உண்டு. எனவே அவை வேண்டாமே...

....

கண்டிப்பாக

*********
எழுத்தாளர் மற்றும் வாசகருடனான தொடர்பு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க :

கண்டிப்பாக ஒரு நல்ல நட்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு உண்மையான நட்பு எப்படி நல்லது செய்தால் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை போல  தவறு செய்தால் குட்டு வைக்க  தவறவும் கூடாது. அதைப் போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்ன செய்தாலும் சரி என்று தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் விருப்பம் கிடையாது.
...

நிஜம் தான். உண்மையான நட்பு கிடைப்பது வரம். அதை அனுபவத்தில் நானும் உணர்ந்து கொண்டேன் ...

******

நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:

முதல் கதையான நிலவே உந்தன் நிழல் நானே ஹீரோ வசீகரனும், வானவில் சிற்பமே பிரபஞ்சனும்  எனக்கு ரொம்ப பிடித்தவர்கள்... பெண் கதாபாத்திரங்களில் ஸ்ரீரங்கத்து ராட்சசி கதாநாயகி  மதுர வாணியும் கொஞ்சம் ஸ்பெஷல்...

*****

உங்கள் நாவல் or தொடர்கதை எது  வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது :

தீண்டாத தீ நீயே: ஆன்டி ஹீரோ என்று நினைத்து நான் பாடுபட்டு எழுதினால் கடைசியில் எல்லாரும் அவனுக்கு (ருத்ரேஸ்வர்) ரொமான்டிக் ஹீரோ பட்டம் கொடுத்து விட்டார்கள்.

....

😂😂😂😂

******

உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:

எல்லாரும் என் நண்பர்களே...

******

நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:

எழுத்தாளர் அவதாரம் எடுத்த பிறகு படிப்பது கொஞ்சம் குறைந்து தான் போனது. நேரம் கிடைக்கும் பொழுது  எழுத்தாளர்களின் கதைகளை படிப்பேன் தமிழ் வளம் சிறந்து விளங்கும் கதைகள் மட்டுமே என் தேர்வு. அதன் மூலமாக என்னை மேம்படுத்திக் கொள்ள முடியும் இல்லையா?

...

நிச்சயமாக

*******

உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

நன்றியைத் தவிர வேறு என்ன சொல்ல... என்னுடைய பலமும் அவர்கள்தான் பலவீனமும் அவர்கள்தான்.

*****

விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டுமா. நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:

இதுவரை இல்லை... இனியும் அதில் பெரிய ஈடுபாடு இல்லை. என்னுடைய நோக்கம் எல்லாம் போட்டிகளில் கலந்து கொள்வது மட்டும் தான்... வெற்றியை நோக்கி ஓடுவேன். கோப்பைகளை நோக்கி அல்ல.

...

சரியான பதில் அப்படி தான் இருக்க வேண்டும் . வெற்றி தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் கட்டாயம் எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டும் ...

******

ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா :

சாதாரணமாக நாவல்கள் 40 அத்தியாயத்திற்கு முடிக்க  வேண்டும் என்று நினைப்பேன் குறுநாவல்கள் பொருத்தவரை 15 முதல் 20 அத்தியாயம் வரை செல்லும்

*******

கற்பனை கதைக்கும் நிஜ கதைக்கும் உள்ள வித்யாசம்:

அது ஒரு மாய உலகம் அங்கே எழுத்தாளர் ஒரு குயவனை போல களிமண்ணை எப்படி வேண்டுமானாலும் ஒரு மாற்ற முடியும் ஆனால் நிஜ கதைகள் எழுதும் போது ஆங்காங்கே சிற்சில மாற்றங்கள் மட்டுமே செய்யலாமே ஒழிய மொத்தமாக கதையை மாற்ற முடியாது

*******

இன்றைய எழுத்தாளர்களின் எழுத்து பற்றிய உங்களது கருத்து :

எல்லாருக்குள்ளும் திறமை இருக்கு சாதிக்கணும் அப்படிங்கிற வெறி இருக்கு தொடர்ந்து எழுதுங்க விதவிதமான கதைகள் கொடுங்க. ஒரே கோட்டில் பயணிக்காம வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுங்க. ஒருவேளை ஏதாவது கதைகளுக்கு கமெண்ட்ஸ் குறைந்தாலும் வாசகர்களின் ஈடுபாடு குறைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள். எழுத்துலகில் நடைபெறும் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருங்கள்

******

சமூக நாவல் & வரலாற்று நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா :

என்னுடைய கதைகளில் பெரும்பாலும் ஏதாவது மெசேஜ் இருக்கும் படி பார்த்து கொள்வேன்.வல்லியனின் மகுடம் என்ற வரலாற்று நாவல் எழுதும் திட்டம் உள்ளது. நேரம் கூடி வந்து உடல்நிலையும் ஒத்துழைத்தால் சீக்கிரமே வரும்.

....

மிக்க நன்றி எனது கேள்விக்கான உங்களது பதில் மிகவும் அருமையாக இருந்தது.

உடல் நிலை சரியில்லாத நேரத்தில் கூட நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மறுக்காமல் சம்மதித்து, உடனடியாக பதிலளித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சிஸ்டர்.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐

இன்றைய எழுத்தாளர்  கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை தாராளமாக முன் வைக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்

மிக்க நன்றி
🙏🙏🙏🙏




Comments