புவனா சந்திரசேகரன்

 


#எழுத்தாளர்அறிமுகப்படலம்

வணக்கம் நண்பர்களே,

நான் நேற்று சொன்னதற்கு ஏற்ப இன்று ஒரு எழுத்தாளரை அறிமுகப் படுத்தப் போகிறேன்.

முதலில் அவரது சுய விபரம் ,அடுத்து என்னுடைய பாணியிலும் சொல்லப் போகிறேன்.

பெயர் : புவனா சந்திர சேகரன்

ஊர் : தில்லி நொய்டா (UP) அருகில்

படிப்பு : முதுகலை கணிதம்

பணி : வங்கியில் பணி புரிந்து 2001
            ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று
           அதன் பின் கணித  
           ஆசிரியையாக அவதாரம்
           எடுத்து, அதற்கு பிறகு
            எழுத்தாளராக அவதாரம் 
               எடுத்திருக்கிறார்.          

சைட் : முதலில் பிரதிலிபி தற்சமயம்
                சங்கமம் தளம்

ID :     அமேசான் / பிரதிலிபி இரண்டிலும்
           புவனா சந்திர சேகரன்

விருப்பம் : வாசிப்பு / எழுத்துப் பணி

ஹாய் பிரண்ட்ஸ்,
62 வயது  எழுத்தாளரின் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
இனி அவரைப் பற்றிய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2 1/4 வருடங்களுக்கு முன்பு இருந்து
சிறு கதைகள், நாவல் , கவிதைகள் என்று முயற்சி செய்து வந்தவர்

அதன் பிறகு "பறக்கும் யானை" எனும் மாயஜால கதையை சங்கமம் தளத்தில் கொடுத்திருக்கிறாங்க.

எக்ஸ்பிரஸ் போட்டியில் பங்கேற்ற "ஊனாகி உறவாகி உயிராகி" தொடர்கதை  தற்சமயம் தளத்தில் காணப்பெறுகிறது.

" கண்ணே! கலைமானே!,
"சித்திரை நிலவே! செண்பக மலரே!" நாவல்கள் இரண்டும் தற்சமயம் அச்சில் வார்க்கப்பட்டு வெளியாகி இருப்பதால் அதன் சார்பாக ஸ்ரீ பதிப்பகத்தாருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரில்லர், குடும்பம், ஆன்மீகம், சிறுவர் கதை, நகைச்சுவை போன்ற பல வகையான படைப்புகளை கொடுக்க முயற்சி செய்தும் வருவதாக சொல்லியிருக்காங்க.

நிறைய கதைகளை வாசித்து அருமையாக விமர்சனங்களை முன்வைத்து சிறந்த வாசகி, விமர்சகர், எழுத்தாளர் என்று பல முகங்களுடன் திறமை சாலியாக நடை போடும் எழுத்தாளருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கல்கி, சாண்டில்யன், சுஜாதா, புதுமை பித்தன், லெஷ்மி, ராபின் ஹூக் , இயாண் ரேண்ட் ..... பல எழுத்தாளர்களின் நாவலை வாசித்து தன்னை பல வகைகளில் திறமைசாலியாக வளர்த்து வந்திருக்கிறார்கள்.

மேலும் நிறைய எழுதவும், படிக்கவும் ஆசை இருப்பதாக சொல்லியிருக்காங்க

அன்னாரின் ஆசைகள் ஈடேறிடவும், விருதுகள் பல வாங்கி மிகச் சிறந்த எழுத்தாளர் என்ற பெயரை பெற்றிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐

நீங்கள் யாரெல்லாம் அவரது நாவல்களை படித்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. படித்தவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள். அல்லாதவர்கள் வாழ்த்துங்கள் நட்புக்களே

நன்றி
சகோதரி

Comments