#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#இதுநம்மஏரியா
ஹாய் பிரண்ட்ஸ் ,
இன்று நான் உங்களிடம் அறிமுகப்படுத்தப்போகும் நபர் எழுத்தாளர் திக்ஷிதா லட்சுமி....
அவரைப் பற்றிய விபரங்கள் :
பெயர் : திக்ஷிதா லட்சுமி
சொந்த ஊர் : சென்னை
படிப்பு : 10th
பணி : எழுத்தாளர்
தளம் : பிரதிலிபி... சகாப்தம்.. வேறு தளத்தில் போட்டிகள் நடத்தினால் அங்கும் எழுதுவேன்.
அமேசான் பெயர்: திக்ஷிதா லட்சுமி
******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
இல்லத்தரசி... 2 குழந்தைகளுக்கு அம்மா.. சிறகு இல்லாமல் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுபவள்.
*******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
இதற்கு முன் எழுதி முடித்தவர்களும்.. இப்போது எழுதுபவர்களும்.. இனி எழுத வருபவர்களும்.. எனக்கு விருப்பமான எழுத்தாளர்களே.
...
அழகான பதில்
*********
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
அது ஒரு விதமான காதல்.. என் மீது நான் வைத்து இருக்கும் காதலால் எழுத ஆசைப்பட்டவள்... என்னைச் சுற்றி என்னைத் தாக்கிய உண்மை நிகழ்வுகளைச் சிறிது கற்பனை கலந்து எழுதுகிறேன்.
*******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
என் அன்பே! எந்தன் ஆருயிரே.
*******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
என் முதல் நாவல். என் அன்பே எந்தன் ஆருயிரே.
*******
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
2..3 மேல் இருக்கும்..10க்கும் மேல் தொடர்கதைகள்.. அப்புறம் சிறுகதை கொஞ்சம் இருக்கும்.. கவிதை என்ற பெயரில் கிறுக்கல்கள் கொஞ்சம் சிதறிக் கிடக்கும்.
*******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
நான்கு வருடங்கள்.
*******
எழுத்தாளர் அறிமுகப் படலம் பற்றிய உங்களது கருத்து:
நல்ல விசயம் தான். என்னைப் பற்றி அறியாதவர்கள் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.
******
தொடர்கதை எழுதுவது ஈஸியா அல்லது நாவல் எழுதுவது ஈஸியா :
இரண்டுமே எழுதும் மனநிலை பொறுத்து.
******
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
1) காதல் தாராயோ நெஞ்சமே
2) விழிகளில் காதல் சொல்வாயோ
3) விண்மீன் விதையில் ஓர் மழைப்பூ.
4) அசமஞ்சன். (🙄🙄 இத்தனையா Ongoing ல இருக்கு😁)
....
ஒரு கதையை முடித்து விட்டு அடுத்ததை துவங்கினால் எழுதும் கதை அட்டகாசமாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால் இத்தனை எப்படி அதுவும் ஒரே நேரத்தில் 🙄🙄🙄🙄
*******
உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர் :
என் அன்பே எந்தன் ஆருயிரே/ நான் உன்னை காதலிக்கிறேன்/ என்னவனே உனக்காக எல்லாம்/ என் நெஞ்சின் தீயே(பாகம் 1 மற்றும் 2 பாகங்கள் உள்ளன)/ நெஞ்சோடு கலந்தவளே/ காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்/ விழிகளில் காதல் சொல்வாயா/ அசமஞ்சன்/ காதல் தாராயோ நெஞ்சமே/ விண்மீன் விதையில் ஓர் மழைப்பூ/ ஒரு ரோஜா பூவின் வாழ்க்கை/ சென்றது மீளாது/விஷமானது வெள்ளைமனம்/வண்ணங்கள்/அழகின் வர்ணமே/பெண் பறவை.. மற்றும் சில உள்ளன.
....
அருமையான பெயர்களின் தேர்வு
*****
சமூக நாவலுக்கும் வரலாற்று நாவலுக்கும் உள்ள வித்தியாசம் :
சமூக அக்கறையோடு உண்மையைக் கலந்து எழுதுவது..
வார்த்தை ஜாலத்தில் சிறிது கற்பனை கலந்து எழுதுவது
********
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :
இருக்கிறது.
******
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டது :
எனக்குத் தெரிந்து அனைத்தும் என்று நம்புகிறேன்.. இதற்குப் பதில் நீங்கள் வாசகரிடம் கேட்க வேண்டும்.
....
கேட்கிறாங்க சொல்லுங்க பிரண்ட்ஸ்
******
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
இப்போது கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்.
*******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
அது என் மனம் போகும் போக்கு பொறுத்து உள்ளது... இதிகாச நூல்கள் படிக்க விரும்பினால் அதைப் படிப்பேன். இல்லை சமூக சார்ந்த நூல்கள்.. இல்லை மாயாஜாலம் நூல்கள்.. இப்படி மனநிலை வைத்துப் படிப்பேன். ஆனால் படிக்க ஆரம்பித்தாள் அதை முடிக்காமல் வேறு வேலையில் கவனம் போகாது.
*******
உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
கண்டிப்பா.. நான் என்னுடைய வாசர்களுக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு சிறு தவறையும் பக்குவமாக எடுத்துச் சொல்லி.. என்னை நானே செதுக்கிக் கொள்ள எனக்கு எழுது கோலாகா இருந்தவர்களுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் பற்றாது.
********
விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டுமா. நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:
பிரதிலிபில் ஒரு முறை.. என் நெஞ்சின் தீயே. முதல் முறை வாங்கிய நாவல்.
********
நீங்கள் எழுதிய நாவலிலே உங்களுக்கு பிடித்த நாவல் எது? அந்த கதாபாத்திரத்தை பற்றி சற்று விளக்க முடியுமா:
இரண்டு கண்களில் எது பிடிக்கும் என்று கேட்பது போல் உள்ளது.
கதாபாத்திரத்தை பற்றி விளக்க வேண்டும் என்றால் அனைத்தும் விளக்கம் வேண்டும்... ஆனால் என் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் வாய்ந்தவை.
*******
ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா..
போட்டி கதைகளுக்கு மட்டும் எழுதும் போது வார்த்தைகளின் அளவு வைத்து எழுதுவேன்.
********
உங்கள் கதைகளில் கவிதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
நிறைய இருக்கிறது.
********
விமர்சனம் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க :
என் தவறுகளை சுட்டிக்காட்டி என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் ஒரு ஆயுதமாக இருக்க வேண்டும். என்று நினைப்பேன்.
*******
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்கள் :
என்னால் முடிந்த அளவிற்கு அனைவரின் எழுத்துகளையும் வாசிக்க விரும்புகிறேன்.
******
தற்சமயம் வாசித்த நாவல்களின் பெயர் :
என் கதை தான்... நெஞ்சோடு கலந்தவளே.. என்னை நானே திருத்திக் கொள்ள மீண்டும் வாசித்தேன்.
*******
கதைகளில் வரக்கூடிய சில காட்சிகள் அப்படியே படிப்பவரின் மனதை இறுக்கி ஒருவித தாக்கத்தை , எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறதே அது எதனால் என்று சொல்ல முடியுமா :
அது படிப்பவர்களின் சூழ்நிலையும், மனநிலையும் அமைவது பொறுத்து.
*********
நீங்கள் எழுதிய கதைகளில் எதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
என் அன்பே எந்தன் ஆருயிரே ... பிரிந்த காதலில் மீண்டும் தொடங்கும் காதலால் ஆரம்பித்து.. நான் உன்னை காதலிக்கிறேன் என்று காதலால் காயப்பட்டவனி(ளி)ன் வாழ்க்கையை வாழுவதற்கும்.. என்னவனே உனக்காக எல்லாம் என்று என்னவனுக்காக மட்டுமே வாழ்ந்து முடிந்தவளின் முடிவில் ஆரம்பம் என் நெஞ்சோடு கலந்தவளே என்று அவளோடு தன் வாழ்க்கையை ஆரம்பித்து.. என் நெஞ்சின் தீயே என்னும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தன் வாழ்க்கையில் நுழைந்தவளின் மனதைப் புரிந்துக் கொள்ளாதவன் காதல் வேரில் பூத்த துரோகப்பூக்களால் தன் வாழ்க்கை தொலைத்து... காதல் தாராயோ நெஞ்சமே என்று தன்னை வெறுக்கும் ஒருத்திக்காக தன் காதலை மட்டும் அள்ளிக் கொடுப்பவனின் விழிகளில் காதல் சொல்வாயா என்று ஏக்கத்தோடு வாழ்பவளின் வாழ்க்கையில் அசமஞ்சன் என்னும் கொடியவன் நுழைந்து... விண்மீன் விதையில் மழைப்பூ போல் பூக்கும் புதிய பூக்கள் போல் வண்ணங்களால் நிறைந்து சென்றது மீளாது என அழகின் வர்ணமே என்று விஷமானது வெள்ளைமனம் போல் பெண் பறவையாக என் கதைகள் அனைத்தும்.. பகிர்ந்துள்ளேன்.
.....
சபாஷ்👌👌👌👌
******
ஆன்டி ஹீரோவின் எதிர்ப்பு, வரவேற்பு பற்றி சொல்ல முடியுமா :
ஆன்டி ஹீரோவை விரும்புபவர்களும் இருக்கிறார்கள்.. விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். சோ இதற்கு பதில் இல்லை என்றே சொல்லுவேன்.
....
😂😂😂
********
ஏன் முரட்டு நாயகனை ரசிக்கும் அளவிற்கு மென்மையான நாயகனை ரசிக்க மறுக்கின்றனர்:
எனக்குத் தெரிந்து அப்படி எதுவும் இல்லை. எந்த அளவிற்கு முரட்டு நாயகனை ரசிக்கிறார்களோ அதே அளவிற்கு மென்மையான நாயகனையும் ரசிக்கிறார்கள். என்றே சொல்லுவேன்.
*******
நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதும் கதைக்கும், கற்பனை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதும் கதைக்கும் உள்ள வித்தியாசம் :
நிஜ சம்பவத்தை வைத்துக் கதை எழுதும் போது... அது உணர்வுப் பூர்வமாகத் தோன்றும்.. எழுதும் எழுத்தாளர் தன்னை தானே அந்த கதையில் பிம்பமாக வைத்து எழுதுவார்கள். படிக்கும் வாசகர்களும்.. அதன் பிம்பத்தை கண்முன் நடப்பது போல் வாசிப்பார்கள்.
கற்பனை கதைகளில் விதிமுறைகள் என்று எதுவும் இருக்காது.. நம் காணும் கனவுகளில் தோன்றும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்க முயல்வார்கள்.
*******
போலீஸ் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இப்போது தான் ஒன்றை முயற்சி செய்து கொண்ட இருக்கிறேன்.
அசமஞ்சன்.
மிக்க நன்றி.. ஆனந்த ஜோதி சகி அவர்களுக்கு.... 🙏🙏🙏🙏🙏
.....
மிக்க மகிழ்ச்சி சிஸ்டர் உங்களது கருத்துகள் உங்களிடம் பேசியபோது இருந்தது போல எளிமையாகவே இருந்தது.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளர் கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை தாராளமாக முன் வைக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்
மிக்க நன்றி
🙏🙏🙏
Comments
Post a Comment