#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#இதுநம்மஏரியா
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்று நான் உங்களிடம் அறிமுகப்படுத்தப்போகும் நபர் எழுத்தாளர் இனிதா மோகன் குமார்
அவரைப் பற்றிய விவரங்கள்:
பெயர்: இனிதா மோகன்குமார்
ஊர்:
பிறந்தது,வளர்ந்தது,திருமணமானது எல்லாமே கோயமுத்தூர் தாங்க..
படிப்பு:M.com,D.TEd,D.cop.
பணி: வீட்டு நிர்வாகம்
தளம்: எஸ்.எம்.எஸ் தளம்,சங்கமம் தளம் இவ்விரண்டிலும் எழுதுகிறேன்.
அமேசான் பெயர்:இனிதா மோகன்
*****
உங்கள் குடும்பத்தை பற்றி சொல்ல முடியுமா:
நான் ,என்கணவர்,என் பையன் அவ்வளவு தாங்க..
*****
எழுத்துலகிற்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
மூன்று வருடம் ஆகிறது.
******
மொத்த நாவல்கள் எத்தனை எழுதியிருக்கிறீங்க:
நான்கு முழு நாவல்,ஒரு சிறுகதை, இப்போது ஒரு தொடர்கதை எழுதி வருகிறேன்.
*******"
உங்கள் நாவல்களின் பெயர்கள்:
1.உன்னருகில் என்னை அறிந்தேன்!(புத்தகமாக வெளிவந்துள்ளது)
2.நீயின்றி நானில்லையே என் செந்தேனே!
3.இருளை நீக்க வந்த விடிவெள்ளியே!(புத்தகமாக வெளிவந்துள்ளது)
4.என் மெளனத்தின் கவிதையே!
5.மகளதிகாரம்(சிறுகதை)
6.தொடுக்காத பூச்சரமே!(தொடர்கதை)
********
நீங்கள் எழுதிய நாவல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த நாவல்:
குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது..எல்லாமே மிகவும் பிடித்து எழுதிய
நாவல்கள் தான்.
*********
இதுவரை வாங்கியிருக்கும் விருதுகளைப் பற்றியும்,எந்த கதைக்காக வாங்கியிருக்கிறீங்கன்னு சொல்ல முடியுமா:
இதுவரை விருது எல்லாம் வாங்கவில்லை..என்னுடைய இருளை நீக்க வந்த விடிவெள்ளியே! நாவல் எஸ்.எம்.எஸ் தளத்தில் நடந்த போட்டிக்காக எழுதியது.. அந்த போட்டியில் இந்த நாவலுக்கு சிறப்பு பரிசு கிடைத்தது.
********
உங்கள் முதல் படைப்பு நாவலாக வெளி வந்த போது உங்களது மனநிலை எப்படி இருந்தது:
படைப்பாளிகள் அனைவருமே அந்த தருணத்திற்காகத் தான் காத்திருக்கிறார்கள். அப்படிப் பட்ட அந்த தருணத்தில் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது.. நானும் அப்படித் தான்.
********
உங்களது எழுத்து அனுபவத்தைப் பற்றி:
எழுத வேண்டும் என்பது எனது பல நாள் கனவு. அதற்கு இந்த சில வருடங்களாகத் தான் வாய்ப்பு கிடைத்தது. நான் ஆன்லைனில் எழுதுவதற்கு முதன் முதலாக எஸ்.எம்.எஸ் தளத்தில் எழுதுவதற்கும்
ஸ்ரீ கலாஅக்கா தான் எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்து எழுதுவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்கள். அவர்களுக்கு இங்கு நான் என் மனமாரந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் எதிர்பாராத விதமாக சகாப்தம் பதிப்பகத்தால் என் புத்தகங்கள் வெளி வர வாய்ப்பு கிடைத்தது. அதற்கு வாய்ப்பு கொடுத்து என் கனவை நனவாக்கிய நித்யா கார்த்திகன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எழுதுவதற்கும்,என் புத்தகம் வெளி வருவதற்கும் பக்கபலமாக இருந்த மேகலா அப்பாதுரை அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களால் அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.உங்களுக்கும் என் நன்றிகள்.
என் எழுத்து அனுபவத்தைச் சொல்லனும்னா .. நான் இன்னும் கத்துக்குட்டி தான். இப்போது தான் கையூன்றி, காலூன்றி நடை பழகும் குழந்தை.. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னு நினைக்கிறேன்.
*********
இத்தனை வருட எழுத்துலகில் நிரந்தரமான வாசகர் யாரையாவது பெற்றிருக்கிறீர்களா? அதாவது உங்கள் நாவல் வந்த உடன் வாங்கி படித்து அதைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ப:
வாசகர்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று தான் சொல்வேன். நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள். என் முதல் கதையிலிருந்து இன்று வரை அதே ஆதரவு தரும் வாசகர்கள் இருக்கிறார்கள்.. என்னிடம் இருக்கும் பெரிய குறை என்னவென்றால் என்னால் சொன்ன நேரத்திற்கு யூடி தரமுடிவதில்லை. ஆனாலும் நான் யூடி போடும் வரை பொருத்திருந்து படித்து கருத்து சொல்லும் வாசகர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையை சொல்ல முடியாது.இருந்தாலும் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
என்மீதும்,என் எழுத்து மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை என்றும் காக்க வேண்டும்.அவர்களுக்காக சரியான நேரத்தில் யூடி கொடுக்க வேண்டும் என்பது தான்என் பெரிய விருப்பம்.
புத்தகம் வந்த உடன் வாங்கிப் படித்து விட்டு உடனடியாக என்னுடன் கதையைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வாசகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.....
அருமையான தகவல்
**********
உங்கள் கதைகளில் எது ரொம்ப best ஆக இருக்கும்னு நினைக்கிறீங்க:
என்னைப் பொறுத்தவரை என் கதை பெஸ்ட்டான்னு வாசகர்கள் தான் சொல்லனும் நான் எல்லாக் கதையும் பிடித்துத் தான் எழுதுகிறேன்.
**********
ஒரு முழு நாவலையும் படித்து முடிந்தவுடன் ஒரு வாசகருக்கு திருப்தி , வரவேண்டுமானால் அதற்கு எழுத்தாளர் என்ன செய்ய வேண்டும்:
எழுத்தாளர்கள் எழுதும் ஒவ்வொரு கதையும் வாசகர்களை திருப்தி படுத்தும் நோக்கத்துடன் தான் எழுதுகிறோம். எழுத்தாளர்கள் முதலில் வாசகர்கள். அப்புறம் தான் எழுத்தாளர். அப்படி உணர்ந்து எழுதினாலே வாசகர்களை திருப்தி படுத்த முடியும் என்று நம்புகிறேன். இது என் கருத்து மட்டுமே.
*********
ஒரு கதை எழுதும் முன்பு முழுவதையும் டைரியில் எழுதி வைத்து விட்டு அத்தியாயம் வாரியாக எழுதுவீர்களா? அல்லது மனதின் வார்த்தைகளை எண்ணங்களாக கோர்த்து அப்படியே கதை வடிவில் மாற்றுவீர்களா :
டைரியில் எல்லாம் எழுதி வைப்பது இல்லைங்க. கதை கருவை தீர்மானித்த பின் இந்த அத்தியாயத்தில் இந்த சீன் என்று மனதிற்குள்ளேயே கடைசி வரை முடிவு செய்து விடுவேன். எழுதும் பொழுது டயலாக் மட்டுமே அந்த .. அந்த சீனுக்கு தகுந்த படி மனதில் தோன்றியதை டைப் செய்வேன். இத்தனை அத்தியாத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்து தான் எழுதுவேன்.
********
நீங்கள் கதை எழுதுவதற்கு வீட்டினர் ஊக்குவிப்பு பற்றி சொல்ல முடியுமா:
கணவர் நிறைய ஆதரவும்,ஊக்குவிப்பும் கொடுப்பார்..என் கதையை படித்தது எல்லாம் இல்லை.ஆனால் அவருடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் எல்லாம் நான் கதை எழுதுவதை சொல்லியிருக்கிறார்.அவர்களும் புத்தகம் வாங்கி படித்து விட்டு என்னிடம் கதை நன்றாக இருக்கு..நிறைய எழுதுங்க என்று கூறிய அனுபவம் இருக்கு. அப்பாவுக்கு நான் கதை எழுதுவதில் அவ்வளவு விருப்பம் இல்லை. அவருக்கு நான் நிறைய நல்ல கட்டுரைகள் எழுத வேண்டும் என்பது தான் ஆசை.. வருங்காலத்தில் அவர் ஆசையை நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்.
.....
உங்கள் ஆசைகள் நிறைவேறிட என்னுடைய வாழ்த்துகள்
********
உங்கள் கதையில் நிஜசம்பவத்தை பற்றி எழுதிய அனுபவம் உண்டா:
என் முதல் கதை விதவை மறுமணம் பற்றி கதை தான். அதில் வரும் சில சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவையுடன் என் கற்பனையையும் கலந்து எழுதியது தான். மற்ற கதைகளிலும் சில நிஜ சம்பவங்களின் தாக்கம் சிறிது இருக்கும்
********
உங்களது விருப்பமான நாவலாசிரியர்கள்:
எனக்கு எட்டு வயதிலிருந்தே படிக்கும் பழக்கம் துவங்கியது. பாட்டி வீட்டிற்கு லீவுக்கு போகும் போது எல்லாம்.. காமிக்ஸ் ,சிறுவர் மலர், அம்புலிமாமா கதைகளை கொடுத்து பாட்டி படிக்கச் சொல்லுவாங்க . அப்படி பழகிய பழக்கம் அப்பாவின் மூலம் இன்னும் விரிவடைந்தது. பிடித்த எழுத்தாளர்னா வே.ஆனைமுத்து அய்யா அவர்களை ரொம்ப பிடிக்கும்.நாவலாசிரியர் கல்கி, சாண்டில்யன்,ரமணிம்மா,லட்சுமி இப்படி நீண்டுகிட்டே போகும்..
********
உங்க நட்பு வட்டத்தில் சில எழுத்தாளர்கள் பற்றி சொல்ல முடியுமா:
நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை..
********
ஒரு எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்:
நிறைய படிக்க வேண்டும். நம் எழுத்து ஒருவருக்காவது ஏதாவது ஒரு விதத்தில் பயன் தரும்படியாகவும், கண்டிப்பாக படிப்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை விதைக்கனும்ன்னு நினைக்கிறேன். இவுங்க சொல்லும் விஷயமும்,எழுத்தும் எப்போதும் தவறாக இருக்காது என்ற நம்பிக்கையை வாசகர்களுக்கு தருவதாக இருக்கனும்ங்கிறது என்னோட கருத்து.
*********
ஒரு எழுத்தாளரின் படைப்பு எப்படி இருக்க வேண்டும். அவர் எழுதிய நாவலை கையில் எடுத்த உடன் என்ன மாதிரி உணர்வு தோன்ற வேண்டும்:
ஒரு எழுத்தாளரின் படைப்பு படிப்பவர்களை ஒரு நெடியாவது ஏதாவது ஒரு இடத்தில் சிந்திக்க வைக்கனும். புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவு விறு விறுப்பாக இருக்கணும். ஒரு நல்ல கதையை படித்த திருப்தியை வாசகர்களுக்கு தர வேண்டும்ன்னு நினைக்கிறேன். எழுதாளரின் பெயரை பார்த்தாலே படிக்கும் ஆர்வத்தை தூண்டும் படியாக எழுத்து இருக்கனும். நானும் இதற்குத் தான் முயற்சிக்கிறேன்.
இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்த ஆனந்தஜோதி சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
......
உங்களது பதில்கள் அனைத்தும் மிகவும் அருமை சிஸ்டர்
மிக்க நன்றி,
மேலும் பல படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளர் கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை முன் வைக்கலாம். ஏதாவது கேள்விகளை கேட்க நினைப்பவர்கள் தராளமாக கேட்கலாம்..... மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்
மிக்க நன்றி
🙏🙏
Comments
Post a Comment