#எழுத்தாளர்அறிமுகப்படலம்
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்று நான் உங்களிடம் அறிமுகப் படுத்தப்போவது சஹானா இணைய இதழின் ஆசிரியரைப் பற்றிதான்
அவரைப் பற்றிய விபரங்கள்:
1. பெயர் :
இயற்பெயர் - புவனேஸ்வரி
எழுத்துப் பெயர் - சஹானா கோவிந்த்
மற்றொரு எழுத்துப் பெயர் - அப்பாவி தங்கமணி (நகைச்சுவை கதைகள் / பதிவுகளுக்கு)
2. சொந்த ஊர் : கோவை (Coimbatore)
3. படிப்பு : MBA , M.Com
4. பணி : முன்பு கல்லூரியில் துணைப் பேராசிரியர், இப்போது எழுத்தாளர் / 'சஹானா' இணைய இதழின் ஆசிரியர் / Freelance Guest Lecturer / Soft Skills Trainer / Job Prep Trainer / Advertising Agency (Specialized in promoting books and small businesses)
5. தளம் : 'சஹானா' இணைய இதழ் (www.sahanamag.com)
6. அமேசான் பெயர் : சஹானா கோவிந்த்
7.ஒரு எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:
ஒரு எழுத்தாளர் முதலில் தன் எழுத்துக்கு தானே ரசிகையாய் இருத்தல் வேண்டும். பிரசுரிக்கும் முன், வாசகரின் கோணத்தில் இருந்து வாசித்து பார்த்து குறைகளை சரி செய்ய வேண்டும். அதையும் மீறி யாரேனும் நம் எழுத்தை வாசித்து எதிர்மறை (நெகடிவ்) விமர்சனம் செய்தால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இருத்தல் வேண்டும்.
வேண்டுமென்றே சீண்டும் விமர்சனம் எனில், அதை சட்டை செய்து அவர்களை பெரிய ஆள் ஆக்காமல், கடந்து செல்லும் 'Don't Care Attitude' அவசியம். 'ரௌத்திரம் பழகு' என பாரதியார் சொன்னது நிச்சயம் இதற்கல்ல, definitely not worth it
8. இன்று எழுத்தாளர்கள் பலர் வித விதமான கதைகளை புகுத்தி வருகின்ற வேளையில், ஒரு எழுத்தாளராக அவர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல நினைக்கிறீங்க?
அறிவுரைனு இல்ல, ஒரு பிரெண்ட்லி சஜஷன்னு வேணா சொல்லலாம். சக எழுத்தாளர்களுடன் போட்டி போடுங்கள், அது தவறே அல்ல. ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாய் இருத்தல் வேண்டும். பொறாமையும் வன்மமும் எழுத்தாளனின் குணமே அல்ல.
எழுதும் விதம், கதைக்கரு / களம், கதை சொல்லும் பாங்கு ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். Best / Worst என தீர்மானிக்கும் உரிமை யாருக்கும் இல்லை, அது அவரவர் ரசனையைப் பொறுத்தது. குறைகளை சுட்டிக் காட்டவே கூடாதா என்றால், தாராளமாய் சொல்லலாம், மட்டம் தட்டாமல் நட்போடு சொல்லலாம் தவறில்லை
அடுத்தவரில் நல்லதை பார்த்தால் தான், நம்மில் உள்ள நல்ல விஷயங்கள் மற்றவர் கண்ணில் படும். அதுவே நம்மை உயர்த்தும். மற்றவரை தாழ்த்திக் காட்டி அதன் மூலம் நாம் மேலே செல்ல முயன்றால், அந்த வெற்றி நிலையானதாய் இருக்காது
9 நீங்கள் எழுதிய முதல் நாவல்:
முழு நீள நாவல் எனில் "ஜில்லுனு ஒரு காதல்", அப்போது நான் வசித்த கனடா நாட்டின் Toronto மாநகரை நிகழ்விடமாய் கொண்டு எழுதிய நாவல். கதாநாயகன் இத்தாலியன் என்பதால், உடன் பணிபுரிந்த இத்தாலிய பெண்ணிடம் அவர்களின் உணவு முறைகள், கலாச்சாரம், பண்டிகைகள், இத்தாலிய வார்த்தைகள் எல்லாம் கேட்டு, நான் மிகவும் ரசித்து எழுதிய ஒரு நாவல். எனது வலைப்பக்கத்தில் முதலில் வெளியிட்ட போது, நிறைய பேர் விரும்பி வாசித்த நாவல் இது. தற்சமயம், Amazonல் பிரசுரிக்கப்பட்டுள்ளது - https://amzn.to/3eMEJb3
10. எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
மொத்தம் 11 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் எனது வலைப்பூவில் எழுத ஆரம்பித்து, பின் மங்கையர்மலர் சிறுகதைப் போட்டி, தமிழ் வலைப்பதிவர் சிறுகதைப் போட்டி, நேசம் பவுண்டேசன் சிறுகதைப் போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்று எனது கதைகள் பிரசுரிக்கப்பட்டன.
அது தவிர, யூத் விகடன், திண்ணை, அதீதம், வல்லமை போன்ற பிரபல இணைய இதழ்களிலும் எனது எழுத்துக்கள் பிரசுரம் ஆகி உள்ளன.
11. உங்களது சஹானா இணைய இதழ் தளம் உருவாக்கப் பெற்ற ஆண்டு:
2020ல் தான் சஹானா இணைய இதழ் ஆரம்பித்தேன். ஆனால் 2010ல் இருந்தே ‘அப்பாவி தங்கமணி’ என்ற பெயரில் வலைப்பூ தொடங்கி எழுதி வந்தேன், முதல் இரண்டரை வருடத்தில் 2.5 லட்சம் ஹிட்ஸ் பெற்ற வலைப்பூ அது, பின் சொந்த வேலைகள் காரணமாய் அதை தொடர இயலவில்லை
12. எத்தனை எழுத்தாளர்கள் உங்கள் தளத்தில் பதிவிடுகின்றனர்:
2020 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையான ஐந்து மாதத்தில், 'சஹானா' தளத்தில் 30 எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை பதிந்துள்ளனர். 2021ல் அது இன்னும் அதிகரித்து வருகிறது. மாதம் ஒரு சிறந்த பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பு பரிசு (Gift), மெடல் மற்றும் சான்றிதழ் வழங்குகிறோம்
contest@sahanamag.com என்ற மின்னஞ்சலுக்கு வரும் பதிவுகளில், சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது. சிறுகதை, தொடர்கதை, கவிதைகள், மருத்துவக் கட்டுரைகள், ஆன்மீக கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், DIY Crafts, நகைச்சுவை கதைகள், சிறுவர் கதைகள், குழந்தைகளின் படைப்புகள், சமையல், விளம்பரங்கள் என எல்லாமும் பிரசுரிக்கிறோம்
அது தவிர, எங்கள் இதழ் மூலம் மாதாமாதம் வாசிப்புப் போட்டியும் நடத்தி வருகிறோம். சக எழுத்தாளர்களின் 15 புத்தகங்கள் (amazon ebooks) ஒவ்வொரு மாதமும் போட்டியில் சேர்க்கப்பட்டு, மூன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இந்த மாத வாசிப்புப் போட்டி அறிவிப்பு இதோ - https://sahanamag.com/readingcontest-march2021/
இன்னுமொரு போட்டி கூட அறிவிக்க இருக்கிறோம், முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்
13. உங்களது தளத்தில் எழுதப் பெறும் நாவல்களை நீங்களே புத்தகமாக அச்சில் வார்த்து கொடுத்து விடுவீர்களா :
இதுவரை அப்படி செய்ததில்லை, மாத இதழாக Amazonல் மட்டுமே வெளியிடப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் பதிப்பகம் துவங்கும் எண்ணம் இருக்கிறது. அப்போது சிறந்த எழுத்துக்கள் நிச்சயம் புத்தகமாக்கப்படும்
14. நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது, ஏன்? உங்களை கவர்ந்த கதாபாத்திரம் எது என்று சொல்ல முடியுமா:
நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’. வெளியிட்ட நாளில் Amazonல் Best Sellerல், முதல் இடத்தில் இருந்த நாவல். காதல், உறவுகளின் உன்னதம், பாட்டி பேத்தி என்ற அந்த அழகான இரு தலைமுறைக்கு இடையே உள்ள பாசப்பிணைப்பு, மற்றும் ஒரு முக்கிய மெஸேஜும் கொண்ட காரணத்தால், எனக்கு இது பிடித்த நாவலானது. அதில் ராஜம்மாள் பாட்டி கேரக்டர் எனக்கு பிடித்த ஒன்று, காரணம் அது கிட்டதட்ட என் பாட்டி போலவே இருப்பதால். அதன் Amazon இணைப்பு - https://amzn.to/3vxVuNd
15. ஆண்டி ஹீரோ கதை பற்றி உங்கள் கருத்து?
ஆண்டி ஹீரோ கதை தவறு என சொல்ல முடியாது, அது எழுத்தாளரின் விருப்பம். ஆனால், அந்த கதாபாத்திரம் வடிவமைக்கும் முறை justifiable ஆக இருத்தல் வேண்டும். அதற்காக, அது தான் சரி என்பது போல் தொடர்ந்து கதை அமைப்பது, தவறான உதாரணம் ஆகிவிடும்
16. ஒரு வாசகனுக்கு நாவலை கையில் எடுத்த போதும் சரி முடிக்கும் போதும் சரி என்ன மாதிரி உணர்வு வர வேண்டும் என்று நினைக்கிறீங்க:
தானும் உடன் பயணித்த ஒரு உணர்வை வாசகருக்கு தருவதாய் இருத்தல் வேண்டும். எழுத்தாளரின் மற்ற கதைகள் என்ன என்ற தேடல் மனதில் உருவாகும் வண்ணம் இருக்க வேண்டும்
17. உங்களது சஹானா இணைய இதழை பற்றி சில வரிகளில் சொல்வதாக இருந்தால்...:
சிறுகதை, தொடர்கதை, நகைச்சுவை , சிறுவர் பக்கம், சமையல், ஆன்மிகம், பயணம், DIY Crafts, கவிதைகள், விளம்பரங்கள் என பல்சுவை இதழாய்
'சஹானா' இருக்கிறது
நிரூபித்த எழுத்தாளர்களுக்கு இணையாய், புது எழுத்தாளர்களுக்கும் ஒரு தளமாய் ‘சஹானா’ என்றும்
இருக்கும். எதிர்காலத்தில், அச்சு இதழாக கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. விரைவில் அந்த கனவு நனவாகும் என நம்புகிறேன்
18. உங்களது வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
வாசிப்பு வசப்பட... வானமும் வசமாகும் !!!. வாசியுங்கள், உங்கள் வானத்தை வசமாக்குங்கள். நன்றி
என்றும் நட்புடன்,
ஆசிரியர் - 'சஹானா' இணைய இதழ்
ஹாய் பிரண்ட்ஸ்,
எழுத்தாளர் சஹானா எழுத்துலகிற்கு வந்து 11 வருடங்கள் ஆன நிலையில் " ஆறு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இப்போதைக்கு எல்லாமும் Amazonல் மட்டுமே உள்ளது - https://amzn.to/3bTY609
அது தவிர, கடந்த ஆகஸ்ட் முதல், 'சஹானா' மாத இதழை Amazonல் வெளியிட்டு வருகிறேன் - https://amzn.to/2OWoxt" என்று சொல்லியிருக்கிறார்கள்.
"கண்மணி" வார இதழின் நாவல் போட்டியில் வென்ற எனது "அபூர்வ ராகம்" நாவல் தான் நிறைய பேருக்கு அடையாளம் காட்டி, என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. 30ஆயிரம் பரிசுத் தொகையோடு, கண்மணி இதழிலும் அந்த நாவல் பிரசுரிக்கப்பட்டது, அதன் Amazon இணைப்பு - https://amzn.to/38PK25L" என அவர்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப் படுத்திய நாவலாக சொல்லியிருக்கிறார்கள்.
உங்களது விருப்பமான எழுத்தாளர்கள் யாரெல்லாம் என்று கேட்டதற்கு " ரமணிச்சந்திரன், லக்ஷ்மி, காஞ்சனா ஜெயதிலகர், சிவசங்கரி, பாலகுமாரன், மற்றும் இங்கு நட்பில் உள்ள பல எழுத்தாளர்கள் (எல்லா பேரையும் சொன்னா தனி புக் போடணும், லிஸ்ட் ரெம்ப பெரிசு" என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
மேற்கண்ட தகவல்களைப் பற்றி அவர்களே சொல்லியிருப்பதால் நான் அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்
நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எழுத்தாளர் அறிமுகப் படத்திற்கு உடனாக சம்மதித்து பதில்களை அனுப்பி கொடுத்ததற்கு என்னுடைய பாராட்டுகளும் நன்றிகளும்👏👏👏
மேலும் பல பல சாதனைகளை படைத்திடவும், புது விதமான யுக்திகளை கையாண்டிடவும், சிறந்த எழுத்தாளர் என்ற பெயரினை பெற்றிடவும் ,விருதுகள் பல பெற்றிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐
இன்றைய எழுத்தாளரிடம் கேள்விகளை முன் வைப்பவர் தாராளமாக முன் வரலாம். அவர்களது படைப்பு, தளத்தை பற்றி அறிந்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறலாம். அல்லாதவர்கள் வாழ்த்தலாம்
நன்றி சகோதரி
🙏🙏🙏🙏
நன்றிங்க
ReplyDelete