தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே ரிவ்யூ

 மேகலா அப்பாத்துரை சகோதரி எழுதிய "தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே" தொடர்கதைக்கான விமர்சனம்.


உதயன் :


மருத்துவ பெண்ணவள் தன் முன்னே நிகழ்ந்த விபத்தில் இருந்து ஒருவரை காத்து மருத்துவமனையில் சேர்பித்து சிகிச்சை அளிக்கிறாள். அவன் தான் நாயகனோ என்று நினைக்கத் தோன்றியது முதலில்,  ஆனால் அங்கே அவள் எதிர்பாராத சம்பவம் நடந்தேற..


காவலனின் உதவியை நாடுகிறாள். அக் காவலன் மருத்துவ பெண்மணிக்கு காதலன் ஆகிறானா அல்லது வெறும் காவலன் மட்டும் தானா என்பதை கதையினூடே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.


திடீர் என்று அவளை காணாமல் தவிப்பதும், அவளது பேச்சால் கோபப்படுவதும், அதற்கு பிறகு நடக்கும் சம்பவமும் வாவ்!! ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது சிஸ்டர்.


பைனல் சீன் படித்ததும் ஜெர்க் ஆயிடுச்சு. அது என்ன மாதிரி ஷாக் என்று தெரிந்து கொள்ள தொடர்கதையின் அத்தியாயங்களை வாசியுங்கள் நட்புக்களே...


நாயக நாயகியின் சந்திப்பு, அவரது கம்பீரம், ஆளுமை, குற்றவாளியை கண்டுபிடிக்கும் நேர்த்தி எல்லாமே அருமையாக இருந்தது சிஸ்டர்.


நாயகியின் விழிகளுக்குள் மட்டுமே புலனாகி அவளிடம் பேசும் இன்னொரு நாயகன் பண்ணுகிற கலாட்டா🤣🤣🤣, பேச்சு ரொம்ப நல்லா இருந்தது.


"ஆதினி ஸ்டிரிக்ட் போலீஸ் இப்போ ரொமான்ஸ் போலீஸ் ஆயிடுச்சு" வரிகளும் "எனக்காக உன்னோட காதலை மறைச்சு வைக்க வேண்டாம்" எனும் இடங்களும் இறுதியில் அவனது கோபமும் சூப்பர்.


அது போல, " என்னை விட உங்க மேல அவளுக்கு அக்கறை, பாசம் அதிகம் அதனால் வந்த பொறாமையினால் ஏற்பட்ட கோபம்" எனும் இடம் சூப்பரோ சூப்பர்


சிஸ்டர் எத்தனையோ மாதங்களாக எதிர்பார்த்த தொடர்கதை, தற்சமயம் தளத்தில் முழுவதுமாக பதித்திருப்பதற்கு நன்றிகள்.


தொடர்கதை திகில், சஸ்பென்ஸ், கலாட்டா, காதல், அரூபம், கொலை வழக்கு என்று கலந்து, 

அனைத்து அத்தியாயங்களும் வாசிப்பதற்கு ரொம்ப அருமையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்தது. மிஸ் பண்ணாம படிச்சு பாருங்க பிரண்ட்ஸ்...


மேலும் பல பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐

Comments